பயனர் பேச்சு:TRYPPN

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  வாருங்கள், TRYPPN!

  வாருங்கள் TRYPPN, உங்களை வரவேற்கிறோம்!
  விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
  கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
  .

  விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

  புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


  உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

  Vatsan34 07:22, 8 அக்டோபர் 2009 (UTC)Reply[பதில் அளி]

  ஆர்மடில்லோ[தொகு]

  • பெரியண்ணன்! படங்களைப் போட்டு அசத்துறிங்க! ஏற்கனவே உள்ள படங்களைத் திரும்பவும் பயன்படுத்தாதிங்க. நமக்கு பின் வருவோர், அதை அழிக்க வாய்ப்புண்டு.வளரியல்பு என்ற தலைப்பில் உள்ள மூன்று சிறு படங்களும், அதிலுள்ள வாக்கியங்களுக்கு அருகில் இருக்குமாறு போட்டேன். இப்ப மாறிவிட்டது.

  முடிந்த வரை, படங்களை ஊடக க் காட்சியகத்தில் எப்பொழுதும் இடுங்கள். ஏனெனில், கறையான் போன்ற பெரியக் கட்டுரையாக்கம் செய்யும் போது இலகுவாகும்.

  நாம் இடும் படங்களை இங்கு பலர் வந்து மாற்றுவர். இப்ப நாம் செய்யும் நேரம்(வேலை) வீணாகும். எனக்கு அந்த எலும்புக்கூடு படம் ரொம்ப்ப பிடித்துவிட்டது. நானும் தான் ஒருமணி நேரம் தேடினேன்.எனக்கு அப்படம் கண்ணிலே மாட்டவில்லையே. கொஞ்சம் பொறாமை. நன்றி.மீண்டும் சந்திப்போம். இப்பொழுது இந்திய பாலூட்டிகளுக்கு மாறிவிட்டேன். காண்க: [1] நன்றி.வணக்கம்.த* உழவன் 01:36, 6 ஜனவரி 2010 (UTC)

  வணக்கம், நீங்க சிகப்பு என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த கட்டுரையை இங்கு ஏற்கனவே எழுதப்பட்டுள்ள சிவப்பு என்ற கட்டுரையுடன் இணைத்திருக்கிறேன். அங்கிருந்து நீங்க இனித் தொடரலாம். நன்றி.--Kanags \பேச்சு 02:55, 24 ஜனவரி 2010 (UTC)
  நீங்கள் ஏனைய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் இணைத்திருந்தீர்கள். இதற்குக் காரணம் எனக்குப் புரியவில்லை:). அவற்றை நீக்கியிருக்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 07:02, 24 ஜனவரி 2010 (UTC)

  நன்றி[தொகு]

  ஆண்டு அறிக்கையில் உங்கள் விரிவான கருத்துகளைக் கண்டு மகிழ்ச்சி. விக்கி பற்றி ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் விக்கியில் உங்களது கூடிய பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். நன்றி--ரவி 07:46, 17 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

  • திரு. ரவி அவர்களுக்கு, வணக்கம்.
  ஆண்டறிக்கை பற்றிய எனது கருத்துக்களை படித்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். மேலும், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்காற்றுவேன். தொடர்பு கொண்டமைக்கு நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:53, 23 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

  சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]

  விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:52, 18 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

  பாராட்டுகள்[தொகு]

  நீங்கள் ஆர்வமாய்ப் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சியாய் உள்ளது. இயலும்பொழுதெல்லாம் தொடர்ந்து பங்களியுங்கள். ஆலமரத்தடியில் நீங்கள் உங்கள் கருத்துகளைப் பார்த்தேன். பங்களிப்பாளர்கள் வரிசையில் ந்நீங்கள் இப்பொழுது 494 படிகள் முன்னேறி வந்திருக்கின்றீர்கள். என் நல்வாழ்த்துகள். (இன்னொரு பயனர், சாந்தரூபன், 998 படிகள் தாண்டி வந்திருக்கின்றார்). இதெல்லாம் ஊக்கம் தரும் வளர்ச்சிகள் (த.வி-க்கு).--செல்வா 22:06, 22 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

