உள்ளடக்கத்துக்குச் செல்

பரமசிவன் பாத்திமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமசிவன் பாத்திமா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்இசக்கி கார்வண்ணன்
தயாரிப்புஇசக்கி கார்வண்ணன்
கதைஇசக்கி கார்வண்ணன்
இசைதீபன் சக்ரவர்த்தி
நடிப்பு
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புபுவன்
கலையகம்இலட்சுமி கிரியேசன்சு
வெளியீடு6 சூன் 2025 (2025-06-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரமசிவன் பாத்திமா (Paramasivan Fathima) இசக்கி கார்வண்ணன் இலட்சுமி கிரியேஷன்சு நிறுவனத்தின் பேரில் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட இருக்கும் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம். எசு.பாசுகர், மனோஜ் குமார், சிறீரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார்,உள்ளிட்டப் பலர் துணை வேடங்களில் நடிக்க விமலும் சாயாதேவியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பரமசிவன் பாத்திமா ஜூன் 6, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நவம்பர் 30, 2024 அன்று, விமல் தனது 34வது படமான பரமசிவன் பாத்திமாவை[1] சுவர் விளம்பர பதாகையினை வெளியிட்டு அறிவித்தார். தமிழ் குடிமகன் (2023) திரைப்படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இத்திரைப்படத்தினை எழுதி, இயக்கி, தயாரிக்கின்றார்.[2] இந்தப் படத்தை கார்வண்ணன் தனது லட்சுமி கிரியேஷன்சு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். சாயாதேவி கதாநாயகியாக நடிக்க[3], எம். எசு. பாசுகர், மனோஜ் குமார், சிறீரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டப் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[4] திரைபப்டத்தின் ஒளிப்பதிவாளராக மைனா சுகுமாரும், இசையமைப்பாளராகத் தீபன் சக்ரவர்த்தியும் படத்தொகுப்பாளராக புவனும் பணியாற்றுகின்றனர்.[5] இந்த படத்தின் குறுப்படக் காட்சியினை மார்ச் 14, 2025 அன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் வெளியிட்டனர்.[6]

இசை

[தொகு]
பரமசிவன் பாத்திமா
இசை
வெளியீடு26 மே 2025 (2025-05-26)
இசைப் பாணிஒலிச்சுவடு
இசைத்தட்டு நிறுவனம்டிரெண்டு மியூசிக் (Trend Music)
இசைத் தயாரிப்பாளர்தீபன் சக்ரவர்த்தி
தீபன் சக்ரவர்த்தி காலவரிசை
வாமனன் (திரைப்படம்)
(2009)
பரமசிவன் பாத்திமா
(2025)
பரமசிவன் பாத்திமா-இலிருந்து தனிப்பாடல்
  1. "நா மல்லி"
    வெளியீடு: 9 மே 2025
வெளிப்புற ஒலி
audio icon யூடியூபில் பரமசிவன் பாத்திமா - ஒலி இசைப்பெட்டி

இந்தப் படத்திற்கு தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். [7] இப்படத்தின் தனிப்பாடலான "நா மல்லி" 9 மே 2025 அன்று வெளியிடப்பட்டது.[8] வெளியீட்டுக்கு முந்தைய இசை வெளியீட்டு விழா நிகழ்வு 26 மே 2025 அன்று சென்னையில் நடைபெற்றது.[9] இதைத் தொடர்ந்து மீதமுள்ள 4 பாடல்களைக் கொண்ட முழு ஒலித் தொகுப்பு வெளியிடப்பட்டது.[10]

ஏகாதேசி அனைத்துப் பாடல்களையும் எழுதினார். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நா மல்லி"  பிரியா ஹிமேஷ்  
2. "என் விரதங்கள்"  சிறினிசா செயசீலன்  
3. "காடு எங்க வீடூ"  மீனாட்சி இளையராஜா, மேக்னா சுமேசு, கழுத்து கார்த்தி, தீபன் சக்கரவர்த்தி  
4. "ஒரு தாலாட்டு"  சைந்தவி, சிறீகாந்த் அரிகரன்  
5. "ஓடோடி நீ"  முத்துசிற்பி, கேமாம்பிகா, கழுத்து கார்த்தி, நாகேசுவரன்  

வெளியீடு

[தொகு]

பரமசிவன் பாத்திமா திரைப்படத்தினை சூன் 6, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.[11]

விமர்சனம்

[தொகு]

தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "பிரச்சினைக்குரிய கதைக்களத்தில் படத்தை இயக்கி, மதரீதியான பாகுபாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்ற கருத்தை சமரசமின்றி சொல்லி தீர்த்துள்ளார், இயக்குனர் இசக்கி கார்வண்ணன். பரமசிவன் பாத்திமா - சர்ச்சை நிச்சயம்" என்று எழுதினர்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Akshay (2024-11-30). "Vemal's next titled Paramasivan Fathima". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 14 January 2025. Retrieved 2025-03-15.
  2. மலர், மாலை (2025-03-14). "`அந்த வெள்ளக்காரனே இங்க பிச்ச எடுக்கதான் வந்தான்' - பரமசிவன் பாத்திமா டிரெய்லர் வெளியானது | Vemal`s Paramasivan Fathima trailer released". www.maalaimalar.com. Retrieved 2025-03-15.
  3. "விமல் நடிக்கும் பரமசிவன் பாத்திமா படத்தின் மிரட்டல் ட்ரெய்லர்!". Times Now Tamil. 2025-03-14. Retrieved 2025-03-15.
  4. Bharat, E. T. V. (2024-12-01). "மதம் கடந்த காதல் கதை; வித்தியாசமான தலைப்புடன் உருவாகும் விமல் படம்!". ETV Bharat News. Retrieved 2025-03-15.
  5. Kumar, Akshay (2025-03-13). "Seeman and Annamalai to launch Vemal's Paramasivan Fathima trailer". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-03-15.
  6. . 
  7. "விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா". Zee Hindustan Tamil. 2025-05-27. Retrieved 2025-05-29.
  8. Features, C. E. (2025-05-10). "'Naa Malli' song from Vemal's Paramasivan Fathima out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-11.
  9. தினத்தந்தி (2025-05-25). ""பரமசிவன் பாத்திமா" படத்தின் இசை வெளியீடு அப்டேட்". www.dailythanthi.com. Retrieved 2025-05-25.
  10. தினத்தந்தி (2025-05-27). ""பரமசிவன் பாத்திமா" படத்தின் இசை ஆல்பம் வெளியீடு". www.dailythanthi.com. Retrieved 2025-05-29.
  11. "Vemal's Paramasivan Fathima gets a release date" (in en). 25 May 2025. https://www.cinemaexpress.com/tamil/news/2025/May/25/vemals-paramasivan-fathima-gets-a-release-date. 
  12. தினத்தந்தி (2025-06-09). "'பரமசிவன் பாத்திமா' திரைப்பட விமர்சனம்". dailythanthi.com. Retrieved 2025-06-12.

வெளியிணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பரமசிவன் பாத்திமா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமசிவன்_பாத்திமா&oldid=4291226" இலிருந்து மீள்விக்கப்பட்டது