பய்யு மகாராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பய்யு மகாராஜ் (29 ஏப்ரல் 1968 - 12 ஜூன் 2018)[1], என அழைக்கப்பட்ட உதய் சிங் தேஷ்முக் ஒரு ஆன்மீக குரு ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரில் சுஜல்பூர் எனும் இடத்தில் பிறந்தார். மகாராஜ் உதய் சிங் தேஷ்முக் ஏப்ரல் 29, 1968 அன்று மத்திய பிரதேசத்தின் சுஜல்பூரில் பிறந்தார். அதிக அளவில் விவசாயம் செய்துவந்த நிலச்சுவாந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.[1][2] இவரது முதல் மனைவி 2015 இல் இறந்தார். 2017 இல், அவர் ஆயுஷி சர்மாவை மணந்தார். ஆடம்பரமான வாகனங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று அறியப்பட்டார்.[3][2]

பொது வாழ்க்கை[தொகு]

பய்யு இந்தூரில் வசித்து வந்தாலும், மஹாராஷ்டிர மாநிலத்திலும் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளைச் செய்து வந்தார். இவர் இந்து மரபின் வழி வந்த தத்தாத்ரேயர் வழியைப் பின்பற்றுபவர். அவர் "யுவ ராஷ்டிர சாந்த்" என்றும் அழைக்கப்பட்டார். அவரைப் பின்பற்றுபவர்கள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், லதா மங்கேஷ்கர்.[4] அவர் மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரின் ஆலோசகராகவும் இருந்தார்.[3] லோக்பால் அல்லது ஊழல் கண்காணிப்புக் குழுவிற்காக அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போது, லோக்பால் மசோதாவின் வரைவைத் தயாரிப்பதில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு மத்தியஸ்தராக அவர் பணியாற்றினார். நர்மதா நதியின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நால்வரில் பய்யு மகாராஜூம் ஒருவர்.[5] ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது சமூகத்தின் மீது எந்தவிதமான விருப்பமும் இல்லாததால் இந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார்.[6]

மரணம்[தொகு]

12 ஜூன் 2018 அன்று, இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் மகாராஜ் தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பய்யு_மகாராஜ்&oldid=3017801" இருந்து மீள்விக்கப்பட்டது