பயனர் பேச்சு:Sridhar G/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

-- Kanags (பேச்சு) 19:48, 26 ஏப்ரல் 2017 (UTC)

கட்டுரைத் தலைப்பு[தொகு]

சாம்சங் ஜெ 7 இவ்வாறு கட்டுரைத் தலைப்பு அமையாது, ஆங்கிலச் சொல் நீக்கப்பட்டு சாம்சங் ஜெ 7 என தலைப்பு அமைய வேண்டும். கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:42, 27 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம், Sridhar G/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 02:57, 2 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், Sridhar G/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 02:58, 2 மே 2017 (UTC)[பதிலளி]

உங்க கவனத்திற்கு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். பள்ளிகள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறீர்கள். ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரைகளையே மொழிபெயர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். இது சரியான முயற்சியே, எனினும் புதிதாக அடுத்த கட்டுரையைத் தொடங்குமுன் நீங்கள் ஏற்கனவே துவங்கிய பழைய கட்டுரைகளில் மற்ற அனுபமுள்ள பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களையும் திருத்தங்களையும் கவனிக்கவும். இது உங்களது அடுத்த கட்டுரை மேலும் விக்கித் தரத்தில் அமைய உதவும்.

கட்டுரையின் உள்ளடக்கத்தில் கட்டுரையின் பெயர் தமிழில் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டிருப்பதை அடுத்து அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் சாய்ந்த எழுத்துக்களில் இணைக்கவும்.
ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கி அவை இயக்கத்தில் உள்ளனவா என்று தெரிந்த பின்னர் இணைக்கவும்.
கட்டுரைக்குத் தொடர்பில்லாத இணையப் பக்கங்களைச் சான்றாக இணைக்க வேண்டாம்.
தேவைப்படும் உதவிகளை இங்கு உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது கட்டுரையின் பேச்சுப்பக்கங்களில் கேட்கவும்.

தயவுசெய்து உங்கள் கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் உருவாக்கியுள்ள கட்டுரைகளைச் சரிசெய்த பின்னர் புதிய கட்டுரைகளை உருவாக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:29, 8 மே 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேம்பாடு கருதி இணைக்கப்பட்டிருக்கும் வார்ப்புக்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளுக்கு செவிமடுப்பது நல்லது.--AntanO 03:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 17 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் வாழ்த்துகள்! --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:46, 17 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரவி (பேச்சு) 13:15, 17 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி கட்டுரையில் விக்கியாக்கமாக நான் செய்திருந்த மாற்றங்களையெல்லாம் நீக்கிவிட்டு, கட்டுரையை மீண்டும் முதலில் இருந்தது போலவே மாற்றியிருக்கிறீர்கள். இதன் காரணத்தையும் அவசியத்தையும் தெரிவிக்குமாறுத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தவறாது உங்கள் பதிலைப் பதிவு செய்யவும் வேண்டுகிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:47, 22 மே 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம் தவிர்க்கவும்[தொகு]

தாங்கள் உருவாக்கிய ஜூலியா (நிரலாக்க மொழி) கட்டுரையின் சில பகுதிகள் கூகுள் மொழிபெயர்ப்பில் இருந்து அப்படியே உரை திருத்தம் இன்றி அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது படிப்பதற்கு இயல்பாக இல்லை. கவனிக்க வேண்டுகிறோம். --இரவி (பேச்சு) 09:07, 26 மே 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

உங்கள் கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். அடுத்து நீங்கள் எழுதப்போகும் கட்டுரைகளுக்கு இது உதவக்கூடும்.--Kanags \உரையாடுக 09:45, 26 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக்கட்டுரைகள்[தொகு]

வணக்கம்! நீங்கள் மின்னஞ்சல் கட்டுரையை முற்பதிவு செய்து விரிவாக்கம் செய்துள்ளீர்கள். ஆனால் சமர்ப்பிக்கவில்லையே. கட்டுரையைச் சமர்ப்பிக்க இங்கு செல்லுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 22:14, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

மீண்டும் உங்கள் கவனத்திற்கு[தொகு]