  • திரு. செல்வா அவர்களுக்கு, வணக்கம்.
  • தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. தாங்கள் வளரும் தொடர்-பங்காளர்களை பாராட்டி ஊக்குவிப்பதால் அது மென்மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்காற்றுவேன். தொடர்பு கொண்டமைக்கு நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:14, 23 பெப்ரவரி 2010 (UTC)Reply[பதில் அளி]

  பகுப்புகளில் மாற்றங்கள்[தொகு]

  வணக்கம் பெரியண்ணன், பகுப்பில் செய்யப்பட்ட மாற்றங்களின் பட்டியல் பயனுள்ளது. இப்பட்டியலின் தலைப்பை விக்கிப்பீடியா:பகுப்பில் செய்யப்பட்ட மாற்றங்களின் பட்டியல் என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடு 11:55, 2 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  தானியங்கிக் கணக்கு[தொகு]

  தங்களைப் போன்ற விக்கி நுட்பம் அறிந்தவர்களின் பங்களிப்புக்கு கண்டு மகிழ்ச்சி. தங்களின் awb பங்களிப்புகளுக்கு என தனி தானியங்கிக் கணக்கு ஒன்று தொடங்கினால் நன்று. இதன் மூலம் இவற்றைத் தானியங்கித் தொகுப்புகள் என்று குறித்து அண்மைய மாற்றங்களில் நெரிசலைக் குறைக்கலாம். விக்கிப்பீடியா தரவுகளிலும் தானியங்கிகளைத் தனித்துக் காட்டலாம். நன்றி--ரவி 10:14, 3 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  • ரவி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டபடி TRYPPNbot---என்ற தனி கணக்கைத் தொடங்கியுள்ளேன். இந்த கணக்கை தானியங்கி தொகுப்பு கணக்காக குறிப்பிட்டு மாற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.--TRYPPNbot 11:29, 3 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  வேண்டுகோளை ஏற்று உடனடியாக தானியங்கிக் கணக்கை உருவாக்கியமைக்கு நன்றிங்க--ரவி 08:38, 4 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]

  வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  நுட்பம் தொடர்பில்[தொகு]

  நுட்பம் தொடர்பில் உங்கள் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். நீங்கள் பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. உங்களுக்கான எனது மறுமொழியை இங்கே காணுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:54, 2 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

  • வணக்கம் சுந்தர்.
  • "விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தும் சுந்தர்பாட்டை என்னால் கடந்த சில திங்கள்களில் இயக்க முடியவில்லை. அது போன்று தேங்கியுள்ள பணிகளை நீங்களும் வாய்ப்புள்ள மற்ற பயனர்களும் ஏற்று நடத்தினால் மிக நன்று." ---என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  • தாங்கள் தொடங்கிய 'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும், அதன் பயன்பாடு (நான் தெரிந்து கொண்டது --- இது விக்கிகளுக்கு இடையில் தொடர்பை---இணைப்பை ஏற்படுத்தும் தானியங்கி), செயல் முறை, இருக்குமிடம் ஆகிய மேல் விவரங்களை எனக்கு தெரிவித்தால், அதனை இயக்க முயலுவேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 22:59, 2 மே 2010 (UTC)Reply[பதில் அளி]
  பெரியண்ணன், செம்மொழி மாநாடு முடிந்ததும் நுட்பப் பணிகளை முன்னெடுப்போம். நீங்களும் இயன்றவரை பங்களிக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:57, 19 ஜூன் 2010 (UTC)

  கட்டுரைப் போட்டி[தொகு]

  கட்டுரைப்போட்டி தொடர்பான முதற்கட்டத் தெரிவில் உதவுவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். நன்றிகள். இது விடயமாக மின்னஞ்சலில் கலந்துரையாடத் தொடங்கியுள்ளோம். தங்களது மின்னஞ்சலிலிருந்து எனது மின்னஞ்சலுக்கு (kalaiarasy@gmail.com) ஒரு மடல் அனுப்பினீர்கள் என்றால், தொடர்ந்த பணிகளுக்கு இலகுவாக இருக்கும். உங்களிடம் gmail இருந்தால் அதிலிருந்தே தொடர்பு கொள்ளுங்கள். --கலை 23:00, 9 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

