பரசேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரசேரி என்னும் கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் கட்டிமாங்கோடு ஊராட்சியின் கீழ் வரும் கிராமம் ஆகும். இக்கிராமம் திங்கள்சந்தை-தோட்டியோடு சாலையில் அமைந்துள்ளது. இது நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.கொன்னக்குழிவிளை,மேற்கு பரசேரி, கரிஞ்சான்கோடு,தோட்டியோடு,கட்டிமாங்கோடு ஆகியவை இதன் அண்டை ஊர்களாகும்.

ஊர் பெயர்காரணம்[தொகு]

பரசேரி: பரசேரியில் அமைந்துள்ள குளத்தின் பெயர் பரவன் குளம். இங்கு பரவர்கள் வாழ்ந்ததாக பல ஆதாரங்கள் உள்ளது. இவர்களுடைய இனப்பெயர் அடிப்படையிலேயே பரசேரி என்று கிராமத்தின் பெயர் உருவானது. இத்தகவல் கன்னியாகுமரி ஊர்களின் பெயர்கள் ஆய்வறிக்கை மற்றும் பரவர் வரலாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், தற்பொழுது இக்கிராமம் கிருஷ்ண வகை சமுதாய மக்கள் அதிகம் வாழும் கிராமம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசேரி&oldid=3687013" இலிருந்து மீள்விக்கப்பட்டது