பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 6

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப்பயனர் அரவணைப்பு[தொகு]

வணக்கம், சுப்பிரமணி. முன்னேற்ற வாய்ப்புள்ள புதுப்பயனர்களின் கட்டுரைகளில் நீக்கல் வார்ப்புரு இட வேண்டாமே? பார்க்க: பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்#புதுப்பயனர் அரவணைப்பு--இரவி (பேச்சு) 07:24, 26 மார்ச் 2013 (UTC)

நீக்க கோரிக்கை[தொகு]

வணக்கம் , நான் தவறுதலாக சொல்லின் செல்வர் விருது என்ற ஒரு மற்றொரு கட்டுரையை தொடங்கிவிட்டேன். தயவுசெய்த இந்த கட்டுரையை நீக்க வேண்டி கொள்கிறேன்

பெரும்பாலும் ஒரே கட்டுரை இரண்டு தலைப்புகளில் இருந்தால் இணைக்கக் கோரலாம். {{merge to|article2}} என்று முதல் கட்டுரையில் இடலாம். இரண்டும் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தமையால் உங்களதை முன்னவரின் கட்டுரைக்கு வழிமாற்றம் செய்திருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 11 ஏப்ரல் 2013 (UTC)

Thank You for Your invitation[தொகு]

Thank You for invitation, but I don't understand tamil. நன்றி. நான் தமிழ் புரியவில்லை. எனவே நான் உங்கள் ஆலோசனையை பின்பற்ற முடியாது. ஆங்கிலம் எழுத, ரஷியன், ஜப்பனீஸ்... --Kusurija (பேச்சு) 17:44, 14 ஏப்ரல் 2013 (UTC)

புதுப் பயனர்க்கு ஆலோசனை[தொகு]

நீக்கப்பட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தை சில நிமிடங்கள் விட்டு வைத்திருக்கலாம். எழுதியவர் படித்து அறிய வசதியாய் இருக்கும். புதியவர் நாம் ஏதோ அவரை வலுக்கட்டாயமாக தடுப்பதாக தவறாக நினைக்கக் கூடும். தற்புகழ்ச்சி, விளம்பரம், விமர்சனம், வேற்றுமொழி உள்ளடக்கம் ஆகியவற்றை உடனே நீக்கலாம். பிறவற்றை ஏதாவது ஒரு உள்ளடக்கம் இருந்தால், நீக்கல் வார்ப்புருவை இட்டு, நாளின் இறுதியில் நீக்கலாம். இவ்வாறு செய்வதால், புதியவர் கேள்வி கேட்கவும், தவறை அறிந்து கொள்ளவும் வசதியாய் இருக்கும். தங்கள் ஆலோசனை தேவை :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 1 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்மிக நல்ல யோசனை. கட்டுரை எதற்காக நீக்கப்பெறுகிது. அத்துடன் என்ன செய்தால் அக்கட்டுரையைக் காக்கலாம் என்றும் கூறும்படி அமைக்கலாம். அதற்காக தனித்த வார்ப்புரு அமைத்தால் கூட சிறப்பாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:21, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

அனுப்பகவுண்டர் காப்பிலியகவுண்டர் ஒக்கிலியகவுண்டர் குரும்பகவுண்டர் இவர்கள் இல்லாமல் ராஜகம்பளம் ஆகாது இவர்களும் கம்பளத்தாரே

தொடர் கட்டுரைப் போட்டி தொடர்பாக கருத்து தேவை[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி பக்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி புதிய பரிந்துரையை இட்டுள்ளேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:18, 13 மே 2013 (UTC) வணக்கம்[பதிலளி]

எஸ்.கே. மகேந்திரன் கட்டுரை நீக்கம்[தொகு]

நான் எஸ் கே மகேந்திரன் என்னும் ஒருவரின் கட்டுரையை எழுதி இருந்தேன் நீக்கி விட்டீர்கள். காரணம் 1.பதிப்புரிமை மீறல் என்றுள்ளது .2.விக்கிபீடியாவில் இடம்பெறக் கூடியவர் அல்ல என்று

1. நீங்கள் காட்டி இருக்கும் வலைபதிவு என்னுடைய சொந்த தயாரிப்பு அதில் எழுதும்போது இங்கேயும் அதனை பதிவிட்டேன் என்ன தவறு இது பற்றி நான் நக்கீரன் கனீஸ் ஆகியோருக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன் .கூகுளே இல் நன் தமிழில் எழுதி இங்கே எடுத்து வருகிறேன் அவ்வளவு தான்.எனக்கு அந்த முறை இலகுவாக படுகிறது .தயவு செய்து அனுமதிப்பீர்கள்.என எனுகிறேன் நான் யாரும் எழுதுவதை பிரதி பண்ணி எழுதவில்லை எனத்கு சொந்த தயாரிப்பில் உருவான வலைபதிவுகளே அவை .

2.எஸ் கேமகேந்திரன் தீவுப்பகுதியில் பிறந்து தமிழரசுகட்சி கூட்டணி கட்சிகளின் முன்னணி பேச்சாளரும் இளைஞர் பேரவை,கூட்டணிதமிழர் சுயாட்சி கழகம் , தமிலரசுகட்சி ஆகியவற்றில் ன் அதியுயர் பதவிகளை வகித்தவர் .பிரபல சட்டத்தரணி , கனடா ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்க இருந்தவர் .ஏராளமான நூல்களை வெளியிடவர் .புங்குடுதீவின் முன்னணி வழிகாட்டி பெரியவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் வைக்கபட்டவ்ர் புங்குட்தீவில் சனசமூக நிலையம் கிராம முன்னேற்ற சங்கம் இளம் தமிழர் மன்றம் மது ஒழிப்புக் கழகம் என்பவற்றின் சமூக சேவை யாளர் நிர்வாகங்களை அலங்கரித்தவர்

எனவே இந்த மடல் கண்டு தொடர்ந்து இந்த கட்டுரையை எழுத அனுமதிப்பீர்கலேன நினைகிறேன் நன்றி --Siva-sandrabalan (பேச்சு) 21:32, 16 மே 2013 (UTC)[பதிலளி]

தாங்கள் குறிப்பிடும் கட்டுரை http://pungudutivu-net.blogspot.in/p/blog-page_28.html தளத்திலிருந்து அப்படியே பிரதி செய்யப்பட்டிருப்பதால் நவம்பர் 19, 2012 அன்று என்னால் பதிப்புரிமை மீறல் எனும் விளக்கத்துடன் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தாங்கள் விக்கிப்பீடியாவிற்கேற்ற பொதுவான கலைக்களஞ்சிய நடையில் மீண்டும் எஸ்.கே. மகேந்திரன் கட்டுரையை உருவாக்குங்கள். தங்களது இணையதளத் தகவலை வெளி இணைப்புகள் பகுதியில் சேருங்கள். தாங்கள் கீழ்க்காணும்

போன்றவற்றை ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளவும். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:09, 17 மே 2013 (UTC)[பதிலளி]

சூர்ய சந்திர குலம் பற்றிய கட்டுரைகள்[தொகு]

தாங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் கூறியிருந்தவாறு, சூரிய குலம் சந்திர குலம் பற்றிய கட்டுரைகள் தொடங்கப்பெற்றுவிட்டது. செங்கை ஐயா சந்திர குலம் தோன்றியதை எழுதியுள்ளார். நான் சூரிய குலம் பற்றி எழுதியுள்ளேன். இரண்டு கட்டுரைகளைக் கண்டு, மேம்படுத்த உதவி செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:22, 19 மே 2013 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

பா.ரா. சுப்பிரமணியன் எனும் கட்டுரையும் உள்ளது; பா. ரா. சுப்பிரமணியன் எனும் கட்டுரையும் உள்ளது! உரியது செய்யவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

இதனைக் கொஞ்சம் கவனிக்கவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைத் தொடர்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைத் தொடர் குறித்த படிமங்களைக் கண்டு மகிழ்ந்தேன். ஒரே ஒரு ஆலோசனை: பரப்புரைக்காக திரைக்காட்சிகள் எடுக்கும் போது தள அறிவிப்பில் தெரியும் அறிவிப்புகளை நீக்கி விடுங்கள். ஏனெனில், சில படிமங்களில் அது பெரும் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தவிர, இதழ் வாசகர்களுக்குக் குழப்பமாகவும் இருக்கலாம்.--இரவி (பேச்சு) 18:01, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை தொடரை புத்தகமாக தர கோரிக்கை[தொகு]

தங்களுடைய கட்டுரைத் தொடர்களை படிமமாக பதிவேற்றுவதை அண்மையப் பக்கங்கள் பகுதியில் கண்டேன். அவை எந்தக் கட்டுரையுடனும் இணைக்கப்பெறாமல் இருந்ததால், அவற்றின் தொகுப்புகளை முழுவதுமாக பெற இயலவில்லை. படிமங்களில் உள்ள உள்ளடக்கங்களை படிப்பதிலும் சிரமமாக உள்ளது. தாங்கள் தட்டச்சு செய்து வைத்துள்ள கட்டுரைகளை வலைப்பதிவிலோ, விக்கப்பீடியாவிலோ எழுதியிருந்தால் இணைப்பு தரவும். அத்துடன் மின்நூலாக தொகுத்து இணையத்தில் வெளியிடவும் கோரிக்கை வைக்கிறேன். மின்நூலாக தருவதற்கு மைக்ரோசாப்ட் வேர்டில் பிளக்கின் உள்ளது. அதன் பின் தாங்கள் அனுமதித்தால் எனது வலைப்பூவிலும் அதனை நூல் இணைப்பாக தருகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:11, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியாகும் இத்தொடர் ஜனவரி 1, 2013 முதல் வெளியாகி வருகிறது. தமிழ் கம்ப்யூட்டர் இதழின் பக்கங்கள் படவருடி செய்யப்பட்டு படிமங்களாக விக்கிப்பீடியா:ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் எனும் பக்கத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தொடர் நிறைவடைந்தவுடன் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பில் நூலாக (அச்சில்) வெளி வருகிறது. இதன் முதல் பதிப்புரிமை தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு இருப்பதால் நாம் இதை மின்நூலாக வெளியிட இயலாது. ஆர்வத்திற்கு நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:47, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
ஆழி பதிப்பகம், கட்டற்ற மென்பொருள் என்ற நூலை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் வெளியிட்டது. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைகள், நூல்களையும் இது போன்ற உரிமத்தில் வெளியிட முன்வரும் இதழ்கள், பதிப்பகங்களை நாடிச் செய்யலாம். இதன் மூலம், பதிப்பகத்தின் வழங்கல் எல்லையையும் தாண்டி பல்வேறு வழிகளிலும் இந்த ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். உங்கள் முந்தைய நூலம் விற்றுத் தீர்ந்து போய் அடுத்த பதிப்பு வராமல் இருப்பதால் இவ்வாறு சிந்திக்கத் தோன்றுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 05:56, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றத்தை நீக்க கோரிக்கை[தொகு]

வணக்கம், சுப்பிரமணி. சிவபாலராசன் என்பவர் எழுதிய மூல உயிரணு தானம், கட்டுரையைத் துப்புரவு செய்ய நினைத்து அதைக் குருத்தணு சிகிச்சை என்னும் தலைப்பிற்கு நகர்த்தினேன். ஆனால் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சிகிச்சைக் குறித்து விவரித்தாலும் தானத்தைப்பற்றி அதிகமாக எழுதியுள்ளதால் தயவு செய்து என்னுடைய தலைப்பு மாற்றத்தை இல்லாதாக்கி பழையத் தலைப்பிலேயே இருக்கும்படி செய்யுங்கள். தவறுக்கு மன்னிக்கவும்--Nan (பேச்சு) 17:31, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

Nan தங்களின் வேண்டுகோளின்படி மூல உயிரணு தானம் தலைப்புக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருத்தணு சிகிச்சை எனும் தலைப்பில் தாங்கள் கட்டுரையைத் தொடங்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:15, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
நன்றி--Nan (பேச்சு) 08:21, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

போற்றுதலுக்குரிய பணிகள்...![தொகு]

இந்தியாவில் விக்கிப்பீடியாவின் ‘முதலாவது மாணவர் மன்ற அமைப்பு’ தோன்றுவதற்கு பெரிதும் துணைநின்ற தங்களை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது! தென்தமிழகத்தில் திறம்பட பாடுபட்டு, விக்கிப்பீடியாவை மக்களின் நடுவே கொண்டு செல்லும் தங்களின் முயற்சிகள் பெரிதும் போற்றுதலுக்குரியது. வாழ்க தங்களின் தொண்டு! நேசத்துடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:11, 18 ஆகத்து 2013 (UTC) 👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 07:00, 24 ஆகத்து 2013 (UTC) 👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:12, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்! இங்கு கொஞ்சம் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:36, 17 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை[தொகு]



உங்களுக்குத் தெரியுமா?[தொகு]


பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு[தொகு]

வணக்கம், சுப்பிரமணி. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக பணி புரிய இயலுமா? ஊடக ஒருங்கிணைப்பு, பங்களிப்புக் கையேடு முதலிய பணிகளுக்கு உங்கள் பங்களிப்பு பயன் மிக்கதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 17:48, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தங்கள் விருப்பத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:27, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றிங்க. இது தொடர்பாக உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன். --இரவி (பேச்சு) 17:19, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வொக்கலிகரின் உட்பிரிவுதான் காப்பிலியர், காப்பிலியரை பற்றிய தகவல் மட்டுமெ காப்பிலியர் பக்கத்தில் உள்ளது. வொக்கலிகரின் உட்பிரிவுதான் வொக்கலிகர் பக்கத்தில் உள்ளது. காப்பிலியரின் உட்பிரிவு, வரலாறு, வாழ்கை முறை இவைகளை இக்கட்டுரையின் மூலமாக மக்கள் அறிந்து கொள்வார்கள். இன்னும் பல தகவல் விரைவில் சேர்க்கப்படும். காப்பிலியர் என்ற சொல்லை மறைத்து விடாதீர்.merge to vokkaligar என்ற வாசகத்தை அகற்றியதற்கு மன்னிக்கவும் எனக்கு அதை அகற்ற கூடாது என்பது தெரியாது நான் விக்கிபீடியாவிற்கு புதியவன். மேலும் sathyaprasanna என்ற பயனர் தடையை அகற்றுமாறு கேட்டுகொள்கிறேன். தேனி. மா.சத்யபிரசன்னா...

