பரண

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரண என்பவன் இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான். கப்பகந்துரு என்ற ஊரிலிருந்த பிரதானி ஒருவனின் மகன். சிறு வயது முதல் உடல் வலிமை உடையவனாக இருந்தான். பத்து வயதாகும் போது மரை, காட்டுப்பன்றி போன்றவற்றை துரத்தி அவற்றை பிடித்துக் கொல்வான். அவன் வலிமையை கேள்வியுற்ற காவந்தீச மன்னன் அவனைத் தனது படையில் இணைத்துக் கொண்டான். இவனது வலிமையால் மானபரன என்னும் பெயரில் அறிமுகமானான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரண&oldid=1538654" இலிருந்து மீள்விக்கப்பட்டது