  தங்களுக்கு ஒரு சோதனை மடல் அனுப்பியுள்ளேன். கிடைத்ததா இல்லையா என்ற விவரத்தை தெரிவிக்கவும். வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:17, 10 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

  ஒருங்குறி உதவி[தொகு]

  ஒருங்குறி மாற்ற உதவிக்கு

  http://www.suratha.com/reader.htm

  http://software.nhm.in/services/converter

  பயன்படுத்தலாம். அழகி மென்பொருளும் உதவலாம். இது குறித்து உங்களுக்கு மடல் அனுப்பி உள்ளேன். இந்தப் பணியில் நீங்கள் உதவுவது கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 10:38, 15 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

  பாராட்டுக்கள்[தொகு]

  பெரியண்ணன், கட்டுரைப் போட்டி தொடர்பின் கட்டுரைகளைத் தரம்பிரித்துத் தெரிவு செய்வதில் உங்கள் தீவிரமான பங்களிப்புக்காக ரவி உங்களுக்குப் பதக்கம் அளித்துப் பாராட்டியுள்ளார். இந்தப் பணியில் உங்களுடைய ஈடுபாட்டை நான் வியப்புடன் கவனித்து வருகிறேன். மிகவும் மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியா சமுதாயம் இதற்காக உங்களுக்குப் பல பாராட்டுக்களை வழங்கலாம். உங்களைப் போன்றவர்கள் நீண்ட காலத்துக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்து அதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே எனது விருப்பம். நன்றிகள். --மயூரநாதன் 09:28, 4 ஜூன் 2010 (UTC)

  • பதக்கம் வழங்கிய இரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மயூரநாதன் அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. எனது பங்களிப்புக்களை என்னால் முடிந்த அளவு செய்வேன் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  நன்றி. வணக்கம்.
  பெரியண்ணன்.

  பகுப்புக்களைப் புரிந்து கொள்ளல்[தொகு]

  வணக்கம் பெரியண்ணன்:

  உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்பிலோ அல்லது தமிழ் கல்வி என்ற பகுப்பிலோ முல்லைத்தீவுக் கட்டுரை வர மாட்டாது. முல்லைத்தீவில் தமிழ் கல்வி என்ற் கட்டுரை இருந்தால், அது இலங்கையில் தமிழ் கல்வி என்ற மேல் பகுப்புக்குள் வந்து, பின்னர் அது உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்புக்குள் வரும். யேர்மனியில் தமிழ் கல்வி என்ற கட்டுரையே உலக நாடுகளில் தமிழ் கல்வி என்பதற்குள் பொருந்து. யேர்மன் தமிழர் உலக நாடுகளில் தமிழர் என்ற மேல் பகுப்புக்குள்ளேயே பொருந்து. உருசியத் தமிழியல் உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்புக்குள் வராது. உருசியாவில் தமிழ் கல்வி என்ற பிறதொரு கட்டுரை எழுதப்பட வேண்டும். உங்களுக்கு விளக்கம் தராமால் பகுப்புக்களை நீக்கியதற்கு மன்னிக்க. எனினும் மேல் சென்னதே மேலதிக விளக்கம். மேலதிக விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல். நன்றி. --Natkeeran 05:18, 3 ஜூலை 2010 (UTC)

  துணைப் பகுப்புக்குள் ஒரு கட்டுரை இட்ட பின்னர், அதே கட்டுரையை தாய்ப் பகுப்புக்குள்ளும் பொதுவாகப் போடுவதில்லை. எ.கா தமிழிசை என்ற கட்டுரை பகுப்பு:தமிழிசைப் பகுப்புக்குள் இருக்கிறது. தமிழிசைப் பகுப்பு பகுப்பு:தமிழர் தாய்ப் பகுப்புக்குள் வருகிறது. எனவே தமிழிசை என்ற கட்டுரை தமிழர் என்ற பகுப்புக்குள் வர வேண்டிய அவசியம் இல்லை.--Natkeeran 05:25, 3 ஜூலை 2010 (UTC)
  • நக்கீரன் அவர்களுக்கு வணக்கம்.
  • தாங்கள் விளக்கம் கூறிமைக்கு நன்றி. பகுப்பில் தவற்றை திருத்திக்கொள்கிறேன். வணக்கம். நன்றி.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:28, 3 ஜூலை 2010 (UTC)
  மிக்க நன்றி. --Natkeeran 05:38, 3 ஜூலை 2010 (UTC)
  • பெரியண்ணன் பேரூராட்சிகளை கிராமங்கள் பகுப்பில் இடவேண்டாம்.நன்றி.--Hibayathullah 16:26, 18 ஜூலை 2010 (UTC)

