பயனர் பேச்சு:Suthir

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  வாருங்கள்!

  வாருங்கள், Suthir, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

  பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

  உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


  தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


  நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

  பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


  மேலும் காண்க:

  --சண்முகம்ப7 (பேச்சு) 12:18, 22 செப்டெம்பர் 2012 (UTC)


  வணக்கம், கம்யூனிசம் கட்டுரை ஏற்கனவே உள்ளது, அதனை மேம்படுத்த விரும்பினால் மேம்படுத்தவும். மேலும் தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதில்லை, எனவே உங்கள் Communism கட்டுரை நீக்கப்படுகிறது, மேலும் ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:18, 22 செப்டெம்பர் 2012 (UTC)

  குறிப்பு[தொகு]

  வணக்கம், சுதிர். தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகளை எழுத ஆர்வம் காட்டுவதற்கு நன்றி. என். வரதராஜன் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. அதனை விரிவாக்கலாம். கட்டுரைகளைத் தொடங்கும் முன் ஒரு முறை தேடல் பெட்டியில் தமிழில் எழுதித் தேடிப் பார்த்து விடுங்கள். கட்டுரைகளுக்குத் தமிழில் தலைப்பு வையுங்கள். ஏதேனும் ஐயம் இருந்தால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 07:11, 24 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

  தகவலுக்கு நன்றி.

  கட்டுரை[தொகு]

  வணக்கம், மான்செஸ்டர் தொழிலாளர் போராட்டம் என்ற கட்டுரை அரைகுறையாக உள்ளது. விரைவில் அதனை ஓரளவு விரிவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 11:49, 21 மே 2013 (UTC)Reply[பதில் அளி]

  அதைப் பற்றிய கூடுதல் தகவல் பெற்று விரைவில் நிறைவு செய்கிறேன். நன்றி

  கம்யூனிச அகிலம்[தொகு]

  கம்யூனிஸ்ட் அகிலம் கட்டுரையில் சேர்க்கப்பட்ட முதல் பகுதி கம்யூனிஸ்ட் அகிலம் பற்றியதல்ல. அது கம்யூனிஸ்ட் லீக் பற்றியது. எனவே கம்யூனிஸ்ட் லீக் பற்றி பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பு என்ற புதிய கட்டுரையைத் தொடங்கியிருக்கிறேன். தமிழ்த் தலைப்புப் பிழை என்றால் மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:34, 22 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]

  நன்றி[தொகு]

  கம்யூனிஸ்ட் அகிலம் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட சில வரிகள் சரியானதா-? என்பதைத்தான் கேட்டேன். கம்யூனிஸ்ட் லீக் தான் பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பான கம்யூனிஸ்ட் அகிலம் என்பது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தைகளைப் பயன்படுத்தி வேறு வேறு கட்டுரைகளாக எழுத வேண்டாம் என்பது என் கருத்து.

  கம்யூனிஸ்ட் லீக் என்ற பெயரே முதன் முதலில் தரப்பட்ட பெயர். செருமனில் Bund der Communisten என்ற பெயர் எவ்வாறு தமிழில் கம்யூனிஸ்ட் அகிலம் என்கிறீர்கள்?--Kanags \உரையாடுக 09:57, 22 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]
  ஆம் கம்யூனிஸ்ட் லீக்-கும் அகிலமும் வேறுதான்..

  தமிழ் எழுத்துகள்[தொகு]

  வணக்கம் சுதிர், நீங்கள் எழுதும் தமிழ் எழுத்துக்களில் சில வெடித்து (சிதறியது போல) திரையில் தோன்றுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? நீங்கள் எந்த எழுத்துரு அல்லது கருவியைக் கொண்டு எழுதுகிறீர்கள் என்று தெரிவித்தால், இங்குள்ள நுட்பவியலாளர்கள் உங்களுக்கு உதவ முடியும். நன்றி..--Kanags \உரையாடுக 05:38, 22 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  வணக்கம்

  நான் பயன்படுத்துவது‍ ஜிஸ்ட் ஓ டி‍ என்ற தமிழக அரசு‍ வெளியிட்ட மென்பொருள் தான் பயன்படுத்துகிறேன்..

  கட்டுரைப் போட்டி[தொகு]

  வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
  விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  தகவலுக்கு‍ நன்றி..

  மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

  வணக்கம், Suthir!

  100 sculpture.jpg

  நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

  குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  --இரவி (பேச்சு) 09:23, 3 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:32, 3 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  👍 விருப்பம்--ஜெ.மயூரேசன் (பேச்சு) 07:47, 8 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  👍 விருப்பம் ---- Mohamed ijazz laft

  தகவல் பிழை[தொகு]

  வணக்கம்! சுதிர் இடைக்குழுக்கள் என்பது வெகுஜன அரங்கம் என்கிற துணை அமைப்புகளான, தொழிளாலர், விவசாயி, மாதர், மாணவர் போன்ற அமைப்புகளுக்கும், கட்சிக்கும் இடையேயான இணைப்பு, வழிகாட்டுதல், கட்சி முடிவுகளை வெகுஜன அரங்கத்தின் பிரதிநிதிகள், கட்சியின் பொறுப்பாளர்கள் அங்கம் வகிக்கும் குழுதான் இடைக்குழு- வட்டக்குழு- ஒவ்வொரு வட்டத்திற்குமான குழு ஆகும். தயவு செய்து கலந்துரையாடவும் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 01:09, 7 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ː ːவணக்கம்.. மாவட்டக்குழுவிற்கும் கிளைகளுக்கும் இடையிலான அமைப்பு இடைக்குழு‍ என்பதுதான் சிபிஐ(எம்) கட்சியின் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெகு̬ஜன அமைப்புகள் என்பது‍ வேறு......

