பரவாக்கோட்டை

ஆள்கூறுகள்: 10°36′02″N 79°25′53″E / 10.6005°N 79.4313°E / 10.6005; 79.4313
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவாக்கோட்டை
—  கிராமம்  —
பரவாக்கோட்டை
இருப்பிடம்: பரவாக்கோட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°36′02″N 79°25′53″E / 10.6005°N 79.4313°E / 10.6005; 79.4313
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 3,207 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பரவாக்கோட்டை (Paravakkottai) இது இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.[4][5].

பரவாக்கோட்டைக்கு மேற்கே மதுக்கூர், வடக்கே மன்னார்குடி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இங்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

போக்குவரத்து[தொகு]

மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே அமைந்துள்ளது இந்த ஊர் மேலும் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டையை மதுக்கூர் வழியாக இணைக்கிறது.வடசேரி வழியை காட்டிலும் மக்கள் அதிகமாக இந்த வழித்தடத்தை பயன் படுத்துவதால் அதிக பேருந்து வசதி உள்ளது

இளைஞர் எழுச்சி பேரவை[தொகு]

மண்ணின் மைந்தர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் அரசு செய்வதை விட அதிகப்படியான நற்செயல்களை இவர்கள் சொந்த நிதியில் செய்வதே அதிகம். 2018 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலில் வீடு இழந்த மக்களுக்கு தார்பாய்,உணவு,டார்ச் லைட்,சானிட்டரி நாப்கின், மெழுகுவர்த்தி போன்ற அனைத்தும் வெளிநாடுவாழ் இளைஞர்களால் அனுப்பி வைக்க பட்டு இளைஞர் எழுச்சி பேரவை நண்பர்கள் மூலம் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் இளைஞர் எழுச்சி பேரவை மூலம் குளம் தூர் வாரும் பணி,இலவச பேருந்து நிலையம்,அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வகை தொண்டுகளும் இலவசமாக செய்து வருகிறார்கள்.இன்றும் பரவக்கோட்டையில் ஊர் கமிட்டி எந்த முடிவு மற்றும் கட்சி கூட்டங்கள் என எந்த முடிவு எடுக்க பட்டாலும் இளைஞர் எழுச்சி பேரவை முடிவும் கட்டாயம் கேட்கப்படும்.

தொழில்[தொகு]

இன்றைய தலைமுறை பெரும்பாலும் நாகரீக வளர்ச்சியில் முன்னேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும் சொந்த ஊரில் விவசாயம் செய்வதை கைவிடுவதில்லை திருவாரூர் மாவட்டத்தில் அதிக மகசூல் செய்யும் கிராமம் இதுதான். இங்கு உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த இளைஞர்கள் இன்று சிங்கப்பூர், லண்டன்,கனடா என பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-22.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவாக்கோட்டை&oldid=3700219" இலிருந்து மீள்விக்கப்பட்டது