பராசக்தி (2026 திரைப்படம்)
| பராசக்தி (2026 திரைப்படம்) | |
|---|---|
முதல் பார்வை சுவரொட்டி | |
| இயக்கம் | சுதா கொங்கரா |
| தயாரிப்பு | ஆகாசு பாசுகரன் |
| கதை | சுதா கொங்கரா அர்சுன் நடேசன் |
| திரைக்கதை | சுதா கொங்கரா அர்சுன் நடேசன் கணேசா (கூடுதல்) |
| வசனம் |
|
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரவி கே. சந்திரன் |
| படத்தொகுப்பு | சதீசு சூரியா |
| கலையகம் | டான் பிக்சர்சு |
| விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
| வெளியீடு | 10 சனவரி 2026 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹150–250 கோடி[1][2][3] |
பராசக்தி அரசியல் வரலாற்றுத் தமிழ் திரைப்படம் ஆகும். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 1965இல் நடந்த உண்மைச் சம்பவமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.[4][5][6][7] சனவரி 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது.
கதைச் சுருக்கம்
1960-களின் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவிய இந்தி எதிர்ப்பு போராட்டப் பின்னணியில் இத்திரைப்படம் பயணிக்கிறது. படத்தின் நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்), தன் தாய்மொழியின் மீதான பற்றுடன் கல்லூரி மாணவர் அமைப்பை முன்னின்று நடத்தும் ஒரு தீவிரப் போராளியாக அறிமுகமாகிறார். ஒரு முக்கிய ரயில் மறியல் போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறையில் தனது சக நண்பர்களை இழந்த செழியன், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையாலும் (ஜெயம் ரவி) மனமுடைந்து போராட்டக் களத்திலிருந்து ஒதுங்குகிறார். பல ஆண்டுகள் கழித்து ஒரு சாதாரண உழைப்பாளியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளும் செழியனுக்கு, மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அவரது தம்பி (அதர்வா) அதே புரட்சிகரப் பாதையில் பயணிக்கத் தொடங்குவதும், மொழித் திணிப்பு காரணமாகத் தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் அநீதிகளும் செழியனை மீண்டும் போர்க்களத்திற்கு இழுக்கின்றன.
நடிகர்கள்
- ரவி மோகன் - திருநாடன்[8]
- சிவகார்த்திகேயன் - செழியன் "செ"[8]
- அதர்வா - சின்னதுரை[8]
- ஸ்ரீலீலா
- குலப்புள்ளி லீலா[9]
- பிரகாஷ் பெலவாடி சென்னை மாநில முதலமைச்சர்[10]
- தேவ் இராம்நாத்
- பிருத்திவி இராஜன்
- குரு சோமசுந்தரம் - மு. கருணாநிதி
- சேத்தன் - கா. ந. அண்ணாதுரை
- ஷாஜி சென்[11]
- பாப்பரி கோசு
- ரானா தக்குபாடி (சிறப்புத் தோற்றம்)
- பேசில் ஜோசப் (சிறப்புத் தோற்றம்)[12]
இசை
| பராசக்தி | ||||
|---|---|---|---|---|
| திரையிசை பாடல்கள்
| ||||
| வெளியீடு | 3 சனவரி 2026 | |||
| ஒலிப்பதிவு | சனவரி—திசம்பர் 2024 | |||
| ஸ்டுடியோ | டிவைன் லாப்ஸ், சென்னை சவுண்டுஸ் ரைட் ஸ்டூடியோல், சென்னை | |||
| இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத்தட்டு நிறுவனம் | சரிகம | |||
| இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
| ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
| ||||
| பராசக்தி-இலிருந்து தனிப்பாடல் | ||||
|
||||
இப்படத்திற்கு இசை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். இப்படம் இவரின் 100வது படமாகும்.