நான் இங்கு ஒக்கலிகர் (காப்பு) சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் இது குறித்து விவரம் கேட்டிருக்கிறேன். அவரிடமிருந்து விவரங்கள் பெற்றவுடன் இரு கட்டுரைகளையும் இணைப்பதா? இல்லை இரு கட்டுரைகளும் தனித்தனியாக வைத்துக் கொள்வதா? என்பதை முடிவு செய்யலாம். தாங்கள் விக்கிப்பீடியாவிற்குப் புதியவர் என்பதாலும், தவறைப் புரிந்து கொண்டதாலும் தங்கள் பங்களிப்புக்கான தடையை அகற்றுகிறேன். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:22, 14 செப்டம்பர் 2013 (UTC)

தேவாரத் திருத்தலங்கள்[தொகு]

தரப்பட்டிருந்த வெளி இணைப்புகள் இதுவரை பிறர் தனித்தனிக் கட்டுரைகள் எழுதப் பயன்படுத்தப்பட்டன. பணி நிறைவேறியிருக்கலாம். நீக்கக் குறிப்பு இடப்பட்டது. தாங்கள் வெளி இணைப்புகளை முறைப்படி நீக்கிச் செம்மைப்படுத்தியுள்ளீர்கள். கட்டுரை உருவாக்கத்துக்கு உதவ வேண்டும் என்னும் எனது நோக்கம் நிறைவேறிவிட்டது. நன்றி. விக்கி இப்படித்தான் வளரவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 11:35, 15 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:58, 18 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் ஊடகங்களிலும் சுற்றிச் சுழன்று தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்ததைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். குறிப்பாக, தினமணி சிறுவர்மணியில் வெளியான உங்கள் கட்டுரை மிக நேர்த்தியாகவும் எங்கு எதனை எடுத்துரைக்க வேண்டும் என்பதை அறிந்தும் எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் பரப்புரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு புத்துணர்வு அளித்து வருவதை உணர முடிகிறது. --இரவி (பேச்சு) 08:46, 19 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி, இரவி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:10, 19 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 20 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:24, 20 செப்டம்பர் 2013 (UTC)

சிறு வேண்டுகோள்[தொகு]

நீங்கள் தொகுத்த "சென்னைத் திரைப்படக் கல்லூரி" யும் நான் தொகுத்த "சென்னை(த்)திரைப்படக் கல்லூரி" என்ற தலைப்பும் ஒன்றாக இருப்பதை அறிந்தேன். முடிந்தால் சேர்க்கவும் அல்லது நீக்கிவிடவும். இது சிறு வேண்டுகோள் மட்டுமே.--Muthuppandy pandian (பேச்சு) 13:33, 20 செப்டம்பர் 2013 (UTC)

தங்கள் வேண்டுகோளின்படி தாங்கள் தொடங்கிய கட்டுரை நீக்கப்பட்டது. முன்பே இடம் பெற்றிருக்கும் கட்டுரையில் தாங்கள் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:49, 20 செப்டம்பர் 2013 (UTC)

கார்ட்டூன் கட்டுரையை கேலிச்சித்திரத்துடன் இணைத்து விடுங்கள்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:04, 24 செப்டம்பர் 2013 (UTC)

நந்தினி, தாங்கள் தொடங்கிய கார்ட்டூன் கட்டுரை கேலிச் சித்திரம் கட்டுரைக்கு வழிமாற்றாக மாற்றப்பட்டு விட்டது. தாங்கள் கேலிச் சித்திரம் கட்டுரையில் கூடுதல் தகவலைச் சேர்க்க முடிந்தால் சேர்க்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:16, 24 செப்டம்பர் 2013 (UTC)

கார்த்தி ப சிதம்பரம் - பன்முகத் தோற்றம் இந்த கட்டுரை சரியான வடிவமைப்பில் உள்ளதா?நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:31, 24 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:53, 27 செப்டம்பர் 2013 (UTC)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:53, 27 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரைகளை காலம் தாழ்த்தி நீக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கம் தேனியாரே,

விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாடத்தின் தாக்கத்தினால் நிறைய புதுப்பயனர்கள் தற்போது களம் இறங்கியுள்ளார்கள் என்பது தெரிகிறது. அவர்களுக்கு விக்கியைப் பற்றிய அறிவு அதிகம் இல்லாதமையால் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம், தெளிவற்ற உள்ளடக்கம் போன்ற கட்டுரைகளை துவங்குகிறார்கள். அவற்றை உடனே நீக்கம் செய்ய வேண்டாம். அது அவர்களுக்கு புரிதல் இல்லாமையால் விக்கியை விட்டு வெளியேறிவிடும் அபாயத்தினை தருகிறது. எனவே சில காலம் உடனடி நீக்குதலை செய்யாமல் அவர்களின் கட்டுரைகளில் மேலதிக விவரங்களை சேர்க்கவும், உரிய நடையில் எழுதவும் வழிகாட்டல் வார்ப்புருகளை இணைக்க வேண்டுகிறேன். அத்துடன் புதுப்பயனர்களை வழிநடத்த அலோசனைகளும் கூற வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:52, 30 செப்டம்பர் 2013 (UTC)

புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:42, 30 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்!

  • நல்ல தமிழில், பிழை எதுவுமில்லாமல் எழுதும் வல்லமை கொண்ட உங்களின் பங்களிப்பினை தொடந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  • அச்சு ஊடகங்களின் மூலமாக தமிழ் விக்கிப்பீடியா குறித்து பரவலான முறையில் நீங்கள் செய்யும் பரப்புரையினை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  • புதிய பயனர்களை வரவேற்று, அவர்களுக்கு உதவும் நல்ல வேலையினை தொடர்ந்து செய்யுமாறு உடன் பணியாற்றும் பங்களிப்பாளன் எனும் முறையில் கேட்டுக் கொள்கிறேன்.
  • தமிழ் மொழி, தமிழ் குமுகாயம் என்பதனை மனதிற்கொண்டு, உங்களின் பங்களிப்பினை தொடந்து தருமாறு நட்பு முறையில் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • செல்வசிவகுருநாதன் கூறுவதை வழிமொழிகின்றேன். த.வி-யில் தொடர்ந்து உயர் நோக்கோடு பங்காற்றுங்கள். உங்களின் தொடர்ந்த பங்களிப்புகளைக் காண விரும்புகின்றேன். நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக மிகவுள்ளது. அருள்கூர்ந்து என் போன்றவர்களின் வேண்டுகோளை ஏற்று எப்பொழுதும்போல் தொடர்ந்து நற்பணி ஆற்றுங்கள். --செல்வா (பேச்சு) 01:31, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
ஸ்ரீதர் (பேச்சு) 05:10, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மின்னஞ்சல்

நீங்கள் நூல் எழுதியது உங்களுக்காக. அதற்கு எப்படி விக்கியில் விளம்பரம் தேடுகிறீர்கள்? −முன்நிற்கும் கருத்து 66.171.229.56 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சரியான கருத்து அல்ல. சுப்பிரமணி எழுதிய நூல் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. --மயூரநாதன் (பேச்சு) 13:04, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கையொப்பமிடா விட்டாலும் தொடர்ந்து உடைந்த ரிகார்டைப் போல எனது மின்னஞ்சல் (படம்), இந்தப் பக்கத்தில் - சில கருத்துகள், எனது பேச்சுப் பக்கம் என்று அனைத்திலும் இதையே பதிவிடுவது ஏன்? பயனர் பெயரில் வராமல், அடையாளம் காட்டாமல் வந்தாலும் யாரென்பதை நான் கண்டு கொண்டேன். (ஒருவரின் எழுத்து நடையைக் கொண்டே யார் என்பதைக் கண்டறிந்து விட முடியும்) நான் எங்கும் எனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு விளம்பரம் தேடவில்லை என்பது இந்தப் பக்கத்தில் நடைபெற்ற உரையாடலிலுள்ள எனது கருத்துகளைப் படித்தாலே தெரியும். இருப்பினும், தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு விக்கியில் விளம்பரப்படுத்துவதிலும், விளம்பரம் தேடுவதிலும் தவறில்லை. ஏனெனில் இந்த நூல் என் சுயசரிதையோ அல்லது என் குடும்பக் கதையோ அல்ல. இந்த நூல் முழுக்க முழுக்க தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியது. இந்நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாகப் பரிசு பெற்றது எனது எழுத்துத் திறனுக்குக் கிடைத்தது. (உன்னுடைய பரிந்துரையால் அல்ல) இந்தப் பரிசின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. நூலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம் அனைத்து ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பெயரும், எனது பெயரும் இடம் பெற்றது. குறிப்பாக புதிய தலைமுறை, ஜெயா மற்றும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சிகளில் 24 மணி நேரம் இந்தப் பரிசுச் செய்தி கீழ்ப்பகுதியில் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நூலுக்கான பரிசளிப்பு விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பரிசளித்தது எனக்கு மட்டுமல்ல, தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் கிடைத்த பரிசு, பெருமை என்று சொல்லலாம். இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அன்று பரிசு பெற்ற 64 (நூலாசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் சில மாணவர்கள்) பரிசுக்குரியவர்களில் முதலமைச்சர் அவர்கள் என்னிடம் மட்டும்தான் சில வார்த்தைகள் பேசினார். இது எனக்குக் கிடைத்த பெருமை. எனது நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பெருமைதான் கிடைத்தது. என்னுடைய நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எந்த இழுக்கும் வந்துவிட வில்லை. மேலும், தமிழ் விக்கிப்பீடியா நூல் குறித்து நான் விக்கியில் விளம்பரப்படுத்திக் கொள்வதில் சிறிது கூட தவறேயில்லை... (தமிழ் விக்கிப்பீடியா நூல் தவிர்த்து மேலும் 5 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. சுமார் 8 நூல்கள் அச்சில் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்) இதே கதையை ஓட்டிக் கொண்டிருக்காமல், அடுத்து ஏதாவது ஒரு புதுக்கதையுடன் வருக...! ஆனால், தயவு செய்து முகமூடியை நீக்கிவிட்டு நேர்முகமாக வந்தால் நன்றாக இருக்கும்...! எனக்குத் தெரிந்த முகம் மற்றவர்களுக்கும் தெரியட்டுமே!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:14, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நீங்களே அனானியாக வந்து கருத்து சொல்லுவீங்க. நீங்களே இமெயில் அனுப்புவீங்க. என்னா நாடகம்? பயனர் 786haja‎ எங்கே தேனியாரே? 786haja‎ முகமூடியை நீக்கிவிட்டு நேராக வரச் சொல்லுங்கள். விக்கிக்கு டாட்டா எம்பீங்க? மறுபடியும் வரவு எம்பீங்க? உங்களைப் பார்த்தால் கலைஞரின் உண்ணா விரதம்தான் ஞாபகம் வருகிறது.

//உன்னுடைய பரிந்துரையால் அல்ல// மரியாதை! F*** U.

//தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு விக்கியில் விளம்பரப்படுத்துவதிலும், விளம்பரம் தேடுவதிலும் தவறில்லை.// வேறென்ன வேண்டும்?

மீண்டும் மீண்டும் உங்கள் கெட்டித்தனம் பற்றி பிதற்ற வேண்டாம்.