  1. கட்டுரையின் உள்ளடக்கத்தில் கட்டுரையின் பெயர் தமிழில் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டிருப்பதை அடுத்து அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் சாய்ந்த எழுத்துக்களில் இணைக்கவும்,
  2. முற்றுப்புள்ளி அல்லது காற்புள்ளிகளுக்கு அடுத்து ஒரு இடைவெளிவிட்டு எழுதுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது அடுத்துவரும் கட்டுரைகளில் இவற்றைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:53, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி நிச்சயம் அடுத்த கட்டுரைகளில் இதனை சரி செய்கிறேன். நன்றி

பயனர்: Dsesringp(பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]])ஸ்ரீ (பேச்சு) 05:08, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 14:47, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]
பயனர்:Dsesringp! தயவுசெய்து மொழி கட்டுரையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களைப் பாருங்கள். விக்கியாக்கம் செய்யப்பட வேண்டி இருந்தது. மேற்கோள்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. சொற்றொடர்களும் சரியாக அமைந்திருக்கவில்லை. தயவுசெய்து அடுத்த கட்டுரையில் இவற்றைக் கவனித்துச் செய்யுங்கள். ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள். --கலை (பேச்சு) 15:40, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஆசிரியப் பயனர்கள் தங்கள் பயனர் பக்கங்களில் ஏதேனும் கட்டுரை எழுதியிருந்தால், அப்பக்கங்களை கட்டுரை வெளிக்கு நகர்த்த வேண்டாம். அவற்றை நிருவாகி ஒருவர் கவனித்து நகர்த்துவார். நன்றி.--Kanags \உரையாடுக 08:28, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

பி. எஸ். எல். வி-சி1[தொகு]

பி. எஸ். எல். வி-சி1 என்ற சவாலான தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதியமைக்கு நன்றி. இதனை இன்றைய தேர்ந்தெடுத்த கட்டுரையாக ஆசிரியர்களுக்குச் சுட்டியுள்ளேன். இக்கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனித்தால் அடுத்து தாங்கள் எழுதும் கட்டுரைகளை மேம்படுத்த உதவலாம். நன்றி. --இரவி (பேச்சு) 07:41, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

போட்டிக்கட்டுரை[தொகு]

பழக்க அடிமைத்தனம்[தொகு]

பயனர்:Dsesringp! உங்களால் விரிவாக்கப்பட்ட பழக்க அடிமைத்தனம் கட்டுரை திருத்தப்பட வேண்டி உள்ளது.

  • மேற்கோள்கள் சரியாகக் கொடுக்கப்படவில்லை / மேற்கோள் தேவைப்படும் இடங்களில் மேற்கோள் இல்லை.
  • சில சொற்றொடர்கள் தெளிவற்றதாக இருக்கின்றன / தவறான தமிழாக்கமாக உள்ளது.
  • பாதக அம்சங்கள் என்ற துணைத் தலைப்பின் கீழ் பாதிப்பிற்கான காரணிகளே கொடுக்கப்பட்டுள்ளன. அது மீண்டும் கீழே எழுதப்பட்டுள்ளது.

திருத்திய பின்னர் அறியத் தாருங்கள். --கலை (பேச்சு) 22:59, 27 சூலை 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Dsesringp! நீங்கள் ஆங்கிலக் கட்டுரைகளையே தமிழாக்கம் செய்கின்றீர்கள் என நினைக்கிறேன். அப்படியிருந்தால், அங்குள்ள மேற்கோள்களையே இணைக்கலாமே? எடுத்துக்காட்டாக பழக்க அடிமைத்தனம் மரபுவழிக் காரணியால் ஏற்படுமா என்பதற்கு எந்த மேற்கோளையும் நீங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஆங்கிலக் கட்டுரையில் மேற்கோள்கள் உள்ளன. அவற்றையே பயன்படுத்தலாமே? அத்துடன் ஏற்கனவே கூறியதுபோல் சில பகுதிகள் தெளிவற்றதாக அல்லது தவறான தமிழாக்கமாக இருக்கின்றது என நினைக்கிறேன். எ.கா. உணர்திறனுக்கான வெகுமதி என்ற பகுதியில் உள்ள அட்டவணை. அங்குள்ள தகவல்கள் சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளனவா? --கலை (பேச்சு) 22:22, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
பழக்க அடிமைத்தனம் கட்டுரையை நீங்கள் இனிமேல் திருத்த மாட்டீர்களோ என்று எண்ணி நான் திருத்தியிருந்தேன். ஏன் அவற்றை நீக்கினீர்கள் என அறியத் தர முடியுமா? நீங்கள் திருத்தங்களைக் கவனிக்காமல் அகற்றியிருக்கக் கூடும் என்பதனால் மீளமத்துள்ளேன். அந்தக் கட்டுரையை உங்கள் முற்பதிவிலிருந்து எடுத்துவிட்டு, வேறொரு கட்டுரையை விரிவாக்குங்கள். நன்றி. --கலை (பேச்சு) 16:54, 11 செப்டம்பர் 2017 (UTC)

