பரட்டென்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Left Talus bone -பரட்டென்பு

பரட்டென்பு[தொகு]

கணுக்காலில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்று பரட்டென்பு (Talus) ஆகும். உடலின் எடை கால்கள் வழியே இந்த எலும்பின் மூலம் பாதத்திற்கு எடுத்துச் செல்லப்பபடுகிறது. இப்பரட்டென்பிற்கு தலை, கழுத்து, உடல் என முப்பகுதிகள் உண்டு. தலைப்பகுதி உள்ளும் கீழும் இருப்பதால் எப்பக்கத்தை சார்நதது என அறிய உதவுகிறது. இந்த எலும்பில் எந்தவித தசையும் இணைக்கப்படாதது, இதன் தனி தன்மையாகும்.

Talus bone -பரட்டென்பு
        பரட்டென்பு தலையின் முன்பகுதி நேவிகுலர் எலும்புடனும், பாதப்பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டு குதிகால் எலும்புடனும் மூட்டு உண்டாக்கும். கழுத்தில் பல்வேறு இணையங்களும் மூட்டு உறைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் உடல் 6 பகுதிகளைக் கொண்டது. மேற்பகுதி நளக எலும்புடனும், வெளிப்பகுதி சரவென்பின் கீழ்வெளி முளியுடனும், உட்பகுதி நளக எலும்பின் கீழ் உட்முளியுடன் பின்பகுதியில் பின், பரட்டென்பு மற்றும் சரவென்பு இணைக்கும் இணையங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள பாதப்பகுதி குதிகால் எலும்புடனும், முற்பகுதி கழுத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். 

[1]

[2]

[3]

[4]


பகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை

 1. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினான்கு
 2. Thieme Atlas of Anatomy (2006), p 406
 3. Gray's Anatomy (1918)
 4. Thieme Atlas of Anatomy: General Anatomy and Musculoskeletal System. Thieme. 2006. ISBN 1-58890-419-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரட்டென்பு&oldid=2754053" இருந்து மீள்விக்கப்பட்டது