பயனர் பேச்சு:TNSE BORAN PDKT

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், TNSE BORAN PDKT, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மதனாகரன் (பேச்சு) 09:05, 2 மே 2017 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

வணக்கம், TNSE BORAN PDKT!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 16:45, 3 மே 2017 (UTC)[பதிலளி]

May 2017[தொகு]

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 06:15, 4 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், TNSE BORAN PDKT!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:25, 10 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம், தாங்கள் பொட்டாசியம் சயனைடு என்ற கட்டுரையை சிறந்த முறையில் உருவாக்கியுள்ளீர்கள். கட்டுரை எழுதுவது தொடர்பான உதவி தேவையெனில் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 08:13, 23 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம்.

தங்களுடை வாழ்த்துக்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.

தொடர்கட்டுரைப் போட்டியில் பங்குபெறுவதற்கு வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம் புவனேஸ்வரி! நீங்கள் தொடர்கட்டுரைப் போட்டியில் பங்குபெறுவதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் முற்பதிவு செய்திருக்கும் ஒரு கட்டுரை போட்டிக்கான பட்டியலில் இல்லை. இதனை முற்பதிவு செய்யும் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். பாருங்கள். நன்றி.--கலை (பேச்சு) 18:35, 26 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் புவனேஸ்வரி! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (வாள், ஆயுதம், லூயி பாஸ்ச்சர்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள் (எல் நீனோ-தெற்கத்திய அலைவு, பீரங்கி வண்டி) ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:22, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட வாள், ஆயுதம், லூயி பாஸ்ச்சர் கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த எல் நீனோ-தெற்கத்திய அலைவு, பீரங்கி வண்டி ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:25, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆங்கில உள்ளடக்கம் நீக்கம்[தொகு]

லூயி பாஸ்ச்சர் கட்டுரையில் நீங்கள் சேர்த்த முற்றுமுழுதாஅன ஆங்கில உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. இனிமேல் இவ்வாறு செய்யாதீர்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:38, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் புவனேஸ்வரி! நீங்கள் செய்த தொகுப்புக்கள் மீளமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யும்போது, ஆங்கில உரைப்பகுதியை அப்படியே இங்கு இட்டுவிட்டு, மொழிபெயர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால், மொழிபெயர்ப்பு முடிந்ததும், ஆங்கில உரையை நீக்க மறக்க வேண்டாம். அத்துடன் எவ்வாறு மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன, எவ்வாறு கலைக்களஞ்சிய நடையில் எழுதுவது என்பது பற்றி, ஏனையை கட்டுரைகளைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கொடுத்த மேற்கோள்கள் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்பதை அவதானித்து இருப்பீர்கள். ஆங்கிலக் கட்டுரையில் எப்படி மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தையும் பாருங்கள். மேற்கோள்கள் சரியாகக் கொடுத்தல் வேண்டும். வெறும் எண்களாகவே நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
மேலும், ஏதாவது தானியங்கி மூலம் மொழிப்பெயர்ப்பு செய்கின்றீர்களாயின், தயவுசெய்து, மீண்டும் உரையை வாசித்து, சரிபார்த்து, புரிந்துகொள்ளக்கூடிய நல்ல தமிழில் மாற்றிவிட்டு பதிவேற்றுங்கள். வேறு இடத்தில் இவற்றைச் செய்துவிட்டு, சரிபார்த்து முடித்த உரையை மட்டுமே கட்டுரையில் இணையுங்கள். உங்கள் மணல்தொட்டியை இதற்காகப் பயன்படுத்தலாம். லூயி பாஸ்ச்சர் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
எ.கா. கீழே நீங்கள் கொடுத்திருந்த தமிழாக்கத்தைத் தருகிறேன்.
Pasteur started his experiments in 1857 and published his findings in 1858 (April issue of Comptes Rendus Chimie, Béchamp's paper appeared in January issue). Béchamp noted that Pasteur did not bring any novel idea or experiments. On the other hand, Béchamp was probably aware of Pasteur's 1857 preliminary works. With both scientists claiming priority on the discovery, a dispute, extending to several areas, lasted throughout their lives.[103][104]
பாஸ்டியர் 1857 தன்னுடைய பரிசோதனைகளை தொடங்கியது மற்றும் 1858 இல் அவரது கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்ட (Comptes Rendus Chimie ஏப்ரல் பிரச்சினை, Béchamp பத்திரிகையால் பிரச்சினை ஜனவரி தோன்றினார்). Béchamp பாஸ்டியர் எந்த புதிய யோசனையை அல்லது சோதனைகள் கொண்டு இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். மறுபுறம், Béchamp ஒருவேளை பாஸ்டியுரின் 1857 பூர்வாங்க படைப்புகளை அறிந்திருந்தார். இருவரும் விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பு, ஒரு சர்ச்சை முன்னுரிமைக்கு கூறும் பல பகுதிகளில் மழுங்கிய, தங்கள் வாழ்க்கை முழுவதும் நீடித்தது. [103] [104]
அதனைக் கீழ்வருமாறு மொழிபெயர்க்கலாம். ஒப்பிட்டுப் பாருங்கள்.
பாஸ்ச்சர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப் இனுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாஸ்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது.
எனவே தயவுசெய்து தானியங்கி மொழிபெயர்ப்பை முழுமையாக நம்பாமல், உங்கள் சொந்த உரைதிருத்தத்தின் பின்னரே பதிவு செய்யுங்கள். இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து, திருத்துங்களை மேற்கொண்டால், இலகுவாகக் கட்டுரை எழுதத் தொடங்கிவிடுவீர்கள். வேறு தமிழ் விக்கிப்பீடியர்களின் உதவியைப் பெற்றால் இலகுவாக இருக்கும். நன்றி.
@Shriheeran: ஆங்கில உரையை மட்டும் நீக்கியிருக்கலாம். முழுமையாக முன்னிலையாக்கியிருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். திருத்தத்திற்கு உதவியாக இருக்கும். --கலை (பேச்சு) 20:03, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]


