உள்ளடக்கத்துக்குச் செல்

பயன்கோன்கர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்கோன்கர் மாகாணம் அல்லது பயன்கோன்கர் ஐமக் என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் (மாகாணங்கள்) ஒன்றாகும். இது மங்கோலியாவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1,16,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இது மங்கோலியாவின் பெரிய ஐமக்குகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பயன்கோன்கர்.[1]

இந்த ஐமக்கின் மொத்த மக்கள் தொகை சுமார் 80 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 25 முதல் 35 ஆயிரம் மக்கள் தலைநகரத்தில் வாழ்கின்றனர்.

புவியியல்

[தொகு]

இந்த மாகாணம் வேறுபட்ட புவியியல் பகுதிகளைக் கொண்டுள்ளது. இது பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. வடக்கிலுள்ள மலை சார்ந்த மற்றும் காடுகள் நிறைந்த கான்காய், நடுவில் உள்ள புல்வெளி பகுதி மற்றும் தெற்கில் உள்ள வறண்ட கோபி பாலைவனம்.

இங்கு இரண்டு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அவை வடக்கிலுள்ள கான்காய் மலைகள் மற்றும் நடுப்பகுதியில் உள்ள கோபி ஆல்டாய் மலைகள். இந்த ஐமக்கிலுள்ள உயர்ந்த மலையான இக் போக்ட்டின் உயரம் 3957 மீட்டர்களாகும். இம்மலை கோபி ஆல்டாய் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

இங்கு உள்ள பெரிய ஏரிகள் ஒரோக் நூர் மற்றும் பூன் சாகன் நூர் ஆகியவையாகும். அவை பாலைவனம் சார்ந்த ஐமக்கின் நடுப்பகுதியில் அமைந்துள்ளன. மலைகள் சுற்றிலும் காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியே செல்வதில்லை. எனவே இவை உப்பு நீரை கொண்டுள்ளன.

வடக்கில் உள்ள கான்காய் மலைகள் பல்வேறு சூடான மற்றும் குளிர்ந்த தாது நீரூற்றுகளை கொண்டுள்ளன. சர்கல்ஜூட் என்று அழைக்கப்படும் நகரமானது தலை நகருக்கு வடக்கே 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு 300க்கும் அதிகமான நீரூற்றுகள் உள்ளன. இத்தகைய இயற்கை சிறப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக அந்நகரமானது ஒரு உல்லாசப்போக்கிடமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பல்வேறு வகையான வியாதிகளை குணப்படுத்துவதற்காக இங்குள்ள பல நீரூற்றுகளின் தாது நிறைந்த நீரை பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சோலைகள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை ஷினேஜின்ஸ்ட் பகுதியில் உள்ளன. எகீன் கோல் என்று அழைக்கப்படும் பிரபலமான சோலையானது ஒரு கட்டத்தில் லாமா டம்பிஜன்ட் அல்லது ஜா லாமாவின் இடமாக இருந்தது. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருடனாக இருந்து புரட்சியாளராக மாறியவர் ஆவார்.

நிர்வாக துணை பிரிவுகள்

[தொகு]

பயன்கோன்கரின் சம்கள் (மாவட்டங்கள்)

பயன்கோன்கர் ஐமக்கின் சம்கள்
சம் மங்கோலிய மொழியில் மக்கள் தொகை (2000ன் முடிவில்) மக்கள் தொகை (2006ன் முடிவில்) சம் மையத்தின் மக்கள்தொகை (2006ன் முடிவில்) பரப்பளவு (km2) மக்கள் தொகை அடர்த்தி (/km2)
பாட்சகான் Баацагаан 4,526 3,568 422 7,447 0.48
பயன்-ஓன்டோர் Баян-Өндөр 2,692 2,559 548 16,891 0.15
பயன்-ஓவூ Баян-Овоо 3,043 2,912 731 3,244 0.90
பயன்புலக் Баянбулаг 2,252 2,143 463 3,170 0.68
பயன்கோவி Баянговь 2,903 2,703 628 4,662 0.58
பயன்கோன்கர் * Баянхонгор 20,501 26,588 26,588 64 415.44
பயன்லிக் Баянлиг 3,842 3,316 805 11,918 0.28
பயன்ட்சகான் Баянцагаан 3,946 3,599 634 5,395 0.67
போக்ட் Богд 3,226 2,900 613 3,983 0.73
போம்போகோர் Бөмбөгөр 2,755 2,584 656 3,044 0.85
பூட்சகான் Бууцагаан 4,258 3,452 901 5,840 0.59
எர்டெனெட்சோக்ட் Эрдэнэцогт 5,158 4,235 933 4,100 1.03
கலூட் Галуут 5,275 4,012 644 5,047 0.79
குர்வன்புலக் Гурванбулаг 2,915 2,594 350 4,442 0.58
ஜர்கலன்ட் Жаргалант 4,374 3,173 697 4,175 0.76
ஜின்ஸ்ட் Жинст 2,352 2,023 376 5,313 0.38
குரீமரல் Хүрээмарал 2,466 2,064 325 4,328 0.48
ஒல்சீட் Өлзийт 3,721 3,353 661 3,853 0.87
ஷினேஜின்ஸ்ட் Шинэжинст 2,469 2,187 319 16,501 0.13
சக் Заг 2,440 2,264 592 2,561 0.88

* - ஐமக் தலைநகரம் பயன்கோன்கர்

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்கோன்கர்_மாகாணம்&oldid=3152162" இலிருந்து மீள்விக்கப்பட்டது