பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM
வாருங்கள்!
வாருங்கள், TNSE P.RAMESH KPM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- நந்தகுமார் (பேச்சு) 10:38, 29 ஏப்ரல் 2017 (UTC)
கலைக்களஞ்சியக் கட்டுரை
[தொகு]வணக்கம், TNSE P.RAMESH KPM!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Kanags \உரையாடுக 05:10, 30 ஏப்ரல் 2017 (UTC)
பதிப்புரிமை மீறல்
[தொகு]வணக்கம், TNSE P.RAMESH KPM!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Kanags \உரையாடுக 07:17, 30 ஏப்ரல் 2017 (UTC) {{subst:db-madeup-notice|புறநானூறு ஓர் ஒப்பற்ற கருத்துக் கருவூலம்|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:21, 1 மே 2017 (UTC)
May 2017
[தொகு]Please refrain from introducing inappropriate pages to Wikipedia, as doing so is not in accordance with our policies. For more information about creating articles, you may want to read Wikipedia:Your first article; you might also consider using the Article Wizard. If you would like to experiment, please use the sandbox. Thank you. AntanO 15:23, 1 மே 2017 (UTC)
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
[தொகு]--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 13 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்
[தொகு]நீங்கள் இங்கு காற்று எனும் கட்டுரையை விரிவாக்காமல் சமர்ப்பித்துள்ளீர்கள். அதனை விரிவாக்கிய பின்னரேயே சமர்ப்பிக்க வேண்டும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:00, 16 மே 2017 (UTC)
- தயவுசெய்து காற்று கட்டுரையை போட்டி விதிகளுக்கிணங்க விரிவாக்கிவிட்டீர்கள் என்றால் அந்தக் கட்டுரை ஏற்றுக் கொள்ளப்படும். உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், மொத்த பைட்டுக்களின் அளவு ஆகக் குறைந்தது 26000 ஆகும்வரைக்கும் விரிவாக்குங்கள். மேலும் நீங்கள் புதிதாக விரிவாக்கம் செய்யவிருக்கும் கட்டுரைகள் அனைத்தும், இந்த விதிகளை நிறைவுசெய்த பின்னரே இங்கு சமர்ப்பியுங்கள். இந்தப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது உதவி தேவையெனில், தயங்காது கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 16:02, 16 மே 2017 (UTC)
- காப்பியம் கட்டுரையை விரிவாக்கியதையிட்டு மகிழ்ச்சி, ஆனாலும் அக்கட்டுரையில் நீங்கள் சேர்த்த உள்ளடக்கங்கள், ஒரு புத்தகத்தில் இருந்து அவ்வாறே பிரதி செய்தவை. பதிப்புரிமை மீறல் அங்கு இடம்பெறவில்லை ஆயினும் விக்கி நடைக்கு ஏற்ப இல்லை என்பதால் அவ்வுள்ளடக்கங்கள் அனைத்தையும் நானே நீக்கிவிட்டேன். அவ்வாறு பிரதி செய்து எழுதாமல் தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பொதுவாகக் காணப்படும் நடையில் கட்டுரைகளை விரிவாக்குங்கள். விரிவாக்குவதர்கு ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையையும் மொழிபெயர்க்கலாம். அருள்கூர்ந்து இனிமேல் இவ்வாறு செய்யாதீர்கள்! உதவி தேவையானால் கேளுங்கள். போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:16, 17 மே 2017 (UTC)
- அத்துடன் தயவுசெய்து கட்டுரை விரிவாக்கத்திற்கு முன்னர் போட்டி விதிகளையும் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 22:40, 17 மே 2017 (UTC)
ஸ்ரீ ஹீரன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் , தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நான் புதியவன் எங்களை ப் போன்ற புதியவர்களுக்கு ஆலோசனைகள் , வழிகாட்டுதல் வழங்கும் நற்பணியை செய்துகொண்டிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் , தொடர் பங்களிப்பாளர் போட்டியில் என்னுடைய புதிய முயற்சியாக காற்று என்ற தலைப்பை தேர்வு செய்து விரிவாக்க முற்சித்தேன் . அதெற்குள் தியாகு கணேஷ் அக் கட்டுரையினை முடித்துள்ளார். இதில் அதிகம் பைட் அவர் முடித்திருந்தால் அவர் கணக்கில் இக்கட்டுரையை சேர்த்து விடுங்கள் . ஓர் அன்பான வேண்டுகோள் போட்டியின் தலைப்பை முன் பதிவு செய்து உள்ளவர்கள் அவர்கள் தேர்வு செய்த தலைப்பில் கவனம் செலுத்தவும் , அடுத்தவர்கள் எடுக்கின்ற தலைப்பினை எடுத்து தர்மசங்கடத்திற்க்கு ஆளாக்கவேண்டாம் . நன்றி - TNSE P.RAMESH KPM 10.50 am
- வணக்கம் ரமேஷ்! விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு பக்கத்தில் பார்த்து, நீங்கள் விரிவாக்கும் கட்டுரைக்குப் பொருத்தமான வார்ப்புருவை இட்டுவிடுங்கள். இல்லாவிட்டால், ஒருவர் தவறுதலாக, அந்தக் கட்டுரை போட்டிக் கட்டுரை என்று அறியாமலும் விரிவாக்கும் வாய்ப்புண்டு. --கலை (பேச்சு) 06:02, 18 மே 2017 (UTC)
அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு... நான் காற்று கட்டுரையை விரிவாக்கும் போது அக்கட்டுரை உங்கள் முற்பதிவு பட்டியலில் இடம் பெற்றிருக்க வில்லை. மேலும் நீங்கள் கட்டுரையை 26,000 பைட்டுகள் தாண்டாத நிலையில் சமர்ப்பித்து இருந்ததால் விரிவாக்கப்படவேண்டிய கட்டுரை பட்டியலில் தொடர்ந்து அக்கட்டுரையின் பெயர் இருந்தது ஆதலால், விரிவாக்கினேன். நீங்கள் அக்கட்டுரையை மேலும் விரிவாக்க இருக்கிறீர்கள் என நான் அறிந்திருக்கவில்லை. கட்டுரை முடித்த பின் போட்டி பட்டியலில் சேர்க்க முற்ப்படும் போதுதான் நீங்களும் விரிவாக்கி பதிவு செய்தமை பற்றியும் .. அங்கு நடுவர்களால் 26,000 பைட்டுகள் தாண்டாத காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதது குறித்தும் அறிந்தேன்.கட்டுரைகளை முற்பதிவு செய்துவிட்டுதான் விரிவாக்க வேண்டும் என்ற கட்டாயம் போட்டி விதிகளில் குறிப்பிடப்படவில்லை.அதுவல்ல சிக்கல். பலர் கட்டுரைகளை முற்பதிவு செய்யாமலும் போட்டிக்கு சமர்ப்பித்துள்ளார்கள். நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. இதில் தாங்கள் தர்மசங்கடம் அடைந்ததற்கு வருந்துகிறேன். -- ThIyAGU 07:45, 18 மே 2017 (UTC)
போட்டிக் கட்டுரை விதிகள்
[தொகு]வணக்கம் ரமேஷ்! தயவுசெய்து போட்டிக்கட்டுரை விதிகளை மீண்டும் பாருங்கள். நீங்கள் 6000 பைட்டுக்களை மேலதிகமாக இணைத்தும், கட்டுரையின் மொத்த பைட்டுக்கள் 26000 இற்குமேல் வந்த பின்னரே கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும் விக்கிப் பக்கத்திலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை நடந்து கொண்டிருப்பதற்கான வார்ப்புருவை இணைத்துவிட்டு மேலும் விரிவாக்குங்கள். உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 08:17, 18 மே 2017 (UTC)
கலை அவர்களுக்கு , 26000 பைட்டு கள் முடிந்தவுடன் பதிவிட வேண்டும் என்பதை கவனிக்க தவறிவிட்டேன் , இனி கவனமுடன் செயல்படுவேன் . தங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றன அதற்காக என் நன்றியினை உரித்தாக்குகிறேன் --TNSE P.RAMESH KPM (பேச்சு) 10:21, 18 மே 2017 (UTC)
- வணக்கம் ரமேஷ் அவர்களே, தாங்கள் போட்டிக்காக சொல் எனும் கர்ருரையை விரிவாக்கி சமர்ப்பித்தும் இருந்தீர்கள். ஆயினும் அக்கட்டுரை, இணையத்தில் பிற தளங்களில் இருந்து பிரதி செய்யப்பட்டு விரிவாக்கப்பட்டதால் அவற்றை நீக்கியுள்ளேன். அருள்கூர்ந்து, இதுபோல் செய்யாது, நான் ஏற்கனவே மேலே கூறியது போல செயற்படுங்கள்! நன்றி, என்னுடன் தொலைபேசியில் உரையாட வேண்டுமானால், 0094212250756 எனும் தொலைபேசிக்கு அழைத்தும் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். நன்றி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 18 மே 2017 (UTC)
ஸ்ரீ ஹீரன் அவர்களுக்கு , தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி . தொடர் பங்களிப்பாளர் போட்டியில் இருந்து என் பெயரை நீக்க வேண்டுகிறேன் . --TNSE P.RAMESH KPM (பேச்சு) 11:01, 18 மே 2017 (UTC)
ரமேஷ் அவர்களே! நீங்கள் தொடர்பங்களிப்பாலர் போட்டியிலிருந்து விலகுவதை நான் விரும்பவில்லை. போட்டியிலிருந்து விலகுவதைப் பார்க்கிலும் பங்குபற்றாமல் இருக்கலாம், ஆனால் தாங்கள் அருள்கூர்ந்து, கட்டுரைகளை விரிவாக்குங்கள்! அதுமட்டுமன்றி, நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகள் வேறு இடங்களிலிருந்து பிரதி செய்யப்பட்டவையாக அமையாமல் இருத்தல் வேண்டும். மகாலிங்கம் அவர்களும் உங்களுக்கு உதவக்கூடும். உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்! தொடர்ந்து போட்டியில் சிறபாகப் பங்குபெறுவீர்கள் என நம்புகின்றேன். அன்புடன் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:31, 18 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
- ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
- ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
- 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
- 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி அவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்புக்கு கூகுள் மொழிபெயர்ப்பு கருவி இல்லாமல் வேறு ஏதேனும் ,மொழிபெயர்ப்பு கருவி உள்ளதா, இருந்தால் தெரியப்படுத்துங்கள் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:02, 24 மே 2017 (UTC)
- வணக்கம் ரமேஷ்! நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவி ஒன்றைப் பயன்படுத்தி நடத்தை என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்திருக்கிறீர்கள். அந்தக் கட்டுரையை நீங்கள் ஒரு தடவை மீண்டும் வாசித்து, தமிழில் எழுதப்பட வேண்டிய வசன அமைப்புக்களுக்கும், அங்கே இருக்கும் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, தயவுசெய்து அவற்றைத் திருத்துங்கள். வாசித்தீர்களானால், அதிலுள்ள தவறுகளைப் புரிந்துகொள்வீர்கள். முக்கியமாக வசன அமைப்புக்கள், மற்றும் சில பொருத்தமற்ற சொற்கள் இருப்பதைக் கவனிப்பீர்கள். எனவே தயவுசெய்து, ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, வசன நடை, மற்றும் மேற்கோள்களைச் சரியாக இணையுங்கள். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கிறீர்களாயின், அதன் அர்த்ததை உங்கள் சொந்த வசனங்களை இட்டு எழுதினால் கட்டுரை இன்னும் சிறப்பாக வருமென நினைக்கிறேன். மேலும், கருவி பயன்படுத்துவீர்களாயின், வேறு எங்காவது உரைநடையைப் போட்டு வைத்து (உங்கள் மணல்தொட்டியில் போடலாம்) திருத்தங்களை முடித்த பின்னர், கட்டுரைப் பக்கத்தில் இட்டு, விரிவாக்கிப் பின்னர் சமர்ப்பித்தால் நன்று என நினைக்கிறேன். ஏதாவது உதவி தேவையென்றால் கேளுங்கள்.--கலை (பேச்சு) 16:17, 24 மே 2017 (UTC)
