உள்ளடக்கத்துக்குச் செல்

பராசக்தி (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பராசக்தி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புபி. ஏ. பெருமாள் முதலியார்[1]
திரைக்கதைமு. கருணாநிதி
வசனம்மு. கருணாநிதி
இசைஆர். சுதர்சனம்
பின்னணி இசை: சரசுவதி ஸ்டோர்சு இசைக்குழு
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். எஸ். ராஜேந்திரன்
ஸ்ரீரஞ்சனி
பண்டரிபாய்
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுஎஸ். மாருதி ராவ்
படத்தொகுப்புபாஞ்சபி
கலையகம்ஏவிஎம்,
நேஷனல் பிக்சர்ஸ்
விநியோகம்நேஷனல் பிக்சர்ஸ்
வெளியீடு17 அக்டோபர் 1952 (1952-10-17)
ஓட்டம்188 நிமி.[2]
நாடு இந்தியா
மொழிதமிழ்

பராசக்தி (Parasakthi) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[3] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய எஸ். எஸ். ராஜேந்திரனை, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[4] பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.[5] இப்படம் இதே பெயரிலான பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. பராசக்தி இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரிக்கிறது.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ் முதலில் பராசக்தி மற்றும் டி. எஸ். நடராஜனின் என் தங்கை ஆகிய நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டது; ஆனால், நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. பராசக்தி படத்தின் உரிமையை ஏ. வி. மெய்யப்பன் ஆதரவுடன் நேஷனல் பிக்சர்சின் பி. ஏ. பெருமாள் வாங்கினார். படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைக்க, ஒளிப்பதிவை எஸ். மாருதி ராவ் மேற்கொண்டார், மேலும் "பஞ்சாபி" என்ற பெயரில் பஞ்சு படத்தொகுப்பு செய்தார். 1950 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் படத்தை முடிக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

பராசக்தி 17 அக்டோபர் 1952 அன்று தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. மேலும் படத்தில் பிராமணர்கள் மற்றும் இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை எதிர்மறையாக சித்தரித்ததால் சர்ச்சைகளை எதிர்கொண்டது. அப்போதைய ஆளும் மாநில அரசு உட்பட சில சமூகப்பிரிவினர் படத்தைத் தடை செய்யக் கோரினர். இந்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும், படம் உரையாடல் மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பராசக்தி தமிழ்த் திரையுலகில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. மேலும் பிற்கால தமிழ் படங்களுக்கு உரையாடல் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் ஒரு புதுப்பாங்குக் காட்டியாக மாறியது.

திரைக்கதை சுருக்கம்

[தொகு]

தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம்  நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து, மதுரைக்கும் செல்ல வழியின்றி, பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று, பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் பாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்தபோது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து, கைம்பெண்கள் சந்தித்தத் துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.

நடிப்பு

[தொகு]

நடிகர்கள்[6]

நடிகைகள்[7]
நடனமாதுகள்

கூடுதலாக, கண்ணதாசன் ஒரு நீதிபதியாக அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துள்ளார்.

இசைத்தட்டு

[தொகு]

பராசக்தி திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்தார்.[8][9] பாடல்வரிகளை பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதி, மு. கருணாநிதி, அண்ணல் தங்கோ, உடுமலை நாராயண கவி, கே. பி. காமாட்சிசுந்தரம் ஆகியோர் எழுதியுள்ளனர்.[10][11] பின்னணி இசையை சென்னையைச் சார்ந்த சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்க்கெஸ்ட்ரா அமைத்தது.:1:47 திரைப்படத்தில் இசையைவிட உரையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. எனவே, உரையாடல்கள் தனியாக ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.[12] பராசக்தி படத்தின் சில பாடல்கள் இந்தி, பாக்கித்தானிய உருதுப் படங்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை: ஒன்று அகேலி (1952) படத்திலிருந்து மறுஉருவாக்கம் செய்யப்பட்டதாகும்,[a], "பூமாலை" என்ற பாடல் துப்பட்டா (1952) படத்தின் "சன்வாரியா, தோகே கொய் புக்காரே" பாடலை மறுஉருவாக்கம் செய்ததாகும்,[14] "இல் வாழ்வினிலே" என்பது சுனேரே தின் (1949) படத்தின் "Maine Dekhi Jag Ki Reet" பாடலை அடிப்படையாகக் கொண்டது, "புதுப் பெண்ணின்" என்பது பட்டாங்கா (1949) படத்தில் பர்மியப் பெண்மணி இடம்பெறும் பாடலை அடிப்படையாகக் கொண்டது,[b] மேலும் ஒன்று பாபுல் (1950) படத்தின் "Milte Hi Ankhen Dil Hua" பாடலை அடிப்படையாகக் கொண்டது.[c] "ஓ ரசிக்கும் சீமானே" பாடல், பெரியார் (2007) படத்தின் "இடை தழுவிக்கொள்ள" பாடலுக்கு ஈர்ப்பாகத் திகழ்ந்தது.[15] 2010 இல் வெளியான ரசிக்கும் சீமானே திரைப்படம் அதன் தலைப்பை இந்தப் பாடலிலிருந்து எடுத்துக் கொண்டது; மேலும் அசல் பாடல் 2010 படத்திற்காக மறுகலவை செய்யப்பட்டது.[16] "கா கா கா" பாடலில் "காக்கை அண்ணாவே நீங்கள் அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க" என்ற வரியில் 'அண்ணாவே' என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது, இதன் பொருள் "காக்கை அண்ணா, உங்கள் அழகான வாயால் நீங்கள் இனிமையாகப் பாடுகிறீர்கள்" என்பதாகும்.[17] இந்த வரிகளை நாராயண கவி எழுதியுள்ளார்.[18][19] பராசக்தி படத்தின் பாடல்களை மறுகலைவை செய்து உருவாக்கிய பாடல் தொகுப்பு, மு. கருணாநிதியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு 2009 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.[20][21][22]

