உள்ளடக்கத்துக்குச் செல்

பரிணீதா போர்தாகுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிணீதா போர்தாகுர்
பிறப்பு21 பெப்ரவரி 1985 (1985-02-21) (அகவை 41)[1]
துலியாஜன், அசாம், இந்தியா
பணி
  • நடிகை
  • பாடகி
  • மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2001 முதல் தற்போது வரை
அறியப்படுவது
வாழ்க்கைத்
துணை
கௌதம் சக்ரவர்த்தி (தி. 2011)
பிள்ளைகள்1[2]

பரிணீதா போர்தாக்கூர் (Parineeta Borthakur), அசாமினைச் சேர்ந்த ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும் பாடகியும் ஆவார்.[3] இவர் ஸ்வராகினி - ஜோடின் ரிஷ்டன் கே சுர் படத்தில் ஷர்மிஷ்தா போஸாகவும், பேபன்னா இல் அஞ்சனா ஹூடாவாகவும், குப்தா பிரதர்ஸ் இல் கங்கா ஷிவ் குப்தாவாகவும் நடித்ததற்காக அறியப்பட்டவர்.[4]இவருடைய தங்கை பிலவிதா போர்தாகுரும் ஒரு பாடகி மற்றும் நடிகை ஆவார்.

தொழில்

[தொகு]

போர்தாகுர் தனது திரைப்பட அறிமுகத்தை, அசாமிய மொழித் திரைப்படமான நாயக் மூலம் மேற்கொண்டார். தொலைக்காட்சியில் இவர் முதன்முதலில் தோன்றியது,சேப் (SAB) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரிதம் பியாரே அவுர் வோ தொடரில் கோகி எனும் கதாபாத்திரத்திமாகும். ஃபோர்ஸ், சலோ டில்லி மற்றும் குர்பான் போன்ற பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 2015-ஆம் ஆண்டில், கலர்ஸ் தொலைக்காட்சியின் ஸ்வராகினி தொடரில் ஷர்மிஷ்தா போஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். 2017-ஆம் ஆண்டில், ஜீ தொலைக்காட்சியின் ஏக் தா ராஜா ஏக் தீ ராணி தொடரில் வசுந்தரா சூர்யவன்ஷியாக இவர் தோன்றினார். அதே ஆண்டில், அசாமியத் திரைப்படமான கானே கி ஆனே-இல் ஜுபீன் கார்க்-உடன் இணைந்து இவர் நடித்தார். 2018-ஆம் ஆண்டில், கலர்ஸ் தொலைக்காட்சியின் பேபன்னாதொடரில் அஞ்சனா ஹூடா கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்தார்.

சனவரி 2020-ஆம் ஆண்டில், நயோர் எனும் அழகுசாதனப் பொருள் வகையின் கீழ், இந்தியாவின் முதல் வீகன் மற்றும் பாரபென் அற்ற, அடர் நிறமி கொண்ட உதடு பருக்கிகளை இவர் அறிமுகப்படுத்தினார்.[5]

இவர் கடைசியாக, ஹிட்டன் தேஜ்வானிக்கு ஜோடியாக, ஸ்டார் பாரத் தொலைக்காட்சியின் குப்தா பிரதர்ஸ் [6] தொடரில், முக்கிய பெண் கதாபாத்திரமான கங்கா ஷிவ் குப்தா வாகக் காணப்பட்டார்.

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்கு இயக்குனர் மொழி
2001 நாயக் ஜோனாலி முனின் பருவா அசாமிய மொழி
2004 பரூட்
2005 போரோலார் சன்சார் தெரியாது
2008 சாஸ் பாஹு அவுர் சென்செக்ஸ் ஷோனா ஊர்வசி இந்தி
2009 குர்பான் பேராசிரியர் வைஷாலி ரென்சில் டி சில்வா
ஜீவன் பேட்டர் லோகோரி திமோதி தாஸ் ஹன்சே அசாமிய மொழி
2011 ஃபோர்ஸ் மாயாவின் சகோதரி நிஷிகாந்த் காமத் இந்தி
சலோ டில்லி ஷஷாந்த் ஷா
போலி போலே ஊரே திங்கள் பல்லவி திமோதி தாஸ் ஹன்சே அசாமிய மொழி
2016 கானே கி ஆனே மதுமிதா ராஜேஷ் ஜஷ்பால்
2018 தி அண்டர்வேர்ல்ட்
2024 பூல் புலையா 3[7] அர்ஜுனின் தாய் அனீஸ் பாஸ்மி ஹிந்தி

