பரமா பூசாரி
பரமா பூசாரி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-ஒடிசா | |
பதவியில் 1995-2004 | |
முன்னையவர் | குருபாரி மஜ்கி |
பின்னவர் | தர்மு கோந்த் |
பதவியில் 1980 -1990 | |
முன்னையவர் | இராபிசிங் மஜ்கி |
பின்னவர் | குருபாரி மஜ்கி |
தொகுதி | உமர்கோட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 1, 1954 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பரமா பூசாரி (Parama Pujari; பிறப்பு: சூலை 1, 1954) ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பூசாரி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் கட்சியின் சார்பில் 1980, 1985, 1995 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசாவின் 8, 9, 11 மற்றும் 12வது சட்ட சபை உறுப்பினராகப் பணியாற்றினார். பரமா பூசாசி ஒடிசா சட்டமன்றத்தில் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார்.[1]
இளமை
[தொகு]பரமா பூசாரி சூலை 1, 1954இல் பிறந்தார்.[2] இவரது தந்தை பாலி பூஜாரி. பூஜாரி 7ம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார்.[1][3] திருமணத்துக்குப் பிறகு பர்மா விவசாயியாகப் பணிபுரிந்தார்.[1]
அரசியல்
[தொகு]பரமா பூசாரி ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாகத் தீவிரமாகப் பணியாற்றினார். இவர் முதன்முதலில் ஒடிசா சட்டமன்றத்திற்கு 1980இல் உமர்கோட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் மேலும் மூன்று முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
பரமா 1980 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உமர்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பரமா பூசாரி 8வது ஒடிசா சட்டப் பேரவையின் சபாநாயகரா 1980 முதல் 1985 வரை பணியாற்றினார்.
பின்னர், பரமா 1985இல் உமர்கோட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 9வது ஒடிசா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை பரமா, ஏமானந்தா பிசுவால் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். 1986ல் ஏமானந்தின் அமைச்சரவையில் முதன்முதலாகத் துணை அமைச்சராகச் சேர்ந்தார். பரமா பழங்குடியினர் மற்றும் அரிஜன நலத்துறையின் துணை அமைச்சராகச் சேர்ந்தார். 22 சூலை 1986 முதல் 7 திசம்பர் 1989 வரை இத்துறையில் பணியாற்றினார். பின்னர் இவர் 7 திசம்பர் 1989 முதல் 3 மார்ச் 1990 வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1]
பரமா பூசாரி அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இருப்பினும் 1995 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் போட்டியிட்டு 11வது சட்டமன்றத்திற்கு உமர்கோட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இந்த சட்டப் பேரவையில் ஜானகி பல்லப் பட்நாயக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்ட பிறகு, கிரிதர் காமாங்கின் அமைச்சரவையில் அமைச்சரானார். ஒரே நேரத்தில் இரண்டு துறைகளின் அமைச்சராக இருந்தார். 24 பிப்ரவரி 1999 முதல் திசம்பர் 6, 1999 வரை, கிரிதர் காமங்கின் அமைச்சரவை கலைக்கப்படும் வரை மாநில பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பர்மா பணியாற்றினார்.[1] பின்னர், ஏமானந்தா பிசுவாலின் அமைச்சரவையில் பர்மா அரிஜனங்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 10 திசம்பர் 1999 முதல் 5 மார்ச் 2000 வரை இத்துறையில் பணியாற்றினார். [1]
பின்னர், 2000ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாக உமர்கோட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்ட பரமா பூசாரி 12வது ஒடிசா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Smt. Parama Pujari". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019."Smt. Parama Pujari". odishaassembly.nic.in. Odisha Assembly. Retrieved 27 February 2019.
- ↑ "MLA Parama Pujari Profile | UMERKOTE Constituency". naveenpatnaik.com. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "Parama Pujari(Indian National Congress(INC)):Constituency- UMARKOTE (ST)(NABARANGPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "BJD faces tough fight in Umerkote". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "BJD undecided over Umerkote candidate - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "Parama Pujari, Umarkote Assembly Elections 1995 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". Latestly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
- ↑ "Parama Pujari, Umarkote Assembly Elections 2000 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". Latestly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.