உள்ளடக்கத்துக்குச் செல்

பரிசில் கடாநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபு. கடை என்பது அரண்மனை வாயில். கடாவும் (=வேண்டும்) நிலை அன்று.

பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. [1]

புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்று குறிப்பிடுகிறது. [2]

புறநானூறு

[தொகு]
பாடல் எண்பாடிய புலவர்பாடப்பட்ட வள்ளல்
11பேய்மகள் இளவெயினிசேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
101ஔவையார்அதியமான்
136ஆய்துறையூர் ஓடைகிழார்
139மருதன் இளநாகனார்நாஞ்சில் வள்ளுவன்
158, 159, 160பெருஞ்சித்திரனார்குமணன்
164பெருந்தலைச்சாத்தனார்குமணன்
169காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பிட்டங்கொற்றன்
196ஆவூர் மூலங்கிழார்பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
197கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
198வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
199பெரும்பதுமனார்பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
209பெருந்தலைச்சாத்தனார்மூவன்
210, 211பெருங்குன்றூர் கிழார்சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை
266பெருங்குன்றூர் கிழார்சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

அடிக்குறிப்பு

[தொகு]
  1. சேய் வரல் வருத்தம் வீட வாயில்
    காவலர்க்கு உரைத்த கடைநிலையானும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 29)
  2. புரவலன் மகிழ் தூங்க
    இரவலன் கடைக் கூடின்று. (புறப்பொருள் வெண்பாமாலை 213)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசில்_கடாநிலை&oldid=1262393" இலிருந்து மீள்விக்கப்பட்டது