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்து சமர்ப்பிக்கிறேன்,--TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:19, 25 மே 2017 (UTC)
- ரமேஷ்! நீங்கள் அந்தக் கட்டுரையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளீர்கள். எனவே அந்தக் கட்டுரையில் திருத்தங்களைச் செய்துவிட்டு, அதை அறிவித்தீர்கள் என்றால், மீண்டும் அதனைப் பார்த்து ஏற்றுக்கொண்டதாய் குறிக்க முடியும். மேற்கோள்கள் இணைப்பதில் உதவி தேவைப்படின் இங்கே பாருங்கள். ஏதாவது மேலதிக உதவி தேவைப்படின் ஏனைய விக்கிப்பீடியர்களிடம் கேட்கலாம். நீங்கள் இங்கேயே உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, அல்லது எனது பேச்சுப் பக்கத்திலோ அதுபற்றித் தெரிவித்தால், மீண்டும் பார்க்க இலகுவாக இருக்கும். நன்றி.--கலை (பேச்சு) 09:13, 25 மே 2017 (UTC)
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி .--TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:20, 26 மே 2017 (UTC) கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 06:44, 27 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன மற்றும் கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நீக்கிவிடவும் நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 10:15, 28 மே 2017 (UTC)
- வணக்கம் ரமேஷ்! கட்டுரையில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அர்த்தம் சரியாகக் கிடைக்கிறதா என்று கீழுள்ள வரிகளைப் பாருங்கள்.
- நடத்தை என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அமைப்புகள் அல்லது செயற்கை பொருட்கள் ஆகியவற்றின் மூலம் தங்களை அல்லது அவற்றின் சுற்றுச்சூழலால் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், உயிரற்ற சூழல். - அர்த்தமற்ற வசனமல்லவா?
- உட்புற அல்லது வெளிப்புறம், உணர்வுபூர்வமான அல்லது ஆழ்மன, வெளிப்படையான அல்லது இரகசியமாகவும், தன்னார்வ அல்லது விருப்பமில்லாதவையாகவும் உள்ள பல்வேறு தூண்டுதல்கள் நடத்தை ஆகும். - தவறான அர்த்தமல்லவா?
- தானியங்கி மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் திருத்தப்பட வேண்டும். இல்லாவிடின் கட்டுரை அர்த்தமற்றதாகிவிடுமல்லவா?
- மேலும் மேற்கோள் எப்படிக் கொடுப்பது என்பதை விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்னும் பக்கத்தில் பார்த்து, அதன்படி மேற்கோள்களைக் கொடுத்தால் நன்று. --கலை (பேச்சு) 20:34, 29 மே 2017 (UTC)
- வணக்கம் ரமேஷ்! கட்டுரையில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அர்த்தம் சரியாகக் கிடைக்கிறதா என்று கீழுள்ள வரிகளைப் பாருங்கள்.
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை மீண்டும் திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 13:27, 31 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
[தொகு]போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:02, 31 மே 2017 (UTC)
பதில்
[தொகு]- வணக்கம் ரமேஷ்! முதலில், எனது பக்கத்தில் உங்கள் செய்தி பார்த்தேன். எனது பக்கத்தில் இடப்பட்டதால் தவறாமல் பார்த்தேன். முதலில் உங்கள் பக்கத்தில் செய்தி இருந்தமையால், சரியாகக் கவனிக்கவில்லை. அவ்வாறு வேறு இடங்களில் செய்தி இடும்போது, @Kalaiarasy: அல்லது கலை என்று போட்டுவிட்டுப் போட்டால், எனக்கு செய்தி கிடைக்கும். தவறாமல் பார்ப்பேன்.
- உங்கள் முயற்சிக்கும், விக்கியில் எழுத விரும்பும் ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள். உங்களுக்குத் தெரிந்த, நேரில் உதவக் கூடிய யாராவது தமிழ் விக்கிப்பீடியர்கள் இருந்தால் அவர்களிடமும் நீங்கள் உதவி பெறலாம். இல்லாவிட்டால், இங்கு என்னிடமோ, வேறு பயனர்களிடமோ தெரியாதவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நேரில் உதவக் கூடியவர்கள் இருப்பின் இலகுவாக இருக்குமென நினைக்கிறேன்.
- நடத்தை கட்டுரையில் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். பாருங்கள். என்ன மாற்றங்கள் என்பதை, வரலாற்றில் போய், ஒவ்வொரு முந்திய என்றிருப்பதை அழுத்திப் பார்க்கலாம். இங்கு போய்ப் பாருங்கள்.
- விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தையும் பாருங்கள். நீங்கள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது, வசனத்தை வாசித்து விளங்கிய பின்னர் உங்கள் நடையில் எழுதலாம். ஆங்கிலக் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்திற்குப் போனால், மேற்கோள்கள் எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்து, அதனையே தமிழ்க் கட்டுரையில் கொடுக்கலாம். பின்னர் மேற்கோள் என்பதற்குக் கீழ் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் {{Reflist}} என்பது இருக்கும். அதனைப் போட்டால் மேற்கோள்கள் தானாகவே இணைத்துக்கொள்ளப்படும். நீங்கள் எழுத வேண்டி வராது.