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள் Ref.
2004 லாவண்யா (தொலைக்காட்சித் தொடர்) கௌரி
2006 மம்தா (தொலைக்காட்சித் தொடர்) அனாமிகா
2009 கஷ்மகாஷ் ஜிந்தகி கி பிரதிமா
2009 மோனிகா மோக்ரே – கேஸ் பைல்ஸ் மோனிஷா
2013 சவ்தான் இந்தியா ராதா ராணி
2014 ப்ரிதம் பியாரே அவுர் வோ கோகி
2015–2016 ஸ்வராகினி – ஜோடின் ரிஷ்டன் கே சுர் சர்மிஷ்தா போஸ் கடோடியா [8]
2017 ஏக் தா ராஜா ஏக் தீ ராணி வசுந்திரா சூர்யவன்ஷி
2018 பெபன்னா அஞ்சனா ஹூடா
2020–2021 குப்தா பிரதர்ஸ் கங்கா குப்தா [9]
2022 ஸ்பை பஹு வீர நந்தா
2023 பியார் கா பெஹ்லா நாம்: ராதா மோகன் கார்கி ஷர்மா / மந்திரா காஷ்யப் சிறப்பு தோற்றம்
2023–2024 பியார் கா பெஹ்லா அத்யாயா: சிவசக்தி மந்திரா காஷ்யப் [10]
2024–2025 துர்கா – அடூட் பிரேம் கஹானி ஆரத்தி சிங் ரத்தோர்
2025–தற்போது வசுதா (2024 தொலைக்காட்சித் தொடர்) சந்திரிகா சிங் சவுகான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parineeta Borthakur: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India". The Times of India.
  2. "Parineeta Borthakur enjoys teaching Christmas carols to her son". https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/parineeta-borthakur-enjoys-teaching-christmas-carols-to-her-son/articleshow/79939876.cms.
  3. "Parineeta Borthakur is missing her hometown Assam". 25 November 2020. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/parineeta-borthakur-is-missing-her-hometown-assam/articleshow/79407071.cms.
  4. "Parineeta Borthakur : I enjoy playing romantic roles". 9 December 2020. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/parineeta-borthakur-i-enjoy-playing-romantic-roles/articleshow/79641864.cms.
  5. "Parinita Borthakur: Not open to reality shows like 'Bigg Boss'" இம் மூலத்தில் இருந்து 28 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150528144457/http://timesofindia.indiatimes.com/TV/News/Hindi/Parinita-Borthakur-Not-open-to-reality-shows-like-Bigg-Boss/articleshow/46431716.cms.
  6. "Low TRPs is not the reason for 'Gupta Brothers' going off air: Parineeta Borthakur". 20 January 2021. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/low-trps-is-not-the-reason-for-gupta-brothers-going-off-air-parineeta-borthakur/articleshow/80367722.cms.
  7. "Bhool Bhulaiyaa 3 First Reviews: Kartik Aaryan Impresses, Vidya Balan Shines, But Original Charm Falls Short". Bru Times News (in ஆங்கிலம்).
  8. "Swaragini actress Parineeta Borthakur reveals she enjoys playing Bengali characters on-screen". ABP Live. https://news.abplive.com/entertainment/television/swaragini-actress-parineeta-borthakur-reveals-she-enjoys-playing-bengali-characters-on-screen-1361798.
  9. "Gupta Brothers: Chaar Kunware From Ganga Kinare is Star Bharat's latest offering". The Tribune. 20 September 2020. Archived from the original on 10 November 2022. Retrieved 25 January 2021.
  10. "Parineeta Borthakur thanks fans as Pyaar Ka Pehla Adhyaya: Shiv Shakti completes 300 episodes". Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/exclusive-parineeta-borthakur-thanks-fans-as-pyaar-ka-pehla-adhyaya-shiv-shakti-completes-300-episodes/articleshow/109927421.cms.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிணீதா_போர்தாகுர்&oldid=4562695" இலிருந்து மீள்விக்கப்பட்டது