பயறணீநாத சுவாமி திருக்கோவில்
பயறணீஸ்வரர் திருக்கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணிநாதர் ஆகும். அம்பிகையின் திருப்பெயர் சகுந்தகுந்தளாம்பிகை அல்லது பூங்குழல்நாயகி ஆகும். இத்தலத்தை முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளர்
தலபுராணம்[தொகு]
முன்னர் ஒரு மன்னன் இக்கோயில் கட்ட நிதி திரட்ட வேண்டி மிளகுக்கு அதிக வரி விதித்திருந்தானாம். அதனால், இவ்வழியே மிளகு கொண்டு சென்ற ஒரு வணிகன் சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக தான் கொண்டு சென்ற மிளகு மூட்டையைப் பயறு என்று சொல்லிச் சென்றானாம். அவன் விருத்தாசலத்தில் மூட்டையைத் திறந்து பார்த்தபொழுது அவன் கொண்டு சென்ற மிளகு எல்லாம் பயறாக இருக்கக் கண்டு, தன் தவறை உணர்ந்து மீண்டும் இக்கோயிலை அடைந்து, சுங்கம் செலுத்தி இறைவனை இறைஞ்ச, எம்பெருமான் அவன் பயறை எல்லாம் மீண்டும் மிளகாக்கித் தந்தார் என்றொரு கதை இக்கோயிலை குறித்து உண்டு.
இத்தலத்து விநாயகரின் பெயர் வில்வளைத்த விநாயகர் ஆகும். அர்ச்சுனனின் தன் காண்டீபம் குறித்து மிகுந்த அகந்தை கொண்டிருந்தபோது, அதை வளைத்து அவன் கர்வத்தை ஒடுக்கினார் என்பர்.
அமைவிடம் & போக்குவரத்து வசதிகள்[தொகு]
திருச்சி - ஜெயங்கொண்டம் சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள உடையார்பாளையம் ஊரில் பயறனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அரியலூர், திருச்சி, விருத்தாசலம் ஆகிய ஊர்களிலிருந்து உடையார்பாளயத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [http://www.findmytemple.com/ta/சிவன்/t125-பயரணீஸ்வரர்-உடையார்-பாளையம் அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில், உடையார் பாளையம், அரியலூர் மாவட்டம்]