பயனர் பேச்சு:Srithern/தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணல்தொட்டி[தொகு]

ஸ்ரீதர், மணல்தொட்டி புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. ஏனைய பயனர்கள் இதனை வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ அல்லது தேவைக்கு ஏற்பவோ துப்பரவு செய்யலாம். ஆனால், புதிய பயனர்கள் தொகுத்துக் கொண்டிருக்கும் போது அதனைத் துப்பரவு செய்வது அது உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கே மாறுபட்டதாகும். இது ஒரு நினைப்பூட்டலுக்காகவே.--Kanags \உரையாடுக 20:16, 28 பெப்ரவரி 2012 (UTC)

சரி--ஸ்ரீதர் 10:21, 29 பெப்ரவரி 2012 (UTC)

வணக்கம் ஸ்ரீதரன். உடுமலை நராயணகவி கட்டுரைக்கு வழி மாற்று தந்துள்ளீர்கள். இணைக்கப் பரிந்துரை செய்திருக்கலாம். அல்லது அதிலுள்ள கருத்துகளை மற்றொரு கட்டுரையில் இணைத்துவிட்டாவது வழிமாற்று தந்திருக்கலாம். கட்டுரையை விரிவாக்க உதவியாக இருக்கும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:21, 26 மார்ச் 2012 (UTC)

நிறையத் தகவல்கள் உள்ள கட்டுரையை இவ்வாறு வழிமாற்றுவது நல்லதல்ல. அவை இரண்டையும் தகவல்கள் எதுவும் அழியாமல் இணைக்க வேண்டும். இப்போது இரண்டையும் வரலாற்றுடன் சேர்த்து இணைத்துள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 12:06, 26 மார்ச் 2012 (UTC)
சரி --ஸ்ரீதர் (பேச்சு) 15:50, 26 மார்ச் 2012 (UTC)

ஒத்தாசைப் பக்கம்[தொகு]

விக்கிப்பீடியாவில் தொகுப்பது குறித்த ஐயங்களுக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். நன்றி--இரவி (பேச்சு) 06:50, 28 மார்ச் 2012 (UTC)

--ஸ்ரீதர் (பேச்சு) 09:13, 28 மார்ச் 2012 (UTC)

Your Credo Reference account is approved[தொகு]

Good news! You are approved for access to 350 high quality reference resources through Credo Reference.

  • Fill out the survey with your username and an email address where your sign-up information can be sent. Credo will contact you within a few weeks with your login information.
  • If you need assistance, ask User:Ocaasi.
  • A quick reminder about using the account: 1) try it out; 2) provide original citation information, in addition to linking to a Credo article; 3) avoid bare links to non-free Credo pages; 4) note "(subscription required)" in the citation, where appropriate. Examples are at W:EN:WP:Credo accounts/Citations.
  • Credo would love to hear feedback at W:EN:WP:Credo accounts/Experiences
  • If you decide you no longer can or want to make use of your account, donate it back by adding your name here

Thanks for helping make Wikipedia better. Enjoy your research! Cheers, Ocaasi 19:41, 23 ஆகத்து 2012 (UTC)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:36, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:12, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:27, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:55, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Srithern/தொகுப்பு02!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:10, 2 பெப்ரவரி 2013 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 11:11, 2 பெப்ரவரி 2013 (UTC)

மாவட்ட வார்ப்புரு[தொகு]

நீங்கள் மாவட்ட வார்ப்புருவில் மாற்றங்களை செய்துள்ளிர். அந்த வார்ப்புருவின் பெயர் என்ன? வார்ப்புருவை பார்த்து என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. முன்பு Infobox Indian Jurisdiction என்ற வார்ப்புரு இருந்தது. நான் நாமக்கல் மாவட்டத்தை பார்த்துவிட்டு புரியாததால் கேட்கிறேன். நான் மாவட்டத்துக்கு சிறப்பான லாரியை Skylineல் இணைக்கலாம் என்று நினைத்தேன். --குறும்பன் (பேச்சு) 17:11, 10 பெப்ரவரி 2013 (UTC)

இப்போது சரியாகிவிட்டது
வார்ப்புரு:Infobox Indian jurisdiction ல் மாவட்ட ஆட்சியர் போன்ற தகவல்கள் தானியங்கி இணைப்புகள் முழுமையாக இல்லை எனவே Template:Navbox இணைத்துள்ளேன்--ஸ்ரீதர் (பேச்சு) 00:59, 11 பெப்ரவரி 2013 (UTC)