//எனது நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பெருமைதான் கிடைத்தது. // உங்கள் காசுப் பை நிரம்பியது. --74.115.3.62 18:26, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நண்பரே தேனியாரின் நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு விளம்பரம் கிடைத்தது, தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிய சிறந்த நூல் அது. தமிழ் விக்கிப்பீடியா நூலுக்காக கிடைத்த பரிசால் தமிழ் விக்கிப்பீடியா பற்றி தொலைக்காட்சிகளிலும் இதழ்களிலும் பெரிய அளவில் விளம்பரம்\இலவச பரப்புரை கிடைத்தது. --குறும்பன் (பேச்சு) 19:39, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அடையாளம் காட்டாமல் இங்கும் எனது மின்னஞ்சலுக்கும், கருத்துகளை வாரி வழங்கும் நபருக்குப் பதிலளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி மு. சுப்பிரமணி, நீங்கள் அடையாளம் காட்டாத பயனரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது சரி. அதே வேளையில், ஒருமையில் பேசுதல், முட்டாள் போன்ற சொற்பயன்பாடு கண்டிக்கத்தக்கது.
அடையாளம் காட்டாத பயனரே, நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. விக்கி கொள்கைகளுக்கு ஒவ்வாதவற்றை தேனி. மு. சுப்பிரமணி செய்திருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள். ஆனால், முறையாக முன்வைக்க வேண்டும். இப்படி சிறந்த நடிகர் என நையாண்டி செய்வது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. -- சுந்தர் \பேச்சு 03:06, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
// ஒருமையில் பேசுதல், முட்டாள் போன்ற சொற்பயன்பாடு கண்டிக்கத்தக்கது.// வழிமொழிகிறேன்.--இரவி (பேச்சு) 12:14, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//உன்னுடைய பரிந்துரையால் அல்ல// -மிகமிக இறுக்கமான விக்கி நற்பழக்கவழக்கத்திற்கு ஒவ்வா நடை. தயவுசெய்து திருத்திக் கொள்ளவும். உங்களுக்கு அவரைத் தெரிந்திருப்பின் இது போன்ற நடையை அவரிடம் வேறு ஊடகவழி பயன்படுத்தவும். அருள்கூர்ந்து விக்கியில் பயன்படுத்த வேண்டாம். மிக மிகத் தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும். அதுவும் நிர்வாக அணுக்கம் பெற்ற பயனர் அவ்வாறு தட்டச்சு செய்யக்கூட மனம் ஒப்பியிருக்கக்கூடாது. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:27, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி சுப்பிரமணி, உங்களுக்கு நேர்ந்த உளநோகலால் ஒரு கணம் பொறுமையிழந்து சினவயப்பட்டு தவறுதலாகக் கூறியிருக்கலாம். அவர் செய்தது எவ்வளவு தவறானதாக இருந்தாலும், விக்கியின் குமுகத்தில் இப்படி எழுதலாமா? நீங்கள் வருத்தம் தெரிவித்து அதனை நகோடிட்டு அடித்து நீக்குவதே சரியான முடிவாக இருக்கும். சூரியப்பிரகாசு கூறியது எனக்கு ஏற்பில்லை, //உங்களுக்கு அவரைத் தெரிந்திருப்பின் இது போன்ற நடையை அவரிடம் வேறு ஊடகவழி பயன்படுத்தவும்.//. நான் பரிந்துரைப்பது பிற இடத்திலும் கூறாதீர்கள். உங்கள் பெருந்தன்மை ஆயிரம் நன்மை செய்யும். ஆனால் விக்கிக்கு வெளியே நடப்பது உங்கள் தேர்வு நானோ பிறரோ கருத்துப்பது தேவையில்லை, கூடவும் கூடாது. ஆனால் எங்கு தீய மொழிகள் பயன்படுத்தினாலும் ஒருவகையின் அது பிற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் நோக்கிலேயே என் பரிந்துரை. எனவே வருத்தம் தெரிவித்து கோடிட்டு நீக்கிவிடுங்கள். --செல்வா (பேச்சு) 05:21, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கி வியாபாரம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் இடம் பெற்ற முதற்பக்கக் கட்டுரைகள் அனைத்தும் தரம் உயர்ந்த கட்டுரைகள் என்றோ அல்லது சிறப்புக் கட்டுரைகள் என்றோ கருத வேண்டியதில்லை. இவை முதற்பக்கத்தில் இடம் பெற்ற கட்டுரைகள் அவ்வளவுதான். தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் இடம் பெற்ற கட்டுரைகளை விடக் கருத்துச் செறிவுடைய, தரம் உயர்ந்த பல கட்டுரைகள் இருக்கின்றன. இவை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறாவிட்டாலும் பலருக்கும் பயனுடைய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றன. இக்கட்டுரைகள் பயனர்களால் பரிந்துரைக்கப்படாமலும், பரிந்துரைக்கப்பட்டாலும் ஏதாவது ஒரு குறை தெரிவிக்கப்பட்டு ஏற்புடையதாகக் கருதாத நிலையிலும் இருக்கின்ற கட்டுரைகளாக முடக்கப்பட்டு இருக்கலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பு, முதற்பக்கக் கட்டுரைகள் பயனர்களால் பரிந்துரைக்கப்படாமல் நிருவாகி ஒருவரால் மட்டும் தேர்வு செய்யப்பட்டு முதற்பக்கத்தில் இடம் பெற்ற போது, அவை ஓரளவு தரமான, குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக இருந்தன. பரிந்துரைக்கப்படும் நிலை உருவான பின்பு, கட்டுரையைத் தொடங்கியவரே அந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்து அதை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சில கட்டுரைகள் முதற்பக்கக் கட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. இதனால், முதற்பக்கக் கட்டுரைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் கட்டுரைகளில், தேர்வுக்கு மேலும் சில புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதனைப் பின்பற்றும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் அப்போதுதான் பல சிறப்புக் கட்டுரைகளை உருவாக்க முடியும் என்று பயனர்கள் பலரும் விரும்புகின்றனர்.

இவ்வாறு உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்கான விக்கியை விமர்சித்த நீங்கள். பணம் கிடைக்கிறது என்பதற்காக விக்கி பற்றி நூல் எழுதுவீர்கள். விக்கி பற்றி அவதூறு பரப்பிய நீங்கள் மறுத்து தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியிட்டுள்ளீர்களா? இதை அழுத்திச் சொல்ல எத்தனை விக்கிப்பீடியர்களுக்கு துணிவிருக்கிறது. (தொடரும்...) --176.56.174.80 04:27, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


இம்மாதிரியான கருத்துக்கள் நம்மை எவ்வகையான முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லப்போவதில்லை. இது தமிழ் விக்கியின் மதிப்புக்குப் பாதகமான முன்மாதிரி. அடையாளம் காட்டாமல் இவ்வாறான கருத்துக்களை இடும் நண்பருக்கு உண்மையில் தமிழ் விக்கியின் வளர்ச்சியில் அக்கறை இருக்குமானால், தயவுசெய்து, இது போன்ற கருத்துக்களை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ் விக்கியில் வேண்டாத கலாச்சாரத்துக்கு வித்திட வேண்டாம். -- மயூரநாதன் (பேச்சு) 07:37, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிப்பீடியா நூலினை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகம் இதுவரை எனக்கு எந்தப் பணமும் அளிக்கவில்லை. 30 நூல்கள் மட்டுமே எனக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. (பணம் இனிமேல் கொடுப்பார்களா? என்று தெரியவில்லை, கொடுத்தால் நல்லதுதான். அது என் உழைப்புக்குக் கிடைக்கும் பணம்) ஆனால், தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதி வரும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” தொடருக்கு எனக்குப் பணம் அளிக்கப்படுகிறது. (இதைக் குறிப்பிடாமல் விட்டது ஏனோ?) தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நான் எழுதும் செய்திக்கு தமிழ் கம்ப்யூட்டர் இதழ் எனக்குப் பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறது. இந்தப் பணம் எனக்குக் குறைவாக வழங்கப்பட்டாலும் எனக்கு திருப்திதான். இங்கு இன்னொன்றையும் பார்க்க வேண்டும். தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சாதாரண வணிக விளம்பரங்களுக்கு உயரம் 5 செ.மீ x அகலம் 16 செ.மீ எனும் அளவிற்கு ரூ1400 விளம்பரக் கட்டணமாகப் பெறப்படுகிறது. இந்த அடிப்படையில் ஒரு பக்கத்துக்கு ரூ.5600/ ஆகிறது. தமிழ் விக்கிப்பீடியா குறித்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் இடம் பெறுகிறதே. இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வாரம் ஒன்றுக்குக் குறைந்தது என்னால் முப்பதாயிரம் ரூபாய் அளவிலான விளம்பரம் கிடைக்கிறது என்று நான் சொல்லலாமா? எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். தவறான கண்ணோட்டம் என்றும் சரியானதாகி விடாது.

தாங்கள் கூட தமிழ் விக்கிப்பீடியா குறித்து நல்லதொரு நூலை எழுதி, எவரிடமும் பண உதவி பெறாமல், வணிக நோக்கம் எதுவுமில்லாமல் அச்சிட்டு, வினியோகிக்கலாமே...! புதிய பயனர்களுக்கு உதவிகரமாக இருக்குமே...!

தங்களுக்கே துணிவில்லாமல்தானே அடையாளம் காட்டாமல் உலா வருகிறீர்கள்... இதில் மற்றவர்களுக்குத் துணிவு இருக்கிறதா? என்கிற கேள்வி வேறு...! --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:53, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி, தேனி மு. சுப்பிரமணி. அடையாளம் காட்டா பயனரே, அவருடைய கட்டுரையில் அவர் தனது சொந்த கருத்தைப் பதிந்ததில் தவறில்லை. அதில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் மறுப்பிருந்தால் கட்டுரையைப் பற்றிய திறனாய்வு ஒன்றை எழுதலாம், இதழாசிரியருக்கு மடல் எழுதலாம். ஆனால் அவரது கருத்து விடுபாட்டைத் தடுக்க முடியாது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவின் அதிகாரப்பூர்வக் கருத்தாக அதை வெளியிட்டிருந்தாரா? அப்படி இருந்தால் கட்டாயம் மறுக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:13, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா சார்பான முறையான ஊடக வெளியீடுகளைத் தவிர மற்ற இடங்களில் கட்டுரையாளர் தமது சொந்தக் கருத்தையும் முன்வைத்து எழுதுவதற்கு உரிமை உண்டு. சுந்தர் கூறியபடி, தவறான கட்டுரைகள் தொடர்பாக நாம் தனிப்படவோ கூடியோ முறையாக அந்தந்த இதழாசிரியர்களுக்கு மறுப்புக் கடிதம் அனுப்புவதே சரியான எதிர்வினை. ஆயினும்,(நிருவாகப் பொறுப்பில் இருந்து கொண்டு) தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இயங்கி வரும் ஒருவர் கிட்டத்தட்ட தமிழ் விக்கிப்பீடியாவின் தூதுவர் போன்றே மற்றவர்களால் பார்க்கப்படுவார் என்ற பொறுப்பையும் உணர்தல் நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவின் நிறைகளை மட்டும் எடுத்துரைப்பது, தக்க விமரிசனங்களை ஏற்று முறையான விளக்கம் அளிப்பது, தவறான விமரிசனங்களை மறுப்பது ஆகியனவும் இது போன்ற பரப்புரையாளர்களின் பொறுப்புகளில் ஒன்று.
  1. ஒரு வாதத்துக்காக //இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வாரம் ஒன்றுக்குக் குறைந்தது என்னால் முப்பதாயிரம் ரூபாய் அளவிலான விளம்பரம் கிடைக்கிறது // என்று சொன்ன தேனி சுப்பிரமணி என்ன வகையான விளம்பரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இக்கட்டுரை மூலம் தேடித் தந்திருக்கிறார் என்று அறிய விரும்புகிறேன்.
  2. தேனி சுப்பிரமணி முதற்பக்கக் கட்டுரைகளின் தரம் பற்றிய விமரிசனத்துக்கு முன்னும் பின்னும் தரத்தை மேம்படுத்துவது குறித்து என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்தார் என்று அறிய விரும்புகிறேன். பங்களிப்புகளைத் தராமல் விமரிசனத்தை மட்டும் முன்வைப்பது நிருவாகப் பொறுப்பில் உள்ளவர் செய்யத்தக்கது தானா என்றும் அறிய விரும்புகிறேன்.
  3. தவிர, இது தொடர்பான உரையாடலை ஆலமரத்தடியில் துவக்கி மற்ற பயனர்கள் தங்கள் கருத்தைத் தந்த பிறகும் அவற்றுக்கு ஏன் முறையான மறுமொழி அளிக்கவில்லை என்றும் அறிய விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • இரவி 3-ஆவது புள்ளியில் கேட்பது முற்றிலும் சரி. கருத்துரிமை வேறு செய்ய வேண்டியதைத் தான் செய்ய இயலும் வாய்ப்பும் வசதியும் இருந்தும் செய்யாமல் "வேறு வழியின்றி" என்று தவறுதலான காரணம் தந்து எழுதியது தவறு. மேலே இரவி சுட்டிய நெடிய உரையாடலில் நான் கூறியது: //ஏன் //..வேறு வழியின்றி// ?? தேவையான கருத்துகளை இங்கு இட்டு வழி வகுக்கலாமே. பற்பல வழிகள் இருக்கும்பொழுது ஏன் 'வேறு வழியின்றி' என்று கூறி இப்படி எதிர்மறையான கருத்தை இடவேண்டும்? முடிந்தால் தேனி சுப்பிரமணி இதனைத் திருத்தி வெளியிட வேண்டும். --செல்வா (பேச்சு) 20:51, 26 ஆகத்து 2013 (UTC)// இப்பொழுதும் கூட தக்கவாறு தேனி திருத்தம் ஒன்றை வெளியிட அவர்களைப் பணிக்க வேண்டும். அதுவே முறை. நாமும் எழுதலாம் என்பது இருந்தாலும், நிருவாகப் பொறுப்பில் இருக்கும் கட்டுரையாளர் இப்படிச் செய்திருக்கக்கூடாது. அது முறையில்லை. ஆகவே அவரே திருத்தம் அனுப்புவதே அவருடைய பொறுப்புடைமைக்கு ஏற்றது. --செல்வா (பேச்சு) 05:13, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்[தொகு]

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:01, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:05, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:32, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டு கொண்டாட்டப் பொறுப்புகள் - விளக்கம் கோரல்[தொகு]

வணக்கம். நிகழ்வு ஒருங்கிணைப்புப் பணியும் மற்ற பணிகளைப் போல் தன்னார்வப் பணி தான். அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து முகம் காட்டாமலும் அறிவிக்கப்படாமலும் இன்னும் பலர் நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளார்கள். எனவே, தனியொரு ஒருங்கிணைப்பாளர் எவரையும் இது குறித்து பொறுப்பாக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது. எனினும், கொண்டாட்டங்கள் குறித்து விமரிசனங்களை முன்வைத்துள்ளீர்கள் என்ற வகையில், கொண்டாட்டத்தை மேம்படுத்த என்ன வகையான பங்களிப்புகளைத் தர முன்வந்தீர்கள் என்று அறிய விரும்புகிறேன்.