- நடத்தைக் கட்டுரையில் விலங்கு நடத்தை என்பதுவரை திருத்தியுள்ளேன். அதற்குக்கீழே நுகர்வோர் நடத்தை என்பதிலிருந்து மேற்கோள்கள் போன்றவற்றைத் திருத்துங்கள். திருத்தி முடித்த பின்னர் அறிவியுங்கள். முழுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பையும் சரிபார்த்துவிடுங்கள். நன்றி.
- ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--கலை (பேச்சு) 00:27, 4 சூன் 2017 (UTC)
ரமேஷ்! நடத்தைக் கட்டுரையில், இங்கு குறிப்பிட்ட பின்னர் மிகச் சிறிய திருத்தங்களையே செய்துள்ளீர்கள். மேற்கோள்கள் இணைப்புப் பற்றியும் கூறியிருந்தேன். ஆனால் நீங்கள் அதனைப் பார்க்கவில்லைப் போலிருக்கிறது. மேலும் கட்டுரையின் பல இடங்கள் அப்படியே திருத்தப்படாமல் இருந்தன. ஒரு சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். பாருங்கள். வாசிக்கும்போது, உங்களுக்கே அதிலுள்ள தவறுகள் புரியும்.
Theses studies have identified seven features of lifestyle which were associated with lower morbidity and higher subsequent long-term survival
இந்த ஆய்வுகள் ஆழ்ந்த அறிகுறிகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட உயிரினங்களின் ஏழு அம்சங்களைக் கண்டறிந்துள்ளன, மேலும் அதிகமான நீண்டகால உயிர் பிழைப்புக்கு,
Health behaviors impact upon individuals' quality of life, by delaying the onset of chronic disease and extending active lifespan.
வாழ்க்கை நடத்தைகள் தனிநபரின் வாழ்க்கை தரத்தை பாதிக்கின்றன, நீண்டகால நோயைத் தாமதப்படுத்துவதன் மூலமும், தீவிரமான வாழ்நாள் முழுவதும் நீடிப்பதன் மூலமும்.
For example, in USA, Healthy People 2000, United States Department of Health and Human Services (USDHHS), lists increased physical activity, changes in nutrition and reductions in tobacco, alcohol and drug use as important for health promotion and disease prevention.
உதாரணமாக, அமெரிக்காவில், சுகாதார மற்றும் மனித சேவைகள் நிறுவனம் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்த்தாக்குதல் ஆகியவற்றிற்கு முக்கியமாக புகையிலை, ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதன் மூலமும் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது என பட்டியலிடுகிறது.
விக்கியில் தரமான கட்டுரைகளை உருவாக்குவதென்றால், மேற்கோள்கள் எப்படிக் கொடுப்பது என்பதையும் பார்க்க வேண்டும். கட்டுரையின் திருத்த வரலாற்றை இங்கே பாருங்கள். ஒவ்வொரு பயனாராலும், என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பாருங்கள். அப்போ உங்களால் புரிந்துகொள்ள முடியும். எ.கா. இங்கே எவ்வாறு மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன எனப் பார்க்கலாம். ஒரு கட்டுரையையும், அதன் தொகுத்தல் பெட்டியில் உள்ள உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன செய்யப்பட்டுள்ளது என அறியலாம். என்னால் முடிந்தளவு கட்டுரையை திருத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதிக நேரம் எடுக்கிறது. --கலை (பேச்சு) 21:26, 6 சூன் 2017 (UTC)
- ரமேஷ்! நான் இத்தனையும் எழுதியது, நீங்கள் மேலும் கட்டுரைகளை விரிவாக்கி நல்ல தரமான கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்பதனால்தான். தானியங்கி மொழிபெயர்ப்பு சில சமயம் சிக்கல்களைத் தந்துவிடும். சிலசமயம் தானியங்கி மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் திருத்துவது, ஒரு முழுக் கட்டுரையை முழுவதுமாக எழுதுவதுபோல் ஆகிவிடும். அதனால்தான் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்பதாயின், விளங்கிக்கொண்டு, நமது வசன நடையில் எழுதுவது சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். மேலும் கட்டுரைகள் தரமாக அமைய வேண்டுமாயின், மேற்கோள்கள் கொடுப்பதும் அவசியம். அதனையும் நீங்கள் பழகுவது நன்மை தரும் என்பதனால்தான் அதனையும் எப்படிச் செய்வது என்று கூறினேன்.
- மற்றவர்கள் நமது கட்டுரையில் செய்யும் மாற்றங்களைப் பார்க்கும்போதுதான் எவ்வாறு விக்கியில் எழுதுவது என்று நாம் கற்றுக்கொள்ளலாம்.