பிளேட்டோ[தொகு]

பயனர்:Dsesringp! பிளேட்டோ கட்டுரையிலுள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடுவீர்களா? --கலை (பேச்சு) 16:37, 11 செப்டம்பர் 2017 (UTC)

நலம்[தொகு]

பயனர்:Dsesringp! நலம் கட்டுரையில் பல இடங்கள் சரியான புரிதலைக் கொடுக்காமல் உள்ளது. எ.கா. காரணிகள் என்ற தலைப்பு எதனைக் குறிக்கிறது? நலனைப் பாதிக்கும் காரணிகளையா? பொதுவான காரணிகள் என்று சொல்லி,

  • வயது (குழந்தைகள் 0 முதல் 1.5 ஆண்டுகள், இளம் குழந்தைகள் 1.5 முதல் 6 ஆண்டுகள் வரை)
  • பாலினம் (ஆண் அல்லது பெண்)
  • இனக்குழு

என்று கொடுத்துள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன? வயது நலனைப் பாதிக்கும் காரணியா?

கட்டுரையை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் திருத்தியமைக்க முடியுமா? திருத்தியமைத்த பின்னர் கூறினால், மீள்பார்வை செய்ய முடியும். நன்றி. --கலை (பேச்சு) 21:34, 9 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை

தவறுகளுக்கு மன்னிக்கவும். நான் நலம் என்ற கட்டுரையின் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்ததால் வந்த தவறு அது. தற்போது தலைப்பை சரி செய்துள்ளேன். மேலும் பொதுவான காரணிகள் என்பது Risk factor எனும் இதனோடு தொடர்புடைய கட்டுரைகளில் இருந்ததை மொழிபெயர்த்தேன். ஆனால் அதனை முழுமையாக மொழிபெயர்க்காமல் சிலவரிகளை தவிர்த்ததால் அந்த பிழைகள் வந்தது. தற்போது அது சரியாக உள்ளதா என பார்க்கவும். இல்லையெனில் பொதுக் காரணிகளை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக வேறொரு பத்தியினை மொழிபெயர்க்கிறேன். நன்றி --Dsesringp (பேச்சு) 05:42, 10 அக்டோபர் 2017 (UTC)(ஞா.ஸ்ரீதர்|பேச்சு)[பதிலளி]

பயனர்:Dsesringp! திருத்தியமைக்க முயற்சித்தமைக்கு பாராட்டுக்கள். ஆனால், இன்னமும் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாகவே உள்ளது. எ.கா. பொதுவான காரணிகளில், பாலினம் (ஆண் அல்லது பெண்) மற்றும் இனக்குழு எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் எப்படி நலனைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன என்பதைப் புரிய வைக்கும் வகையில், ஓரிரு வரிகளிலாவது ஒவ்வொரு காரணிக்கும் விளக்கம் கொடுத்தால் நல்லது. மேலும் மரபணு முன் கணிப்பு என்றும் ஒரு காரணி கொடுத்துள்ளீர்கள். இது எதனைக் குறிக்கிறது. ஆங்கிலக் கட்டுரையிலும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லையே? அதனையும் என்னவென்று கூறுவீர்களா? வெறுமனே பட்டியலிடும்போது இவ்வாறான பிரச்சனை வருகின்றது. எனவே சிறிது விரிவாக எழுதினீர்கள் என்றால் நல்லது. --கலை (பேச்சு) 20:50, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை தற்போது பொதுக்காரணி என்ற தலைப்பை நீக்கி விட்டேன். மேலும் சில வாக்கிய அமைப்பில் இருந்த சிக்கலகளையும் களைந்து விட்டேன் . பிழைகளுக்கு வருந்துகிறேன். வேறு சில பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் . நன்றி--Dsesringp (பேச்சு) 07:21, 14 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பிராங்க் லாய்டு ரைட்[தொகு]

கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை விளங்கிக்கொள்ள முடியாததாக உள்ளது. அதாவது, அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இவற்றை எங்கிருந்து பெற்றீர்கள். கொடுக்கப்பட்ட மேற்கோள்களில் கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க முடியவில்லை. கட்டுரை திருத்தப்பட வேண்டும். வெறும் அட்டவணையைக் கொடுக்காது, விளக்கங்கள் கொடுக்கப்பட்டால் நன்று.--[w[பயனர்:Kalaiarasy|கலை]] (பேச்சு) 21:58, 27 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Kalaiarasy! [[1]] இந்தப் பக்கத்தில் அட்டவணை உள்ளது. அதில் கொடுத்த சான்றுகள் ஆங்கில கட்டுரையில் உள்ளவையே. அதில் பெரும்பாலும் பெயர்கள் இருந்ததால் அதை அப்படியே எழுதியுள்ளேன். அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனை முடித்து விட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி --Dsesringp (பேச்சு) 06:49, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Dsesringp! அட்டவணையாகக் கொடுப்பது சிறந்ததே. ஆனால் போட்டிக்குச் சமர்ப்பிக்க முன்னர் தகவல்கள் சரியா என்பதைப் பாருங்கள். திருத்தம் செய்யப்பட வேண்டியன.
  • ஒரே அட்டவணை மூன்று தடவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டை நீக்க வேண்டும்.
  • அட்டவணைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பைக் கொடுத்தீர்கள் என்றால் நன்று.
  • அட்டவணையின் கட்டமைப்பு சரியாக இல்லை. நிரல்கள் முழுமையாக்கப்படவில்லை. அதாவது நிரல்களுக்கான தலைப்புக்களை எல்லா நிரல்களுக்கும் கொடுக்கவில்லை. அத்துடன் அட்டவணையின் இடைப்பகுதியில், வெறுமையான குறுக்கமான வரிசைகள் உள்ளன. அவற்றையும் நீக்க வேண்டும்.
  • நிரல்களுக்கான தலைப்புக்கள் சரி செய்யப்பட வேண்டும்.
  • நீங்கள் கொடுத்துள்ள இணைப்பிலுள்ள முழுமையான பட்டியலையே கொடுக்கலாமே. அதாவது அங்குள்ள அட்டவணையை அப்படியே எடுத்து, தமிழாக்கம் செய்யலாமே?
--கலை (பேச்சு) 09:01, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
பயனர்:Dsesringp! ஒரு அட்டவணையை வைத்துக்கொண்டு, ஏனைய இரண்டையும் நீக்கியுள்ளேன். நீங்கள் அதனைத் திருத்தலாம். நன்றி.--கலை (பேச்சு) 21:36, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை

  • அட்டவணைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளேன்
  • வெறுமையான குறுக்கமான வரிசைகள் நீக்கப்பட்டுள்ளது. நன்றி

--Dsesringp (பேச்சு) 12:25, 30 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

பிறமொழிக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது முதல் அறிமுகப் பகுதியில் கட்டுரைத் தலைப்புடன், அதன் ஆங்கிலப் பெயர், (தெரிந்தால்) மூலமொழிப் பெயர் ஆகியவை கட்டாயம் தரப்பட வேண்டும். உ+ம்: இலங்கை பற்றிய கட்டுரையில் இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා என எழுத வேண்டும். இலங்கை கட்டுரையைப் பாருங்கள். ஆனால் நீங்கள் கூவைனான் என்ற கட்டுரையில் எவ்வித தரவும் இல்லை.--Kanags (பேச்சு) 07:37, 7 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி திரு.Kanags. இனி வரும் கட்டுரைகளில் இந்த பிழை தொடராது. Dsesringp (பேச்சு) 12:34, 7 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2017[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

Bhubaneswar Heritage Edit-a-thon Update[தொகு]

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a Y mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:30, 4 திசம்பர் 2017 (UTC) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.[பதிலளி]

குறிப்பு[தொகு]

கட்டுரையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைக்க வேண்டாம். பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 21:49, 5 மார்ச் 2018 (UTC)

Fountain கருவியில் கட்டுரையைச் சமர்ப்பித்தால் அது தானே பேச்சுப் பக்க வார்ப்புருவைச் சேர்த்து விடுகிறது என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 23:26, 5 மார்ச் 2018 (UTC)

