உள்ளடக்கத்துக்குச் செல்

பயோனீர் 11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயோனீர் 11
விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளிக்குச் செல்லும் வழியில் பயனீர் 11 பற்றிய ஒரு கலைஞரின் காட்சிப்படுத்தல்
திட்ட வகைPlanetary / Heliosphere exploration
இயக்குபவர்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) / Ames
காஸ்பார் குறியீடு1973-019A
சாட்காட் இல.6421
இணையதளம்science.nasa.gov
திட்டக் காலம்22 ஆண்டுகள், 7 மாதங்கள் and 19 நாட்கள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்பயோனீர் ஜி
தயாரிப்புTRW
ஏவல் திணிவு258.5 kg (570 lb)
திறன்155 வாட்ஸ் (ஏவுதலின் போது)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்April 6, 1973, 02:11:00 (1973-04-06UTC02:11Z) UTC[1]
ஏவுகலன்Atlas SLV-3D Centaur-D1A Star-37E
ஏவலிடம்Cape Canaveral LC-36B
திட்ட முடிவு
கழிவு அகற்றம்Decommissioned
கடைசித் தொடர்புNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).
வியாழன் (கோள்)-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்திசம்பர் 3, 1974
தூரம்43,000 km (27,000 mi)
சனி (கோள்)-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்செப்டம்பர் 1, 1979
தூரம்21,000 km (13,000 mi)

பயனியர் திட்டம்
← பயோனீர் 10 Pioneer 12

பயோனீர் 11 (Pioneer 11) என்பது பயோனீர் ஜி எனவும் அழைக்கப்படும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பால் நிலைப்படுத்தப்பட்ட ஆளில்லா புறவெளித் தேட்ட விண்கலமாகும். இது 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சிறுகோள் பட்டை, வியாழன் (கோள்), சனி (கோள்) ஆகியவற்றின் சுற்றுப்புறம், சூரியக் காற்று மற்றும் அண்டக் கதிர் ஆகியவற்றைப் பற்றி ஆய்விட நிலைநிறுத்தப்பட்டது.[2] இந்த புறவெளித் தேட்ட விண்கலமானது சனிக்கோள் பற்றி புலனாய்வு செய்ய அனுப்பபப்பட்ட முதலாவதும் சிறுகோள்பட்டையின் வழியாக பயணித்த இரண்டாவதும் வியாழன் கோளிற்கருகில் பறந்த இரண்டாவதும் ஆகும். பிறகு, பயோனீர் 11 சூரியக் குடும்பத்திலிருந்து விடுபட்ட இரண்டாவது செயற்கைப் பொருளாகவும் ஆனது. இதன் விடுபடு திசைவேகம் சூரியக்குடும்பத்திலிருந்து வெளிப்படுவதற்குப் போதுமானதாக இருந்தது. மின் தடைகள் மற்றும் ஆய்வுக்காக பறந்த தொலைவுகள் காரணமாக 1995 செப்டம்பர் 30 ஆம் நாள் விண்கலத்துடனான கடைசித் தொடர்பு நிகழ்ந்தது, மேலும், சிறப்பான கடைசி பொறியியல் ரீதியான தொடர்பு நவம்பர் 1995 நவம்பர் 24 ஆம் நாள் கிடைக்கப் பெற்றது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pioneer 11 - NASA Science" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-21. Retrieved 2025-04-08.
  2. Fimmel, Swindell & Burgess 1974, ப. 19.
  3. "The Pioneer Missions | NASA". web.archive.org. 2021-10-19. Retrieved 2025-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயோனீர்_11&oldid=4248051" இலிருந்து மீள்விக்கப்பட்டது