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர் நீளம்
1. தேசம் ஞானம் கல்வி சி. எஸ். ஜெயராமன் உடுமலை நாராயண கவி 3:26
2. கா கா கா சி. எஸ். ஜெயராமன் உடுமலை நாராயண கவி 3:00
3. நெஞ்சு பொறுக்கு தில்லையே சி. எஸ். ஜெயராமன் சுப்பிரமணிய பாரதி 4:50
4. இல் வாழ்வினிலே டி. எஸ். பகவதி, எம். ஹெச். ஹுசைன் பாரதிதாசன் 2:07
5. புது பெண்ணின் மனதை எம். எஸ். ராஜேஸ்வரி கே. பி. காமாட்சிசுந்தரம் 4:23
6. ஓ ரசிக்கும் சீமானே எம். எஸ். ராஜேஸ்வரி கே. பி. காமாட்சிசுந்தரம் 1:44
7. எல்லோரும் வாழ வேண்டும் டி. எஸ். பகவதி, எம். எஸ். ராஜேஸ்வரி அண்ணல் தங்கோ 1:35
8. கொஞ்சு மொழி சொல்லும் டி. எஸ். பகவதி கே. பி. காமாட்சிசுந்தரம் 3:03
9. பூமாலை டி. எஸ். பகவதி மு. கருணாநிதி 3:01
10. பொருளே இல்லார்க்கு டி. எஸ். பகவதி கே. பி. காமாட்சிசுந்தரம் 3:37
11. வாழ்க வாழ்கவே எம். எல். வசந்தகுமாரி பாரதிதாசன் 5:00
மொத்த நீளம் = 35:46

வகை

[தொகு]

நாடகப்படம்

குறிப்புகள்

[தொகு]
  1. தியடோர் பாஸ்கரனின் 1996 நூல் The Eye of the Serpent பாடல் பெயர்கள் குறித்து குறிப்பிட்டு எழுதவில்லை.[13]
  2. தமிழ்ச் சங்கம் இணையதளத்தில் எழுதிய சச்சி ஸ்ரீகாந்தா இந்திப் பாடல் பெயர்களை குறிப்பிடவில்லை.
  3. எஸ். ஜெயராமன் எழுதிய The Music of Ghulam Haider (1991) நூலில் தமிழ் பாடல் பெயர்களை குறிப்பிடவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டி. எம். எஸ். - ஒரு பண்-பாட்டுச் சரித்திரம், வாமனன்
  2. Rajadhyaksha & Willemen 1998, ப. 327.
  3. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  4. ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  5. https://cinema.dinamalar.com/tamil-news/84607/cinema/Kollywood/Marakka-mudiyuma-:-Parasakthi-movie.htm
  6. Parasakthi (motion picture). India: நேஷனல் பிக்சர்ஸ். 1952. Event occurs at 2:03.
  7. Parasakthi (motion picture). India: நேஷனல் பிக்சர்ஸ். 1952. Event occurs at 2:17.
  8. பராசக்தி (PDF) (பாட்டுப் புத்தகம்). நேஷனல் பிக்சர்ஸ். 1952. Retrieved 16 November 2025 – via இணைய ஆவணகம்.
  9. "Parasakthi (Original Motion Picture Soundtrack)". ஐ-டியூன்ஸ். Archived from the original on 10 September 2015. Retrieved 16 November 2025.
  10. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1. Chennai: Manivasagar Publishers. p. 38.
  11. Jeshi, K. (10 September 2012). "Blockbusters of Coimbatore". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130708044500/http://www.thehindu.com/books/blockbusters-of-coimbatore/article3881150.ece. 
  12. Baskaran, S. Theodore; Warrier, Shobha. "The cinema historian on ten south Indian films that made history". ரெடிப்.காம். Archived from the original on 6 October 2015. Retrieved 16 November 2025.
  13. Baskaran 1996, ப. 112.
  14. Bali, Karan (20 September 2015). "India's loss, Pakistan's gain: The journey of singing great Noor Jehan after 1947". Scroll.in. Archived from the original on 12 April 2016. Retrieved 16 November 2025.
  15. Srinivas, Saraswathy (8 January 2007). "Music Review: Periyar is impressive". ரெடிப்.காம். Archived from the original on 26 January 2007. Retrieved 16 November 2025.
  16. Srinivasan, Pavithra (15 February 2010). "Rasikkum Seemane lacks substance". ரெடிப்.காம். Archived from the original on 18 February 2010. Retrieved 16 November 2025.
  17. Sri Kantha, Sachi (1 September 2013). "Anna, Annachi, Annathe | Semantics of a sensitive, endearing Tamil word". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 4 July 2014. Retrieved 16 November 2025.
  18. Vamanan (5 May 2014). "Move over Kolaveri: Tender Poetry is Back in Film Songs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 27 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160427093637/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_PASTISSUES2&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=TOICH%2F2014%2F05%2F05&ID=Ar00500. 
  19. Guy 2016, ப. 333.
  20. "Songs written by MK for 1952 movie remixed". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 June 2009 இம் மூலத்தில் இருந்து 12 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160412141433/http://www.newindianexpress.com/cities/chennai/article104912.ece. 
  21. "Album released". தி இந்து. 8 June 2009 இம் மூலத்தில் இருந்து 12 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160412141441/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/album-released/article252333.ece. 
  22. "Parasakthi(1952)". Retrieved 16 November 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :பராசக்தி (திரைப்படம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசக்தி_(1952_திரைப்படம்)&oldid=4445528" இலிருந்து மீள்விக்கப்பட்டது