வணக்கம் அம்மா

திருத்தம் செய்தமைக்கு நன்றி. மேலும் நிறுவன வேலைகளுக்கு இடையில் பதிப்பினை தொடர இயலாததால் இப்பிழை ஏற்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இப்பிழை ஏற்படாதவண்ணம் மொழிப்பெயர்ப்பினை தொடருகிறேன். தொடர்ந்து தங்களது வழிகாட்டலை வழங்கி மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

கடவுச் சொல் உதவி தேவை[தொகு]

@Shanmugamp7: இப்பயனர் தன் கடவுச்சொல் ஏற்கப்படவில்லை என்றும் தொடர்புடைய மின்மடல் முகவரியையும் அணுக முடியவில்லை என்றும் தொலைப்பேசி வழி உதவி கோரினா். Phabricatorல் வழு பதிந்து மீட்க உதவ முடியுமா? அது சிரமமான வழி என்றால் புதிய கணக்கைத் தொடங்கக் கோரலாம். --இரவி (பேச்சு) 16:09, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

அது சிறிது சிரமமான வழி, அதுவுமில்லாமல் எவ்வளவு காலம் எடுக்கும் எனத் துல்லியமாக கூற இயலாது. புதிய கணக்கு துவங்கி பங்களிக்க கோரலாம், இல்லை இந்த கணக்குதான் வேண்டுமென்றால் வழு பதித்து மீட்க முயலலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 3 சூலை 2017 (UTC).[பதிலளி]

வணக்கம்.[தொகு]

மின்மடல் முகவரியின் பிழை நீக்கி பழைய பயணர் கணக்கே திறக்கப்பட்டது. தங்களின் மேலான வழிகாட்டலுக்கு நன்றி.--TNSE BORAN PDKT (பேச்சு) 11:57, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கியின் வழமைகளை தொடக்கம் முதலே புரிந்து கொண்டு அருமையான கட்டுரைகளை எழுதி பல புதிய பயனர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து அசத்தி வரும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- ThIyAGU 15:04, 17 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

கட்டுரைப் போட்டிக்கு வருக![தொகு]

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்க முன்வந்தமைக்கு நன்றி.

சில முக்கியமான குறிப்புகள்:

(இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. சில குறிப்புகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்)

  • சென்ற ஆண்டு பயிற்சி நோக்கில், அனைத்து தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்றோம். ஆனால், தற்போது நடைபெறும் போட்டியில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
  • இங்குள்ள தலைப்புகளின் கீழ் மட்டும் கட்டுரை எழுதுங்கள். தலைப்புகளைத் தேடுவது சிரமமாக இருந்தால், இங்குள்ள 10,000 தலைப்புகள் பட்டியலில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் காணுங்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான, நீங்கள் நன்கு அறிந்த துறை குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். தமிழக வரலாறு குறித்து இங்குள்ள தலைப்புகளிலும் எழுதலாம்.
  • கட்டுரை ஒவ்வொன்றும் குறைந்தது 9000 பைட்டுகள் அளவும், 300 சொற்கள் அளவும் இருக்க வேண்டும். போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் மேலே குறிப்பிட்ட அளவில் 4 அல்லது 5 கட்டுரைகளை முழுமையாக எழுதினாலே உதவியாக இருக்கும்.
  • கட்டுரை எழுதி முடித்த உடன், மறக்காமல் இந்தக் கருவியில் உங்கள் கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். அப்போது தான் நீங்கள் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் கட்டுரைகளை அங்கு வைத்து தான் மதிப்பிட இயலும்.
  • வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப் பக்கத்திலோ ஆசிரியர்களுக்கான வாட்சாப்பு குழுவிலோ கேளுங்கள்.
  • உங்கள் நண்பர்கள், மற்ற ஆசிரியர்களையும் போட்டியில் பங்கேற்க வேண்டுங்கள்.

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 11:20, 30 மே 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை![தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_BORAN_PDKT&oldid=3605586" இலிருந்து மீள்விக்கப்பட்டது