பயர்பாக்சு இணைக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயர்பாக்சு இணைக்கூறு (Firefox add-on) என்பது மொசில்லாவின், பயர் பாக்சு உலாவிக்கு, மேலதிக வசதிகளைத் தரவல்ல, நிரற்த்தொகுப்புகளாகும். இவற்றை கருத்தோற்றங்களாகவும் (themes), நீட்சிகளாகவும் (extensions), இணைக்கூறுகளாகவும் (add-on) வகைப்படுத்தலாம். 2017 ஆம் ஆண்டு, மொசில்லா நிறுவனம் தனது செயலி நிரலாக்க இடைமுகத்தில் (API) மாற்றத்தினைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக கட்டற்ற மென்பொருளாளர்கள், இந்த உலாவிக்குத் தேவைப்படும் சிறுசிறு மேம்பாடுகளைச் செய்து வருகின்றனர். கூகுள் குரோம் உலாவியின் கட்டகத்தினைக் கொண்டு, இந்த மேலதிக வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது. [1][2][3]

கருத்தோற்றங்கள்[தொகு]

  • ஆயிரகணக்கான கருத்தோற்றங்கள் உள்ளன. வெண்நிறத் தோற்றங்கள் கண்களை பாதிக்கும் என்பதால், கருமையான கருத்தோற்றங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எ-கா பயர்பாக்சு நிறுவனமே இவைகளை உருவாக்கித் தருகிறது. இது பலவகைத் தோற்றங்களை, நாமே மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

நீட்சிகள்[தொகு]

கண்களின் பாதுகாப்புக்கு பலவகையான நீட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எ-கா இவற்றைக் கொண்டு ஒரு சொடுக்கின் மூலம், கணித்திரையின் பின்புல வெள்ளை நிறத்தினை கருமையாகவும், எழுத்துக்களை வெள்ளை நிறத்திலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், பன்னாட்டு கடிகாரங்கள், நேரடி படப்பதிவிறக்கிகள்(flash), திறநிலை மென்பொருளைக் (FFmpeg) கொண்டு யூடியூப் பதிவிறக்கிகள், இணைய வானொலிகள், கோப்பு வடிவ மாற்றிகள் என ஆயிரகணக்கான மேலதிக வசதிகள், நீட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

இணைக்கூறுகள்[தொகு]

இணைக்கூறுகளென்பதை எளிமையாக இணைச்செயலிகள் எனலாம். பயர்பாக்சு உலாவியிலேயே இணைந்து செயற்படும் செயலிகள் ஆகும். எடுத்துக்காட்டாக பல மொழிகளிலும் இருக்கும், இந்த மொழிக் கருவிகளைச் சொல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]