பயிரன் கூட்டம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொங்கு வேளாளர் இனத்துக் கூட்டங்களில் பயிரன் கூட்டமும் ஒன்று.பயிர்த்தொழில் அடிப்படையாக இவர்கள் கூட்டம் இப்பெயர் பெற்றது என்பது அறிஞர் கொள்கை. "படியளந்து உண்ணும் பயிர குலம்" என்று ஒரு செப்பேடு புகழுகிறது. பயிர குலத்தினர் பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு, புள்ளாநத்தம், திரு முக்கூடல், அண்ட நாடு, வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு, ஆகிய ஊர்களில் காணி உரிமை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆயுதம் எடுத்து போர் புரிந்து கொங்கு சமுதாயத்தைக் காத்தவர் இம்மரபினர். தீரன் சின்னமலை, கோவை அய்யாமுத்து மற்றும் சர்க்கரை மன்றாடிஆகியோர் பயிரன் கூட்டத்தை சேர்ந்தோர்.