பயாரே லால் சர்மா
பயாரே லால் சர்மா | |
|---|---|
பயாரே லால் சர்மா | |
| சம்மு காசுமீர் சட்டப் பேரவை-உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 8 அக்டோபர் 2024 | |
| முன்னையவர் | குலாம் முகமது சரோரி |
| தொகுதி | இந்தர்வால் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
பயாரே லால் சர்மா (Payare Lal Sharma) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சர்மா இந்தர்வால் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
அரசியல்
[தொகு]2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி விட்டு விலகினார். பின்னர் இந்தர்வால் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 643 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டு முறை வெற்றி பெற்ற குலாம் முகமது சரூரி 14,192 வாக்குகளையும், சரூரி 13,552 வாக்குகளையும் பெற்றார்.[3]
சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சர்மா, மற்ற நான்கு சுயேச்சைக் கட்சியினருடன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி அரசுக்கு ஆதரவளித்தார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inderwal, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: Independent candidate Payare Lal Sharma with 14195 defeats Independent candidate Ghulam Mohd Saroori". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
- ↑ "Inderwal Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
- ↑ "Independent MLA to join National Conference day after J&K stellar show". India Today (in ஆங்கிலம்). 2024-10-09. Retrieved 2024-10-23.
- ↑ डेस्क, एबीपी स्टेट. "जम्मू कश्मीर में 4 निर्दलीय विधायक NC में शामिल, उमर अब्दुल्ला के विधायकों की संख्या बढ़कर 46". ABP News (in இந்தி). Retrieved 2024-10-23.