பயனர் பேச்சு:Tamiliam

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Tamiliam!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- mohamed ijazz(பேச்சு) 07:05, 17 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
மொழிக்கருவி கொண்டு பிழை திருத்தி வருவதால் இந்த பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:12, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரைதிருத்தத்தில் சிறப்பாக ஈடுபட வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:14, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

சுய விவரங்கள்[தொகு]

பயனர்:Tamiliam நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:41, 22 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

சுயவிவரம் தொகுத்ததற்கு நன்றி. நீங்கள் கடாரத்தவர் என்றால் எனக்கு ஒரு கல்வெட்டுப்படம் வேண்டும். ஒரு பாண்டிய அரசனின் கல்வெட்டு ஒன்று கடாரம் அருகில் உள்ளதாக அறிகிறேன். அதன் படமும் தொல்லியல் அறிக்கையின் நகலும் (சாப்டு காப்பியும்) தேவை. இப்போது நீங்கள் கடாரத்தில் தான் உள்ளீர்களா இல்லை நியூயார்க்கா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:15, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நான் மலேசியாவில் புத்ராஜெயா என்ற ஊரில் வசிக்கிறேன். ஆனால், அவ்வப்போது கேடாவிற்குத் திரும்புவதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட பாண்டிய அரசனின் பெயர் என்ன? எந்தக் காலத்து மன்னன்? பூஜாங் பள்ளத்தாக்கில் ஆர்வம் கொண்டுள்ள குழுக்கள் சில இடையில் மலேசியாவில் தோன்றியுள்ளன. அவர்களிடம் உதவி கேட்டுப் பார்க்கலாமே. எ-டு https://www.facebook.com/Pujangham.bujangvalleykedahmsia --Tamiliam (பேச்சு) 00:58, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் கொடுத்த முகநூல் பயனருக்கும் நட்புக்கோரிக்கை வைத்திருக்கிறேன். அந்த பாண்டிய அரசன் பெயர் ஜெயநேகரன். அவன் சாவக அரசனுக்கும் பாண்டிய இளவ்ரசிக்கும் பிறந்ததால் பாண்டியன் பட்டத்தையும் போட்டுக்கொண்டான். ஆனால் அவன் பாண்டிய இளவரசியை மணந்தது என்னால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு. காலம் 14ஆம் நூற்றாண்டு. உங்கள் முகநூல் கணக்கின் இணைப்பை (இல்லை எனில் மின்னஞ்சலை) எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் நலம். tenkasisubramanian@gmail.com --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:23, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Tamiliam!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 20:25, 6 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:06, 8 செப்டம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Tamiliam!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:13, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

ஒலிக்கோப்புகள்[தொகு]

நீங்கள் உருவாக்கிய ஒலிக்கோப்புகள் உட்பட்ட படிமங்களை தயவுசெய்து பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். இதனால் மற்ற திட்டங்களுக்கும் பதிவேற்றலாம். எ.கா: Audio files in Tamil, Tamil pronunciation. பொதுவகத்தில் பதிவேற்ற முடியாத படிமங்களை இங்கு பதிவேற்றப்படுகின்றன. நன்றி. --AntanO (பேச்சு) 02:39, 17 செப்டம்பர் 2021 (UTC)

சரி, இனி தயாரிக்கும் கோப்புகளைப் பொதுவகத்தில் பதிவேற்ற முயற்சிசெய்கிறேன். அறிவுறுத்தலுக்கு நன்றி. Tamiliam (பேச்சு) 03:11, 17 செப்டம்பர் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--AntanO (பேச்சு) 11:16, 17 செப்டம்பர் 2021 (UTC)

கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் அதை வாசித்தீர்களா? அதை உருவாக்குவதற்கு எனக்கு ஆறு மணி நேரம் பிடித்தது. ஆனால் அதை வாசித்துப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரமில்லை. :) Tamiliam (பேச்சு) 11:46, 17 செப்டம்பர் 2021 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். --AntanO (பேச்சு) 14:01, 17 செப்டம்பர் 2021 (UTC)
அக்கட்டுரை முறையாக மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று. அதைச் செய்வதற்கு எனக்கு ஆறு மணி நேரம் பிடித்தது. அந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்காமலேயே நீக்கிவிட்டீர்கள். அதனை மீட்டுத் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன். மீட்டபின், அதனை வாசித்துப் பாருங்கள். அதில் சிக்கல்கள் இல்லாமலில்லை. சில சிக்கல்கள். அவற்றைச் சரிசெய்வதற்குள் கட்டுரையை நீக்கிவிட்டீர்கள். Tamiliam (பேச்சு) 14:47, 17 செப்டம்பர் 2021 (UTC)

நான் வாசிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அக்கட்டுரையில் பலசொற்கள் மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் தொடங்கி காணப்பட்டன. அதைவிட, பல பிழைகள். எ.கா: லெபனான் "லெமனான" என்றிருந்தது. --AntanO (பேச்சு) 15:00, 17 செப்டம்பர் 2021 (UTC)

கட்டுரையை மீட்டமைத்தால் அதன் தரம்குறித்துப் பேசலாம். என்னிடம் கட்டுரை இல்லாத நிலையில், நீங்கள் சொல்வதுதான் சட்டம். :) Tamiliam (பேச்சு) 15:50, 17 செப்டம்பர் 2021 (UTC)
நூற்றுக்கணக்கான கட்டுரைகள் தானியங்கித் தமிழாக்கம் நிமித்தம் நீக்கப்பட்டுள்ளன. அதற்காக ஒவ்வொற்றாக மீளமைத்து விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி. --AntanO (பேச்சு) 00:12, 18 செப்டம்பர் 2021 (UTC)
கட்டுரையை வாசிக்காமல் நீக்கிவிட்டு, பிடித்த முயலுக்கு மூன்று காலெனச் சொல்கிறீர்கள். சரி. உங்கள் காட்டில் மழை. Tamiliam (பேச்சு) 00:23, 18 செப்டம்பர் 2021 (UTC)
நான் வாசிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? //அதைச் செய்வதற்கு எனக்கு ஆறு மணி நேரம் பிடித்தது// பிடித்த முயலுக்கு...? --AntanO (பேச்சு) 00:37, 18 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamiliam&oldid=3281879" இலிருந்து மீள்விக்கப்பட்டது