பரனாய்டு ஆண்ட்ராய்டு
உருவாக்குனர் | பரனாய்டு ஆண்ட்ராய்டு அணி |
---|---|
இணையத்தளம் | www |
பரனாய்டு ஆண்ட்ராய்டு (Paranoid Android) இயங்குதளம் என்பது திறன்பேசிகளுக்கும் மடிக்கணினிகளுக்கும் ஒரு திறந்த மூல இயங்குதளம்(Operating system) ஆகும். செப்டம்பர் 2015 இல், பீசீ அட்வைசர் மிகவும் பிரபலமான விருப்ப இயங்குதளத்தில் (Custom ROM) பரனாய்டு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையும் சயனோச்சன்மாட் இயங்குதளத்தையும் குறிப்பிட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் இந்த விருப்ப இயங்குதளத்தை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பயன்படுத்துகின்றனர் என்றும் உலகின் பிரபலமான விருப்ப இயங்குதளத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வரலாறு
[தொகு]பரனாய்ட் ஆண்ட்ராய்டு பால் ஹென்ஷெலால் நிறுவப்பட்டது. பிப்ரவரி 2015 இல், OnePlus நிருவனம் அதன் புதிய ஆக்சிசன் இயங்குதளத்திற்காக (OxygenOs) பரனாய்டு ஆண்ட்ராய்டு அணியில் இருந்து முக்கிய உறுப்பினர்களை பணியமர்த்த கொண்டுசென்றது. இதனால் பரனாய்டு ஆண்ட்ராய்டு 5.1 ஐ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
அம்சங்கள்
[தொகு]பரனாய்டு ஆண்ட்ராய்டின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என ஹாலோ (halo) மற்றும் பை (Pie) ஐ எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.