உள்ளடக்கத்துக்குச் செல்

பயன்-உல்கீ மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்கீ

பயன்-உல்கீ என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் ஒன்றாகும். இது மேற்கு திசையில் கடைசியாக உள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கசக் இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள மங்கோலியாவின் ஒரே ஐமக் இதுவேயாகும். 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது உருவாக்கப்பட்டது. இதன் தலைநகரம் உல்கீ.

புவியியல்[தொகு]

இந்த ஐமக் மங்கோலியாவின் மேற்கு கடைக்கோடியில் உள்ளது. உருசியா மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதற்கும் கசகஸ்தானின் கிழக்குப் பகுதிக்கும் இடைவெளி வெறும் 40 கிலோமீட்டரே ஆகும். இந்த ஐமக்கிற்கு வடகிழக்கே உவ்ஸ் மற்றும் தென்கிழக்கே கோவ்ட் ஆகியவற்றை அண்டை ஐமக்குகளாக கொண்டுள்ளது.

டோல்போ ஏரி

மங்கோலியாவில் உள்ள ஐமக்குகளிலேயே உயரமான ஐமக் பயன்-உல்கீ தான். ஐமக்கின் பெரும்பாலான பகுதிகள் மங்கோலிய ஆல்டாய் மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. இதன் 10 சதவீத பகுதிகள் காடுகளால் மூடப்பட்டுள்ளன. இக்காடுகள் பெரும்பாலும் சைபீரிய லார்ச் மரங்களை கொண்டுள்ளன.

மங்கோலியாவின் அண்டைய மூன்று நாடுகளின் மூலையை நைரம்டால் சிகரம் (நட்பு சிகரம்) அடையாளப்படுத்துகிறது.

மக்கள்தொகை[தொகு]

இந்த ஐமக்கின் பெரும்பாலான குடிமக்கள் கசக் (93%) இனத்தை சேர்ந்தவர் ஆவர்.[1]) எஞ்சிய மக்கள் தொகையில் உள்ள இனங்கள் உரியாங்கை, டோர்வோட்[2], கல்கா, துவன்கள் மற்றும் கோசூட் ஆகியோராவர். பெரும்பாலானவர்கள் தங்களது தாய்மொழியாகக் கசக் மொழியை பேசுகின்றனர். இரண்டு மொழி பேசுபவர்கள் இருப்பாராயின், அவர்களே மங்கோலிய மொழியை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.

மங்கோலியா ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னர் பல குடிமக்கள் தங்களது வரலாற்று தாயகமான கசகஸ்தானிற்கு சென்று குடியேறினர். அங்கு சென்றால் தங்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்று எண்ணி அங்கு சென்றனர். இதன் காரணமாக 1991-1993 ஆகிய காலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்கள் தொகை இழப்பு இந்த ஐமக்கில் ஏற்பட்டது. அந்நேரத்தில் சுமார் 80 ஆயிரம் மக்கள் கசகஸ்தானுக்கு சென்று குடியேறினர். தற்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னால் குடிமக்கள் மீண்டும் மங்கோலியாவிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மக்கள் தொகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பயன்-உல்கீ ஐமக் மக்கள்தொகை [3][4][5][6][7]
1956

மக்கள் தொகை
1960

மதிப்பீடு

1963

மக்கள் தொகை
1969

மக்கள் தொகை
1975

மதிப்பீடு
1979

மக்கள் தொகை
1981

மதிப்பீடு
1985

மதிப்பீடு
1989

மக்கள் தொகை
1991

மதிப்பீடு
1993

மதிப்பீடு
1995

மதிப்பீடு
1998

மதிப்பீடு
2000

மக்கள் தொகை
2002

மதிப்பீடு
2004

மதிப்பீடு
2005

மதிப்பீடு
2008

மதிப்பீடு
2009

மதிப்பீடு
38,800 44,600 47,800 58,100 66,600 71,400 74,500 82,400 90,900 102,817 75,043 82,259 87,341 94,094 98,066 99,112 95,758 93,931 93,017

கலாச்சாரம்[தொகு]

பயன்-உல்கீ மாகாணத்தின் நிலத்தோற்றம்.

இங்கு பெரும்பான்மையாக வாழும் கசக் மக்களின் கலாச்சாரம் மீது இஸ்லாமிய பழக்கவழக்கங்களின் தாக்கமானது வலுவாக உள்ளது. உல்கீ மசூதி ஆனது மங்கோலியாவின் இஸ்லாமிய மையத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மசூதியானது வழக்கத்திற்கு மாறான கோணத்தில் இந்நகரில் கட்டப்பட்டுள்ளது. ஏனெனில் இக்கட்டடம் சரியாக மெக்காவை நோக்கி உள்ளவாறு கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு மதராசாவும் உள்ளது.

