உள்ளடக்கத்துக்குச் செல்

பரக்பூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரக்பூர்

ব্যারাকপুর
2019இல் பரக்பூர் தொடருந்து நிலைய நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்எசு என். பானர்ஜி சாலைக்கு அருகில், பரக்பூர், வடக்கு 24 பர்கானாசு மாவட்டம், மேற்கு வங்காளம்[1]
இந்தியா
ஆள்கூறுகள்22°45′37″N 88°22′16″E / 22.760313°N 88.371141°E / 22.760313; 88.371141
ஏற்றம்12 மீட்டர்கள் (39 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு இரயில்வே
தடங்கள்சீல்டா–ரனாகாட் வழித்தடம் மற்றும் கொல்கத்தா புறநகர் இரயில்வே
நடைமேடை5 (1,1A,2,3,4)
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்தானி நிலைய நிறுத்தம்,மகிழுந்து நிறுத்தம்,பேருந்து நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரத்தில் உள்ளது
தரிப்பிடம்இருக்கிறது Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்இருக்கிறது Bicycle facilities
மாற்றுத்திறனாளி அணுகல்நுழைவாயிலில் (நடைபாதை எண் 1 மற்றும் 4-இல்) கிடைக்கும்.
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுBP
மண்டலம்(கள்) கிழக்கு ரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) சீல்டா
வரலாறு
திறக்கப்பட்டது1862; 164 ஆண்டுகளுக்கு முன்னர் (1862)
மின்சாரமயம்1963–1965; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1965)
(25KV AC மேல்நிலை வழித்தடம்)
முந்தைய பெயர்கள்கிழக்கு வங்க ரயில்வே
அமைவிடம்
பரக்பூர் is located in மேற்கு வங்காளம்
பரக்பூர்
பரக்பூர்
மேற்கு வங்கத்தில் இடம்
பரக்பூர் is located in இந்தியா
பரக்பூர்
பரக்பூர்
Location in India

பரக்பூர் தொடருந்து நிலையம் (Barrackpore railway station)(நிலையக் குறியீடு: BP) என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாசு மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு எசுசி2 தரம் வாய்ந்த முக்கிய தொடருந்து நிலையமாகும். இது பரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது. இது சீல்டாராணாகாட் வழித்தடத்தில் அமைந்துள்ளது மற்றும் கிழக்கு இரயில்வேயின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

வரலாறு

[தொகு]

கிழக்கு வங்காள ரயில்வேயின் சீல்டா-குசுதியா வழித்தடம் 1862ஆம் ஆண்டில் தொடருந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.[2] கிழக்கு வங்காள ரயில்வே ஹூக்ளி ஆற்றின் கிழக்குப் பகுதியில் மட்டுமே இயங்கி வந்தது.[3]பரக்பூர் 1862 முதல் தொடருந்து சேவையுடன் இயங்கி வருகிறது.

பாதை

[தொகு]

சீல்டாவிலிருந்து பரக்பூரை புறநகர் இரயில் மூலம் சென்றடைய சுமார் 35-40 நிமிடங்கள் ஆகும். கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், பராக்பூரின் பெரும்பாலான நகராட்சிகள் கொல்கத்தாவுடன் உள்ளூர் தொடருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சீல்டா-ராணாகாட் வழித்தடம் இந்த துணைப் பிரிவின் வழியாகச் சென்று போங்கான், டான்குனி, ஹவுரா, பர்த்வான் மற்றும் பாண்டேல் ஆகியவற்றை இணைக்கிறது. இது கொல்கத்தா புறநகர் இரயில்வே அமைப்பின் ஒரு பகுதியாகும். கொல்கத்தாவின் வட்ட மற்றும் மெட்ரோ தொடருந்துகளும் இந்த துணைப் பிரிவிற்குச் சென்று வர எளிதில் அணுகக்கூடிய போக்குவரத்து வசதியை வழங்குகின்றன.

மின்மயமாக்கல்

[தொகு]

சீல்டா–ரனகாட் பகுதி 1963–65இல் மின்மயமாக்கப்பட்டது.[4]பரக்பூர் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டது.

புகைப்படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BP/Barrackpore – India Rail Info
  2. "IR History: Early days (1832–1865)". IRFCA. Retrieved 2 May 2013.
  3. "Eastern Bengal Railway". fibis. Retrieved 2 May 2013.
  4. "History of Electrification". IRFCA. Retrieved 5 May 2013.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Barrackpore railway station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.