  1. இக்கொண்டாட்டங்களுக்கான அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில், இவ்விமரிசனங்கள் குறித்து தாங்கள் ஏற்கும் பொறுப்பு என்ன?
  2. இக்கொண்டாட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில் தாங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன? குறிப்பாக, ஊடக ஒருங்கிணைப்பு தொடர்பாகவே நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள். சென்னைப் பல்கலையில் நிகழ்வு நடத்த அரங்கு கிடைக்கலாம் என்ற தகவலைத் தந்தீர்கள். சென்னை இதழாளர் மன்றத்தின் தொடர்பு எண் ஒன்றைத் தந்தீர்கள். (அதுவும் தவறான எண்ணாக இருந்தது. நான் குறித்துக் கொண்டது கூட பிழையாக இருக்கலாம்). இவை தவிர வேறு என்ன வகையான பங்களிப்புகளைத் தந்தீர்கள் என்று அறிய விரும்புகிறேன்.
  3. தனிப்பட்ட காரணங்களால் நிகழ்வுக்கான முனைப்பான பங்களிப்புகளைத் தர முடியவில்லை என்றால், எங்காவது அதனை முறையாக அறியத்தந்திருக்கிறீர்களா?
  4. கொண்டாட்டங்கள் தொடர்பாக நீங்கள் முன்னெடுக்க விரும்பிய எதையேனும் வெளிப்படையான விக்கி உரையாடல்களுக்கு வெளியே யாரேனும் தனிப்பட்ட முறையில் தடுத்தார்களா?
  5. நீங்கள் முன்வைத்துள்ள விமரிசனங்களில் பலவற்றை நிகழ்வு நாள் அன்றே நீங்களே சரி செய்திருக்க முடியும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? யாராவது அவ்வாறு செய்ய விடாமல் உங்களைத் தடுத்தார்களா? குறிப்பிட்ட குறைகளை நிகழ்வு நாளன்றே மற்ற ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவித்துச் சரி செய்ய முனையாமைக்குக் காரணம் என்ன? மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்களா? குறிப்பாக, பயனர்களுக்கு பயண உதவித் தொகை வழங்கல், பயனர் வரும் நேரத்துக்கு ஏற்ப சுற்றுலா புறப்படும் நேரத்தை மாற்றியமைத்தல், புதிய பெண் பங்களிப்பாளருக்கும் அவரது பங்களிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் இட வசதி தர வேண்டல் முதலிய உங்கள் அனைத்து வெளிப்படையான கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, மற்ற விசயங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்களிடம் தொடர்பாட முயலாமல் போனது ஏன்?
  6. //தன்னிச்சையாகச் செயல்பட விரும்பியது போன்று இருந்தது.ஒவ்வொரு முறையும் தங்களைத் தவிர வேறு யாரும் மேடை ஏறிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் செயல்பட்டதாகவே தோன்றுகிறது.குறிப்பிட்ட சில பயனர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. யாருக்கும் மேடை வாய்ப்பை அளிக்க விரும்பாத தங்களைப் போன்றவர்களாவது // விமரிசனத்தில் உள்ள இந்த வரிகளைத் தனிமாந்தத் தாக்குதலாகவே கருதுகிறேன். இக்கூற்றுகளுக்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன? தக்க ஆதாரம் இல்லாவிட்டால் மேற்கண்ட கூற்றுகளை மீளப் பெறுங்கள்.
  7. அடுத்து வரும் மாதங்களில் பத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நீங்கள் முன்னெடுக்க இருக்கும் பணிகள் என்னென்ன? ஒரு வேளை, பணிகள் எதையும் மேற்கொள்ள விரும்பாவிட்டால், நீங்கள் ஏன் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அறிய விரும்புகிறேன்.

நன்றி.--இரவி (பேச்சு) 11:51, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி

இது சரியான அணுகல் இல்லை. உங்களது பெயரை நிகழ்வு முடிந்து எடுத்தால் என்ன எடுக்காவிடின் என்ன? கேட்டது அனைத்திற்கும் பதில் கூற விருப்பமில்லை எனில், விருப்பமில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கலாமே! ஏன் இப்படியொரு விரும்பத்தகாத கேட்டவரை வருத்தப்படச் செய்யும் (யாராக இருப்பினும் சரி, நான் இரவியை மட்டும் சொல்லவில்லை; எனக்கும் இப்படியொரு பதிலைப் பார்த்து ஒரு நொடி அதிர்ச்சி) மறுமொழிகளைத் தருவதற்கு தராமலேயே இருந்திருக்கலாம் தேனி. வருங்காலத்தில் மாற்றிக் கொள்ளவும். நன்றி.-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:43, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இரவி அடுத்து வரும் காலங்களில் ஒருங்கிணைப்பாளராக இருக்கப் போகிறீர்களா என்று தானே கேட்டிருந்தார். தேனியாரும் தெளிவாகப் பதில் தந்திருப்பதாகவே கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 10:00, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

:::புரியாமைக்கு வருந்துகிறேன். விளக்கம் கேட்டு எழுதப்பட்டதற்கு ஒரு வரியில் எழுதியிருக்கிறாரே என்ற வருத்தத்தில்தான் அப்படிக் கேட்டேன் :( -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:08, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி, மறுமொழி அளிக்க முன்வந்தமைக்கு நன்றி. கேள்வி எண் 7க்கு நீங்கள் அளித்த மறுமொழியை ஏற்றுக் கொள்கிறேன். வழக்கமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்து கேட்பதற்கு ஒரு வார காலம் தரப்படும். எனவே, மற்ற கேள்விகளுக்கான மறுமொழியைப் பெற்றுக் கொள்ள நான் 24 அக்டோபர், 2013 வரை பொறுத்திருப்பேன். ஒரு வேளை, தனிப்பட்ட காரணங்களால் உங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். மறுமொழி அளிக்காமல் இருப்பதற்கான உரிமையும் மறுமொழி அளிக்கவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், முறையான மறுமொழி வராத கேள்விகள் தொடர்பாக அடுத்து வரும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 02:56, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கியதற்கு நன்றி இரவி. எண் வரிசையிட்டுக் கருத்திட்டவராயிற்றே, அதனால், இங்கும், ஒவ்வோர் எண்ணுக்கும் ஒவ்வொரு விளக்கம் தருவார் என்ற நப்பாசையில் கேட்டுவிட்டேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:52, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதில்[தொகு]

  1. வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருத்துக்களின் முடிவாக, நிறை குறை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நிறைகள் குறித்து அனைவரும் மகிழ்ச்சியடையலாம். இது விக்கிப்பீடியாவிற்கு நடத்தப் பெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் சில குறைகள் ஏற்பட்டுள்ளன. தாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் அடுத்த நிகழ்வுகளில் வராமல் இருப்பதற்கான ஆலோசனைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவான பதிலை அளித்திருப்பேன். (குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்) தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திருப்பேன்.
  2. ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தாங்கள் என்னிடம் தொலைபேசியில் ஊடக ஒருங்கிணைப்பு குறித்து கேட்ட போது நான் தேனியிலிருந்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முதலிலேயே உங்களிடம் தெரிவித்து விட்டேன். இருப்பினும், இதழாளர் சந்திப்புக்குச் சென்னை, செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவன அலுவலகக் கண்காணிப்பாளரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதற்கான தொடர்பு எண்ணையும் பெற்றுத் தங்களுக்கு அளித்தேன் (அந்தத் தொடர்பு எண் வேலை செய்யவில்லை என்கிறீர்கள், அப்படியானால் என்னிடம் தெரிவித்திருக்கலாமே...?) அரங்கிற்கு நீங்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் சென்னைப் பல்கலைக்கழக அரங்கு குறித்த தகவலைத் தெரிவித்தேன். (ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்த தாங்களோ அல்லது மற்ற ஒருங்கிணைப்பாளர்களோ என்னிடம் எந்த விதக் கலந்துரையாடலும் செய்யவில்லை எனக்கென்று எந்தக் குறிப்பிட்ட பணியும் அளிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்)
  3. என்னுடைய பங்களிப்புகள் தேவை என்று என்னிடம் எதுவும் கோரப்படவில்லை. எனவே அதற்கான நிலையும் ஏற்படவில்லை.
  4. எந்தவொரு நிகழ்ச்சியும் முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளரின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நீங்கள் ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து பேசித் திட்டமிட்டுச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒருங்கிணைப்பாளர்கள் பலர் முதல் நாளே சென்னை வந்து விட்டோமே... தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களை விட்டுவிட்டு... மற்றவர்களுடன் கலந்துரையாடி இருந்திருக்கலாமே...
  5. இதுகுறித்து நான் எனது கருத்தின் சிறப்புகளாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் அளவிலாவது தாங்கள் முதல் நாளே கலந்துரையாடி இருக்க வேண்டும். நான் நம்முடைய பங்களிப்புகள் எதுவும் தேவையில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இது நமக்கிடையிலான தகவல் பரிமாற்றக் குறைபாடுதான்.
  6. நிகழ்ச்சியில் சிலர் என்கிற நிலையிலிருந்து மாற்றி மேலும் சிலருக்கும் வாய்ப்பளித்திருக்க வேண்டும். இந்த நிலையில் நான் என்னுடைய கருத்தை மீளப் பெறுவதாக இல்லை.
  7. ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் எனது பெயரை எடுத்து விடலாம்.

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:20, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி, விளக்கியதற்கு நன்றி. தாங்கள் அளித்த பதில்களின் பொருத்தம் குறித்து விக்கிச் சமூகமே முடிவு செய்யட்டும். இது குறித்த உரையாடலை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 16:38, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா தொடர்பான உங்கள் ஆக்கங்களை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகோள்[தொகு]

சுப்பிரமணி, தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் எழுதியுள்ள நூலை முன்பு பெற்றுக் கொள்ள விரும்பியபோது, நூல் மீள்பதிப்பாகவில்லை என்றும் எப்போது திரும்ப பதிப்பாகும் என்றும் தெரியவில்லை என்றும் கூறினீர்கள். தற்போது நூல் கிடைக்கிறதா என்று அறிய விரும்புகிறேன். இந்நூலுக்கு இது வரை பணம் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் 30 நூல்களை மட்டும் இலவசமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தீர்கள். இந்நிலையில், நீங்கள் ஏன் பதிப்பாளரிடம் பேசி இந்நூலுக்கான உரிமத்தை கிரியேட்டிவ் காமன்சு share-alike attribution 3.0 முறையில் வழங்கக்கூடாது? இதன் மூலம் ஒரு பதிப்பகம் மறுபதிப்பு போடாவிட்டாலும் மற்ற பதிப்பாளர்கள் போடலாம். விக்கிநூல்களில் இந்த நூலை இடலாம். நமது பரப்புரைகளுக்கு அச்சிட்டு வழங்கலாம். இது போன்ற உரிமத்தில் வழங்குவதால் இலவசமாகத் தர வேண்டும் என்று பொருள் இல்லை. உரிய royalty தொகையைப் பெற்றுக் கொள்ளவும் இந்த உரிமத்தில் இடம் இருக்கிறது. பதிப்பாளர்கள் இத்தகைய உரிமத்துக்கு இணங்குவார்களா என்றால் ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள கட்டற்ற மென்பொருள் என்ற நூல் இவ்வகை உரிமத்திலேயே கிடைக்கிறது. இதே போல், நீங்கள் விக்கிப்பீடியா தொடர்பாக இதழ்களுக்கு எழுதும் கட்டுரைகளையும் கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் தான் எழுதுவேன் என்ற கொள்கையை முன்னெடுப்பீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். அத்தகைய கட்டுரைகளை நாமே மின்னூலாகவோ அச்சிட்டோ கூட வழங்க உதவியாக இருக்கும். இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பது தமிழ்நாட்டில் கட்டற்ற உள்ளடக்கம் பற்றிய விழிப்புணர்வைக் கூட்ட உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:59, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா நூல் மீள்பதிப்பு செய்வது போன்ற பணிகள் பதிப்பகத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்நூலை வெளியிட பல பதிப்பகத்தினர் தயங்கிய நிலையில், என்னுடைய படைப்புகளுக்கு முதன்முதலாக நூலாக்கம் தந்து வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கு நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். அந்தப் பதிப்பகம் எனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்குப் பணம் தருவதும், அதைப் பெற்றுக் கொள்வதும், மறுப்பதும் என்னுடைய தனி விருப்பத்திற்குரியது. ஒவ்வொரு நூலுக்கும் தமிழ்நாடு அரசின் நூலகத்துறையிலிருந்து நூலக அனுமதி கிடைக்கும் வரை அவர்களுடைய உரிமையில்தான் இருக்கும். இந்த நூலை அவர்கள் விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் மீள்பதிவு செய்து கொள்ளட்டும், எனக்குப் பணமே கொடுக்க வேண்டாமென்கிற நிலையிலேயே இருக்கிறேன். எனவே நான் எழுதிய நூலை தாங்கள் விரும்பும் வழியில் எல்லாம் என்னால் அளிக்க இயலாது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:58, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுப்பிரமணி, ஏற்கனவே உள்ள உங்கள் ஆக்கங்களைக் கட்டற்ற முறையில் தருவதில் உள்ள சிக்கலை ஏற்றுக் கொள்கிறேன். அச்சில் இல்லாத நூலின் பயன் குறைவே. எனவே, விரைந்தும் தொடர்ந்தும் இந்நூலை அச்சிட்டு வருமாறு மெய்யப்பன் பதிப்பகத்துக்கான வேண்டுகோளை உங்கள் மூலமாக வைக்கிறேன். இன்னொன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமாகவே தங்களது முதல் அச்சு நூல் வந்தது என்று அறிந்து கொண்டேன். விக்கிப்பீடியர்களின் வளர்ச்சிக்கு விக்கிப்பீடியா எப்படி உதவுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இனி நீங்கள் விக்கிப்பீடியா தொடர்பாக எழுதப் போகும் ஆக்கங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை தானே? இவற்றையாவது முதலிலேயே நீங்கள் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 03:00, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
என்னுடைய ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்குரிய ஆய்வேடான “தமிழ் இணையச் சிற்றிதழ்கள்” எனும் நூலே என்னுடைய முதல் நூல். நான் எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூல் எனது இரண்டாவது நூலாகும். இரண்டு நூல்களுமே சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகம் (மணிவாசகர் நூலகம்) வெளியிட்டதுதான். என்னுடைய படைப்புகளுக்கு நூலாக்கம் தந்து வெளியிட்டது மெய்யப்பன் பதிப்பகம் என்று குறிப்பிட்டதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். (எனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கான இ. மயூரநாதன் எழுதியிருக்கும் அணிந்துரையில் “இவர் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் தொடர்பான நூலொன்றையும் எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருப்பதைப் படித்துப் பார்க்கலாம்) (ஆனால், உண்மையில் இந்த இரண்டு நூல்களுக்கும் முன்பாக, 2005 ஆம் ஆண்டிலேயே நான் ஒரு நூல் எழுதி பழனியப்பா பிரதர்சு எனும் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது. இந்த நூல் என் பெயரில் வெளியாகவில்லை. நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் பெயரில் வெளியிடப்பட்டது. எனவே அதைக் குறிப்பிட முடியாது)