பழக்கப்படுத்தப்பட்ட கழுகுகளைக் கொண்டு வேட்டையாடும் மரபார்ந்த பழக்கத்திற்காக இந்த ஐமக் பிரபலமானதாக உள்ளது.[8][9][10][11][12] வேட்டை வல்லூறுகள் எவ்விதத்தில் செயல்படுகின்றனவோ அதே விதத்தில் இந்த பிடிக்கப்பட்ட கழுகுகளும் செயல்படுகின்றன. உலகத்தின் மற்ற பகுதிகளிலும் கழுகுகள் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில். எனினும் பயன்-உல்கீயில்தான் இந்த பழக்கம் மிக பொதுவானதாக உள்ளது. கழுகை பயன்படுத்தி வேட்டையாடுபவர்களில் உலகின் 80 சதவிகிதத்தினர் இங்கு தான் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[13] ஆண்டுதோறும் உல்கீயில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் பொன்னாங் கழுகு விழா கொண்டாடப்படுகிறது. கழுகுகளைக் கொண்டு வேட்டையாடுபவர்களின் திறமையை காட்டுவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 வேட்டைக்காரர்கள் கலந்து கொள்கின்றனர்.[14][15]

தேசிய பூங்கா[தொகு]

இந்த ஐமக்கில் அல்டாய் டவன் போக்ட் தேசிய பூங்கா உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 6,362 சதுர கிலோமீட்டர் ஆகும். மங்கோலியாவின் உயர்ந்த மலைக்கு தென்பகுதியில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிவப்பு மான், ஐரோவாசியக் காட்டுமான் மற்றும் பொன்னாங்கழுகு ஆகியவை காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

 1. "Archived copy". Archived from the original on 2015-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 2. Official website: Main Page
 3. "Mongolia Provinces". www.statoids.com. பார்க்கப்பட்ட நாள் May 18, 2021.
 4. "Statistics office of Bayan-Ölgii aimag". Archived from the original on 2007-06-23. பார்க்கப்பட்ட நாள் 2007-03-30.
 5. "МОНГОЛ УЛСЫН ҮНДЭСНИЙ СТАТИСТИКИЙН ХОРОО". www.nso.mn. Archived from the original on Jun 7, 2007. பார்க்கப்பட்ட நாள் May 18, 2021.
 6. "Archived copy". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-01-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 7. Bayan-Ölgii Aimag Statistical Office. Annual Report 2009 (prelim.) பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் (mong.)
 8. Soma, Takuya. 2012. ‘Contemporary Falconry in Altai-Kazakh in Western Mongolia’The International Journal of Intangible Heritage (vol.7), pp. 103–111. [1] பரணிடப்பட்டது 2017-06-21 at the வந்தவழி இயந்திரம்
 9. Soma, Takuya. 2012. ‘The Art of Horse-Riding Falconry by Altai-Kazakh Falconers’. In HERITAGE 2012 (vol.2): Proceedings of the 3rd International Conference on Heritage and Sustainable Development, edited by R. Amoêda, S. Lira, & C. Pinheiro, pp. 1499–1506. Porto: Green Line Institute for Sustainable Development, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-989-95671-8-4.
 10. Soma, Takuya. 2012. ‘Horse-Riding Falconry in Altai-Kazakh Nomadic Society: Anthropological Researches in Summertime Activities of Falconers and Golden Eagle’. Japanese Journal of Human and Animal Relation 32: pp. 38–47.
 11. Soma, Takuya. 2013. ‘Hunting Arts of Eagle Falconers in the Altai-Kazakhs: Contemporary Operations of Horse-Riding Falconry in Sagsai County, Western Mongolia’. Japanese Journal of Human and Animal Relation 35: pp. 58–66.
 12. Soma, Takuya. 2013. ‘Ethnographic Study of Altaic Kazakh Falconers’, Falco: The Newsletter of the Middle East Falcon Research Group 41, pp. 10–14. 2013. [2]
 13. "Eagle Hunters". Dec 28, 2012. பார்க்கப்பட்ட நாள் May 18, 2021.
 14. "Home Page". www.touristinfocenter.mn. பார்க்கப்பட்ட நாள் May 18, 2021.
 15. Soma, Takuya & Battulga, Sukhee. 2014. 'Altai Kazakh Falconry as Heritage Tourism: “The Golden Eagle Festival” of Western Mongolia', "The International Journal of Intangible Heritage vol. 9", edited by Alissandra Cummins, pp. 135-148. Seoul: The National Folk Museum of Korea. [3] பரணிடப்பட்டது 2017-06-21 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க[தொகு]

 • Soma, Takuya & Battulga, Sukhee. 2014. 'Altai Kazakh Falconry as Heritage Tourism: “The Golden Eagle Festival” of Western Mongolia', "The International Journal of Intangible Heritage vol. 9", edited by Alissandra Cummins, pp. 135–148. Seoul: The National Folk Museum of Korea. [4] பரணிடப்பட்டது 2017-06-21 at the வந்தவழி இயந்திரம் 
 • Soma, Takuya. 2014. 'Current Situation and Issues of Transhumant Animal Herding in Sagsai County, Bayan Ulgii Province, Western Mongolia', E-journal GEO 9(1): pp. 102–119. [5]
 • Soma, Takuya. 2015. Human and Raptor Interactions in the Context of a Nomadic Society: Anthropological and Ethno-Ornithological Studies of Altaic Kazakh Falconry and its Cultural Sustainability in Western Mongolia. University of Kassel Press, Kassel (Germany) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-86219-565-7.
 • 相馬拓也 2014 「モンゴル西部バヤン・ウルギー県サグサイ村における移動牧畜の現状と課題」『E-Journal GEO vol. 9 (no. 1) 』: pp. 102–189. [6]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்-உல்கீ_மாகாணம்&oldid=3350049" இலிருந்து மீள்விக்கப்பட்டது