| பாடல்கள்[13] | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "அடி ஆளயே" | ஷான் ரோல்டன், தீ | 4:10 | |||||||
| 2. | "இரத்தின மால" | ஜி. வி. பிரகாஷ் குமார் | 4:39 | |||||||
| 3. | "நமக்கான காலம்" | நகசு அசிசு, ஹரிசரண், வேல்முருகன் | 4:04 | |||||||
| 4. | "முத்தாரமே" | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி | 4:17 | |||||||
| 5. | "சேனைக் கூட்டம்" | யுவன் சங்கர் ராஜா | 4:20 | |||||||
| 6. | "தரக்கு தரக்கு" | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். அமீன் | 3:17 | |||||||
மொத்த நீளம்: |
24:47 | |||||||||
தயாரிப்பு
படத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது தயாரிப்பாளர் "பராசக்தி படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போன்ற காலகட்ட படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது" என்று கூறினார்.[14] படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு கொழும்பில் நடைபெற்றது.[15] படத்தின் முதல் பார்வை பதாகை வெளியீட்டில் "தமிழ்த் தீ பரவட்டும்" என்று இருந்தது. இது அண்ணாவின் தீ பரவட்டும் சொற்பொழிவை குறிப்பிடுவதுவாகவும் இருந்தது.[16][17]
கதைக்களம்
1937ஆம் ஆண்டில் இருந்து அன்றைய மதராஸ் மாகாணத்தில் நடைப்பெற்று வந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், 1965இல் மும்மொழிக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக தீவிரப் போராட்டம் நடந்தது. இக்காலக்கட்டதில் திரைப்படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. 1965 பிப்ரவரியில் போராட்டம் தீவிரம் அடைந்ததால் போரட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு இராணுவத்தை பயன்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த போராட்டத்தில் ஒரு பள்ளி மாணவன் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட, போராட்டம் மிகவும் அதிமானதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணும் மற்றும் காவல் துறை செய்தத் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். பின்னர் இராணுவம் ஊரை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இறந்தவர்களின் சடலங்களை அவர்களே எரித்தனர். எத்தனைப் பேர் இறந்தனர், அவர்கள் யார் என்ற உண்மையான விவரங்கள் கடைசி வரை அறிவிக்கவில்லை. பின்னர், 20 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வை குறிப்பிடும் வகையில் படத்தின் முன்னோட்டக காட்சிகளில் திருநாடன் கதாபாத்திரம், "பொள்ளாச்சியிலேயே அடிச்சு அங்கேயே புதைச்சிரலாம்!" என்று கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தியில் எம். பாண்டியராஜன் குறிப்பிட்டார்.[18]
விமர்சனங்கள்
ஆனந்த விகடன் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் 'பராசக்தி' " என்று எழுதினர்.[19] தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "தமிழகத்தில் அப்போது நடந்த சில உண்மை சம்பவங்கள் பின்னணியில் விவரிக்கிறது கதை. இதில் அண்ணன், தம்பி பாசம், காதல், பாடல், அரசியல், பழிவாங்கல், சண்டை என பல விஷயங்களை கலந்து டாக்குமென்ட்ரி படமாக அமைந்துவிடாதபடி, கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகளை வழங்கினர்.[20] கல்கி இதழுக்காக ராகவ்குமார் எழுதிய விமர்சனத்தில், "பராசக்தி - சொல்ல நினைத்தது பலம்; சொன்ன விதம் பலவீனம்!" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகளை வழங்கினர்.[21] தினமணி இதழுக்காக சிவசங்கர் எழுதிய விமர்சனத்தில், "'வாழ்க தமிழ்' என எழுந்த ஒவ்வொரு குரல்களுக்குப் பின் தன் தாய் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளின் தன்மானமும் பற்றும் எத்தகையது? என நினைத்து பெருமூச்சு விட வைக்கிறது பராசக்தி!" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகள் வழங்கினர்.[22]
சர்ச்சை
"நமக்கான காலம்" என்னும் பாடலில் தமிழில் "தமிழ் வாழ்க" என்று தெலுங்கு மொழிமாற்ற வடிவத்தில் "தெலுங்கு வாழ்க" என்று இருந்து. கதைக்களம் தமிழ் மற்றும் தமிழ்நாடு என்று இருப்பதால் மொழி மாற்றத்தால் சர்சை ஏற்ப்பட்டது.[23][17]
மேற்கோள்கள்
- ↑ "சிவகார்த்திகேயன் 25-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது". மாலை மலர். 14 December 2024. Archived from the original on 14 December 2024. Retrieved 14 December 2024.
- ↑ "தலைசுற்றவைக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட்.. 500 கோடி வசூல் செய்யுமா". Cineulagam. 15 December 2024. Archived from the original on 15 December 2024. Retrieved 15 December 2024.
- ↑ "சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியீடு". தினத்தந்தி. 14 December 2024. Archived from the original on 15 December 2024. Retrieved 15 December 2024.
- ↑ Das, Srijony (11 March 2025). "Watch: Sivakarthikeyan greets fans in Sri Lanka as he shoots for Sudha Kongara's Parasakthi". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 11 March 2025. Retrieved 15 March 2025.
