பரமு புஷ்பரட்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமு புஷ்பரட்ணம் (பிறப்பு: 08 செப்டம்பர் 1955) இலங்கை வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியரும் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும், வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புஷ்பரத்தினம் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்தவர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று, பின்னர் தமிழ்நாடு தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் கலாநிதிப் பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோவிற்கலையில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.

நூல்கள்[தொகு]

இவர் எழுத்துலகில் வரலாற்றுத்துறை சார்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் (சிங்கை நகர்), பூநகரியில் நடந்த தொல்லியல் ஆய்வு, ஆதித் தமிழரின் நாணயங்கள், புராதன இலங்கையில் தமிழும் தமிழரும், கதிரமலை கந்தரோடை, தொல்லியற் தோற்றம் என பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வேறு பணிகள்[தொகு]

புஷ்பரத்தினம் இலங்கை கலாசாரக் கற்கைப் பணிப்பாளராகவும், IRQUE திட்ட இணைப்பாளராகவும், தொல்லியற் பொருட் சேமிப்புச் செயலாளராகவும், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத் தலைவராகவும், புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நாடு கடந்த அளவில் மைசூர்க் கல்வெட்டுச்சபை, சென்னை நாணயச் சபை, தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு தொல்லியம் மன்றம், தமிழ்நாடு உலோக நாணயச் சபை ஆகிய தொழில்சார் மன்றங்களின் அங்கத்தவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

விருதுகள்[தொகு]

இவர் இலங்கை அரசின் சாகித்திய விருதுகளை 1993, 2003களிலும் வடக்கு- கிழக்கு மாகாண சாகித்திய விருதை 2000 ஆம் ஆண்டும் கலை இலக்கியவட்ட விருதை 2003 இலும் பெற்றுள்ளார்.

தளத்தில்
பரமு புஷ்பரட்ணம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமு_புஷ்பரட்ணம்&oldid=3505749" இலிருந்து மீள்விக்கப்பட்டது