பயனர் பேச்சு:Yogeshmsc

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Yogeshmsc!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Sivakumar \பேச்சு 16:17, 31 மார்ச் 2007 (UTC)


யோகேஷ், தங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தரலாம். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Sivakumar \பேச்சு 16:36, 31 மார்ச் 2007 (UTC)


யோகேஷ்! உங்களைப்பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் இணைத்தமைக்கு நன்றி. கணனி துறை சார் கட்டுரைகளிலும் இந்தியா பற்றிய கட்டுரைகளிலும் மேலும் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.--டெரன்ஸ் \பேச்சு 04:10, 1 ஏப்ரல் 2007 (UTC)

யோகேஸ் உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. இயன்ற பொழுதெல்லாம் தொடர்ந்து பங்களியுங்கள். நீங்கள் அறிய நன்றாக தமிழில் எழுதக்கூடிய நண்பர்கள் இருந்தால் அவர்களையும் அழைத்து இந்த நற்பணியில் ஈடுபடச் செய்யுங்கள். நீங்கள் எழுதிய புறா, மான் முதலிய கட்டுரைகள் நல்ல தொடக்கம்.--செல்வா 12:04, 1 ஏப்ரல் 2007 (UTC)


அனைவருக்கும் மிகவும் நன்றி. என்னளவில் இயன்றவரை இப்பணிகளில் பங்களிப்பேன்/உதவுவேன். --யோகேஸ் 13:33, 1 ஏப்ரல் 2007 (UTC)


படிமங்கள்[தொகு]

  1. விக்கியில் ஏற்கனவே உள்ள படிமம் ஒன்றுக்கு (உதாரணம்:"Flag of Maldives.svg") [[Image:Flag of Maldives.svg|thumb|250px|right|மாலத்தீவுகளின் கொடி]] என்றவாறு இணைத்தால் கட்டுரையில் வேண்டிய இடத்தில் இணைத்தால் பின்வரும் படிமம் விளைவாகும். thumb|250px|right|மாலத்தீவுகளின் கொடி
  2. விக்கியில் இல்லாத படிமங்களை பதிவேற்ற இடது பக்கத்தில் காணப்படும் கோப்பை பதிவேற்று என்ற இணைப்பில் சென்று பதிவேற்றலாம். பினனர்கட்டுரைக்குச் சென்று 1இன்படி செய்ய வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 14:03, 1 ஏப்ரல் 2007 (UTC)

யோகேஸ், படங்கள் உள்ள கட்டுரைப் பக்கங்களை 'தொகு' என்று சொடுக்கிப் பார்த்தால் படங்ககளை எப்படி சேர்த்துள்ளார்கள் என்று விளங்கும். நீங்கள் எழுதிய மான், புறா ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் நான் எப்படி படம் சேர்த்தேன் என்று பார்க்கலாம். படங்களை எந்த மொழி விக்கியில் இருந்தும் நீங்கள் பெறலாம். நான் பெற்றது ஆங்கில விக்கியில் இருந்து. சில படங்கள் ஜெர்மன் மொழி விக்கியில் சிறப்பாக இருக்கலாம், எனவே தேவைக்கேற்பத் தேடிப் பார்க்க வேண்டும். ஏறத்தாழ 1 மில்லியன் படங்கள் ஆங்கில விக்கியில் உள்ளன. ஒரு படத்தை சொடுக்கினால் அது பற்றிய குறிப்புகள் அங்கே இருக்கும். அப்படம் 'Wiki Commons' ல் இருப்பதாகக் குறிப்பு இருந்தால், தனியாக படியெடுத்து, இங்கே தமிழ் விக்கியில் கோப்பை ஏற்ற வேண்டியதில்லை. இந்த காமன்ஸ்சில் இல்லாத படங்களை உங்கள் கணினியில் முதலில் பதிவிறக்கம் செய்து, பின்னர் த.வி-யில் பதிவேற்றம் செய்ய வேண்டும் (தக்க உரிமங்களைப் பற்றிய குறிப்பும் சேர்ப்பதும் மிகத்தேவை). ஒரு படம் yogesh.jpg என்று இருந்தால் [[படம்:yogesh.jpg|thumb|right|300px|யோகேஸ் பற்றிய விளக்கம்]] என்று இட்டீர்கள் என்றால் yogesh.jpg என்னும் படம் கட்டுரைப் பக்கத்தில் வலப்புறம், 300 பிக்சல் அகலத்தில் சேர்க்கப்படும். இந்த thumb என்னும் குறிப்பு இருந்தால், படத்தை பற்றிய விளக்கம் சேர்க்க உதவியாக இருக்கும். right என்பதற்க்ப் பதிலாக left என்றோ அல்ல்து படம் எங்கிருக்கவேண்டும் என்னும் தேவைக்கேற்ப பிற சொற்களையோ ஆளலாம்.

