பரமேசுவரி லால் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரமேசுவரி லால் வர்மா
Parmeshwari Lal Varma
P.L. Varma, Le Corbusier, Pierre Jeanneret.jpg
லெ கொபூசியே மற்றும் பியரி இழீனெரட்டுடன் லால் வர்மா (இடது)
பிறப்புதிசம்பர் 6, 1920(1920-12-06)
பஞ்சாப், இந்தியா
பணிகட்டடப் பொறியாளர்
அறியப்படுவதுசண்டிகர்
விருதுகள்

பரமேசுவரி லால் வர்மா (Parmeshwari Lal Varma) என்பவர் ஓர் இந்திய கட்டடப் பொறியாளர் ஆவார். 1920 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6 அன்று லால் வர்மா பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். [1] சண்டிகர் நகரத்தை வடிவமைத்த சுவிட்சர்லாந்திய - பிரெஞ்சு கட்டடக் கலைஞரான லெ கொபூசியேவுடன் சேர்ந்து கூட்டாகவும் பணியாற்றினார். [2][3] சேவையில் இருந்து ஓய்வு பெற்றதற்கு முன்பே வர்மா தனக்கு உதவ வேண்டும் என்று லீ கார்பூசியர் விரும்பியதாக செய்திகள் உள்ளன. அதற்காகவே அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த சவகர்லால் நேரு வர்மாவின் சேவையை மேலும் நீட்டிக்குமாறு பஞ்சாப் அரசிடம் கோரவில்லை. [4] சண்டிகர் மற்றும் அதற்கும் அப்பால் லீ கார்பூசியர் மறு கண்டுபிடிப்பு என்ற புத்தகத்தில் சண்டிகரை உருவாக்குதலில் லால் வர்மாவின் ஈடுபாடு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் இவர் ஒரு சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். [5] இந்திய அரசு லால் வர்மாவுக்கு 1971 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகனான பத்ம பூசண் விருதை வழங்கியது. [6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேசுவரி_லால்_வர்மா&oldid=2998185" இருந்து மீள்விக்கப்பட்டது