பரிணாமக் கால முரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பரிணாமக் கால முரண் (Evolutionary anachronism; பரிணாமக் காலமுரண்) என்பது தற்போது அருகிவிட்ட விலங்குகளுடனான தொடர்பினால் தாவரங்களில் வளர்ச்சியடைந்த பழம், பூ, இலை, தண்டு ஆகியவற்றைக் குறிக்கும்.[1] அதாவது, முன்னொரு காலத்தில் அவ்விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் அவற்றை ஈர்க்கவும் பயன்பட்ட அவை (பழம், பூ முதலியன) இன்று காலம் செல்லச் செல்ல ஒரு முரணாக அமைந்திருக்கின்றன என்பது பொருளாகும்.

பெரும் விலங்குவளப் பரவுகைத் தாக்கீடு[தொகு]

பரவுகைத் தாக்கீடுகள் (dispersal syndromes) விதைகளைத் தாவரங்கள் பரப்புவதற்காக இருந்த பழக்கப்பட்ட முறைகளுள் ஒன்று. பொதுவாகப் பறவைகளை ஈர்க்கும் பழங்கள், சிறிதாகவும், மிகவும் மெல்லிய பாதுகாப்புத் தோலுடனும், சிவப்பு, நீல அல்லது ஊதா நிறங்களின் கலவையாகவும் இருக்கும். பாலூட்டித் தாக்கீடு (mammal syndrome) என்று வகைப்படுத்தப்பட்ட பழங்கல் பொதுவாக பறவைகளின் பழங்களை விடப் பெரிதாகவும், கடினமான தோலுடனும், பழுக்கும்போது நல்ல (அதிகமான) மணத்தையும் அத்தோடு பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிறிது பச்சை ஆகிய நிறங்களுடனும் தோற்றமளிக்கும். இந்தப் பெரும் விலங்குவளப் (megafauna) பரவுகைத் தாக்கீடுடைய தாவரங்கள் அந்தப் பட்டியலில் இருந்த விலங்குகளைக் கவர்வதற்காக அத்திறன்களைப் பெற்றன. (எடை அதிகமாக அல்லது 44 கிலோகிராமுக்கும் அதிகமாக உள்ளவை) அந்த எடைமிகு விலங்குகளே முதன்மைப் பரப்புக் காரணிகளாகச் செயல்பட்டன. அதிகபட்ச அருகலினால், அதிக எண்ணிக்கையிலான தாவர உண்ணிகள் ஆப்பிரிக்காவும் வெளியிலும் சிறிது ஆஸ்திரேலியாவிலும் குறைந்தன. அவ்வாறு குறைந்தபோது இந்தப் பழங்கள் அவற்றுக்கென தனித்த பரவுகை இன்றி நின்றுவிட்டன. இவற்றால் விவசாயத்தைத் தவிர்த்து வேறெந்த பரவுகை வழிமுறையையும் கையாள முடியாத நிலை வந்தது.

வழக்கமான ஒரு கால முரண்: கோரிசியா ஸ்பெசியோசாவில் தற்போது அருகிவிட்ட பாலூட்டிகளிகளிடமிருந்த் காத்துக்கொள்ள தோன்றிய முள்ளமைப்பு

தவறிய பரவுகைக் கூட்டாளிகளின் சூழலியக் குறிகாட்டிகள்[தொகு]

இங்கு (Ecological indicators of missing dispersal partners) சுற்றுச்சூழலில் எந்தவிதமான அடையாளங்களை அவ்வாறான பரவுகைக் கூட்டாளிகள் விட்டுச் சென்றுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

  • பழங்கள் கீழே விழுந்த பிறகு ஒன்று அழுகும் அல்லது தற்போதைய பரப்புகைக் காரணிகளால் (dispersal agents) மிகவும் திறனுடன் பரப்ப முடியாமல் போகும்
  • இந்தத் தாவரங்கள் அதிகம் குதிரைகளும் கால்நடைகளும் காணப்படும் இடத்தில் வளரும் (proximegafauna)
  • காடுகளில் உள்ள உணவுச் சமவெளிகளில் மட்டுமே வாழும் சில உயிரினங்களால் மேட்டுநிலங்களில் விதைகள் முளைவிட்டுத் தானாக நன்று வளர்தல்
  • புவியியல் வீச்சானது விளக்கமுடியாத அளவுக்கு திட்டுத்திட்டாகவும் தடுக்கப்பட்டதாகவும் இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Barlow, Connie C. (2000). The Ghosts of Evolution: Nonsensical Fruit, Missing Partners, and Other Ecological Anachronisms. New York: Basic Books. ISBN 9780465005512.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிணாமக்_கால_முரண்&oldid=2224035" இருந்து மீள்விக்கப்பட்டது