உள்ளடக்கத்துக்குச் செல்

பய்யனூர் முரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பய்யனூர் முரளி என்பவர் ஒரு மலையாள நாடக நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் நூற்றுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

கண்ணூர் மாவட்டத்தில் பய்யன்னூர்க்கு அருகில் உள்ள அன்னூரில் பிறந்தார். சகாவ்‌, பழஸ்ஸி ராஜா உட்பட்ட நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளார். 2002-ல் எர்ணாகுளத்தில் கலாசேதன என்னும் நாடகக்குழுவைத் தொடங்கினார். அமதன், சிநேககாயகன், ஆராதகன், நன்மனிறஞ்சவன், விஸ்வனாயகன் உட்பட்ட நாடகங்களை இக்குழுவினர் நடித்தனர். பத்மஸ்ரீ அம்பாட்டு கேசவன் என்னும் நாடகத்தில் அம்பாட்டு கோவிந்தமேனோன் என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை இயக்கி, தயாரித்தவரும் இவரே.[1]

2013-ல் வெளியான 3ஜி என்னும் மலையாளத் திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்தார்.

விருதுகள்[தொகு]

நான்கு முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். கண்ணூர் சங்கசேதனையின் உணர்த்துபாட்டு என்னும் நாடகத்திற்காகவும் விருது கிடைத்தது[2]

தேவஸ்‌பந்தனம் என்னும் நாடகத்தினை இயக்கியதற்காக 2002-ல் மிகச் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. 2003-ல் சகுனி என்னும் நாடகத்தினை இயக்கியதற்காகவும் 2004-ல் சிநேககாயகன் என்னும் நாடகத்தினை இயக்கியதற்காகவும் விருதுகள் கிடைத்தன.

160-ற்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார். திக்குறிசி பௌண்டேஷன், அச்சன்குஞ்சு விருது, சங்ஙனாசேரி நடராஜன் விருது முதலியனவும் பெற்றுள்ளார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "நாடகம் வழி ஸினிமயில், பய்யன்னூர் முரளி". தீபிகா இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013090300/http://malayalam.deepikaglobal.com/feature/Feature_Details.aspx?newscode=7335&feature_cat=cat19. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 13. 
  2. 2.0 2.1 "பய்யன்னூர் முரளி...". ஜனயுகம் இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013090605/http://www.janayugomonline.com/php/mailnews.php?nid=89279. பார்த்த நாள்: 2013 ஒக்டோபர் 13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பய்யனூர்_முரளி&oldid=3483852" இலிருந்து மீள்விக்கப்பட்டது