பரணிக்காவு புத்தர் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரணிக்காவு புத்தர் சிலை

பரணிக்காவு புத்தர் சிலை, கேரளாவின், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரா தாலுகா, பரணிக்காவு வட்டம், காட்டானம் கிராமத்தில் உள்ள பரணிக்காவு தேவி கோவிலில் உள்ளது.[1]

படிமவியல்[தொகு]

புத்தர் தவக்கோலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்த கருங்கற்சிலை சுமார் மூன்று அடி உயரமுடையது.[2] இடது தோளில் மடிப்புகளுடன் கூடிய மேலாடை அணிந்துள்ளார். எரியும் தீச்சுடர் மற்றும் பிழம்பு ஆகியன தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.[1]

வரலாறு[தொகு]

இந்தச்சிலை பள்ளிக்கல் எனற கிராமத்திலிருந்த கோவிலிலிருந்து கண்டறியப்பட்டது. இவ்வூர் காயங்குளத்திலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தற்போது பரணிக்காவு தேவி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[2]இந்த புத்தர் சிலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக திருவிதாங்கூர் அரசு 1941 ஆம் ஆண்டு அறிவித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Buddha image, Bharanikavu, Department of Archaeology. Kerala State Archaeology Department
  2. 2.0 2.1 Ancient Buddha Statues of Kerala, Yogini Abhaya Devi. Way of Bodhi. October 11, 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணிக்காவு_புத்தர்_சிலை&oldid=3419363" இலிருந்து மீள்விக்கப்பட்டது