//இனி நீங்கள் விக்கிப்பீடியா தொடர்பாக எழுதப் போகும் ஆக்கங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை தானே? இவற்றையாவது முதலிலேயே நீங்கள் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகிறேன்// தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:30, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் முதல் நூல் குறித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. அடுத்து வரும் விக்கிப்பீடியா பற்றிய ஆக்கங்களைக் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும் என்ற என் வேண்டுகோளைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஏற்றுக் கொள்கிறேன். எனினும், என் வேண்டுகோளை ஏற்பதில் நடைமுறைத் தடைகள் உள்ளனவா என்று அறிய விரும்புகிறேன். விக்கிப்பீடியா பற்றி விக்கிப்பீடியர் ஒருவரால் எழுதப்படும் ஒரு ஆக்கம் விக்கிப்பீடியாவிலோ விக்கிப்பீடியர்களாலோ கட்டற்றுப் பயன்படுத்தப்பட முடியாமல் போவது ஒரு நகைமுரண்.--இரவி (பேச்சு) 03:57, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த அவதூறு - விளக்கம் கோரல்[தொகு]

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்#தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றி பக்கத்தில் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

//தமிழ் விக்கிப்பீடியாவில், தங்களுடைய தனித்திறனால் வெளிப்படும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சிலரின் செயல்பாடுகளால் இலங்கையைச் சேர்ந்த பயனர் புன்னியாமீன் (தொடங்கிய கட்டுரைகள்: 8,558) என்பவர் வெளியேற நேர்ந்தது. இதைத் தொடர்ந்து நானும் தற்போது வெளியேறுகிறேன். எங்கள் இருவருக்கும் முன்பாக எத்தனை பேர் இப்படி வெளியேறினார்களோ தெரியவில்லை...!//

புன்னியாமினின் கணக்கை யாரும் தடுக்கவில்லை. அவர் பணம் கொடுத்து ஊழியர்கள் மூலம் செய்யும் தொகுப்புகளைத் தனி ஒரு பயனர் கணக்கின் மூலமாகத் தர வேண்டும் என்பதே தமிழ் விக்கிப்பீடியர் பயனர் சமூகம் அவரிடம் எதிர்பார்த்த ஒன்று. இன்றும் அவர் விரும்பினால் பங்களிக்கலாம் - மேற்கண்ட விக்கிப்பீடியா நெறிகளுக்கு உட்பட்டு. இது தொடர்பான அனைத்து விவரங்களும் அவருடைய பேச்சுப் பக்கத்தில் வெளிப்படையாக காணக் கிடைக்கும்.

இந்நிலையில் நீங்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட சிலர் யார்? அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன?

ஆதாரமின்றி இத்தகைய கூற்றுகளை வெளிப்படுத்துவது அவதூறாகவும் தனிமாந்தத் தாக்குதலாகவுமே கருத இயலும். ஆதாரம் இல்லா நிலையில் தங்களின் மேற்கண்ட கூற்றுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவ்வாறான அவதூறுகளை மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 12:24, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:05, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் 8,558 கட்டுரைகள் வரை தொடங்கியவர், தமிழ் விக்கிப்பீடியர்கள் பலரின் பாராட்டைப் பெற்றவர், இலங்கை ஊடகங்கள் பலவற்றில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பல பரப்புரைகள் செய்தவர். அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒன்றுமில்லை என்று நாம் நினைத்தாலும், அவர் பங்களிப்பு தடை செய்யப்படாவிட்டாலும், அவர் மனம் வேதனைப்பட்டுத்தான் வெளியேறினார். இதுகுறித்து, அவர் பல தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மின்னஞ்சல்கள் (திங்கள் கிழமை, அக்டோபர் 31, 2011, திங்கள் கிழமை, ஜனவரி 23, 2012 மற்றும் வெள்ளிக்கிழமை, மார்ச் 9, 2012) அனுப்பினார். எனக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பினார். அபோதைய நிலையில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒருவர் தன் பங்களிப்புகளை நிறுத்திக் கொள்ளவும், அவர் மனம் வேதனைப்படுவதற்கும், அந்த உரையாடலில் இருக்கும் ஏதாவது ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம். இது போலவே நானும் மன வேதனைப்பட்டு வெளியேறுவதாக அறிவித்தேன். பல பயனர்கள் நான் மீண்டும் பங்களிக்க வேண்டுமென்று கோரியதன் அடிப்படையிலும், கனடாவிலிருந்து செல்வா அறிவுறுத்திய நிலையிலும்தான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். அதன் பிறகு, தரம் தாழ்ந்த நிலையில் என் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்கள், போலியான மின்னஞ்சல் முகவரியில் அசிங்கமான சொற்களைக் கொண்ட தரம் குறைந்த மின்னஞ்சல்கள் என்று ஏராளமான நெருக்கடிகள்... இப்படியான விசமிகளிடமிருந்து முதலில் என்னைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:28, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் தந்துள்ள விளக்கம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. //நீங்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட சிலர் யார்? அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன// என்று நான் கேட்டிருந்த இரு கேள்விகளுக்கும் முறையான விடை தேவை. இன்னின்னார் என்று குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் தேவை. அவர்கள் மற்றவர்களை வெளியேற்றுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் தேவை. வழக்கமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்து கேட்பதற்கு ஒரு வார காலம் தரப்படும். எனவே, 24 அக்டோபர், 2013 வரை பொறுத்திருப்பேன். ஒரு வேளை, தனிப்பட்ட காரணங்களால் உங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். மறுமொழி அளிக்காமல் இருப்பதற்கான உரிமையும் மறுமொழி அளிக்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், முறையான மறுமொழி வராத கேள்விகள் தொடர்பாக அடுத்து வரும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 03:03, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
எனக்கு புண்ணியாமீன் அனுப்பிய மின்னஞ்சலில் தங்கள் பெயரும், மற்றொரு பயனர் பெயரும் இருக்கிறது. விரும்பினால் தங்கள் மின்னஞ்சலுக்கு அந்த மின்னஞ்சலை Forward செய்கிறேன். அதன் பிறகு அவர் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பைத் தொடரவில்லை. இதிலிருந்து அவர் வெளியேறி விட்டார் என்று அறிந்து கொள்ளலாமே...? (தற்போது என்னையும் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து வெளியேற்றவே பல முயற்சிகள் நடைபெறுகின்றன) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:29, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுப்பிரமணி, ஒட்டு மொத்த விக்கி இயக்கத்தின் நலனைக் கருத்திற் கொண்டு சில விக்கி நெறிமுறைகளை யாராவது ஒருவர் வலியுறுத்தத் தான் வேண்டும். அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுச் செயல்படுகிறவர்கள் தொடர்ந்து பங்களிக்கிறார்கள். மற்றவர்கள் விலகிக் கொள்கிறார்கள். கூடலுக்கு அடுத்து வந்த கருத்துகளை ஏற்க முடியாமல் நான் மனம் நொந்து விலகி விட்டு, "ஒரு சிலர் தான் என்னை வெளியேற்றி விட்டார்கள்" என்று குறிப்பிட்டால் அது எந்த அளவு உண்மையாக இருக்கும்? அதே அளவு உண்மை தான் புன்னியாமின் எழுதிய மடலின் அடிப்படையில் நீங்கள் கூறுவதும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சுப்பிரமணி முன்வைத்துள்ள இச்செல்லுபடியாகாத ஆதாரத்தையும் குற்றச்சாட்டையும் திரும்பப் பெறுமாறு விக்கிச் சமூகம் அவரை வலியுறுத்த வேண்டும். இது குறித்த உரையாடலை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 16:40, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கி சமூகம் பற்றிய அவதூறு - விளக்கம் கோரல்[தொகு]

விக்கிப்பீடியாவில் அடையாளம் காட்டாமலும் மின்னஞ்சல் மூலமாகவும் ஒரு பயனர் தங்களுக்குத் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் யார் எனத் தாங்கள் அறிவீர்கள் எனவும் பல இடங்களில் சுட்டியுள்ளீர்கள். இப்படிப் பெயர் சொல்லாமல் கருத்திடுவது குழப்பத்தை விளைவிப்பதும் அவதூறு சேர்ப்பதும் ஆகும். இது தொடர்பாக ஆலமரத்தடியில் உங்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்பதற்கான நினைவூட்டலாக இச்செய்தியை இடுகிறேன். வழக்கமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்து கேட்பதற்கு ஒரு வார காலம் தரப்படும். எனினும், ஏற்கனவே உங்களிடம் ஆதாரத்தை முன்வைக்க அவ்வளவு காலம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரு வேளை, தனிப்பட்ட காரணங்களால் உங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். மறுமொழி அளிக்காமல் இருப்பதற்கான உரிமையும் மறுமொழி அளிக்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், முறையான மறுமொழி வராத கேள்விகள் தொடர்பாக அடுத்து வரும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 03:11, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம். இது தொடர்பான சில மின்னஞ்சல்களை விக்கி நிர்வாகிகள் சிலருக்கு forward செய்துள்ளார். அவை மிக மிக கீழ்த் தரமானவையே. அனுப்பியவர் தன்னை அடையாளம் காட்டவில்லை.--Natkeeran (பேச்சு) 18:35, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன், மின்மடல் மூலம் தொல்லை கொடுப்பது தமிழ்நாட்டில் சிறைத் தண்டனைக்குரிய குற்றச் செயல். இத்தகைய குற்றத்தை இன்னார் தான் செய்தார் என்று பழி சுமத்தினால் அதற்குத் தகுந்த ஆதாரம் தர வேண்டும். இவ்வளவு தீவிரம் வாய்ந்த செயல் ஒன்றைத் தமிழ் விக்கிப்பீடியர் ஒருவர் தான் செய்தார் என்றும், அவர் யார் என்று தமக்குத் தெரியும் என்றும் கூறிய சுப்பிரமணி, அதற்கான ஆதாரத்தைக் கேட்ட பிறகு அமைதியானது ஏன்? நான் சுப்பிரமணிக்கு மடலே வரவில்லை என்று கூறவில்லையே. மடல் வந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் தான் அவர் உங்களுக்கு அனுப்பி வைத்த மடல்கள். ஆனால், அடையாளம் காட்டாமல் எழுதப்பட்ட அந்த மடல்கள் தமிழ் விக்கிப்பீடியர் ஒருவரால் தான் எழுதப்பட்டது என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை.
என் மேல் தனிநபர் தாக்குதல் தொடுத்த HK Arun என்ற பயனர் கணக்குக்கும் எனக்கும் விக்கியில் எந்தப் பிணக்கும் இல்லை. ஏன், மின்மடலில் கூட பெரிய பேச்சில்லை. அப்படியும் ஏன் அக்கணக்கில் இருந்து தாக்குதல் வந்தது புரியாத புதிராகவே உள்ளது. தமிழ் விக்கிச் சமூகம் குழம்பி அழியட்டும் என்று யாரேனும் குட்டையைக் குழப்ப வாய்ப்புண்டா? இந்தக் கோணத்திலும் சுப்பிரமணிக்கு வந்த மடல்களைப் பார்க்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவிலும் மின்மடலிலும் என்னுடைய விக்கிப்பீடியா ஈடுபாட்டை முன்வைத்து மோசமான தனிநபர் தாக்குதல் வந்தது. இத்தகைய மின்மடல்களுக்கு எதிர்வினையாற்றாமல் புறக்கணிப்பதே சிறந்த தற்காப்பு. இத்தகைய மின்மடல்கள் வருவதில் சில குறிப்பிட்ட போக்குகள் தென்பட்டால் அவற்றை முன்வைத்து அவை உங்கள் பார்வைக்கு வராமலேயே தடுக்கவும் முடியும். இதன் மூலம் மன உளைச்சலைக் குறைக்கலாம். இது விசயத்தில் யாரேனும் சுப்பிரமணிக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கினால் நல்லது.
தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களும் மாணவர்களும் கூடுதலாகப் பங்களிக்க வேண்டும் என்று முனையும் இவ்வேளையில் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களைப் பீதிக்கு உள்ளாக்க வேண்டாம். சுப்பிரமணி முன்வைத்துள்ள இச்செல்லுபடியாகாத ஆதாரத்தையும் குற்றச்சாட்டையும் திரும்பப் பெறுமாறு விக்கிச் சமூகம் அவரை வலியுறுத்த வேண்டும். இது குறித்த உரையாடலை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 16:43, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தாக்குமடல்களை அனுப்பியவரைக் கண்டுபிடிப்பதற்கான நுட்ப வல்லுனர் ஒருவரை தேனி மு. சுப்பிரமணிக்கு அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளேன். இதை அவரிடம் மடலிலும் தெரிவித்துள்ளேன். அவருடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 12:29, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நலமுரண் செயற்பாடுகள் - விளக்கம் கோரல்[தொகு]

முதலில் சில தரவுகள்.