--AntanO (பேச்சு) இருவருக்கும் நன்றி. கட்டுரைகளை முன்பதிவு செய்ய உதவி கூறவும் நன்றி.Dsesringp (பேச்சு) 08:15, 6 மார்ச் 2018 (UTC)

விக்கித் தரவில் இணைப்பு[தொகு]

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளை விக்கித் தரவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:12, 9 மார்ச் 2018 (UTC)

Saagasam[தொகு]

Vanakkam Dsesringp! பிரசாந்த் நடித்த நடிகர் நாகிஸ் ஃபக்ரி என்ற படத்தில் சாகசத்தை பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் தயாரிக்க முடியுமா? இந்த கட்டுரையை நீங்கள் செய்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்! நன்றி! --178.71.172.228 12:54, 13 மார்ச் 2018 (UTC)

நண்பருக்கு வணக்கம் சாஹசம் (2017) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறீர்களாDsesringp (பேச்சு) 13:08, 13 மார்ச் 2018 (UTC)
இல்லை, நான் படம் பற்றி சொல்கிறேன் சாகசம் (திரைப்படம்) en:Saagasam நடிகர் பிரசாந்த் மற்றும் அமண்டா ரொசாரியோ நடித்திருந்தனர் இது ஜூலை படத்தின் ரீமேக். நன்றி! --178.71.172.228 13:40, 13 மார்ச் 2018 (UTC)

புரிந்தது. இந்த வாரத்திற்குள் நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே நன்றி. Dsesringp (பேச்சு) 13:46, 13 மார்ச் 2018 (UTC)

உருவாக்கி விட்டேன் நண்பரே. நாளடைவில் அதனை விரிவாக்கம் செய்வேன். நன்றிDsesringp (பேச்சு) 03:11, 20 மார்ச் 2018 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:48, 15 மார்ச் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--இரவி (பேச்சு) 08:17, 15 மார்ச் 2018 (UTC)
👍 விருப்பம்--மகாலிங்கம்
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 13:30, 15 மார்ச் 2018 (UTC)

அனைவருக்கும் நன்றி.ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 01:31, 22 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

தயை கத தனயன்[தொகு]

Dessringp! நீங்கள் படம் பற்றி ஒரு கட்டுரை செய்ய முடியும் தயை கத தனயன் நடித்த எம். ஜி. சக்கரபாணி? நன்றி! --178.71.209.141 16:37, 24 மார்ச் 2018 (UTC) தாயைக் காத்த தனயன் எனும் திரைப்படமா? நண்பரே

வேங்கைத் திட்டம் - கட்டுரைப் போட்டியில் முன்னிலை[தொகு]

வணக்கம். நடைபெற்று வரும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் தற்போதைய நிலவரப்படி முதல் இடத்தில் உள்ளீர்கள். தங்களைப் போன்ற பலரும் போட்டிக்குப் பங்களித்த கட்டுரைகளால் இந்த மாதம் மட்டும் இதுவரை 11,899 கூடுதல் பக்கப் பார்வைகளைப் பெற்றிருக்கிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பத்து இடங்களுள் இருப்பவர்கள் சென்ற ஆண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அறிமுகமானவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து முனைப்புடன் பங்களித்து தங்கள் இடத்தைத் தக்க வைத்து தங்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பரிசு வெல்லவும் இன்னும் நிறைய வாசகர்களுக்குக் கட்டற்ற அறிவைத் தமிழில் கொண்டு சேர்க்கவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:17, 27 மார்ச் 2018 (UTC)

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:56, 30 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - மார்ச்சு மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், ஸ்ரீதர். வேங்கைத் திட்டத்தின் கீழ் மார்ச்சு மாதப் போட்டியில் 53 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து முதற் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல், மே மாதமும் தொடர்ந்து மாதாந்த பங்களிப்புகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். பரிசுகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விவரத்தைத் தனிமடலில் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்துக்கு 10 இலட்சம் இந்திய உரூபாய் மதிப்பில் 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. இன்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம். இது தொடர்ந்து உங்களுக்கு ஆர்வமுடைய தலைப்புகளில் பங்களிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 21:04, 15 ஏப்ரல் 2018 (UTC)

