பயோனிர் குமாரசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயோனிர் குமாரசாமி (பிறப்பு:12-8-1887 இறப்பு:18-8-1960) கன்னியாகுமாரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் வடக்குபகுதியில் அமைந்துள்ள வடசேரி பகுதியில் ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.ஏழ்மை காரணமாக அவரால் நான்காம் வகுப்புவரை மட்டுமே பள்ளியில் படிக்க முடிந்தது. சிறுகடைகளில் பணிசெய்தார்கள்.

சென்னையில் வாழ்க்கை[தொகு]

அந்த இளம் வயதிலேயே தாயாரின் ஆசியுடன் சென்னை சென்று, பல இன்னலுக்கிடையே, சென்னை பல்கலைக் கழகத் தழிழ் பேரறிஞர் கே.என். சிவராஜபிள்ளை அவர்களின் துணையுடன் அடிசன் போக்குவரத்து நிறுவனத்தில் கம்மியராக சேர்ந்து வாகனவியலில் தேர்ச்சி பெற்றார். அவர் பேருந்து ஓட்டுனர் உரிமமும் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் நாகர்கோவில் திரும்பி அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் சிலகாலம் ஓட்டுநராக பணியில் இருந்தார். அப்போது மதுக்கடை ஒன்றினை தொடங்கினார்.

நாகர்கோவிலில் வாழ்க்கை[தொகு]

சிறுகச்சிறுக பொருள் சேர்த்து ஒரு பேருந்தை வாங்கினார். அதனை நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் அவரே ஓட்டுநராக இருந்து நடத்தினார். பல பேருந்துகளை வாங்கி தன் நிறுவனத்தை விரிவு படுத்தி அதற்கு பயோனிர் மோட்டார் சர்வீசு என பெயரிட்டார். அன்று முதல் அவர் பயோனிர் குமாரசாமி என அழைக்கப் பட்டார். அந்நிறுவனம் பெரியதாக வளர்ந்தது. அவரது திறமையும் வெளிப்பட்டது. அவரது நிறுவனம் இரயில் போக்குவரத்திற்கு பயணச்சீட்டு வழங்கும் உரிமம் பெற்று இருந்தது. தபால் போக்க வரத்திற்கும் உதவுவதாக திகழ்ந்தது.

1929-ல் மலைத் தோட்டங்களை வாங்கி, காடுகளை வளம் கொழிக்கும் நிலங்களாக மாற்றினார். இரப்பர், பழவகைகள்,மரவள்ளிக் கிழங்கு, என பயிரிட்டு வளர்ந்தார். சில இடங்களில் அரிசி ஆலைகளை நிறுவினார். தரமான ஓடுகளை தந்தார். 1942-ல் இராஜகமங்கலத்தில் உப்பளம் அமைத்தார். நாகர்கோவிலில் முதன்முதலாக சினிமா திரையரங்கம் ஏற்படுத்தினார்.

நாகர்கோவில் நகருக்கு முதலில் மின்சாரம் கொண்டு வந்தார். பயோனிர் பவர் ஹவுஸ் என பெயரிட்டார்.

இல்லறம்[தொகு]

தக்க வயதில் நாகம்மையார் எனும் மங்கை நல்லாளை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்று நான்கு பெண் மக்களைப் பெற்றார். பார்வதிபுரத்தில் அவரது மனைவியின் பெயரில் ஒரு நூர்பாலையினை நிறுவினார். பல கல்வி நிறுவனங்களுக்கு தாராளமாக நிதி உதவி உள்ளார். அவர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் இறந்தார். நாகர்கோவிலில் அரசு உதவிபெறும் பயோனிர் குமாரசாமி கல்லூரி ஒன்றினை அவரது குடும்பத்தினர் நடத்திவருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயோனிர்_குமாரசாமி&oldid=3653363" இலிருந்து மீள்விக்கப்பட்டது