பயனர் பேச்சு:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரவி, இதில் தகவல் பிழைகள் இருந்தால் திருத்தவும். -- சுந்தர் \பேச்சு 07:36, 6 ஏப்ரல் 2008 (UTC)

விக்சனரி தானியங்கித் திட்டத்திற்கு அனைவரும் வருக! -- சுந்தர் \பேச்சு 09:19, 6 ஏப்ரல் 2008 (UTC) இந்தப்பக்கத்தையும் பிற பக்கங்கள் போன்று தொகுத்து விடுங்கள். குறிப்பாக படர்க்கையில் விக்கி நடையில் எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:23, 6 ஏப்ரல் 2008 (UTC)


சுந்தர், இதை விக்கிப்பீடியா: திட்டப் பக்கமாக ஆக்கினால் நன்று. --Natkeeran 22:12, 27 ஜனவரி 2009 (UTC)
நற்கீரன், எனக்கு இதில் உடன்பாடு உண்டு. ஆனால், திட்ட வரலாற்றில் ரவியையும் என்னையும் பற்றிய தகவல்கள் உள்ளதால் தன்விளம்பரம் எனக் கருத இடம் உள்ளதால் அஞ்சினேன். (அதே வேளையில் இது போன்ற தன்னார்வ முனையங்களில் ஒவ்வொருவர் பங்களிப்பையும் கட்டாயம் பதிந்து வைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஆகையால் அந்த தகவல்களை நீக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.) மற்ற பயனர்களுக்கும் உவப்பென்றால் திட்டப் பக்கமாக்கி விடுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:07, 28 ஜனவரி 2009 (UTC)
இந்தப் பக்கத்தை நான் ஒரு குறிப்பிற்காக இட்டு வைத்திருந்தேன். இப்போது பாலச்சந்தரின் நீட்சிக்கான பக்கத்திலிருந்து இணைப்பு பெற்று ஒரு "முறைப்படியான" திட்டமாகும் வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து திட்டத்துக்கு நேரடி தொடர்புடைய தகவல்களை மட்டும் பெற்று ஒரு விக்கிப்பீடியா அல்லது விக்சனரி பக்கத்தை உருவாக்க வேண்டும். எவ்வெவ் தகவல்களைச் சேர்க்கலாம் எங்கு இடலாம் என்பது பற்றி கருத்துகள் தேவை. -- சுந்தர் \பேச்சு 08:57, 23 ஜூன் 2009 (UTC)

விக்சனரி தானியிங்கியின் விளைவு[தொகு]

 • விக்சனரியில் சுந்தர் அவர்களின் தானியிங்கி மூலம் ஏறுமுகமான எண்ணிக்கை, விக்கியின் வேறொரு தானியிங்கி மூலம் பல ஆயிரம் சொற்கள் இறங்குமுகமானது. எதனால்? அங்ஙனம் நீங்கிய சொற்களின் வரலாறுகளைப் பார்த்த பொழுது, நீக்கப்பட்ட அச்சொற்கள் ஆங்கில விக்சனிரியில் இல்லாமல் இருந்தது. இதுபோல மீண்டும் இறங்குமுகமாகமலிருக்க, எந்தெந்த விடயங்கள், புதியதாக உருவாக்கப்படும் சொற்களில் கவனிக்கப்பட வேண்டும்?
த* உழவன் 15:19, 9 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..


விளங்கவில்லை. தவறுதலாக சொற்கள் நீக்கப்பட்டதா? --Natkeeran 20:06, 9 ஆகஸ்ட் 2009 (UTC)
 • சுந்தரின் விக்சனரித் தானியங்கி மூலம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சொற்பதிவேற்றம் நடைப்பெற்றது. பின்னால், ஆங்கிலத்தானியங்கி மூலம் சொற்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் குறைந்தது. அதனால், தமிழ் விக்சனரி சொற்களின் எண்ணிக்கை தற்போது ஒருஇலட்சத்தினை விடக்குறைவு. எதனால் அங்ஙனம் குறைந்தது?த* உழவன் 06:44, 10 ஆகஸ்ட் 2009 (UTC)
த.உழவன், ஏன் எண்ணிக்கை குறைந்தது என இரவியும் நானும் குழம்பியிருந்தோம். அந்த தானியங்கி நீக்கிய ஒரு சில சொற்களை அடையாளம் காட்டுங்கள். ஏதேனும் கோளாறாக இருக்கக் கூடும். தானியங்கி இயக்குனரிடம் தெரிவித்து விட்டு ஆவன செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 06:46, 10 ஆகஸ்ட் 2009 (UTC)
அந்தத் தானியங்கி பொதுவான விக்கியிடை இணைப்புத் தானியங்கி தான். அது செயல்படாத விக்கியிடை இணைப்புகளைத்தான் நீக்கியுள்ளது. பக்கங்களை நீக்குவதாகத் தெரியவில்லை. எண்ணிக்கை மாறியதற்கு விக்கியிடை இணைப்புகள் காரணமாயிருந்தால் கோளாறு எண்ணிக்கை கூட்டுமிடத்தில் உள்ளது எனப் பொருள்படும். அறிந்து கொள்ள முற்படுவோம். -- சுந்தர் \பேச்சு 07:30, 10 ஆகஸ்ட் 2009 (UTC)