- நீங்கள் இன்னும் கட்டுரைகளைத் தொடர்ந்து விரிவாக்கி உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். நன்றி. --கலை (பேச்சு) 16:56, 7 சூன் 2017 (UTC)
கோணம் கட்டுரைக்கு நீங்கள் 6000 பைட்டுக்களைச் சேர்க்கவில்லை. ஆனால் போட்டிக்குச் சமர்ப்பித்துள்ளீர்கள். எனவே மேலும் விரிவாக்கினாலேயே ஏற்றுக்கொள்ளப்படும். @Shriheeran:--கலை (பேச்சு) 14:35, 11 சூன் 2017 (UTC)
பதிப்புரிமை மீறல்
[தொகு]நீங்கள் விரிவாக்கிய கோணம் கட்டுரையில் பல பகுதிகள், கோண அளவிகள் பகுதியானது, வரிக்குவரி இங்கே உள்ளது. மேற்கோளாகக் கூடக் கொடுக்கப்படவில்லை. ஒரு இணையப் பக்கத்தில் இருந்து, வெட்டி ஒட்டுதல் பதிப்புரிமை மீறலாகும். கோணம் கட்டுரையில், சைன் சட்டம் என்ற பகுதியில், விக்கி நடையே இல்லாமல் இருப்பதையும் பாருங்கள். இவ்வாறான தொகுத்தல் விக்கியில் ஏற்கப்படுவதில்லை. நீங்கள் அங்கிருக்கும் தகவலை விக்கியில் இடுவதாயின், அதனை வாசித்து, உங்கள் உரைநடையில் எழுதி, கட்டாயமாக அந்தப் பக்கத்தை மேற்கோளாகக் கொடுப்பதும் அவசியம். எனவே தயவுசெய்து அந்தப் பகுதிகளைத் திருத்தி அமையுங்கள். இல்லாவிட்டால் அந்தப் பகுதிகள் கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுவிடும். நன்றி. @Shriheeran:--கலை (பேச்சு) 18:29, 11 சூன் 2017 (UTC)
கலை அவர்களே , கோணம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல் உள்ள பகுதியை நான் முழுவதுமாக நீக்கிவிட்டேன் . 6000 பைட் க்கு குறைவாக இருந்தால் மீண்டும் விரிவாக்குகிறேன் . நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:38, 12 சூன் 2017 (UTC)
- ரமேஷ்! பதிப்புரிமை உள்ள பகுதியை முழுமையாக நீக்கிவிட்டு, மீண்டும் சில பகுதிகளை, சொற்றொடர்களை அங்கிருப்பதுபோலவே இணைத்துள்ளீர்கள். நீங்கள் இணையத்தளம் ஒன்றில் இருந்தோ, ஒரு நூலில் இருந்தோ எடுத்து இங்கே இடுவது தவறில்லை. ஆனால் வெட்டி ஒட்டுவதுபோல், அதாவது அங்கிருக்கும் அதே சொற்றொடர்களுடன் அமைந்திருப்பதுதான் தவறு. அத்துடன், வேறு எங்கிருந்து தகவலைப் பெறுகிறீர்களோ அதனை மேற்கோளாகக் கொடுக்கலாம். முக்கியமாக சொற்றொடர்கள் உங்கள் சொந்த உரைநடையில் இருக்க வேண்டும். அங்கிருக்கும் சொற்றொடர்களையே இங்கு இடும்போதுதான் பதிப்புரிமை மீறல் எனப்படுகிறது. கவனித்துத் திருத்துங்கள். அத்துடன், தயவுசெய்து இதே நடைமுறையை நீங்கள் விரிவாக்கும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் பயன்படுத்துங்கள். நன்றி. @Shriheeran and Sivakosaran:--கலை (பேச்சு) 20:05, 12 சூன் 2017 (UTC)
ரமேஷ்! நீங்கள் கட்டுரையை விரிவாக்கும்போது சொற்றொடர்களுக்கிடையில், அதாவது முற்றுப்புள்ளியை அடுத்து மற்றும் comma வை அடுத்து இடைவெளி விடுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 22:31, 13 சூன் 2017 (UTC)
விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017
[தொகு]ரவி அவர்களே , வணக்கம். விக்கிப்பீடியாவிற்கு நான் புதியவன் , விக்கிபீடியா பயிற்சி எதுவும் நான் பெறவில்லை . நானாக முயன்று கற்று தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறேன் . விக்கிப்பீடியாவில் நான் பெற்ற வழிகாட்டல்கள் , ஆலோசனைகள் என்னை, தரமான கட்டுரை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது . அதனால் தொடர் பங்களிப்பாளர் போட்டியில் கலந்துகொண்டு உள்ளேன் . நான் பெற்ற அனுபவங்களை விக்கிபீடியா பயிற்சியில் எடுத்து கூறலாம் . என்ற ஆர்வத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் பயிற்சியில் கருத்தாளராக பங்குபெற பதிவிட்டேன் . ஆனால் , இதுவரை தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை . அதனால் குழப்பத்தில் உள்ளேன் . நான் கலந்து கொள்வதற்க்கு ஏதுவாக காஞ்சிபுரம் DIET முதல்வர் மூலம் முறையாக துறை அனுமதி பெற வேண்டுகிறேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:06, 23 சூன் 2017 (UTC)
- தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நீங்கள் என் பதிலை எதிர்பார்த்து இருக்கிறீர்கள் என்று உணரவில்லை. இப்பயிற்சிகளை அளிக்கச் செல்லும் அனைவரும் தன்னார்வமாகவே செல்கிறார்கள். இதற்கு விக்கிப்பீடியர் ஒப்புதல் தேவையில்லை. எனினும், இவ்வாறு பயிற்சி அளிக்கச் செல்வோர் ஓரளவு அனுபவம் வாய்ந்த பயனர்களாக இருப்பது நலம். தங்கள் பேச்சுப் பக்க உரையாடல்களைப் பார்க்கும் போது, தாங்கள் விக்கிநெறிமுறைகளைப் பற்றி இன்னும் கற்றிந்து கொள்ள வேண்டிய தேவையை உணர்கிறேன். எனவே, காஞ்சிபுரம் செல்வது என்றால் இன்னொரு அனுபவம் வாய்ந்த விக்கிப்பீடியர் வருகை தரும் அதே நாளில் தாங்களும் செல்லலாம். இதற்குத் துறை சார் ஒப்புதல் தேவை என்றால் உரிய ஒப்புதலைப் பெற்றுத் தர முனைகிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 19:25, 23 சூன் 2017 (UTC)
- ரவி அவர்களுக்கு மிக்க நன்றி . போதிய அனுபவமும் தகுதியும் இல்லாத காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்ட கருத்தாளராக பயிற்சிக்கு செல்ல விருப்பம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:52, 24 சூன் 2017 (UTC)
- என் கருத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டமைக்கு நன்றி. தொடர்ந்து ஊக்கத்துடன் பங்களியுங்கள். நமக்கு இன்னும் நிறைய பயிற்றுவிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். அடுத்தடுத்த பயிற்சிச் சுற்றுகளில் நானே உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 22:35, 24 சூன் 2017 (UTC)
ரவி அவர்களே , வணக்கம். காஞ்சிபுரம் மாவட்ட விக்கிப்பீடியா பயிற்சிக்கு அனுபவம் வாய்ந்த , சீனிவாசன் சார், மற்றும் என் நெருங்கிய நண்பர் மணி, கணேசன் அவர்களுடன் நான் பணிபுரியும் மாவட்டத்திற்கு கருத்தாளராக செல்ல விரும்புகிறேன் . காஞ்சிபுரம் மாவட்ட கருத்தாளர் அன்பழகன் சாரும் என்னை அழைக்கிறார். நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:44, 27 சூன் 2017 (UTC)
போட்டிக் கட்டுரை விரிவாக்கம்
[தொகு]நீங்கள் விரிவாக்கிய தலைவலி கட்டுரை பார்த்தேன். மருத்துவம் தொடர்பான கட்டுரைகளையாக்கும்போது, மிகவும் கவனமாக எழுதுவது நல்லது. ஆய்வு முடிவுகள் போன்ற சிறந்த மேற்கோள்களைக் கொடுத்தல் சிறப்பு. மேலும், நீங்கள் சில தமிழ் இணையத்தளங்களில் இருந்து தகவல்களைப் பெற்று விரிவாக்கியிருக்கிறீர்கள். ஆனால் அங்கு இருப்பதுபோலவே ஆங்கிலச் சொற்களை மாற்றாமல் அப்படியே தமிங்கிலத்தில் போட்டிருக்கிறீர்கள். அது தமிழ்விக்கி நடையில் இல்லாமல், ஒரு பொதுவான இணையத்தளத்தில் வாசிப்பது போல் இருக்கிறது. கீழுள்ள பத்தியைப் பாருங்கள்.
கண்டநேரத்துக்கு சாப்பாடு, குட்டித் தூக்கம், வேலையை திட்டமிடாமல் செய்யும்போது ஏற்படும் டென்ஷன், அதீத கற்பனை போன்ற காரணங்கள் தலைவலிக்கு அடிப்படையாக உள்ளன. லைப் ஸ்டைலும் ஒரு காரணம். பல்வேறு தலைவலிகள் உள்ளன. ஒற்றைத் தலை வலி, இரட்டைத் தலைவலி, பசியில், துக்கத்தில், தூக்கமின்மையில் என எப்போது வேண்டுமானாலும் வருகிறது. பெண்களை அதிகளவில் தாக்குகிறது. வேலைப் பளு, குழந்தைகளால் டென்ஷன், எதிர்காலம் பற்றி பயம், வெளியிடங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல் போவது என டென்ஷன் உருவாகி தலைவலியாய் வருகிறது . மைக்ரெய்ன் எனப்படும் ஒற்றைத் தலை வலி, கிளஸ்டர் ஹெட்ஏக், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்னர் வரும் தலைவலி மற்றும் மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படும் தலைவலி என பெண்களை தலைவலி தாக்கும். மூளையில் உள்ள கட்டியின் காரணமாக கூட தலைவலி வரலாம். எனவே அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கட்டுரையை மீண்டும் வாசித்துத் திருத்தினால் நல்லது.
இன்னுமொரு விடயம். நீங்கள் ஒரு கட்டுரையை விரிவாக்க முன்னர், அந்தக் கட்டுரையில் ஏற்கனவே என்ன எழுதப்பட்டுள்ளது என்று பார்த்துவிட்டு, அங்கு இல்லாதவைபற்றி எழுதி விரிவாக்குங்கள். நீங்கள் விரிவாக்கிய சில கட்டுரைகளில், கட்டுரையின் நீளம் அதிகரித்தால் சரி என்பதுபோல், முன்னர் வேறு பயனர்களால் கொடுக்கப்பட்ட தகவல்களே வேறு சொல் வடிவங்களில் கொடுக்கப்படுகிறது. அவ்வாறில்லாமல், மேலதிகமாக, முன்னர் இல்லாத தகவல்கள், விவரங்களைக் கொடுத்து விரிவாக்குங்கள். தரமான கட்டுரை உருவாக்குவதெனில், நீங்கள் இணைக்கும் தகவல்களைக் கவனித்துச் சேருங்கள் (முக்கியமாக மருத்துவக் கட்டுரைகள்). அத்துடன், தகுந்த மேற்கோள்களையும் கொடுங்கள். நன்றி.
