பயில் நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயில் நிலம்

2004 இலிருந்து இளைஞர்கள் மத்தியில் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையின் கொழும்பு தெஹிவளையிலிருந்து வெளிவந்த கலை இலக்கிய இதழ். இதன் ஆசிரியர்குழுவில் பொ. கோபிநாத், இ.திவாகரன், சகாரா , கலீல் க.அபிராமி , தே. அபிலாஷா ஆகிய அன்றைய இளந்தலைமுறையினர் இருந்தனர். இவ்விதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.2009 வரை வெளிவந்த இந்த இதழ் பல எழுத்தாளர்களை உருவாக்கித் தருவதில் முனைப்புடன் ஈடுபட்டது. இவ்விதழ் தேசிய கலை இலக்கிய் பேரவை என்க் குறிப்பிடப் படாவிட்டாலும் பின்னாளில் இதில் எழுதிய பலர் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து அதன் தாயகம் இதழின் படைப்பாளிகளாக உருவாகியுள்ளார்கள்.

வெளியிணைப்பு[தொகு]

நூலகம் திட்டத்தில் பயில் நிலம் இதழ்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயில்_நிலம்&oldid=2729877" இலிருந்து மீள்விக்கப்பட்டது