உள்ளடக்கத்துக்குச் செல்

பரிதா மோமண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிதா மோமண்டு
பரிதா மோமண்டு (வலது) எசுதோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் மரினா கல்ஜுரண்ட் (2016ல்)
ஆப்கான் உயர்கல்வி அமைச்சர்
பதவியில்
2015–2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1965 (அகவை 58–59)
வேலைமருத்துவர்

பரிதா மோமண்டு (Farida Momand) என்பவர் (பிறப்பு 14 ஜனவரி 1965) ஆப்கானித்தான் மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந் நாட்டின்உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மோமண்டு 1965இல் நங்கர்கார் மாகாணத்தின் மோமண்டு தாரா மாவட்டத்தில் பிறந்தார். இவர்பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் இராபியா பால்கி உயர்நிலைப் பள்ளியில் படித்தார் பள்ளிக் கல்வியினையும் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பி. ஏ. பட்டத்தினையும் பெற்றார்.[1]

தொழில்

[தொகு]

மருத்துவரான மோமண்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.[2] இவரது கணவர் வடக்குக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இது தாலிபான்களை அதிகாரத்திலிருந்து விலக்க முயன்றது. தாலிபான்கள் 1996 இல் காபூலைக் கைப்பற்றியபோது, இவர்கள் குடும்பத்திற்குக் கொலை மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து பாக்கித்தானுக்கு தப்பிச் சென்றனர்.[1][3] காபூல் விடுவிக்கப்பட்ட நவம்பர் 2001இல் இவர்கள் மீண்டும் ஆப்கான் திரும்பினர்.[3] மோமண்டு மருத்துவப் பள்ளிக்குத் திரும்பி கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். பெண் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

2005ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காபுல் மாகாணத்திற்கான 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் மோமண்டும் ஒருவர்.[4] இவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல் மற்றும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் இருந்தார்.[1]

ஏப்ரல் 2015இல் அன்றைய குடியரசுத் தலைவர் அசரஃப் கனி அகமத்சயின் அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][5] கல்வி அமைச்சராக, இவர் பல்கலைக்கழகத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார்.[6] புலமைப்பரிசில் பெண்களுக்கு ஆதரவளித்தார்.[7] காபுல் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வுகள் மற்றும் மகளிர் ஆய்வுகளில் ஆய்வுத் திட்டங்களைத் தொடங்குவதை ஆதரித்தார்.[8][9]

2016ஆம் ஆண்டில், வோலேசி ஜிர்கா, ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 70%க்கும் அதிகமாகச் செலவிடத் தவறிய அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றம்சாட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[10][11] நான்கு நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏழு அமைச்சர்களில் மோமண்டும் ஒருவர்.[1][12] அந்த வருடத்திற்கான இவரது துறையின் மேம்பாட்டு ஆண்டு வரவு செலவுத் திட்டச் செலவுகளைப் பற்றி அறிக்கை தயார் செய்து வழங்கப் பணிக்கப்பட்டார். அந்நாளில் அவர் அறிக்கைத் தாக்கல் செய்யாத காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.[13] பதவி நீக்கம் "நியாயமற்றது" என்று குடியரசுத் தலைவர் கனி ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடக் கோரினார்.[10][14] ஆனால் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அப்துல்லா , சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம் விலக்கப்படும் வரை அமைச்சர்களைப் பணி செய்யுமாறு வலியுறுத்தினார்.[15][16][17]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மோமண்டு, அபீப் இராய்டு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Mohmand, Farida Mrs. Prof". Who is who in Afghanistan?.
  2. 2.0 2.1 "Four Women Were Just Approved to Join the Cabinet of Afghanistan's Unity Government". Feminist Newswire. 20 April 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 Laughlin, Meg (26 November 2010). "For Afghan women, talks with Taliban threaten newfound freedom". Tampa Bay Times. Archived from the original on 7 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  4. 4.0 4.1 Biswas, Soutik. "Photojournal: Afghan family's voting day". BBC. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  5. "National Unity Government's 16 Cabinet Ministers Sworn in". Office of the President, Islamic Republic of Afghanistan. 21 April 2015. Archived from the original on 10 August 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  6. "Farida Momand calls for transparency in university semesters tests". The Kabul Times. 17 August 2015. Archived from the original on 5 September 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  7. "Access to Higher Education to Unleash Potential in Afghan Women". US AID. 29 June 2016. Archived from the original on 11 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  8. Moosakhail, Zabihullah (18 October 2015). "Kabul University launches its First-Ever Master's Programme in Gender and Women's Studies". Khaama Press. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  9. "Kabul University Introduces First-Ever Master's Programme in Gender and Women's Studies". UNDP. 17 October 2015. Archived from the original on 7 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 Rostaye, Emad (16 November 2016). "No-confidence process ends; nine ministers win, seven lose". TV News. Archived from the original on 7 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Three Ministers Refused To Attend The Parliament". Middle East Press. 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  12. "MPs disqualify 7 ministers in a week". Heart of Asia. 16 November 2016. Archived from the original on 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  13. "MPS dismiss another Minister, bringing total to six in three days". Kabul Tribune. 14 November 2016. Archived from the original on 8 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  14. "Afghan parliament dismisses Ministers despite opposition by President". India Live Today. 14 November 2016. Archived from the original on 7 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  15. Putz, Catherine (15 November 2016). "Afghan Parliament Goes on a Firing Spree". The Diplomat. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  16. Mashal, Mujib (15 November 2016). "Afghanistan Fires 7 From Cabinet in Intensifying Political Crisis". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
  17. Shalizi, Hamid (14 November 2016). "Afghan leader defies parliament by telling sacked ministers to stay". பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_மோமண்டு&oldid=3589573" இலிருந்து மீள்விக்கப்பட்டது