மேலும்..[தொகு]

 • 500பைட்டுகள் உள்ள ஒரு சொல் Good என்பதில் அடங்கும் என அணுமானிக்கிறேன். இக்கூற்று சரியா?
 • விக்கியிடை இணைப்புத் தானியங்கியினால், ஒவ்வொரு சொற்பக்கத்திலும் ஏறத்தாழ 20பைட்டுகள் குறைந்துள்ளது. குறைந்த 20பைட்டுகளை அதிகப்படுத்தினால், நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கிடைக்குமா?
த* உழவன் 12:29, 10 ஆகஸ்ட் 2009 (UTC)
  • உங்கள் கூற்று சரியாக இருக்கக் கூடுமென்றே நினைக்கிறேன், த.உழவன். இவற்றில் சிலவற்றுக்குத் தகுந்த உள்ளடக்கத்தைச் சேர்த்த பின்னர் ஒரு கால் மணி நேரம் கழித்து எண்ணிக்கை எவ்வளவு வருகிறது எனப் பார்ப்போம். -- சுந்தர் \பேச்சு 14:17, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

எண்ணிக்கை அதிகரித்தது.

 • இந்த தமிழ் விக்சனரியிலுள்ள பகுப்பில் 4சொற்றொடர்கள் உள்ளன. அவை சுந்தர் தானியங்கி மூலம், பதிவேற்றம் ஆனவை.
 • அவற்றின் பகுப்புகளை சொற்றொடர் என்பதால், இன்டர்விக்கி(Interwicket)தானியங்கி நீக்கியது. ஏனெனில்,அந்த 4லும், பகுப்பு:{{PAGENAME} என்றுநிரல் எழுதியிந்திங்க.
 • அவ்வாறு நீக்கிய பிறகும் கூட மொத்த பைட்டுகள், 500க்கும் மேல் இருந்தது.
 • நான் மீண்டும் அவற்றில், பகுப்புகளை மாற்றிய போது அது தமிழ் விக்சனிரியின் எண்ணிக்கையைக் கூட்டியது.
 • அச்சமயத்தில் நிகழ்ந்தவைகளை, நன்கு கவனித்தே கூறுகிறேன். இது நிகழ்ந்த நேரம். 06:15, 28 செப்டெம்பர் 2009.அப்போதைய எண்ணிக்கை மாற்றம் 99,321--> 99,326 நான் மகிழ்ந்தேன். இடையில் acerbic என்ற புதிய சொல் பதிவேறியது. (4+1+99,321=99,326).ஏன் அதிகரித்தது?
 • மேலும் ஆராய, மேலேயுள்ள 12.000 நிலுவையை தனியே காண முடியுமா?த* உழவன் 07:54, 23 டிசம்பர் 2009 (UTC)
ஒருவேளை கட்டாயம் பகுப்பு இருக்க வேண்டுமோ? -- சுந்தர் \பேச்சு 08:16, 23 டிசம்பர் 2009 (UTC)

சிறு மாற்றங்களைச் செய்யும் தானியங்கி[தொகு]

