பயனர் பேச்சு:YArukkuyArsonhthamenpathu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், YArukkuyArsonhthamenpathu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-நந்தகுமார் (பேச்சு) 10:23, 1 நவம்பர் 2013 (UTC)

பங்களிப்பு[தொகு]

ஐயா, விக்கிப்பீடியாவிற்குத் தங்களை உளமுவந்து வரவேற்கிறேன். பயனர்களின் பங்களிப்பால் வளரும் உலகளாவிய சொத்து இந்த விக்கிப்பீடியா. இதில் யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்பது அடிப்படை. எனினும், பங்களிப்புகளில் ஒரு சுயக்கட்டுப்பாடும் வேண்டும். மனித அறிவு அனைவருக்கும் சொந்தம் என்ற வகையில் அதனை அனைவருக்கும் கட்டின்றிக் கிடைக்கும் வகை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுவது விக்கிப்பீடியா. தங்களின் அண்மையக் கட்டுரையான யாருக்கு யார்சொந்தமென்பது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஒவ்வாத அமைப்பிலும், நடையிலும் உள்ளது. அதனை மறுபரிசீலனைச் செய்யவும், அல்லது நீக்கவும். மேலும் உதவி தேவையானால் என்னையோ அல்லது நிர்வாகிகளையோ அணுகவும். நன்றி. --காவிநன் (பேச்சு) 13:59, 1 நவம்பர் 2013 (UTC)

கட்டுரை நீக்கம் பற்றி[தொகு]

அண்மையில் நீங்கள் எழுதிய Seziyan என்று தலைப்பிட்ட கட்டுரையை நீக்கியுள்ளேன். ஏனெனில் அது கலைக்களஞ்சிய கட்டுரை அன்று. மேலும் எல்லாக் கட்டுரைகளின் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருத்தல் வேண்டும். உங்களுக்கு மேலே இட்டுள்ள வரவேற்பு மடலைப் படித்துப்பார்த்து, விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும்பொழுது பின்பற்ற வேண்டிய நடை முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டுகின்றேன். பல உதவிப்பக்கங்களுக்கும் தொடுப்பு இருக்கும். நீங்கள் எழுதிய கட்டுரையை நீக்க வேண்டியதற்கு வருந்துகின்றோம். வலைப்பதிவு, ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதுவது என்பது வேறு கலைக்களஞ்சியத்துக்குக் கட்டுரை எழுதுவது என்பது வேறு. கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற உங்கள் தொடந்த பங்களிப்பை வரவேற்கின்றோம். --செல்வா (பேச்சு) 15:11, 1 நவம்பர் 2013 (UTC)

பதிப்புரிமை மீறல் + கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், YArukkuyArsonhthamenpathu!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


Stop hand nuvola.svg

வணக்கம், YArukkuyArsonhthamenpathu!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--Anton·٠•●♥Talk♥●•٠· 08:39, 14 நவம்பர் 2013 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

//மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் சரியா சந்திரசேகரனின் யாருக்கு யார் சொந்தமென்பது என்னும் தலைப்பில் விக்கிபீடியவுக்கு வழங்கப்பட்டவை என்பதை ஆறிவீர்களா? கொடுக்கப்படும் தகவல்களையும் கட்டுரைகளையும் கொடுத்தவரின் பெயரை வெளியிடாமல் பயண்படுத்துவது முறையா என்பதைத் தெளிவாக்கவும். மேலும் எனது கட்டுரைகள் http://nhampikkai-kurudu.blogspot.com and http://nhampikkai-kurudu,blogspot.in ஆகியவற்றில் வெளியிடப்படுகின்றன. அவற்றையும் பயண்படுத்தும் போது தங்களுடையதாக வெளியிட்டுக்கொள்வது முறையா என்பதையும் விளக்கவும். முகநூலிலும் எனது முகநூல் பக்கங்களிலும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறேன். பயண்படுத்துவதைக் குறைசொல்லவில்லை. வரலாறு வெளிப்படவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்; ஆயினும் தகவல்கொடுத்தவர் யார் என்பதையாவது தெரிவிக்கவேண்டாமா?// இப்பகுதியை இங்கு தொகுத்திருந்தீர்கள். நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன என்பதை இங்கே தெரிவியுங்கள் அல்லது குறித்த கட்டுரைகள் பதிப்புரிமை மீறியிருப்பதாகவிருந்தால், குறித்த கட்டுரைகளில்யில் தெரிவியுங்கள். பதிப்புரிமை மீறப்பட்ட உள்ளடக்கங்கள் உடன் நீக்கப்படும். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:24, 9 திசம்பர் 2013 (UTC)