  சிபிஐ(எம்) கட்சியின் அமைப்பு சட்டத்தை இணைத்துள்ளேன்......

  Under Article XVI: Sub-Clause 3(b):

  State and district Party Organs, Setting up of Intermediate Committees
  
  

  (Explanation: Clause 3(b) states, “The State Committee shall decide on the various Party organs to be set up between the primary unit (the Branch) and the District or the region and shall make necessary provisions relating to their composition and functioning. This will be done in accordance with the rules laid down by the Central Committee)

  The State Committee can decide to set up intermediate committees between the primary unit and the District Committee or the region under the following rules: (a) The State Committee will decide the size of the committee to be set up.
  (b) Such a committee will be elected by the conference of delegates at that level. The committee should elect a Secretary and /or the Secretariat.
  (c) The criteria of election of delegates to the conference of the intermediate committee will be decided by the State Committee.
  (d) The intermediate committee (local, area, zonal etc.) will exercise all those functions enumerated for the State/ District Committees, their function being confined to the local area or zone under its jurisdiction.
  (e) Committees set up on an ad-hoc/nominated basis for coordination purposes will not have the general powers laid out for full-fledged elected committees. Their scope of work is to be guided by the decisions of the respective committees who appointed them.
  (f) The number of delegates to the District Conference and the conferences of committees below the district will be decided by the State Committee. --Suthir

  ஆம்! நண்பரே மாவட்டக்குழுக்களுக்கும் கட்சிக் கிளைக்கும் இடையே ஓன்றிய அளவிலான குழுக்கள், இடைக்குழுக்கள் எனபதாக அறிந்து தங்களிக்கு நான் சொன்ன தகவல் பிழையை நீக்கிவிடலாம். அன்புடன்--Yokishivam (பேச்சு) 10:43, 7 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  உங்கள் பார்வைக்கு[தொகு]

  வணக்கம் சுதிர். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் ஆங்கில விக்கி கட்டுரைகளை மேற்கோளாகத் தருகிறீர்கள். விக்கிக் கொள்கைகளின்படி அது சரியல்ல என்பதால் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  இதனைப் பார்க்கவும்: Wikipedia articles may not be used as tertiary sources in other Wikipedia articles, but are sometimes used as primary sources in articles about Wikipedia itself. --Booradleyp1 (பேச்சு) 14:49, 21 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ஆங்கிலத்திலுள்ள கட்டுரைகளில் சில பகுதிகளில் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கிறது. அதை என்ன செய்வது. அதை தமிழில் எழுதும் போது‍ அதற்கு‍ சரியான மேற்கோள்கள் கிடைப்பதில்லை. மேலும் அப்படி‍ மேற்கோள் காட்டப்படாத பகுதிகள் நீக்கப்படுவதால் தான் ஆங்கில விக்கியின் மேற்கோளை காட்டினேன். பயனர்-Suthir
  மேற்கோல்கள் இல்லை என்பதற்காக வருந்தவேண்டாம் கட்டுரையை படிப்பவர்கள் முடிநுதால் மேற்கோள்களை பதிவுசெய்து விடுவார்கள். எனது கட்டுரைகளில் நிறையவே பதிவுசெய்துள்ளனர். விக்கிப்பீடியா நம் அனைவரது கூட்டு உழைப்பு நண்பரே! நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 09:39, 22 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் மேற்கோள்கள் தரப்படாவிட்டாலும் அத்தலைப்பினை கூகுள் தேடலில் இட்டுத் தேடினீர்கள் என்றால் நிறைய இணையதளங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அந்தப் இணைய பக்கங்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்து மேற்கோள்களாக (செய்தித்தாள்கள்) அல்லது வெளி இணைப்புகளாகவோ சேர்க்கலாம். --Booradleyp1 (பேச்சு) 17:26, 22 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

  அனைவரும் வருக

  வணக்கம் Suthir!
  தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

  --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:36, 30 திசம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
  நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:06, 30 திசம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
  வணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 08:06, 16 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]
  திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:45, 30 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

  விக்கி மாரத்தான் 2015

  வணக்கம்!

  சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

  தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

  --Kanags \உரையாடுக 21:19, 8 சூலை 2015 (UTC)Reply[பதில் அளி]

  நன்றி. பங்குபெற விருப்பம்.. பதிவும் செய்துவிட்டேன். --Suthir

  விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

  Ta-Wiki-Marathon-2016.png

  வணக்கம்!

  சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

  சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

  இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

  தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

  -- இரவி
  

  தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

  15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
  ||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

  போட்டிக்காலம்
  6 மாதங்கள்
  2017 மே-ஒக்டோபர்!

  போட்டிக்காக நீங்கள்
  கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

  இங்கு
  பதிவு செய்யுங்கள்!
  விதிகளைப் பின்பற்றி
  வெற்றி பெறுங்கள்!

  --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 16 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

  தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]

  OOjs UI icon bellOn-rtl-invert.svg


  அறிவிப்பு

  போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
  போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
  போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


  --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:46, 18 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

  விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

  போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
   • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

  --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

  தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

  போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

  --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:08, 21 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

  தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

  போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
  சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

  --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:53, 31 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

  கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

  அன்புள்ள சுதிர்,

  உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

  2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

  இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

  அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

  தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

  நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

  இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

  வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

  2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

  அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

  இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

  ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

  இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

  வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

  இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

  நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)Reply[பதில் அளி]

  2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

  Greetings,

  The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

  You can also verify your eligibility using the AccountEligiblity tool.

  MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply[பதில் அளி]

  Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suthir&oldid=3184937" இருந்து மீள்விக்கப்பட்டது