@Shriheeran, Drsrisenthil, and Sivakosaran:
--கலை (பேச்சு) 17:02, 23 சூன் 2017 (UTC)
கலை அவர்களுக்கு வணக்கம் தலைவலி கட்டுரையில் தங்கள் சுட்டி காட்டி , குறிப்பிட்டவற்றை திருத்தம் செய்கிறேன். மேலும் இனி இதுபோல் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்கிறேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:56, 24 சூன் 2017 (UTC)
- புரிந்துணர்வுடன் நடந்துகொள்வதற்கு மிகவும் நன்றி ரமேஷ்!--கலை (பேச்சு) 08:11, 24 சூன் 2017 (UTC)
கலை அவர்களே , தலைவலி கட்டுரையை மீண்டும் திருத்தம் செய்து உள்ளேன் . கருங்கல், சிலையாக உருவாக செதுக்கி, செதுக்கி சிலை செய்யவேண்டும் . அது போல் , சிறுபிள்ளை போல் கட்டுரையில் நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி திருத்தி வருகிறீர்கள் . தங்களின் வழிகாட்டல் மூலம் நிறைய விசயங்களை விக்கியில் கற்றுக்கொண்டுள்ளேன் . நன்றி .--TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:14, 24 சூன் 2017 (UTC)
- ரமேஷ்! கட்டுரை விரிவாக்கத்தின்போது, தலைப்பை மீண்டும் இடுவதைத் தவிருங்கள். அதாவது கட்டுரைத் தலைப்பு ஏற்கனவே இருப்பதனால், மீண்டும் அந்தத் தலைப்பு கீழே வரத் தேவையில்லை. ஒரு முன்னுரையை அடுத்து, நீங்கள் உருவாக்கும் துணைத் தலைப்புக்களுக்கு தானாகவே பொருளடக்கம் உருவாகும். வானொலி கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள். அத்துடன் தயவுசெய்து, விரிவாக்கும் கட்டுரைகளுக்கு வலைப்பதிவுகள் தவிர்ந்த வேறு சிறந்த மேற்கோள்களைக் கொடுக்க முயற்சியுங்கள்.--கலை (பேச்சு) 23:31, 30 சூன் 2017 (UTC)
பதிப்புரிமை மீறல்
[தொகு]வணக்கம், TNSE P.RAMESH KPM!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Kanags \உரையாடுக 01:27, 1 சூலை 2017 (UTC)
உரையாடல்கள் எங்கே?
[தொகு]உங்கள் பேச்சுப் பக்கத்தில் இருந்த உரையாடல்கள் அனைத்தையும் நீக்கியுள்ளீர்களே? ஏனென்று அறியலாமா? சில கேள்விகள் இருக்கையில் அவற்றை நீக்குதல் தொடர்ந்த உரையாடலுக்கு இடையூறாக இருக்கும். எனவே அவற்றை மீளமைக்கலாமா? உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு இங்கேயே பதில் அளித்தால் உரையாடலின் தொடர்ச்சிக்கு இலகுவாக இருக்கும். எனது பக்கத்தில் பதிலை இடத் தேவையில்லை. நான் உங்கள் பதிலை இங்கேயே வந்து பார்க்க முடியும். --கலை (பேச்சு) 17:34, 2 சூலை 2017 (UTC)
கலை அவர்களே , வணக்கம் என்னுடைய பேச்சு பக்கம் நீக்கியதற்கு மன்னிக்கவும் . மீண்டும் மீளமை செய்துவிட்டேன் வானொலி கட்டுரையினை தாங்கள் பார்த்து மதிப்பிட்ட பிறகு கனகரத்தினம் சிறீதரன் அவர்கள் இணையத்தில் இருந்து தகவல் எடுத்துள்ளீர்கள் பதிப்புரிமை மீறல் என்று குறிப்பிட்டு 20,000 பைட்டுகளுக்கு மேலாக நீக்கி விட்டார் . இணையத்தில் இருந்து எடுத்தாலும் அதனை மேற்கோளாக காட்டும் பொழுது பதிப்புரிமை மீறல் ஆகாது என்று நினைத்தேன் . அவர், நீக்காமல் குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம் . நீங்கியதால் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . பேச்சு பக்கத்தை பார்க்கவே பிடிக்கவில்லை அதனால் நீக்கினேன் . தற்பொழுது , வானொலி கட்டுரையினை 26000 பைட்டுக்கு புதிதாக விரிவாக்கி உள்ளேன் . நன்றி --ப. இரமேஷ் 13:40, 3 சூலை 2017 (UTC)
தலைவலி - போட்டிக் கட்டுரை
[தொகு]தலைவலி கட்டுரையில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். ஆனால் அந்தக் கட்டுரை இன்னமும் தரமுயர்த்தப்பட வேண்டும். தயவுசெய்து செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பாருங்கள். தலைப்பை மீண்டும் கொடுக்கத் தேவையில்லை. பதிலாக, முன்னுரை ஒன்று பொருளடக்கத்திற்கு முதல் வரலாம். சில சொற்றொடர்கள் கலைக்களஞ்சியத்தில் போலன்றி, சாதாரண வலைப்பதிவுகள் போன்றவற்றில் எழுதப்படுவதுபோல் உள்ளது. உள்ளபடியான தகவல்கள், செய்திகளைக் கொடுக்கலாமே தவிர, "ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) போன்றவை குணமடைய உங்கள் விரல் நுனியிலேயே ஆரோக்கியம் இருக்கிறது" போன்ற விளம்பரம் போன்ற சொற்றொடர்கள் தவிக்கப்பட வேண்டும்.--கலை (பேச்சு) 17:34, 2 சூலை 2017 (UTC)
பதக்கம்
[தொகு]ஊக்குவிப்பாளர் பதக்கம் | |
காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சியில் இரண்டாவது நாளன்று சற்றேறக்குறைய 252 கட்டுரைகள் உருவாக்கத்திற்குப் புதிய பயனர்களுக்குக் கருத்தாளராக இருந்து ஊக்குவித்த செயலுக்காக இப்பதக்கத்தை அளிக்க முன்மொழிகிறேன். --மணி.கணேசன் (பேச்சு) 02:40, 6 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம் வாழ்த்துக்கள்
--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 16:47, 03 ஆகத்து, 2017 (UTC)
தானியங்கித் தமிழாக்கம் தவிர்க்கவும்
[தொகு]
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
--இரவி (பேச்சு) 14:23, 19 சூலை 2017 (UTC)
ரவி அவர்களே நன்றி, பொருள் புரிந்து தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் அதுவும் குறுங்கட்டுரை தான் , சரி இனி இதை தவிர்க்க பார்க்கிறேன் நன்றி .--ப. இரமேஷ் 14:28, 19 சூலை 2017 (UTC)