பதிப்புரிமை மீறல் + கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

தொடர்ந்து ஆலோசனைகளை கவனியாது பதிப்புரிமை மீறல் உள்ள, கலைக்களஞ்சியக் கட்டுரை அற்றவற்றை தொகுப்பதால் நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். விளங்கவிட்டால் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 02:13, 10 திசம்பர் 2013 (UTC)

Anton எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இவர் கவனியாது விட்டார். என்று. முதலில் இவருக்கு பேச்சுப்பக்கம் இருப்பது தெரியுமா? இரண்டாவது இவருக்கு யாராவது இவருக்கு மின்னஜ்சல் அனுப்பி இவர் அதன்படி கேட்கே மாட்டேன் என்றாரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:44, 21 திசம்பர் 2013 (UTC)

எதை வைத்துச் சொல்கிறீர்கள் இவருக்கு பேச்சுப்பக்கம் இருப்பது தெரியாதென்று? அனுமானங்கள் வேண்டாம். பேச்சுப் பக்கம் தொடர்பாடலே மின்னஞ்சலைவிட உகந்தது. --Anton·٠•●♥Talk♥●•٠· 13:04, 21 திசம்பர் 2013 (UTC)

பேச்சுப்பக்கம் என்பது கட்டுரைப் பேச்சுப்பக்கத்தை அல்ல. இவருக்கான பேச்சுப்பக்கத்தை. மேலும் நான் இவருக்கு பேச்சுப்பக்கம் இருப்பது தெரியாது என சொல்லவே இல்லையே. தெரியுமா? என்று வினா தான் எழுப்பியுள்ளேன். இவருக்கு அது தெரியும் என நீங்கள் எவ்வாறு கண்டறிந்தீர்கள்? இவர் எந்தெந்த பக்கத்தை எல்லாம் பார்க்கிறார் என கண்டுபிடிக்க ஏதும் வழி உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 21 திசம்பர் 2013 (UTC)

முன்னரும் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தீர்கள். இதனையும் பாருங்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? --Anton·٠•●♥Talk♥●•٠· 02:44, 22 திசம்பர் 2013 (UTC)

