உள்ளடக்கத்துக்குச் செல்

பரிட்டாலா ரவீந்திரா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிட்டாலா ரவீந்திரா நாயுடு
பிறப்பு29 ஆகத்து 1948
இறப்பு24 சனவரி 2005 (அகவை 56)
ஐதராபாத்து
வாழ்க்கைத்
துணை/கள்
சுனிதா

பரிட்டால ரவி. ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா என்ற பிராந்தியத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஆவார்.

இவர் தந்தை பரிட்டால ஸ்ரீராமுலு, ஓர் கம்மூனிசவாதி ஆவார். இவர் ராயலசீமா பகுதிகளில் இருந்த பூசுவாமி என்னும் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக ஏழை மக்களின் உரிமைக்காக போராடத்தை நடத்தியவர் ஆவார்.

இவரின் மக்கள் செல்வாக்கு அப்பகுதி நிலச்சுவான்தார்களால் சகித்துக்கொள்ள முடியாமல் இவரை திட்டம் தீட்டி கொலை செய்துவிட்டனர்.[சான்று தேவை]

ஸ்ரீராமுலு அவர்களது முதல் மகன் பரிட்டால ஹரீந்திரா அவர்களும் தனது தந்தை வழியஒ பின்பற்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். ஆதலால் அவரும் அப்பகுதி நிலச்சுவான்தார்களால் கொல்லப்பட்டார் .

இந்த அநியாயத்தை அழிக்க, அவர் தந்தை வழி அண்ணன் வழி வந்த மக்களை காக்க வேண்டிய கட்டாயம் பரிட்டாலா ரவீந்திரா அவர்களுக்கு ஏற்பட்டு அவர் போராட்ட களத்திற்கு வந்தார் பரிட்டாலா ரவிந்திரா அவர்கள்.

அப்போது தான் என். டி. ராமாராவ் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கிய காலம். அப்போது அவர் ராயலசீமா பகுதியிலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய போகிறார். அங்கு அவருக்கு எதிராக அவர் பிரச்சார மேடையில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு வெடித்துவிடுகிறது.

அந்த சம்பவத்தால் கோவமுற்று, இவர்களை யாரை வைத்து அடக்கமுடியும் என்று பார்தபோது அவர் கண்ணுக்கு பரிடாலா ரவீந்திர தென்பட்டார்.

ரவீந்திரவை அழைத்து அந்த பகுதியின் சட்டமன்ற பிரதிநிதியாக போட்டியிட வேண்டிக்கொண்டார் என்.டி.யார்.

அவரும் ஒப்புக்கொண்டு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் பரிட்டாலா ரவீந்திரா.

என்.டி.ஆர் மந்திரி சபையில் மந்திரியானார் ரவீந்திரா.

பின்னர் அவரால் அப்பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தார்.மக்களும் அவரை தொடர்ந்து வெற்றிபெறச் செய்தனர்.

அவரின் அரசியல் வெற்றியை தாங்க முடியாத அவரின் எதிரிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

ஆனால் அவரையும்,அவரது குடும்பத்தையும் அப்பகுதி மக்கள் அவரை கடவுளாக பார்கிறார்கள்.

அவருக்கு ஆந்திரா ,தெலுங்கானா, பகுதிகளில் அவருக்கு என்று ரசிகர்பட்டாலம் இருக்கின்றது.

பரிடால குடும்பம் மற்றும் அவரது தொண்டர்கள் சார்பாக பல்வேறு சேவா உதவிகாறியங்களு உதவிக்கொண்டு இருக்கின்றனர்.