பயனியர் நிறுவனம்
பயனியர் நிறுவனம் (Pioneer Corporation) என்பது சப்பானின் டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு மின்னணுவியல் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1938 ஆம் ஆண்டில் நோசோமு மாட்சுமோட்டோ என்பவரால் ஒரு வானொலி மற்றும் ஒலிபெருக்கி பழுதுபார்க்கும் கடையாகத் தொடங்கப்பட்டது[1].
தொடக்க காலத்தில் ஒலியியல் சாதனங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது, பின்னர் பல்வேறு மின்னணு துறைகளில் வளர்ச்சி பெற்றது. இந்த நிறுவனம் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒலியியல் அமைப்புகள், வழிகாட்டும் சாதனங்கள், வீட்டு பயன்பாட்டு ஒலியியல் கருவிகள், தொலைக்காட்சி சாதனங்கள், கணினி பயன்பாட்டு ஒளி வட்டு இயக்கிகள் போன்ற பல தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக வாகன ஒலியியல் துறையில் பயனியர் உலகளவில் பெரும் பெயர் பெற்றது.
உயர்தர ஒலிபெருக்கிகள்
[தொகு]தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் இசை வட்டு இயக்குபவர்களுக்கான(தொகுப்பாளர்) (Disc Jockey) உபகரணங்களைத் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இசைத் தட்டுகளை இயக்குவதற்கான கருவிகள், ஒலி கலவை கருவிகள் (Mixers) மற்றும் உயர்தர ஒலிபெருக்கிகள் போன்றவை இதற்குச் சான்றுகளாகும். 1928 ஆம் ஆண்டில் ஏ மற்றும் பி வகை ஒலிபெருக்கிகளைத் தயாரிப்பதில் தொடங்கிய இதன் பயணம், 1961 ஆம் ஆண்டில் பயனியர் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் எனப் பெயர் மாற்றப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
1970-களில் பயனியர் பல நாடுகளில் அவற்றின் தொழில் விரிவுகளை ஏற்படுத்தியது, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை மற்றும் சேவை தலைமையகங்களை அமைத்தது. 2000 ஆம் ஆண்டுகளில் தொழில்நுட்ப மாற்றங்களால் பல மாற்றங்களைச் சந்தித்த போதிலும், உயர்தர ஒலி மற்றும் ஒளித் தொழில்நுட்பங்களை வழங்குவதில் தனது தனித்துவத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
2025 ஆம் ஆண்டில் பயனியர் நிறுவனம் கார்யூஎக்ஸ் எனப்படும் குழுமத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது, இது வாகனங்களுக்கான நுண்ணறிவு கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்கும் துறையில் சிறப்பு பெற்றது. பயனியர் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, வரைபடத் தரவு, வாகனத் தகவல் ஆகியவற்றை இணைத்து புதிய சேவைகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைப்பு, விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பயனியர் நிறுவனம் from Pioneer website". Retrieved 2018-02-01.