  Request for help[தொகு]

  Please help rename this arcitcle Dong Hoiவானூர்தி நிலையம்‎ and correct its content. Thank you very much for your help.59.173.2.94 06:57, 20 ஜூலை 2010 (UTC)

  Your Request is being taken care. The New Article Name is --- டோங் கோய் வானூர்தி நிலையம் Thanks for calling me. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:51, 20 ஜூலை 2010 (UTC)

  விக்சனரி[தொகு]

  விக்சனரியில் நிருவாக அணுக்கம் நடைபெறுகிறது.--த* உழவன் 05:43, 26 ஜூலை 2010 (UTC)

  த.உழவன் அவர்களுக்கு,
  தாங்கள் அனுப்பிய செய்திக்கு நன்றி.
  நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் --- பகுதியில் பதிவு செய்துள்ளேன். முதலில் தங்களின் ஆதரவு எனக்கு தேவை.
  மற்ற நண்பர்களிடம் ஆதரவு தேடவேண்டுமா அல்லது அவர்களே முடிவு செய்வார்களா ? சிறிது விளக்கமும் ஆதரவும் தேவை.
  நன்றி. வணக்கம்.
  பெரியண்ணன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:01, 26 ஜூலை 2010 (UTC)

  செய்தி[தொகு]

  பெரியண்ணன், நீங்கள் அண்மையில் கைத்தறி நெசவு பற்றி நன்றாக எழுதி வருவதைக் கவனித்தேன். கட்டுரை வெளியில் தனிநபர் செய்திகளைத் தவிர்க்கும் பொருட்டு {{பயன்பாட்டில்உள்ளது}} வாய்ப்புருவைப் பயன்படுத்தியுள்ளேன். பல மணிநேரம் ஆகும் என்றால் {{தொடர்தொகுப்பு}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:36, 27 ஜூலை 2010 (UTC)

  சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.
  தாங்கள் கட்டுரையை கவனித்தது குறித்து மகிழ்ச்சி. மேலும் தங்களது கருத்துக்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டபடி தகுந்த வார்ப்புருவை பயன்படுத்துவேன்.
  நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:52, 27 ஜூலை 2010 (UTC)
  நன்றி பெரியண்ணன். என்னை சுந்தர் என்று பெயர் மட்டும் சொல்லி அழையுங்கள். :) -- சுந்தர் \பேச்சு 10:17, 27 ஜூலை 2010 (UTC)

  HotCat உதவி[தொகு]

  நீங்கள் HotCat மூலம் சிறப்பாக பகுப்புகளை சேர்ப்பது தெரிகின்றது. இதை செயற்படுத்து முயன்றும் என்னால் முடியவில்லை. ஆங்கில விக்கியில் செயற்படும் நிரல் இங்கே செயற்படுகின்றதில்லை. உதவி உதவி F1 F1 :) --ஜெ.மயூரேசன் 11:07, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

  மயூரேசன், உங்கள் விருப்பத் தேர்வில் gadgets என்ற tab இல் hotcat ஐத் தேர்ந்தெடுங்கள்--Kanags \உரையாடுக 11:12, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

  நன்றி கனகு. இப்போது வேலை செய்கின்றது :) --ஜெ.மயூரேசன் 11:16, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

  வணக்கம். --ஜெ.மயூரேசன், தாங்கள் என்னை தொடர்பு கொண்டமைக்கு நன்றி. கனகு அவர்கள் மூலம் தங்களுக்கு உதவி கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:59, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

  பெளத்தம், புத்தம்[தொகு]