--செல்வா 14:05, 1 ஏப்ரல் 2007 (UTC)


யோகேஸ், ஆர்வமுடன் பங்களிக்கத் தொடங்கியமைக்கு நன்றி. போதுவிக்கி அல்லது விக்கி காமன்ஸில் உள்ள்ள படிமங்களை நேரடியாக எந்த விக்கிப்பீடியாத் திட்டத்திலும் பயனபடுத்தலாம். அவ்வாறில்லாமல் ஆங்கில அல்லது ஜேர்மன் விக்கிப்பீடியாவில் அத்தளத்தில் மாத்திரம் பதிவேற்றியிருப்பின் மீண்டும் இங்கே (அதாவது தமிழ் விக்கிபீடியவில்) பதிவேற்றிய பின்னரே பயன்படுத்தலாம். பயனர் ஒருவரைத் தொடர்புகொள்ள விரும்பினால் அவரது பேச்சுப்பகம் (உரையாடற் பக்கம்) உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் அந்தப் பயனர் தொடர்பில் இருந்தால் உடனே அறியக் கிடைக்கும் அல்லது அண்மைய மாற்றங்கள் பக்கங்களூடாகவே பார்வையிடவேண்டும். எடுத்துக்காட்டாக என்னைத் தொடர்புகொள்ளவிரும்பினால் பயனர் பேச்சு:உமாபதி ஊடகத் தொடர்புகொள்ளலாம். பயனர் பக்கங்களில் பயனரைப் பற்றிய விபரங்களே தருவார்கள். --Umapathy 16:45, 1 ஏப்ரல் 2007 (UTC)


யோகேஸ், நீங்கள் எழுதிய சிறுத்தை கட்டுரையைப் பார்த்தேன். நீங்களோ வேறு யாரோ சரி செய்துவிட்டது போல் தெரிகின்றது. கட்டுரையை நன்றாக அமைத்திருக்கிறீர்கள். என் பாராட்டுகள்.--செல்வா 23:31, 1 ஏப்ரல் 2007 (UTC)


பாராட்டுக்கள்[தொகு]

yogesh, நல்ல தலைப்புகளில் கட்டுரை துவங்குகிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்--ரவி 18:26, 3 ஏப்ரல் 2007 (UTC)


நீங்கள் தொடங்கும் புதிய கட்டுரைகள் அருமை. உங்கள் வருகை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். --கோபி 17:34, 4 ஏப்ரல் 2007 (UTC)

படிமங்கள்[தொகு]

படிமங்களை எங்கிருத்து எடுக்கிறீர்கள், அதன் உரிம விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க இயன்றால் நன்று. --ரவி 17:52, 4 ஏப்ரல் 2007 (UTC)

நல்லது. படிமங்களைப் பதிவேற்றும் போது, படிமம் எடுக்கப்படும் urlஐயும் தருவது நல்லது. இயன்றவரை காப்புரிமை விலக்கு உள்ள படங்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். creative commons, wikimedia commons போன்ற தளங்களில் தேடிப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலுக்கான படங்கள் குறைவு. எனவே, அவற்றுக்கு fairuse அடிப்படையில் படங்கள் சேர்க்க வேண்டி இருப்பதை புரிந்து கொள்ள இயலும். நன்றி.--ரவி 18:54, 4 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் அர்த்தம் தேவை[தொகு]

யோகேஸ், எனக்கும் நீங்கள் கேட்ட வார்த்தைகளுக்குப் பொருள் தெரியவில்லை. நமக்குத் தேவையான கலைச்சொல் உதவிகளை நாம் இப்பக்கத்தில் கேட்கலாம்.மீண்டும் நீங்கள் பங்களிக்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. --Sivakumar \பேச்சு 17:47, 3 மே 2007 (UTC)


Wikipedia:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் இப்பக்கமும் உங்களுக்கு உதவக்கூடும்.--Sivakumar \பேச்சு 18:06, 3 மே 2007 (UTC)


  • commissioner of Police - காவல்துறை ஆணையர்

--Sivakumar \பேச்சு 18:12, 3 மே 2007 (UTC)

இணைப்புக் கோடுகள்[தொகு]

யோகஷ், புகுபதிந்த பயனர்கள் என் விருப்பத்தெரிவிகள் - > பலதரப்பட்டவை போய் இணைப்புகளுக்கு அடிக்கோடிடு - never என்ற தரலாம். புகுபதியாத பயனர்களுக்கும் அடிக்கோடு வராமல் காண்பிக்க தமிழ் விக்கிப்பீடியா நிரலில் மாற்ற வேண்டும். சுந்தரிடம் சொல்லி வைக்கிறேன். --ரவி 11:51, 4 மே 2007 (UTC)


உங்களுக்கு இத்தலைப்புகளில் ஈடுபாடு இருக்கலாம்[தொகு]

பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டு அரசுச் சேவைகள் --Natkeeran 23:58, 4 மே 2007 (UTC)

பாராட்டுக்கள்[தொகு]

கட்டுரைகள் அருமை. தொடர வாழத்துக்கள். --Natkeeran 00:05, 5 மே 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:27, 21 சூலை 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Yogeshmsc,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yogeshmsc&oldid=837736" இருந்து மீள்விக்கப்பட்டது