பகுப்பு இல்லாதச் சொற்களுக்கு, பகுப்பு செய்கிறேன். சிறிது நாட்களுக்குப் பிறகு, மாற்றுக்கருத்து உருவாவதால் செய்யப்பட்டப் பகுப்புச்சொற்களை, வேறொரு பகுப்புக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. (எ.கா) 100க்கும் மேற்பட்டச்சொற்களை,பெயர்ச்சொற்கள் என்ற தலைப்பில் பகுப்பாக்கினேன். பின்னர், பல மொழிகளில் தமிழ்ப் பெயர்ச்சொற்கள் எனும் பகுப்புக்கு மாற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. இது போல சிறுமாற்றங்களை, தானியங்கி மூலம் எங்ஙனம் செய்வது? தற்போதுள்ள பெயர்ச்சொற்கள் பகுப்பில் 40க்கும் மேற்பட்டச்சொற்கள் உள்ளன. இவற்றையனைத்தும் தமிழ்பெயர்ச்சொற்கள் பகுப்புக்கு மாற்ற, நான் என்ன செய்ய வேண்டும்? இதுபோல பல பகுப்புகளை மாற்றவேண்டியுள்ளது. மேலும், சில சொற்களுக்கு,<small></small>என்ற குறியீடுகளை இட வேண்டியுள்ளது. உங்களின் தானியங்கி உதவுமென நம்புகிறேன்.

த* உழவன் 16:03, 18 ஆகஸ்ட் 2009 (UTC){தொடர்புக்கு..}
விண்டோசில் இருந்து இம்மாற்றங்களைச் செய்ய விக்கித் தானுலவி உங்களுக்கு உதவும். இன்னும் பல வசதிகள் கொண்ட ஆனால் வரிக்கட்டளை இடைமுகம் மட்டுமே கொண்டது http://pywikipediabot.sourceforge.net/. -- சுந்தர் \பேச்சு 08:13, 23 டிசம்பர் 2009 (UTC)

குறைவானதன் காரணம் கண்டேன்[தொகு]

 • இத்தானியங்கியால் அதிகமான சொற்களில் பல ஆயிரம், விக்சனரி விக்கியிடைத் தானியங்கி செயல் பட்ட போது குறையத் துவங்கியது நாம் அறிந்ததே.
 • இந்த 5 மாதங்களில் பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்த போது, பின்வருவனவற்றை கண்டறிய முடிந்தது.
 • இத்தானியங்கி உருவாக்கியப் பக்கங்களில் பல ஆயிரம் கூட்டுச்சொற்கள் இருந்தன.அவற்றினைப் பதிவேற்றம் செய்யும் போது, [[en:{{PAGENAME}}]] என்பதனைச் சேர்த்து இருந்தீர்கள்.ஆங்கில விக்கியில் அக்கூட்டுச்சொற்பக்கங்கள் இல்லாத போது, அந்த விக்சனரி விக்கியிடைத் தானியிங்கி, இங்கு இதனை [[en:{{PAGENAME}}]] நீக்கியது.
 • அவ்வாறு நீங்கியப் பக்கங்களில், வேறு எந்த விக்சனரிக்கும் இணைப்பு இல்லாது இருந்தன. அதே போல வேறு எந்த தமிழ் விக்சனரி சொற்பக்கத்திருக்கும், இணைப்பு இல்லாமல் இருந்தன. இருந்த ஒரே [[en:{{PAGENAME}}]] என்ற புற இணைப்பும் நீக்கப்பட்டு விட்டதால் எண்ணிக்கைக் குறையத்தொடங்கி, பல ஆயிரம் குறைந்தன.
 • அங்ஙனம் குறைந்த பக்கங்களைத் திரும்ப கூட்ட, பல முறைகள் இருப்பினும், சிறந்தவழி பகுத்தல் தான். இது இருப்பதிலே மிக விரைவான வழி ஆகும்.

முடிவுகள்:இன்னும் ஒரு சில வாரங்களில் குறைந்த பல ஆயிரம் சொற்களைக் கூட்ட, அனைத்து ஆங்கிலக் கூட்டுச் சொற்களிலும், [[பகுப்பு:ஆங்கிலக் கூட்டுச்சொற்கள்]] என்பதனை இணைப்பதே ஆகும்.பிறகு, இப்பகுப்பில் உள்ளவற்றைத் துணைப்பகுப்பாக்கம் செய்வது எளிமையாகும்.

விக்சனரியில் எதிர் காலத்தில் இது போல நடவாமல் இருக்கவும், பலவேறு சிறப்புகள் இருக்கவும் பின்வருவற்றைப் பின்பற்ற வேண்டும். இவ்விதிகள், தற்போது தவறாமல் பின்பற்றப் படுகின்றன.

 1. ஒவ்வொரு சொல்லும் 600 பைட்டுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும்.
 2. முறையானப் பகுப்பு இருக்க வேண்டும்.
 3. கூட்டுச் சொற்களை உருவாக்கும் போது, அங்கு ஏற்கனவேயிருகும், தமிழ் பக்கங்களுடன் இணைக்க வேண்டும்.