  பெளத்தம், புத்தம் இரண்டும் ஒன்றையே குறிக்கும் பகுப்புக்கள். பெளத்தம் என்பதுவே இலக்கணப் படி கூடிய பொருத்தம். எனவே அந்தப் பகுப்புக்குள் கட்டுரைகள் இடுப்படுவதே நன்று. ஒன்றை குறிக்கும் பல பகுப்புக்கள் குழப்பாக இருக்கும். நன்றி. --Natkeeran 00:52, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

  நக்கீரன் அவர்களுக்கு காலை வணக்கம். தங்களது கருத்துக்களுக்கு நன்றி. கவனத்தில் வைத்துக்கொள்கிறேன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 01:02, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

  பகுப்புகள்[தொகு]

  • ஒரு சில விதி விலக்குகளைத் தவிர பகுப்புகள் கட்டாயம் தமிழில், நல்ல தமிழில் அமைய வேண்டும்.
  • வெற்று பகுப்புகள் உருவாக்குவதைத் தவிர்க்கலாம்.
  • தமிழில் இல்லாத பகுப்புகள் விரைந்து மாற்றப்படும் அல்லது நீக்கப்படும்.

  --Natkeeran 00:09, 22 ஆகஸ்ட் 2010 (UTC)


  நீங்கள் உருவாக்கிய இந்த இரண்டு பகுப்புகளுக்கு உள்ள வேறுபாட்டைக் கூறவும்.

  பகுப்பு:இந்திய துடுப்பாட்ட அணித்தலைவர்கள் பகுப்பு:இந்திய கிரிக்கெட் அணித்தலைவர்கள்

  ஒத்த தலைப்புகள் உள்ள பகுப்புகள் உருவாக்கப்படுவதில்லை. --Natkeeran 00:15, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

  நக்கீரன் அவர்களுக்கு வணக்கம். தங்களது கருத்து சரியே. இப்பகுப்புக்களை பின்னர் ஒன்றாக இணைத்து விடலாம். தற்போது பகுக்காத பகுப்புக்களை ஒர் பொதுவான பெரிய பகுப்புக்களில் குவித்து வருகிறேன். பின்னர் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. மற்றவை பின். நன்றி. வணக்கம்.
  பகுப்புகளை கட்டுரைகளை விட கவனமாக உருவாக்க வேண்டும். ஏரணம், இலக்கணம் பிசகாமல், பயனர்கள் பயன்படுத்தும் முறை கருதி, அறிவு ஒழுங்கமைப்படும் உள்ளியத்தைப் புரிந்து உருவாகக் வேண்டும். நிறைய நீக்கப்பட வேண்டிய பகுப்புகளை உருவாக்கினால், தமிழ் விக்கி குப்பையாகி விடும். இப்போது உருவாக்கப்பட்டவையை திருத்தவும், பின்னர் புதியவையை உருவாக்கலாம். நன்றி. --Natkeeran 00:40, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

  பகுப்புகளை உருவாக்குவதை தயந்து தற்காலிகமாக நிறுத்தவும்[தொகு]

  நீங்கள் பகுப்புகள் உருவாக்குவதில் அக்கறை காட்டுவது கண்டு மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் உருவாக்கும் பல பகுப்புகளில் பல குறைபாடுகள் உள்ளன.

  • தமிழில் இல்லாமை (எ.காட்டுக்கள் பல)
  • இருக்கும் பகுப்புகளுக்கு ஒத்து இருப்பது (எ.கா பகுப்பு:தமிழ்நாடு அரசு)
  • போதிய உறுப்பினர்கள், அல்லது ஒரு உறுப்பினரும் இல்லாத பகுப்புகள்
  • மேலதிகமான உறுப்பினர்களைப் பெற முடியாத பகுப்புகள்
  • பொருத்தமற்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பகுப்புகள்

  இதைப் பற்றி மேலும் அறிந்து, பின்னர் தொடருமாறு வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran 00:29, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

  விக்கி மாரத்தான்[தொகு]

  நினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

  மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]

  வணக்கம் பெரியண்ணன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:20, 2 மே 2011 (UTC)Reply[பதில் அளி]

  பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

  தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:11, 21 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

  இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

  WCI banner.svg

  வணக்கம் TRYPPN,

  முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

  மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

  மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

  நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

  உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TRYPPN&oldid=837580" இருந்து மீள்விக்கப்பட்டது