சென்னையில் நடந்த கூடலைப் பற்றிய கருத்துகள் பக்கத்தில் சேகரன் முதற் கருத்தை இட்டிருந்தார். அடுத்து நீங்கள் இட்டிருக்கிறீர்கள். சேகரன் தாங்கள் எழுதிய மூன்று நூல்களைப் பதிப்பித்த கௌதம் பதிப்பகத்தின் உரிமையாளர் என்று உங்கள் இருவரது பயனர் பக்கங்களில் இருந்து தெரியவருகிறது. நீங்கள் எழுதி அடுத்த வெளிவரவிருக்கும் எட்டு நூல்களில் எவையேனும் சேகரனின் பதிப்பகம் மூலமாக வெளியாக இருக்கிறதா என்று அறியேன். கருத்துகள் பகுதியில் நீங்கள் தெரிவித்த சில கருத்துகளும் சேகரன் தெரிவித்த சில கருத்துகளும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. (எ.கா: அழைப்பிதழ் அடித்தல், பேச்சாளர்கள் / விருந்தினர்களை அழைத்தல்).

அவரைப் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையின் பெரும்பகுதியும் கௌதம் பதிப்பகம் பற்றிய கட்டுரையின் பெரும்பகுதியும் நீங்கள் உருவாக்கியதே:


தமிழ் விக்கிப்பீடியாவின் கையேடு அச்சிடுதல் தொடர்பான செலவுக்கு எடுத்துக்காட்டாக சேகரனின் பதிப்பகத்தின் விலைப்பட்டியலைத் தந்திருந்தீர்கள். நீங்கள் அவரது பதிப்பகத்தைப் பரிந்துரைக்கவில்லை என்பதையும் ஒரு விலை ஒப்பீட்டுக்கு இணையத்தில் கிடைக்கும் தகவல் என்ற முறையிலும் தந்திருக்கக்கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, கையேடு அச்சிடலுக்கு வேறு ஒரு பதிப்பகத்துடன் பேசி வைத்துள்ள நிலையில், கையேடு என்ன ஆனது என்ற ஒரு கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஏற்பாடுகளை நண்பர்கள் மூலமாக அறிந்து வந்ததாக சேகரன் தெரிவித்துள்ளார். சனி காலை துவங்கிய நிகழ்வுக்கு ஞாயிறு மாலை கொழுக்கட்டை உண்ணும் நேரத்துக்கு வந்த அவர், நிகழ்வு நாள் காலையில் நடந்த ஊடகங்களுடனான சந்திப்புகள் குறித்து அறிந்திருப்பதன் மூலம் இதனை உறுதிப்படுத்த முடிகிறது. அவருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களைத் தவிர வேறு யாரேனும் தனிப்பட அறிமுகமானவர்கள் உள்ளார்களா என்று அறியேன்.

இப்போது சில ஐயங்கள் / கேள்விகள்:

  1. இப்படி தொழில்முறை தொடர்புடைய இருவர் முதலிலும் அடுத்தும் ஒத்த கருத்துகளை இடுவது தற்செயல் தானா ?
  2. உங்களை ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள் என்றும் உங்கள் நூலுக்கு ஏன் அறிமுகம் தரவில்லை என்றும் இரு கேள்விகளைச் சேகரன் கேட்டுள்ளார். அப்பக்கத்தில் உள்ள மற்ற பலரின் கேள்விகளுக்குக் கவனித்துப் பதில் சொல்லிய நீங்கள், இதற்கு ஏன் மறுப்போ ஏற்போ தெரிவிக்கவில்லை?
  3. தொழில்முறை உறவுடைய நிறுவனம், நபர்களின் கட்டுரைகளை அந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் தொகுப்பது, விக்கிப்பீடியாவின் பொதுவான நலன்களுடன் முரண்படுவதாக (Conflict of interest) கருதலாமா?

வழக்கமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்து கேட்பதற்கு ஒரு வார காலம் தரப்படும். எனவே, இக்கேள்விகளுக்கான மறுமொழியைப் பெற்றுக் கொள்ள நான் 27 அக்டோபர், 2013 வரை பொறுத்திருப்பேன். ஒரு வேளை, தனிப்பட்ட காரணங்களால் உங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டாலும் சொல்லுங்கள். மறுமொழி அளிக்காமல் இருப்பதற்கான உரிமையும் மறுமொழி அளிக்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு. இது என் புரிதலுக்கான கேள்விகள் என்பதால் முறையான மறுமொழி இல்லா நிலையில் மேல் நடவடிக்கை எடுக்க ஒன்றுமில்லை. நன்றி.--இரவி (பேச்சு) 03:53, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. அவருடைய குறையை அவர் எழுதியிருக்கிறார். நான் என்னுடைய கருத்தைத் (நிறை + குறைகளை) தெரிவித்திருக்கிறேன். (ஏன் முதல் வரியில் தங்களுக்குப் பாராட்டு கூடத் தெரிவித்திருக்கிறேன்) அதில் ஒரு சில கருத்துகள் ஒத்திருக்கலாம்.
  2. அவர் பதிப்பாளர் என்பதால் அவருக்கு எனது தமிழ் விக்கிப்பீடியா நூலைப் பற்றிய சிந்தனை வந்திருக்கிறது. அதைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் ஏற்போ மறுப்போ ஏன் தெரிவிக்க வேண்டும்? அவர் சொல்வதிலும் பொருளிருக்கிறதே...! தமிழ் விக்கிப்பீடியாவிற்கென நூல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த நூல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கலாமே...! அதனால் புதிய பயனர்களாகப் பங்கேற்றவர்கள் நூலை வாங்கிட முயற்சிக்கலாம். அவர்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும்.
  3. அதில் கருத்து வேறுபாடுடைய தகவல்கள் ஏதுமில்லையே...!

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:41, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி,

  1. தற்செயல் தானா என்று நான் கேட்ட கேள்விக்கு விடை இல்லை.
  2. சேகரன் சொல்லும் கருத்தில் பொருள் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.
  3. நல முரண்பாடு இருக்கிறதா என்று தான் கேட்டேன். கருத்து முரண்பாட்டைப் பற்றிக் கேட்கவில்லை.

தாங்கள் அளித்த பதில்களின் பொருத்தம் குறித்து விக்கிச் சமூகமே முடிவு செய்யட்டும். இவ்வுரையாடலைக் கவனிக்கும் விக்கிச் சமூகம் கையாட்கள் தொடர்பான தொடர்பான கொள்கை ஒன்றைக் கொண்டு வர வேண்டுகிறேன். இது குறித்த உரையாடலை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 16:45, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மேலே இரவி கேட்டுள்ள கேள்விக்கு நீங்கள் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும், தேனி மு. சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 04:09, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இரவிக்குப் பதில்[தொகு]

இரவி, என்னை வெளியேற்ற வேண்டுமென்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்களுக்கும், தங்கள் குழுவினருக்கும் என்னுடைய ஒரே பதில் இதுதான்.

தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு அது பற்றிய கவலை இல்லை.

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:18, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தெளிவபடுத்தியமைக்கு நன்றி, சுப்பிரமணி. //என்னை வெளியேற்ற வேண்டுமென்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்களுக்கும், தங்கள் குழுவினருக்கும்// என்று என் மீதும் பொத்தாம் பொதுவாக விக்கிசமூகத்தின் மீதும் அவதூறு சுமத்தியுள்ளீர்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கை மேற்கொள்வேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:44, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி மு. சுப்பிரமணி, இரவி கேள்விகளை முன்வைத்துள்ளார். அவராகத் தனியாக ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுப்பதற்கும் விக்கியல் எந்த இடமும் இல்லை. அப்படியிருக்க விக்கிச்சமூகத்தின் முடிவாக இல்லாமல் யாரையும் வெளியேற்ற முடியாது. அவ்வாறு அவர் கருதியிருப்பார் என நினைப்பதும் தவறு. விளக்கம் எதுவும் அளிக்காமல் இருப்பது விக்கிச்சமூகத்தையும் நீங்கள் மதிக்காததாக எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். ஆதலால் முறையாக உங்கள் உரிமையும் கடமையும் ஆன விளக்கத்தை அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் நீங்கள் பிணக்குத்தீர்வுமுறையின் மிக முக்கிய கட்டமான முதற்கட்டத்தைப் பயனின்றித் தாண்டுவதாகும். -- சுந்தர் \பேச்சு 03:57, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
எனக்குக் கைப்பாவை நிலை என்றாலே என்னவென்று தெரியாத நிலையில் தாங்கள் Vaarana18, 786haja, Theni.M.Subramani ஆகிய பயனர் கணக்குகள் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிய முறையான கைப்பாவை சோதனை செய்து அறிக்கை தரக் கோரி, நீங்கள் என் மேல் சந்தேகம் கொண்டுதான் கோரிக்கையை முன் வைத்தீர்கள். (அதில் எனக்கு எந்தத் தொடர்புமில்லை என்றாகி விட்டது) ஆனால், தாங்கள் அடையாளம் காட்டாத பயனர், என் மேல் பல தாக்குதல்கள் நடத்திய போது, அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அவருடைய செயல்பாடுகளுக்கு உடனுக்குடன் ஆதரவாகச் செயல்பட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை. (விக்கி சமூகம் என்று நான் பார்த்து மன வேதனைப்படுவது எனக்குத்தான் தெரியும்) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:54, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுப்பிரமணி, எனக்கு முன்பே இராசன் கைப்பாவை சோதனைக்கான முறையீட்டை முன்வைத்திருந்தது எனக்குத் தெரியாது. விசமக் கணக்குகளின் பெயரை மட்டும் கொடுத்தால் மூலக் கணக்கின் பெயரையும் அவர்களே கண்டு பிடித்துத் தருவார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. எனவே, இராசனின் கேள்விக்கு முறையான விடை காணும் பொருட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு முறையீட்டைப் பதிவு செய்தேன். இது உங்கள் மீதான அவதூறு அன்று என்றும் முறையாக குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும், இது உங்கள் மீதான ஐயப்பாட்டைத் தோற்றுவித்திருந்தால், அது குறித்து வருந்துகிறேன். மீண்டும் இது போன்று நேராது என்று உறுதியளிக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:57, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி. சுப்பிரமணி, இங்கே உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அக்கேள்விகளின் சரி பிழைகள் பற்றியோ நியாய அநியாயங்கள் பற்றியோ பேசவரவில்லை. ஆனால், ஒரு நிர்வாகி என்ற முறையில் மேற்படி கேள்விகளுக்குப் பதில் தருவது பிற பயனர்கள் உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும். அத்துடன், தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஒழுங்கு முறையை உருவாக்குவதற்கும், எதிர்காலத்தில் வரக்கூடிய இதுபோன்ற பிரச்சினைகளின் தீர்வுக்கு ஒரு முற்காட்டாக அமைவதற்கும் இவ்வாறான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது ஒரு நிர்வாகியின் கடமை ஆகும். ---மயூரநாதன் (பேச்சு) 17:29, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், தங்களின் வேண்டுகோளுக்கேற்ப எனது பதில்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 19:07, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நாளிதழின் இணைப்போ உள்ளடக்கங்களோ தேவை[தொகு]

நீங்கள் முதற்பக்க கட்டுரை தொடர்பான உரையாடலில் ஒரு பயனர் (நானாக இருக்கலாம்) பார்வதி ஸ்ரீக்கு பதிலாக முதற்பக்கக் கட்டுரைகளை காட்சிப்படுத்தினார் எனக்கூறியிருந்தீர்கள். அதை நான் ஆதாரத்துடன் தவறான தகவல் என விளக்கினேன். அந்த குற்றச்சாட்டை நீங்கள் திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை. ஒருவேளை திரும்பப் பெற்றிருந்தால் அதற்கான இணைப்பைத் தரவும். மேலும் நாளிதழ்களில் வெளியாகிய தகவல்கள் எவை எனவும் அவற்றை மறுத்து அடுத்த தொடரில் நீங்கள் ஏதும் கருத்துகள் இட்டிருந்தாலோ அவற்றின் இணைப்புகளையோ அல்லது உள்ளடக்கங்களையோ தர வேண்டுகிறேன். இவ்வேண்டுதலுக்கான பதில்களோ இணைப்புகளோ தர உங்களுக்கு காலம் அதிகமாகும் எனக் கருதினால் அதையும் இங்கேயே கூறி விட வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:17, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடியில், நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதி வரும் தொடரில் முதற்பக்க கட்டுரை தொடர்பான எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். நான் தங்களைப் பற்றியோ, யாரையும் குறிப்பிட்டோ எனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. தமிழ் கம்ப்யூட்டர் என்பது நாளிதழ் அல்ல. அது ஒரு மாதமிருமுறை இதழ். எனக்குத் தபாலில் அனுப்பப்பட்ட பல தமிழ் கம்ப்யூட்டர் இதழ்கள் வந்து சேரவில்லை...! என்னிடம் தற்போதைய நிலையில் அந்த இதழ்கள் இல்லை. தமிழ் கம்ப்யூட்டர் இதழ் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. அனைத்து நூலகங்களிலும் இருக்கும். நூலகங்களில் பழைய இதழ்களையும் பார்வையிடலாம். (மேலும், இதழ்களில் வெளியாகும் எனது கட்டுரைகளின் கருத்துகளுக்கு தாங்கள் என்னிடம் இங்கு விளக்கமோ கருத்தோ கேட்பதை நான் ஏற்க முடியாது) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 20:36, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நான் இதழ்களில் வெளியான கட்டுரைக்கு இணைப்புகளை மட்டும் தான் கேட்டேன். கருத்துக்களை கேட்கவில்லை.