தேவை: இதுவரை உருவாக்கப் பட்டிருக்கும் பல (50,000 சொற்களில்) சொற்களில், குறைந்தபட்சம் பகுப்புமாற்றங்களைச் செய்யும் போது, இப்போதுள்ள தமிழ் விக்சனரியின் தரம் உயரும். அதற்கு தானியங்கிகள் உதவுமென நம்புகிறேன். நீங்கள் மேற்குறிப்பிட்ட தானியங்கி இணைப்புகளை, எனக்கு பயன்படுத்தத் தெரியவில்லை. செய்வதறியாது, நிற்கிறேன்.

முன்னேற்றம்: அறிந்த படி முன்னேறியதால், தமிழ்விக்சனரி=15லிருந்து, 14 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் பல படிகள் முன்னேற, தொழில் நுட்ப அனுபவமின்மையால், மலைப்பாக இருக்கிறது. குறைந்த பட்சம் பகுப்பு மாற்றம் செய்யவாவது, தானியங்கிப் பயிற்சி கொடுக்க, உங்களை வேண்டுகிறேன். நன்றி.த* உழவன் 18:28, 15 ஜனவரி 2010 (UTC)

புற இணைப்பில் மாற்றம் தேவை[தொகு]

ஒருங்குக்குறியம்(Unicode) இல்லாதிருந்த தமிழ் இணையக் கல்விக்கழகத்திலிருந்த தரவுகளை, மேம்படுத்தி, நீங்களும் இரவியும் விக்சனரியை உயர்த்தியது, காலந்தை கடந்து நிற்கப்போகும் வரலாறு. இப்பொழுது அதில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீங்களும் அதுபற்றி எண்ணியிருப்பீர்களென்று எண்ணுகிறேன். குறிப்பாக உசாத்துணை என்ற தலைப்பிலுள்ள தொடுப்பில் இருக்கும், தமிழ் இணையக் கல்விக்கழக இணைப்பில் பிழை வருகிறது. இப்பிழை ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்களில் இருக்கிறது எனலாம். அவைகளில், சரியான புற இணைப்புக்கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நான் இதில் ஏற்படுத்தியுள்ள இணைப்பு, குறிப்பிட்ட பக்கமே செல்கிறது. ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குச் செல்ல என்ன செய்யவேண்டும்?--பயனர்:தகவலுழவன் 04:35, 2 மார்ச் 2012 (UTC)

தகவலுழவன், அவர்கள் தள வடிவமைப்பை மாற்றியுள்ளார்கள். இப்போது தேடல் முகப்பு மட்டுமே உள்ளது. எங்கேனும் உள்ளிணைப்பு வழியாக குறிப்பிட்ட தொடர்களுக்கான விளக்கப் பக்கத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என அவர்கள் தளத்தை உள்ளாய்ந்து பார்த்தேன். இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் wikt:abassi பக்கத்தில் செய்துள்ளதுபோல அந்தத் தேடற்பக்கத்துக்குத்தான் நம்மால் இணைப்புத்தர முடியும். அதை விக்கித் தானுலவி உதவியுடன் செய்யலாம். தற்போது ஸ்ரீநிவாசன் என்பவர் தமிழ் விக்கியில் உள்ள தொடர்களுக்கான ஒலிப்புக் கோப்புகளைத் தானியங்கி உதவியுடன் பொதுக்கோப்பகத்தில் ஏற்ற முயன்று வருகிறார். அந்தப் பணி முடிந்ததும் இந்த இணைப்பு மாற்றத்தையும் ஒலிக்கோப்புகளை இணைக்கும் பணியையும் சேர்த்தே தானியங்கி உதவியுடன் செய்யலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:45, 2 மார்ச் 2012 (UTC)