- ஜலால்பூர் கட்டுரையில் personality என்பதை ஆளுநர் என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். அதே பிழை கூகுள் மொழிபெயர்ப்பிலும் இருந்தது. personality என்பது ஆளுமை. ஆளுநர் என்பது governor. கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தும் போது இது போன்ற பிழைகள் கண்ணில் படாமல் போகலாம். எனவே தான் முற்று முழுதாக அதனைத் தவிர்க்க வேண்டுகிறோம் இது உங்கள் புரிதலுக்கான ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். பொருட்பிழைகள் தவிர சொற்றொடர் அமைப்புகளும் ஆங்கில அமைப்பை ஒத்திருப்பது நன்றல்ல. நன்றி.--இரவி (பேச்சு) 17:16, 19 சூலை 2017 (UTC)
வரவேர்கிறேன்
[தொகு]வணக்கம் ரமேஷ் அவர்களே, ஏ எஸ் டி - 18 எனும் கட்டுரை இயற்றியமைக்கு நன்றிகள். அக்கட்டுரை விக்கி நெற்களஞ்சிய திட்டத்தின் தொடர்பான கட்டுரையாகும் ஆதலால், தாங்கள் விக்கி நெற்களஞ்சிய திட்டத்தில் இனைந்து பங்களியுங்கள். அதற்கு இங்கு சென்று திட்ட உறுப்பினர்கள் என்ற பகுதியில் உங்கள் பெயரை பதிவிடுங்கள் பின்பு தொடர்ந்து இயற்றலாம். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 16:39, 03 ஆகத்து 2017 (UTC)
திருத்தம்
[தொகு]வணக்கம், அம்பை - 18 கட்டுரையின் அமைப்பையும், திருத்த வேறுபாடுகளையும் கவனியுங்கள் அக்கட்டுரையை முன்மாதிரியாக வைக்கலாம், முடிந்தவரை தொடங்கிய கட்டுரையை முழுவதுமாக தகவல் திரட்டி முழுமைப்படுத்துவது சிறந்த பண்பாகும். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 00:30, 04 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம், ஆடுதுறை - 50 (நெல்) எனும் கட்டுரை இங்கிருந்து படியெடுத்து அப்படியே இற்றைப்படுத்தல் விக்கி நடையாகாது, அதோடு பதிப்புரிமை மீறியதாக கருதப்படுவீர்.
அங்கிருக்கும் தகவல்களை திரட்டி விக்கி நடையில் இயற்றலாம் எ கா: அம்பை - 18 (நெல்) கட்டுரையை நன்கு கவனியுங்கள். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ 16:26, 04 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம், ஏ டி டீ 49 மற்றும் ஏ டி டீ 50 என இரு கட்டுரைகளையும், விக்கி மரபுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளேன் பிற தகவல்களை பின்பு சேர்த்துக்கொள்ளலாம். மறுமொழி இருப்பின் உரையாடுக. நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖ ᗗஉரையாடுக! 01:52, 16 ஆகத்து 2017 (UTC)
போட்டிக் கட்டுரைகள்
[தொகு]மின்தேக்கி கட்டுரை எந்தவொரு மேற்கோளும் இல்லாமல் உள்ளது. அதனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தயவுசெய்து மேற்கோள்களை இணைத்து மேம்படுத்தி விடுங்கள். நன்றி. @Shriheeran: --கலை (பேச்சு) 13:40, 7 ஆகத்து 2017 (UTC)
கலை அவர்களே வணக்கம் , மின்தேக்கி கட்டுரையில் மேற்கோள் மீண்டும் கொடுத்துள்ளேன். தாங்கள் இத்தனை நாட்கள் கழித்து அதனை கண்ணுற்று மதிப்பெண் குறைத்துள்ளீர்கள். குறைந்தது 15 கட்டுரைகள் விரிவாக்கம் செய்தது போதும் என்று நிறுத்திவிட்டேன். தாங்கள் என்னை மீண்டும் போட்டிக்கு அழைப்பது போல் உள்ளது. தாங்கள் அக்கட்டுரையினை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் .-- [பயனர் : TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:07, 7 ஆகத்து 2017 (UTC)
- ரமேஷ்! மின்தேக்கிக் கட்டுரையை நேற்றுப் பார்த்தபோது, மேற்கோள்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற வார்ப்புருவைக் கண்டேன். கீழே பார்த்தபோது மேற்கோள்கள் எதுவும் இருக்கவில்லை. அதனாலேயே அதனைக் கவனிக்க வேண்டி வந்தது. நீங்கள் மேற்கோள்களை இணைத்துக் கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி. கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மீண்டும் போட்டிக்கு அழைப்பதில் தவறொன்றும் இல்லையே --கலை (பேச்சு) 12:08, 8 ஆகத்து 2017 (UTC)
நன்றிகள்
[தொகு]- வணக்கம் ரமேஷ் அவர்களே
, விக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் பங்குபற்ற இணைந்தமைக்கு நன்றிகள், திட்டத்தின் கொள்கைகளை அறிந்து இங்கு அல்லது இங்கு சொடுக்கி அப்பட்டியலில் உள்ள சிவப்பு நிற தலைப்புகளில் உட்சென்று கட்டுரையை தொகுக்கலாம். முன்னதாக அதுபற்றிய தகவல்கள் திரட்டி பின்பு முதல் மூன்று வரிகளை இயற்றுங்கள் உடனுக்குடன் கவனித்து உதவி புரிகிறேன் நன்றிகள், வாழ்த்துக்கள்... --அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! : 07:24, 14 ஆகத்து 2017 (UTC)
அழைப்பு
[தொகு]வணக்கம், TNSE P.RAMESH KPM!
- தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் வகைகள் குறித்தான கட்டுரைகளைத் தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் இணைந்து வேளாண் துறையில் பிரகாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
- நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்கப் பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று செயற்படத் தங்களை வேண்டுகிறேன்.
- பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள விடயங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
[தொகு]அன்புள்ள இரமேசு,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 19:09, 18 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
[தொகு]வணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.