பரஞ்சோதியார்
தோற்றம்
"பரஞ்சோதியார்" அகச்சந்தான குரவர் பரம்பரையில் நான்காமவர், மெய்கண்டாருக்கு சிவஞான உபதேசம் செய்த ஞானகுரு ஆவார். . திருக்கைலாய பரம்பரையில் நந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகளைத் தொடர்ந்து, சிவஞான போதம் உள்ளிட்ட சித்தாந்த உண்மைகளை உலகிற்கு அருளியவர். இவரின் குருபூசை சைவ சமயத்தில், குறிப்பாக ஆதீனங்களில் சிறப்பான வழிபாட்டுடன் கொண்டாடப்படுகிறது.
அகச்சந்தான குரவர்களில் நான்காமவரான பரஞ்சோதி முனிவர், திருவெண்ணெய்நல்லூர் சுவேதப் பெருமாள் என்ற ஞானக் குழந்தைக்கு சிவஞான உபதேசம் செய்து, அவருக்கு 'மெய்கண்டார்' எனப் பெயரிட்டு புறச்சந்தான குரவர் பரம்பரையைத் தொடங்கி வைத்தார்.