பரந்தூர் ஏரி
| பரந்தூர் ஏரி | |
|---|---|
| அமைவிடம் | பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா |
| ஆள்கூறுகள் | 12°34′N 79°26′E / 12.56°N 79.44°E |
| வகை | குளம் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| மேற்பரப்பளவு | 201 எக்டேர் (496.68182 ஏக்கர்) |
| சராசரி ஆழம் | 1 மீட்டர் (3.281 அடி) |
பரந்தூர் ஏரி (Parandur Lake) என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1]
அமைவிடம்
[தொகு]பொதுவாக பரந்தூர் ஏரி என்று அழைக்கப்படும் இது, பரந்தூர், கொட்டவாக்கம், பட்டுப்பட்டூர், மதுராபரந்தூர், வரதாபுரம், சாமந்திபுரம், மணியாச்சி, நாகப்பட்டு, மேட்டுப் பரந்தூர் ஆகிய கிராமங்கள் இந்த சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ளன. இந்த ஏரியின் புவியியல் ஒருங்கிணைப்புகள் அட்சரேகை: 12° 56'13.6” N; 12° 56'24.5” N மற்றும் தீர்க்கரேகை: 079° 44’11.6” E; 079° 44’10.5” E ஆகும். பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லாத இந்த ஏரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.[1]
தளத்தின் பண்புகள்
[தொகு]புவியிடங்காட்டியின் (GPS) ஆயத்தொலைவுகளின் அடிப்படையில், மாகறல் ஏரியின் பரப்பளவு, சுமார் 201 எக்டேர் (496.68182 ஏக்கர்) என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஈரநிலம், 'குளம்' என்ற துணைப்பிரிவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட (உள்நாட்டு) வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகிறது.[1]
நீர் நிலவரங்கள்
[தொகு]இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரம் மழைப்பொழிவு, சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வழிந்து வரும் நீர்வரத்து ஆகும். மேலும் பாலாறு ஆற்று அமைப்பின் ஒரு பகுதியாக உள்ள இது, ஏரியில் உள்ள நீர் பெரும்பாலும் இடைவிட்டு வரும் தன்மையுடையது.
இந்த ஏரியில் இருந்து வரும் நீர், சுற்றியுள்ள வேளாண் நிலங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக அமைவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்தவும் உதவுகிறது, மேலும் அதன் உபரி நீர் ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரி நீரின் அமிலக் காரத்தன்மை (pH) 7.3 வரை கொண்டதாகக் காணப்பட்டது என பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதிரி எடுக்கப்பட்ட நேரத்தில், ஏரியில் உள்ள நன்னீரின் உப்புத்தன்மை 0.174 பிபிடி (ppt) எனப் பதிவு செய்யப்பட்டது. (0.174 ppt என்றால் ஒரு லிட்டர் (அல்லது கிலோகிராம்) தண்ணீரில் 0.174 கிராம் உப்பு மட்டுமே உள்ளது, அதாவது இது மிகக் குறைந்த அளவு.)
இந்த ஏரியில் மிதக்கும், நீரில் மூழ்கிய மற்றும் நீரில் இருந்து வெளிவரும் நீர் வாழ்த் தாவரங்கள்மிகக் குறைவாகக் காணப்பட்டதால், இந்த ஏரி ஊட்டச்சத்து குறைந்த தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் வீட்டுக் கழிவுநீர்கள் ஏரியில் கலப்பதாக கூறப்பட்டுள்ளது.[1]
பயன்பாடுகள்
[தொகு]வேளாண்மை 80 விழுக்காடு, குடியிருப்புகள் (கிராமப்புறம்) 10 விழுக்காடு மற்றும் தொழிற்சாலைகள் 10 விழுக்காடு.
இவற்றையும் காண்க
[தொகு]வெளியிணைப்பு
[தொகு]- பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாய்கள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை. தினமணி - அக்டோபர் 23, 2016.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Criteria for wetland prioritization and frame work for wetland monitoring in the state of Tamil Nadu - Uthiramerur Lake - Page: 257" (PDF). tnswa.tn.gov.in (ஆங்கிலம்). 2022. Retrieved 2025-12-30.