கோட்டார்[தொகு]

வணக்கம், இந்தக் கட்டுரையின் தகவற்பெட்டியில் ஆவி கட்டுரையிலுள்ள lat, long அளவுகளை இட்டால் கோட்டார் கடலுக்குள் (கிட்டத்தட்ட) வருகிறது. கூகுள் மேப் அளவுகளை இட்டாலும் இதே நிலைதான். ஆனால் ஆவி கட்டுரையில் சரியாக உள்ளது. என்ன பிரச்சனை என்று எனக்கு விளங்கவில்லை. என் தவறைச் சுட்டி விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:42, 22 பெப்ரவரி 2013 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

அண்மைக் காலத்தில் நீங்கள் மிகவும் முனைப்பாக பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. இது போல் பலரும் இயங்கினாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ஒருவேளை, கன்னியாக்குமரி மாணவர் பயிற்சியில் ஈடுபட்டது உங்களுக்கு கூடுதல் உந்துதலை அளித்ததா என்று அறிய விரும்புகிறேன். இது போன்ற விக்கிப்பீடியர் கூடல்கள் புதிய பங்களிப்பாளர்களைக் கொண்டு வருவதை விட ஏற்கனவே இருக்கும் பங்களிப்பாளர்களை மேலும் முனைப்பு கொள்ளச் செய்வதைக் கண்டிருக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:02, 25 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி! தங்கள் யூகம் சரியே ஆயினும் புதிய பங்களிப்பாளர்களே புதிய கண்ணோட்டம் உருவாக காரணம்--ஸ்ரீதர் (பேச்சு) 00:20, 26 பெப்ரவரி 2013 (UTC)
புதிய பங்களிப்பாளர்கள் உந்துதல் அளிக்கும் அளவுக்கு செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 10:12, 26 பெப்ரவரி 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கள்[தொகு]

வணக்கம், Srithern/தொகுப்பு02!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:32, 3 மார்ச் 2013 (UTC)

உதவி[தொகு]

வணக்கம். கிராமங்கள் பற்றிய கட்டுரைகளில் அவற்றின் இருப்பிடம் குறித்த இணைய முகவரியைக் காணும் முறையை எனக்குச் சொல்லித் தாருங்கள். எடுத்துக்காட்டாக, நத்தாநல்லூர் கட்டுரையிலுள்ள,

http://tnmaps.tn.nic.in/ இந்த இணைய தளத்தில் மாவட்டத்தை தேர்வு செய்து கிராமம் எந்த வட்டம் மற்றும் ஊராட்சி என காணலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 13:08, 31 மார்ச் 2013 (UTC)

வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி. இனிமேல் சரியான இணைப்பை என்னால் தரமுடியும் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:53, 31 மார்ச் 2013 (UTC)

ஒரு யோசனை[தொகு]

வணக்கம் நண்பரே, விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு முதன்மையான பங்கு பற்றி கூற விரும்புகிறேன். நாம் எழுதுவது பிறர் கண்ணில் படவே! அவர்கள் படிக்க, கூகுளில் தேடினால் கிடைக்க வேண்டும். அதுவே நமக்கு வெற்றி. வெவ்வேறு வழக்குகள் இருந்தாலும், வேறுபாடுகள் இருந்தாலும், மற்றோர் வழக்கை அடைப்புக்குறிக்குள் தருதல் நலம். எடுத்துக்காட்டு: 1. துடுப்பாட்டம் என்ற சொல் விக்கியில் உள்ளது என்றாலும் பரவலாக இல்லை. இந்தியத் துடுப்பாட்ட அணி என்ற கட்டுரை கடந்த 30 நாட்களில் சில நூறு தடவைகளே பார்க்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் அடைப்புக்குறிக்குள் கிரிக்கெட் அணி என்று தந்திருந்தால் பல ஆயிரம் பக்கப்பார்வைகள் கிடைத்திருக்கும். சொல்வதன் காரணம் ஸ்டெர்லைட் ஆலை என்றிருந்தால் தேடலில் முதல் முடிவாக கிடைத்திருக்கும். நிறுவனத்தின் பெயரிலேயே கட்டுரை இருக்கட்டும். கட்டுரைக்குள் முதல் வரியில் ஆலை என்ற சொல் இருந்தால் தேடலில் எளிதில் சிக்கும். அறிவுரை இல்லங்க, நினைவூட்டல், தேடலில் இங்குள்ள பெயர்கள் சிக்க வேண்டும். அவ்வளவுதான், தப்பா எடுத்துக்க வேண்டாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:58, 1 ஏப்ரல் 2013 (UTC)