- ↑ "'Parasakthi' story leaked! This Sudha Kongara directorial is a biopic from Sivakarthikeyan after 'Amaran'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 February 2025 இம் மூலத்தில் இருந்து 21 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250221080846/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/parasakthi-story-leaked-this-sudha-kongara-directorial-is-a-biopic-from-sivakarthikeyan-after-amaran/articleshow/117882726.cms.
- ↑ Sundar, Anusha (2 February 2025). "Parasakthi plot revealed: Sivakarthikeyan and Sudha Kongara's period drama is all about..." OTTPlay. Archived from the original on 20 March 2025. Retrieved 15 March 2025.
- ↑ K, Janani (12 March 2025). "Sivakarthikeyan's Parasakthi pics confirm that film is against Hindi imposition". இந்தியா டுடே (in ஆங்கிலம்). Archived from the original on 16 March 2025. Retrieved 15 March 2025.
- ↑ 8.0 8.1 8.2 "New glimpse from Parasakthi shows சிவகார்த்திகேயன், ரவி மோகன் and அதர்வா's characters and unseen BTS stills". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 29 December 2025. Archived from the original on 29 December 2025. Retrieved 29 December 2025.
- ↑ சிவகார்த்திகேயன் முதல்ல யாருன்னு தெரியல: குலப்புள்ளி லீலா Exclusive Interview | Parasakthi, Rajini. IndiaGlitz Tamil. 2 April 2025. Retrieved 14 November 2025 – via யூடியூப்.
- ↑ "Parasakthi Trailer: சிவகார்த்திகேயன் goes from passive observer to leader of student revolt against Hindi imposition". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 4 January 2026. Archived from the original on 5 January 2026. Retrieved 5 January 2026.
- ↑ சிவகார்த்திகேயன் பராசக்தி update இதுதானா | Actor ஷாஜி சென் interview. Ceylon Trendy DiGital. 26 March 2025. Retrieved 14 November 2025 – via யூடியூப்.
- ↑ "சிவகார்த்திகேயன் confirms பேசில் ஜோசப்'s cameo in Parasakthi". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 7 January 2026. Archived from the original on 7 January 2026. Retrieved 7 January 2026.
- ↑ சரிகம தமிழ் (3 January 2026). Parasakthi — Full Album | சிவகார்த்திகேயன், Ravi Mohan,Atharvaa,Sreeleela, Sudha Kongara | GV Prakash. Archived from the original on 4 January 2026. Retrieved 4 January 2026 – via யூடியூப்.
- ↑ தினத்தந்தி (2025-03-22). "'பராசக்தி' படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போல பிரமாண்டமாக இருக்கும் -தயாரிப்பாளர் பாஸ்கரன்". தினத்தந்தி. Retrieved 2025-05-10.
- ↑ DIN (2025-03-22). "பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!". Dinamani. Retrieved 2025-05-10.
- ↑ ""தீ பரவட்டும்" - 'பராசக்தி' பட டிரெய்லர் வெளியானது……!". News7 Tamil. 2026-01-04. Retrieved 2026-01-09.
- ↑ 17.0 17.1 Elayaraja, D. "'தமிழ் தீ பரவட்டும்' சொல்லிட்டு தெலுங்கு வாழ்க? புதிய சர்ச்சையில் சிக்கிய பராசக்தி 3-வது சிங்கிள்!". tamil.indianexpress.com. Retrieved 2026-01-09.
- ↑ பாண்டியராஜன், எம் (2026-01-07). "பராசக்தி நினைவுகூரும் பொள்ளாச்சியும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமும்!". Dinamani. Retrieved 2026-01-08.
- ↑ டீம், விகடன் (2026-01-10). "பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?". vikatan.com/. Retrieved 2026-01-10.
- ↑ "பராசக்தி - விமர்சனம் {3/5} : பராசக்தி- ஹிந்தியை விரும்பாதவர்கள், தமிழ்ப்பற்றை விரும்புபவர்களுக்கு படம் பிடிக்கும் - Parasakthi". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2026-01-10.
- ↑ ராகவ்குமார் (2026-01-10). "விமர்சனம்: பராசக்தி - சொல்ல நினைத்தது பலம்; சொன்ன விதம் பலவீனம்!". Kalki Online. Retrieved 2026-01-10.
- ↑ சிவசங்கர் (2026-01-10). "தமிழ்த் தீ பரவியதா? பராசக்தி - திரை விமர்சனம்!". தினமணி. Retrieved 2026-01-10.
- ↑ பிரிவு, இணையதளச் செய்திப் (2025-12-15). "தெலுங்கு வாழ்க? குழப்பத்தை ஏற்படுத்தும் பராசக்தி!". Dinamani. Retrieved 2026-01-09.