//ஆதாரம் ---abassi--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தேடற்பக்கம்// என்பது போல் அல்லாமல், தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி என்று தந்தாலே போதுமானது.−முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம் இரவி. அப்படி மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 12:36, 2 மார்ச் 2012 (UTC)
அம்மாற்றத்தோடு, பக்கவடிவத்தினையும் மேம்படுத்துவீர்களென்று எண்ணுகிறேன்.நிறைய பகுப்புகள், பொருத்தமற்று இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் முன்னும், கணினியியல், மரபியல் என சாய்வெழுத்தில் குறிப்புகள் இருக்கிறது அல்லவா? அது அவ்வாறு இருப்பதில், பழ.கந்தசாமி, கலை, நான் இன்னும் சிலருக்கும் உடன்பாடில்லை. இவைகள் அனைத்தினையும் கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பில், உங்கள் மேலாண்மையை விரும்பி, ஆவலுடன் காத்திருக்கிறேன். வணக்கம். பயனர்:தகவலுழவன் 05:26, 8 மார்ச் 2012 (UTC)
தானியங்கி உதவியுடன் செய்யக்கூடிய மாற்றங்களை மொத்தமாகச் செய்யலாம், தகவலுழவன். துறைவாழியான விளக்கத்தை வேறு வகையில் தர வேண்டுமா அல்லது துறைப்பெயர்களை முழுவதுமாக நீக்க வேண்டுமா? -- சுந்தர் \பேச்சு 15:52, 19 மார்ச் 2012 (UTC)
துறைப்பெயர்களைக் குறித்து, பிறரும் இங்கு கருத்திட அவர்களிடம் கேட்டுள்ளேன். எனது எண்ணங்கள் யாதெனில், தற்பொழுதுள்ள அப்பெயர்கள் தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் அடிப்படையிலானது. அதில் பெரும்பாலானவை தவறென கருதுகிறேன். செம்மொழி மாநாட்டு நன்கொடைச்சொற்களை பதிவேற்றிய போது, இரவி abacus என்ற சொல், மீன்வளம் என்ற பகுப்பில் இருப்பதைக் கண்டறிந்து கூறினார். அதன் பிறகு, பதிவேறிய சொற்களை செந்தி,கலை, ப.கந்தசாமி, நான் மேம்படுத்திய போது, பல இடங்களில் அதுபோன்ற தவறுகளை உணர்ந்தோம். எனவே, அவற்றை அவ்வப்போது, நீக்கி வருகிறோம்.பகுப்பிலும், பல தவறுகள் இருக்கின்றன.எனினும், போதிய துறைசார்ந்த வல்லுனர்களும், பங்களிப்பாளர்களும் இல்லாததால், பகுப்பில் உள்ளவற்றை அப்படியே விட்டுவிட்டு, விளக்கம் தரும் பகுதியிலுள்ள துறைசார்ந்த குறிப்புகளை நீக்குதல் நலமென்று எண்ணுகிறேன்.எனவே, தமிழ் இணையக் கல்விக் கழகத் தரவுகளை, நாம் ஓரளவு தவிர்த்தல் நலம். அதில் ஒன்று இத்துறைவாரியானக் குறிப்புகள். வணக்கம். பயனர்:தகவலுழவன் 05:46, 14 மே 2012 (UTC)

உசாத்துணை[தொகு]

தங்கள் தானியங்கியால் முன்பு ஏற்படுத்தப்பட்ட, ஏறத்தாழ75,000 விக்சனரி சொற்களில், வெளியிணைப்பு முறிந்துள்ளது. எனவே, அவ்விக்சனரி சொற்களில் உள்ள உசாத்துணை என்ற உட்பிரிவு மேம்படுத்த வேண்டும். ஏனெனில், தமிழ் இணையக்கல்விக்கழகத்தாரின் - கலைச்சொல் தொகுப்புகளில் எழுத்துருக்களை மாற்றியுள்ளதால்,இந்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி செய்ய உள்ள மாற்றத்தை வார்ப்புருவடிவத்தில் செய்தால், அனைத்து சொற்களிலும் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டிய கட்டாயமும், பணியடர்வும் வராது என்பது எனது எண்ணமாக உள்ளது. இதுகுறித்து உங்கள் எண்ணம் அறிய ஆவல். நாம் இது பற்றி, சென்னைக் கூடலில் பேசியிருக்கிறோம். ஒரு நினைவூட்டலாக இங்கு மீண்டும் தெரிவிக்கிறேன். அவற்றை சீர் செய்க.--≈ உழவன் ( கூறுக ) 04:07, 15 அக்டோபர் 2013 (UTC)

மேற்கூறிய முறிந்த 80-90ஆயிரம் வெளியிணைப்புகளைஎன்ன செய்யலாம்? நினைவூட்டலுக்காக இதனை மறுபடியும் எண்ணிப் பார்க்க, இங்கு எழுதுகிறேன். ஆவலுடன்.. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:45, 22 சூன் 2014 (UTC)