இவ்வேண்டுதலுக்கான பதில்கள் என்று கேட்டது ஆலமரத்தடியில் பார்வதி ஸ்ரீக்கு பதிலாக முதற்பக்கக் கட்டுரைகளை ஒருவர் காட்சிப்படுத்தினார் எனக்கூறியிருந்தீர்கள். அதை நான் ஆதாரத்துடன் தவறான தகவல் என விளக்கினேன். அந்த குற்றச்சாட்டை நீங்கள் திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை. ஒருவேளை திரும்பப் பெற்றிருந்தால் அதற்கான இணைப்பைத் தரவும். தற்போது திரும்பப் பெறுகிறீர்கள் என்று கூறினாலும் சரி.

//இங்கு “வரும் வார முதற்பக்கக் கட்டுரைகள்” எனும் தலைப்பில், இக்கட்டுரைகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு ஞாயிறும் முதற்பக்கத்தில் இடும் பொறுப்பை பார்வதி கவனித்து வருகிறார் என்கிற குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இங்கு பார்வதிஸ்ரீ கட்டுரைகளைத் தேர்வு செய்வதாகத் தெரியவில்லை. அவர் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வந்திருப்பதாகத் தெரிகிறது. முதற்பக்கக் கட்டுரையைத் தேர்வு செய்யும் பணியை பார்வதிஸ்ரீ கவனிக்க வேண்டிய நிலையில், குறிப்பிட்ட பயனர் அதைத் தன் வசம் எடுத்துக் கொண்டு செயல்பட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பரிந்துரைப்பவரே, தேர்வு செய்து கொள்ளும் நிலையில் விக்கிப்பீடியாவின் முதற்பக்கக் கட்டுரைகள் இருப்பது வேதனைக்குரியதாகவும் இருக்கிறது.//

இது தான் நீங்கள் அந்த பயனர் மீது சுமத்திய குற்றச்சாட்டு. இதற்கு நான் அழித்த விளக்கங்கள் கீழே.

//ஆனால் தேனியார் கூறியது போல் பரிந்துரைத்தவரே முதற்பக்கக் கட்டுரையை தகுதிப் படுத்தியது என்று கூறியது நான் தற்போது தேடிப்பார்த்தவரை கூட உண்மை இல்லை. பெப்ரவரி 2012ல் இருந்து கட்டுரைகளை தகுதிப்படுத்தியவர் பார்வதி ஸ்ரீ மட்டுமே. அதற்கு முன்னர் நான் தேடிப் பார்க்கவில்லை. பார்த்தால் இன்னும் உறுதிப்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. இதை (Ctrl + F) செய்து அதில் வரும் வார முதற்பக்கக் கட்டுரைகள் மற்றும் அடுத்து இடம்பெற இருப்பவை போன்றவற்றை இட்டு தேடினாலே தெரிந்திடும். அப்படி ஒருவேளை அதில் வேறு பயனர்களின் பெயர் வருமாயின் அது வரும்வாரக் கட்டுரைப் பட்டியலில் சென்ற வாரம் காட்சிப்படுத்திய கட்டுரைகளை நீக்கும் பொருட்டும், பிழை திருத்தும் பொருட்டும், வார்ப்புரு தகவலை இற்றைப்படுத்தும் பொருட்டும் செய்யப்பட்ட பங்களிப்புகளே. அதனால் தேனியார் கூறிய பரிந்துரைத்தவரே கட்டுரையை தகுதிப் படுத்தியது, பரிந்துரைக்கப்படும் நிலை உருவான பின்பு, கட்டுரையைத் தொடங்கியவரே அந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்து அதை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. போன்ற கருததுக்களை அவரே தேடிப்பார்த்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.//

ஆக பார்வதி ஸ்ரீக்கு பதிலாக வேறு பயனர் முதற்பக்கக் கட்டுரைகளை காட்சிப்படுத்தினார் என நீங்கள் கூறியது உங்களது கவனக்குறைவே. இந்த கருத்தை நீங்கள் மீள் பரிசீலனை செய்யுமாறு சஞ்சீவியும் வேண்டியுள்ளார்.

//பரிந்துரைத்தவர்களே காட்சிப்படுத்தவும் செய்கின்றார்கள், தம் பங்களிப்புகள் அதிகமுள்ள அல்லது தாங்கள் தொடங்கிய கட்டுரைகளையே பரித்துரைக்கின்றார்கள் ஆகிய கருத்துக்களை தேனி சுப்பிரமணி மீள்பரிசீலனை செய்யவேண்டும், - சஞ்சீவி சிவக்குமார்//

//ஆலமரத்தடியில், நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதி வரும் தொடரில் முதற்பக்க கட்டுரை தொடர்பான எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். நான் தங்களைப் பற்றியோ, யாரையும் குறிப்பிட்டோ எனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.//

அப்படியா?

//முதற்பக்கக் கட்டுரையைத் தேர்வு செய்யும் பணியை பார்வதிஸ்ரீ கவனிக்க வேண்டிய நிலையில், குறிப்பிட்ட பயனர் அதைத் தன் வசம் எடுத்துக் கொண்டு செயல்பட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பரிந்துரைப்பவரே, தேர்வு செய்து கொள்ளும் நிலையில் விக்கிப்பீடியாவின் முதற்பக்கக் கட்டுரைகள் இருப்பது வேதனைக்குரியதாகவும் இருக்கிறது.//

எனில் இதில் உங்களால் குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட பயனர், தன் வசம், பரிந்துரைப்பவரே போன்றவை எவரையும் குறிக்கவில்லையா? சரி அந்த குறிப்பிட்ட பயனர் யார் என்பதை நீங்கள் சொல்லத்தயங்குவதாகவே எனக்கு படுகிறது. பார்வதி முதற்பக்கக் கட்டுரை பொறுப்பை ஏற்றதில் இருந்து நீங்கள் யாரிடமும் கூறாமல் பொறுப்பெடுக்கும் வரை அவரே கட்டுரைகளை தேர்ந்தெடுத்தார். அதை குறிப்பிட்ட பயனர் தன் வசம் எடுத்துக்கொண்டார் என நீங்கள் குற்றம் சாட்டியது யாரை? நீங்கள் இக்குற்றச்சாட்டை திரும்பப் பெறுகிறீர்களா? இல்லை என்றாலும் இங்கே கூறிவிடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:41, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பேச்சுப்பக்கம் திறந்துவிட வேண்டுகோள்[தொகு]

தேனி சுப்பிரமணி, உங்கள் பேச்சுப்பக்கத்தைத் திறந்துவிட்டால்தான் எல்லோரும் கருத்துரைக்கலாம். குறிப்பாக இப்பொழுது நடக்கும் உரையாடல் குறித்து நிருவாகிகள் மட்டும் அல்லாமல் பயனர்கள் அனைவரும் கருத்துரைக்குமாறு இருப்பது தேவை. ஆலமரத்தடியில் உரையாடல் நெறிப்படுத்துதல் என்னும் தலைப்பில் இதற்கான வேண்டுகோளும் உள்ளது.--செல்வா (பேச்சு) 19:47, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி இதுவே எனது வேண்டுகோளும். அதிக அளவில் தொடர் விசமத்தனம் எதுவும் இல்லாது ஒரு நிருவாகி தனது பேச்சுப் பக்கத்தை மற்ற நிருவாகிகளுக்கு மட்டும் என்று பூட்டுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது. --சோடாபாட்டில்உரையாடுக 13:32, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பக்கம் தடை செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆகிவிட்டன. முடிவிலியாக நிருவாகியொருவர் தன் பேச்சுப் பக்கத்தினை “நிருவாகிகளுக்கு மட்டும்” என்று காத்து வைத்திருக்க இயலாது. எனவே காப்பினை நீக்கியுள்ளேன். விசமத் தொகுப்புகளில் புதிய பயனர்கள் ஐபிகள் ஈடுபட்டால், ”புதிய பயனர்கள் / ஐபிக்கள்” மட்டும் தொகுக்க இயலாதவாறு குறைந்த காலத்திற்கு இப்பக்கத்தைக் காக்கலாம். “முடிவிலியாக” “நிருவாகிகள் மட்டும்” தொகுக்குமாறு காப்பது முறையானதல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 13:15, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பொதுவகத்தில் உங்கள் படிமம்[தொகு]

தங்களது இந்தப் படிமம் தற்போது இங்கு பொதுவகத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. நன்றி--நீச்சல்காரன் (பேச்சு) 01:59, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கூடல் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகள்[தொகு]

தேனி சுப்பிரமணி இங்கே சில கருத்துகளை இட்டுள்ளேன். உங்களைக் குறிப்பிட்டும் சில கூறியுள்ளேன். பார்க்க வேண்டுகின்றேன். நன்றி --செல்வா (பேச்சு) 04:17, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பை மீளப்பெறுவது பற்றிய கேள்விகள்[தொகு]

இங்கே பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். த.வி-யில் உள்ள பயனர்களும் நிருவாகிகளும் அதிகாரிகளும், குற்றச்சாட்டை முன்வைத்த Rajan s அவர்களும், குற்றம் சாட்டப்பட்ட தேனி சுப்பிரமணி அவர்களும் பார்க்க வேண்டும். ஆலமரத்தடியிலும் இட்டுள்ளேன்--செல்வா (பேச்சு) 06:46, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சவால்[தொகு]

முகவர்கள் இல்லாது நான் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல முடியாவிட்டால் நிர்வாக பதவியை விட்டுவிடத் தயாரா நண்பரே! --Rajan s (பேச்சு) 04:13, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ராஜன், இப்பிணக்கைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற வேளையில் “சவால்” “தயாரா” போன்றவற்றை செய்ய வேண்டாம். நீங்கள் கேள்விகளை உரிய இடத்தில் எழுப்புங்கள், இந்தப் பேச்சுப் பக்கத்திலும் கேள்விகளைக் கேள்விகளாகக் கேளுங்கள். சூட்டைத் தணித்து தீர்வு காணலை நோக்கி மெதுவாகவேனும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற செயல்பாடுகள் உகந்தவையல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 16:53, 31 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 16:58, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கேட்டிருக்கிறேன். பதில் இல்லாததால் அவரிடமே நேரில் கேட்கிறேன். நான் “சவால்” “தயாரா” என்ற சொற்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். Theni.M.Subramani முட்டாள், உன் (ஒருமையில் ஒருவரை குறித்தல்), விசமி போன்ற சொற்கள் பயன்படுத்தும்போது, செல்வா, சுந்தர், ரவி நடந்து கொண்டதுபோல் நீங்களோ, தகவலுழவனோ அவருக்கும் பதில் போட்டிருக்கலாம். சரி விடுங்கள். மேலும், ஆலமரத்தடியிலும் கருத்திட வேண்டாம் என்கிறீர்கள், விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் இதுவும் பூட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ உரிய இடத்தில் என்கிறீர்கள். புரியவில்லை! --Rajan s (பேச்சு) 01:34, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
யார் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினாலும் அதனை மட்டுப்படுத்தி சூட்டைத் தணிப்பது விக்கி சமூகத்தில் பிறர் செய்வது. ஒருவரே தான் பிணக்கின் இரு தரப்பிலும் இதை செய்ய வேண்டுமென்பதில்லை. ஆங்கில விக்கியில் பழக்கம் உடையவர் என்று படித்தேன். அங்கு ANI பக்கங்களிலும் DR பக்கங்களிலும் பேச்சுப்பக்கங்களிலும் இதே போன்ற அணுகுமுறைகள் தான் உள்ளன. நீங்கள் பூட்டப்ப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் de-admin பக்கத்தின் பேச்சுப் பக்கம் திறந்து உள்ளது. நீங்களும் அங்கே உரையாடிக் கொண்டு தான் இருக்கிறீர்கள். அதுவே உரிய இடம். இங்கு சவால் விடுதலைத் தவிர்த்து உரையாடலை அங்கு தொடர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:52, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அரசுடன் தொடர்பாடல் - விளக்கம் கோரல்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக தமிழ் விக்கிப்பீடியர் என்ற முறையில் தமிழக / இந்திய அரசு மட்டத்தில் உள்ளவர்களுடன் ஒரு முறையோ பல முறையோ தொடர்பு கொண்டுள்ளீர்களா? ஆம் எனில், இவை குறித்த அனைத்து மின்மடல் உரையாடல்களையும் வெளிப்படையாக இங்கு பதிவு செய்ய முடியுமா? அரசிடம் நிதி பெறும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் இருந்து ஊதியம் பெறும் அலுவலர்கள் ஆகியோர் இந்த தொடர்பாடல் வரையறைக்கு உட்பட்டவர்கள். வெளிப்படையாக பதிவு செய்வதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிக்கல் வரும் என்று நீங்கள் எண்ணினால், தொடர்புடைய மின்மடல்களை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? நான் ஒரு விக்கிப்பீடியா பயனர் என்ற முறையில் இத்ததகவலை அறியும் உரிமை எனக்கு உண்டு. விக்கிப்பீடியாவின் வெளிப்படையான செயற்பாடுகளை மதித்து இதை அனுப்பி வைப்பதற்கான கடமை உங்களுக்கு உண்டு. நன்றி.--இரவி (பேச்சு) 18:41, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆம், அவ்வாறு தொடர்பு கொண்டிருந்தால் அவற்றை வெளிப்படையாகவோ தனிமடலிலோ அனுப்ப வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:11, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விமர்சனங்கள் தொடர்பாக[தொகு]

உங்களின் சில செயற்பாடுகள் தொடர்பாக உங்களது நிர்வாக அணுக்கம் திரும்பிப் பெறுவது தொடர்பாக இங்கு கோரப்பட்டது. நீண்ட உரையாடல்களுக்குப் பின்பு பெரும்பான்மைப் பயனர்கள் ஆதரித்த சிக்கலும் தீர்வு முறைக்கு ஏற்ப சக பயனர்கள் ஐவர் கீழ்வரும் முடிவை வழங்கி உள்ளார்கள்.

