பரமேஸ்வரன் ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமேசுவரன் அய்யர் என்பவர் நிதி ஆயோக் எனப்படும் இந்தியத் திட்டக் குழுவின் மூன்றாவது முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். [1]. 1981ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று உலக வங்கியில் சில வருடங்கள் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு மீண்டும் அரசு பணிக்கு திரும்பிய இவர் குடிநீர் மற்றும் சுகாதார துறையின் செயலராக குறிப்பாக இந்திய அரசின் ஸ்வச் பாரத் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய நபராக செயல்பட்டு வருகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.dailythanthi.com/News/India/parameswaran-iyer-has-been-appointed-as-the-chief-executive-officer-of-the-finance-commission-729967
  2. "தூய்மை இந்தியாவுக்கு செயல் திட்டம்: பிரதமர் அலுவலகம் உத்தரவு". www.dinakaran.com. 2022-06-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேஸ்வரன்_ஐயர்&oldid=3451738" இருந்து மீள்விக்கப்பட்டது