எனது முகநூல் பக்கங்களிலோ அல்லது தனிப்பட்ட பக்கங்களிலோ nhampikkai-kurudu.blogspot.com பக்கங்களிலோ உள்ள எனது கட்டுரைகளை விக்கிபீடியாவுக்கு அனுப்புகிறேன். அதனை நீங்கள் என்ன வடிவத்திலும் எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சான்றுகள் இல்லை என்று நீக்கக்கூடாது. அனைத்துச்சான்றுகளையும் ஒரே கட்டுரையில் வெளிப்படுத்த முடியாது. தொல்தமிழ்ப்பாடல்களில் பல்லாயிரக்கணக்காண சான்றுகள் உள்ளன. எனது கட்டுரைகளை வேறு பகுதிகளில் வெளியிடலாமென்றால் தெளிவாகத் தெரிவித்துவிடுங்கள். மற்றவரின் கட்டுரைகளின் நடுவே பதிவிடுவதை நிறுத்திவிடுகிறேன். இனி எவருடைய பதிவுலும் திருத்தம் செய்யவோ குறுக்கிடவோ விரும்பவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறேன். ஆயினும் தவறான வரலாற்றைக் காணும்போது என்னால் தாங்கமுடியதில்லை. என்னுடைய பதிவுகளிலும் தவறுகள் இருக்கக்கூடும். இல்லையென்று சொல்லவில்லை. அத்தவறுகள் சில மாண்ஹ்தர்களை அடையாளப்படுத்துவதில் உருவாகும் தவறுகளாகத்தன் இருக்கும். 2000 ஆண்டுகற்கு முற்பட்ட மாண்ஹ்தரைத் துல்லியமாக அடையாளம் காட்டுவது எளிதா என்ன? சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன். செழியன் குறித்த கட்டுரையில் மேலும் சிலதகவல்களைத் திருத்தமாக வெளிப்படுத்தவேண்டியுள்ளது. செழியன்தான் இராவணன் என்பதில் எந்தவிதமான ஐயமும் எனக்கு இல்லை. மேலும் பல சான்றுகளை என்னால் கொடுக்கமுடியும். இன்றுவரை தமிழரின் வரலாறும் தமிழகத்தின் வரலாறும் எழுதப்படவே இல்லை. அதனை வெளிப்படுத்த விக்கிபிடியாவின் உதவியைத்தான் நாடுகிறேன். எனது சொந்தப் பக்கங்களில் வெளியிட்டவற்றையும் விக்கிபிடியாவுக்கு அனுப்புகிறேன் என்பதை அறிவிக்கிறேன். அடுத்தவரின் தகவல்களை வெளிப்படுத்தினாலும் அவற்றுக்கான சான்றுகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதுதான் முறை என்பதையும் கணலாம். சான்றில்லாமல் தெரிவிப்பதுதான் தவறு. அதற்கான வழிமுறைகளைக் கொடுங்கள். அல்லது எனது கட்டுரைகளை எதில் வெளியிடவேண்டும் என்பதையாவது தெரியப்படுத்துங்கள். இல்லாவிட்டால் எனது இடுகைகள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். நீக்கிவிட்டு எனக்கும் தெரிவித்தால் போதும். இராவணன் ஒரு இசுலாமியன் என்று ஒரு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்குச் சாண்றுகளை எவரும் இன்றுவரை கொடுக்கவில்லை. அவர்கொடுக்கும் தகவலுக்கான சான்றுகள் தெளிவாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ளன. ஆயினும் வரலாற்று ஆய்வாளர்கள்தான் அவற்றை உறுதிப்படுத்தவேண்டும்.அதற்கான கட்டமைப்பு விக்கிபிடியாவிடம் உள்ளதா என்பது எனக்குத் தெரியாது. இருந்தால் தெரியப்படுத்துங்கள். எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. விக்கிபிடியாவின் பணி மகத்தானது என்பதை நான் நன்கு அறிவேன். மேலும் மேம்படுத்த, வரலாற்றை வெளிப்படுத்த உதவுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.

வணக்கம், உங்கள் தடையை நீக்கியிருக்கிறேன். ஆனாலும், வலைப்பதிவுகளில் நீங்கள் பதிவிடுவதை இங்கு அப்படியே முழுவதுமாகத் தரவேற்ற முடியாது என்பதை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். முதலாவதாக, உங்கள் வலைப்பதிவில் "பதிவுக்கான பதிப்புரிமை" பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவல்ல. உங்கள் பதிவுகளை இங்கு தரவேற்றினால், அவற்றை நீங்களே திருத்தி எழுத வேண்டும். யாரும் பயனர்கள் விக்கிநடைக்கு மேம்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறானவை நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 21:01, 29 திசம்பர் 2013 (UTC)

கட்டுரைகள்[தொகு]

வணக்கம்! நீங்கள் எழுதிய கட்டுரைகள் கலைக்களஞ்சியங்களுக்கு ஏற்ற மாதிரி இல்லை. எனவே, இவை நீக்கப்பட்டிருக்கலாம். உங்களை தடை செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை. உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் இந்த பக்கத்திலேயே போடுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 5 சனவரி 2014 (UTC)

கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுங்கள். நீங்கள் ஒருதலைப்பட்சமாக தொகுத்தலில் ஈடுபட்டால் நீண்ட கால அல்லது நிரந்தரத் தடைக்கு உள்ளாகலாம். --AntonTalk 05:31, 22 பெப்ரவரி 2014 (UTC)
கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுங்கள்.--AntonTalk 09:53, 16 நவம்பர் 2014 (UTC)