1 தேனி மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமளவு ஒழுக்கப் பிறழ்வு இல்லை / அல்லது அதற்கான விதிமுறைகள் இல்லை (4/0/1)
2 நிருவாகிகளுக்கான நன்னடத்தை விதிகள், புற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறல் கொள்கை ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் (5/0/0)
3 தேனி. மு. சுப்பிரமணியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் / கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டேன் என்று அவர் ஐயத்துக்கிடமின்றி உறுதியளிக்க வேண்டும். (5/0/0)
  • பதிலளிக்க வேண்டியவை
  • 1) தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கம் பற்றி கட்டுரை எழுதியது
  • உறுதியளிக்க வேண்டியவை
  • தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமை
  • விக்கிக்கு வெளியில் விக்கி பற்றிய கட்டுரைகளில் உண்மைக்குப் புறம்பான, “சில பயனர்கள் கருதுகிறார்கள்” போன்று சொந்தக் கருத்தினை சமூகத்தின் போர்வையில் இருந்து கூறுவதைத் தவிர்த்தல்
  • நலமுரணாகக் கூடிய செயல்பாடுகளில் சமூக ஒப்புதல் பெற்றே முனைவது
4 இப்படி உறுதியளிக்காது தொடர்ந்து இது போன்று ஒரு செயலில் ஈடுபட்டாலும், அவரது நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும் பணியினைத் தொடங்கலாம். (4/0/1)

இதில் 3 விடயம் தொடர்பாக உங்களிடம் விளக்கமும், உறுதிப்பாடுகளும் வேண்டப்படுகிறது.

தமிழ் விக்கியில் இம் மாதிரி விடயங்களைக் கையாழுவதில் வழிகாட்டல்கள்/கொள்கைகள்/அனுபவங்கள் இல்லாமையால் சில விடயங்கள் அளவுமீறிச் சென்று உங்களைப் பாதித்து உள்ளன. அதற்கு என் வருத்தங்களைத் தெரிவுத்துக் கொள்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:45, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நலமுரண் தளங்களுக்கு வெளி இணைப்புகள்[தொகு]

Muthukamalam dot com உள்ளிட்ட உங்களின் சில இணையத்தளங்களுக்கு பல்வேறு கட்டுரைகளில் (ஏறத்தாழ 175) இருந்து இணைப்புகள் தந்துள்ளீர்கள். இவ்வாறு தருவது நலமுரணாக கருதப்படுவதுடன் விக்கிப்பீடியா கொள்கைக்கும் முரணானது ஆகும். பார்க்க: விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் . எனவே, இது தொடர்பாக கட்டுரைகளில் தகுந்த மாற்றங்கள் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:33, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தன்வரலாற்றுக் கட்டுரை தொடர்பான கொள்கை மீறல்[தொகு]

தேனி. மு. சுப்பிரமணி என்ற கட்டுரையை நீங்கள் தொகுத்துள்ளது விக்கிப்பீடியா:தன்வரலாறு கொள்கை அடிப்படையில் தவறான செயற்பாடு ஆகும். இது தொடர்பாக கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் சமூக ஊடகக் குழுமம் ஒன்றிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை தொடர்பான இச்சிக்கலில் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:37, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வணிக நோக்கிலான வெளி இணைப்பைத் தரும் கொள்கை மீறல்[தொகு]

தேனி. மு. சுப்பிரமணி கட்டுரையின் வெளியிணைப்பாக, உங்கள் நூல்களை விற்பனை செய்யும் ஒரு வணிகத் தளத்துக்கு இணைப்பு தந்துள்ளீர்கள். விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் கொள்கையின் படி இது தவறான செயற்பாடு ஆகும். இது தொடர்பாக உரிய மாற்றங்களைச் செய்ய முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:39, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பில் நீடிக்க விரும்புகிறீர்களா?[தொகு]

தங்கள் மீதான இரு நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து நிருவாகப் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்னும் பொருள்பட தாங்கள் எழுதியாக கூறப்படும் "கவிதை" இங்கு பதியப்பட்டுள்ளது. எனவே, குழப்பத்தைத் தவிர்க்க இது தொடர்பாக உங்கள் நேரடியான, தெளிவான பதிலை அளிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:53, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கைகள் தொடர்பாக உங்கள் மறுமொழி தேவை[தொகு]

வணக்கம், சுப்பிரமணி. உங்கள் மீதான நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கைகள் தொடர்பு இங்கு உங்கள் மறுமொழி கோரப்படுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி, நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பாக நீங்கள் விளக்கம் அளிப்பதற்கான காலம் முடிந்தது. பயனர் உரையாடல், வாக்கெடுப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவு குறித்து தெரியப்படுத்துகிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 14:37, 8 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்கத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


பிறந்தநாள் வாழ்த்துக்கள்[தொகு]

பிறந்தநாள் வாழ்த்துக்கள் , Theni.M.Subramani/தொகுப்பு 6 அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!
  1. --..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..01:34, 23 பெப்ரவரி 2014 (UTC)
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேனி.எம்.சுப்பிரமணி. -- ♦khjtd;♦ ♣பேச்சு♣ 01:35, 23 பெப்ரவரி 2014 (UTC)
  3. வாழ்த்துக்கள் தேனியாரே! திருச்சி மலர்களிலும், மகரந்தசேர்க்கையை நடத்தவுள்ளதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி. விக்கி வெளிப்பங்களிப்புகளைப் போல, விக்கிக்குள்ளேயும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 'பழையன கழிதலும்..புதியன புகுதலும்.. என்ற பழந்தமிழ் சூத்திரத்தைப் பின்பற்ற, இந்த இனிய நாளிலே தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:12, 23 பெப்ரவரி 2014 (UTC)
  4. பிறந்தநாள் வாழ்த்துகள் தேனி!.--Kanags \உரையாடுக 02:26, 23 பெப்ரவரி 2014 (UTC)
  5. தேனி சுப்பிரமணி, உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 03:44, 23 பெப்ரவரி 2014 (UTC)
  6. வணக்கம்! பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்த இனிய நன்னாளில் மீண்டும் நம் விக்கிப்பீடியாவில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் மீண்டும்! தங்கள் பங்களிப்பினைத் தொடங்குங்கள்!--நந்தகுமார் (பேச்சு) 06:58, 23 பெப்ரவரி 2014 (UTC)
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:31, 23 பெப்ரவரி 2014 (UTC)
  • 👍 விருப்பம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!--aho;- பேச்சு 14:54, 24 பெப்ரவரி 2014 (UTC)
  1. தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:25, 25 பெப்ரவரி 2014 (UTC)

நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு நிலவரம்[தொகு]

வணக்கம் சுப்பிரமணி, தங்களின் நிருவாக அணுக்கம் நீக்கல் தொடர்பான வாக்கெடுப்பு முடிவு பெற்றுள்ளது. வாக்கு விவரங்களை விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் பக்கத்தில் காணலாம்.

என் தனிப்பட்ட வேண்டுகோள்:

இது வரை தேர்வு பெற்று, பணியாற்றும் நிருவாகிகள் யாவரும் ஏறத்தாழ் 100% ஆதரவு வாக்குகளுடன் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறார்கள். ஒரே ஒரு எதிர்ப்பு வாக்குக்காக தன்னுடைய அதிகாரி நிலை தேர்ந்தெடுப்புக்கான வேட்பு மனுவை விலக்கிக் கொண்ட பயனரும் உண்டு. ஓரிரு எதிர்ப்பு வாக்குகள் விழுந்ததன் காரணமாக வாக்கெடுப்புக் காலத்தை நீட்டித்து கருத்தொற்றுமை நிலையை அடைய வலியுறுத்திய நிருவாகி தேர்தல்களும் உண்டு. எனவே, தற்போது தங்கள் நிருவாக அணுக்கம் தொடர்பாக கிடைத்துள்ள வாக்குகள், கருத்துகளைக் கவனித்து தமிழ் விக்கிப்பீடியாவில் நல்லதொரு முன்மாதிரியை உருவாக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு பயனர் என்ற முறையில் என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே. இதனைப் பொருட்படுத்தாமல் பிணக்குத் தீர்ப்பாய முடிவு வரும் வரை நிருவாகப் பொறுப்பில் தொடரும் உரிமையும் உங்களுக்கு உண்டு. நன்றி. --இரவி (பேச்சு) 06:30, 10 மார்ச் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Theni.M.Subramani/தொகுப்பு 6!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:28, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:59, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு[தொகு]

நாயக்கர் தமிழ் கட்டுரையில் ராஜா நாயக்கர் தனது சொந்த கருத்துக்களையும் இனைய தளங்களை பயன்படுத்தி தவறான தகவல் அளித்துள்ளார்.தொட்டிய நாயக்கர் சீர்மரபினர் ஆவார்கள் காப்பு மக்கள் முற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள். காப்பு மற்றும் தொட்டிய நாயக்கர்கள் பழக்க வழக்கங்கள் மாறுபட்டவை காப்பு மக்கள் அனைத்து சுப நிகழ்ச்சிக்கும் பிராமணர்களை அழைத்து நடத்துவர் ஆனால் தொட்டிய நாயக்கர் பிராமணர்களை அழைக்க மாட்டார்கள். தொட்டிய நாயக்கர்கள் நாடோடி மக்கள் ஆவர் அவர்களை காப்பு மக்களுடன் இனைத்து குறிப்டுவது தவறான செயல்.தொட்டிய நாயக்கர்கள் குறி சொல்லுதல் மாந்திறிகம் ஆகியவையை குல தொழிலாக கொண்ட மக்கள் காப்பு மக்கள் விவசாயம் மற்றும் போர் தொழில் மக்கள். கம்ம நாடு காப்பு மக்கள் கம்மவார் ஆனார்கள் இதனை ஆங்கில காப்பு பக்கத்தில் காணலாம்.நான் பேச்சு நாயக்கர் பக்கத்தில் சில தகவல்களை அளித்துள்ளேன் அனைத்தையும் சரி பார்த்து சரியான முறையில் சீர்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.நன்றி (பேச்சு) 7.29, 6 சூலை 2016 (UTC)

https://ta.m.wikipedia.org/wiki/சீர்மரபினர்

https://en.m.wikipedia.org/wiki/Kapu_(caste)

Various subgroups of kapus branched off into separate communities in the post- Kakatiya period (Velamas , Panta Kapus and Pakanati Kapus—both of whom got labelled Reddis , and Kapus of Kammanadu—eventually labelled Kammas ).

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

Your administrator status on the ta.wikipedia[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 05:45, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

பாண்டிய வேளாளர் குறித்து[தொகு]

பாண்டிய வேளாளர் என்று அழைத்துக் கொள்பவர்கள் வேளாளர்கள். திருப்பூர், தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல் பகுதிகளில் வசிக்கும் இவர்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.

அவர்கள் பெயரை இங்கு எதற்காக பதிவிட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

பாண்டிய வேளாளர் என்ற சமூகம், சைவ வேளாளரில் இருந்து பிரிந்த ஒரு பிரிவு. ஆரம்ப காலத்தில், நற்குடி வேளாளர், கார்காத்த வேளாளர், சைவ வேளாளர் போன்றோரும் பாண்டிய வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் அசைவ உணவிற்கு மாறியவர்களால் பல பிரிவுகளாக பிரிந்தது. Nirmal7786 (பேச்சு) 14:09, 13 பெப்ரவரி 2020 (UTC)

Lili 2409:4072:6C0A:791A:0:0:7E8A:2113 15:52, 23 செப்டம்பர் 2022 (UTC)