சரியான யோசனைதான் நன்றி--ஸ்ரீதர் (பேச்சு) 14:29, 1 ஏப்ரல் 2013 (UTC)

சிறு தொகுப்புகள்[தொகு]

வணக்கம். தமிழக ஊர்கள் தொடர்பாக நீங்கள் செய்து வரும் மாற்றங்களைச் சிறு தொகுப்பு என குறிக்க முடியுமா? இதன் மூலம் அண்மைய மாற்றங்களில் அவற்றை மறைத்து இன்னும் கூடுதல் மாற்றங்களைக் காண முடியும். தங்கள் தொகுப்புகளை விக்கிதானுலாவி கொண்டு செய்ய முடியுமா என்றும் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:33, 10 ஏப்ரல் 2013 (UTC)

விக்கிதானுலவி கொண்டு முயன்று பார்கிறேன் நன்றி--ஸ்ரீதர் (பேச்சு) 11:38, 10 ஏப்ரல் 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Srithern/தொகுப்பு02!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

தங்களுடைய மேலான பங்களிப்பினையும், வழிகாட்டுதல்களையும் விக்கித்திட்டம் சைவத்திற்கு தந்து மேம்படுத்த உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:40, 5 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. தங்களுடைய பங்களிப்பினால் சைவமும், தமிழும் வளர வாழ்த்துகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:00, 6 மே 2013 (UTC)[பதிலளி]

கொஞ்சம் கவனிக்கவும்[தொகு]

கொண்றங்கி கீரனூர் என்பது அரசு ஆவணங்களில் உள்ளது.நான் நில அளவைத் துறையில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சார்-ஆய்வாளர் தகுதியில் பணி செய்துள்ளேன்.எனக்கு நன்கு அறிந்த தகவல்கள் தான் இருப்பினும்,விக்கியில் ஆதாரங்கள் இணைக்கப் பட வேண்டும்.தாங்கள் இருவரும்(ஸ்ரீதர் மற்றும் கனக்ஸ்)2001 மக்கள்த் தொகை கணக்கெடுப்பு ஆவணத்தை ஆய்வு செய்யவும். மேலும் பழனி வட்டத்தில் உள்ள கீரனூர் எந்த கூடுதல் பெயரும் இல்லை,ஆனால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கீரனூர் மட்டுமல்ல அந்த ஊரின் பெயர் கொண்றங்கி கீரனூர் என்பது அரசு ஆவணங்களில் உள்ளது மட்டுமல்ல அங்குள்ள அருள் மிகு மல்லீஸ்வரர் கோவில் தல வரலாறும் உள்ளது கல்வெட்டுகளும் உள்ளது.மேலும் நில கிரைய ஆவணங்களில் கொண்டறங்கி கீரனூர் என்றே பத்திரப் பதிவு செய்யப்படுகிறது. என்பதை கவனத்தில் கொள்ளவும்.
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 04:01, 22 மே 2013 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம், வார்ப்புரு:திருவண்ணாமலை மாவட்டம் -இந்த வார்ப்புரு தரும் திருவண்ணாமலை மாவட்டத்தின் உட்பிரிவுகள் (நகராட்சிகள், பேரூராட்சிகள்...) அரசு இணையதளம் [1] தரும் விபரங்களுடன் பெரிதும் மாறுபடுகிறதே? சற்றுப் பார்க்க முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:06, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--ஸ்ரீதர் (பேச்சு) 14:59, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

அடடா, கிருசுணபிரசாத் உங்கள் மகனா? கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது. கூடலில் நீங்கள் கலந்து கொள்ள இருப்பது கூடுதல் மகிழ்ச்சி :) --இரவி (பேச்சு) 13:39, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

மகன்[தொகு]

உங்களது மகன் தான் கிருஷ்னபிராசாத்தா? இது இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:46, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 11:00, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆம், தேனி மு. சுப்பிரமணி மற்றும் எஸ்ஸார் ஆகியோர் எங்கள் இருவரையும் நேரில் சந்தித்து உரையாடினர்.--ஸ்ரீதர் (பேச்சு) 14:40, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]