இரவி தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. நான் நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களிடத்திலும் இந்தப் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளேன். நிச்சயம் வெற்றி பெறுவோம். பயிற்சியில் சந்திப்போம். பயிற்சி எப்போ சார் கொடுப்பீங்க (வடிவேல் பாணியில் படிக்கவும்) மகிழ்ச்சியுடன். நன்றி சகோ Dsesringp (பேச்சு) 00:25, 16 ஏப்ரல் 2018 (UTC)
பயிற்சி சூன் மாதத்துக்குப் பிறகே ஒழுங்கு செய்யப்படும் :) ஆசிரியர் குழுக்களில் இது பற்றி தெரிவித்ததற்கு நன்றி. நானும் மற்ற மாவட்ட ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:53, 16 ஏப்ரல் 2018 (UTC)

ஐயம்[தொகு]

பின்வரும் கட்டுரைகள் வேங்கைத் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட எந்தத் தலைப்புப் பட்டியலின் கீழ் உள்ளது என்று தெரிவித்து உதவ முடியுமா?

  • முத்தையா முரளிதரன்
  • ரசினிகாந்த்

நன்றி --இரவி (பேச்சு) 09:00, 16 ஏப்ரல் 2018 (UTC)

சகோ உலகளாவிய தலைப்புகள் என்பதில் இருந்தது.<ref>{{Citation|title=விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்|date=2018-04-16|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2510418|journal=தமிழ் விக்கிப்பீடியா|language=ta|accessdate=2018-04-16}}</ref> நான் தவறாகப் புரிந்து கொண்டேனா. என்னைத் தெளிவுபடுத்தவும் நன்றி.

ஆ! சரி! நான் ஆங்கிலத்தில் உள்ள 10,000 கட்டுரைகள் பட்டியலைப் பார்த்தேன். நீங்கள் அதற்கான தமிழ்ப் பட்டியலில் இருந்து எழுதியுள்ளீர்கள். இரண்டுக்கும் சிற வேறுபாடுகள் உள்ளன போல. தவறு ஏதும் இல்லை. இதே போல் தொடர்ந்து எழுதலாம். --இரவி (பேச்சு) 11:56, 16 ஏப்ரல் 2018 (UTC)

கொஞ்ச நேரத்தில் பக்கோ என ஆகிவிட்டது சகோ. நான் உங்களிடம் இது பற்றிய ஐயத்தைக் கேட்கலாம் என இருந்தேன். நீங்கள் சில நாட்கள் மதிப்பெண்கள் வழங்காததால் வேலைப்பளுவில் இருந்ததாக நினைத்து கேட்கவில்லை. இனிமேல் ஏதும் ஐயம் இருந்தால் முகநூலில், கேட்கிறேன். உண்மையைக் கூற வேண்டுமெனில் புதிய தலைப்புகளில் உள்ள தனி மாந்தர்களின் கட்டுரைகளை (துடுப்பாட்டக்காரர்கள், நடிகர்கள் உள்ளதால்) விரிவாக்கம் செய்வதற்கு எனக்கு எளிதாக உள்ளது. அதனால் தான் ஆர்வத்தினால் (ஆர்வக்கோளாறினால்) எழுதிவிட்டேன். நன்றி சகோDsesringp (பேச்சு) 12:07, 16 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - 100 கட்டுரைகள்![தொகு]

வேங்கைத் திட்டத்தின் கீழ் ஒன்றரை மாத காலத்தில் 100 செறிவான கட்டுரைகளை உருவாக்கி/விரிவாக்கி உள்ளீர்கள். இது அரிதான பணி. உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்ந்து பாராட்டுகிறேன். உங்களுக்கு என்று தனியாக சிறப்புப் பதக்கம் வடிவமைக்க நண்பர்களைக் கேட்டுள்ளேன் :) தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:00, 19 ஏப்ரல் 2018 (UTC) உங்களின் ஊக்கத்தோடு இந்தப் பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சி சகோ. Dsesringp (பேச்சு) 03:59, 20 ஏப்ரல் 2018 (UTC)

ஐ.எம்.டி.பி இணையத்தள இணைப்பு[தொகு]

வணக்கம். நீங்கள் துவக்கிய திரைப்படங்கள்/நடிகர்கள் கட்டுரைகள் சிலவற்றில் வெளி இணைப்புகளாகத் தரப்பட்ட ஐ.எம்.டி.பி இணையத்தள இணைப்புகள் இயங்காதவையாக இருந்தன. அவற்றைச் சரிசெய்திருக்கிறேன். இனிவரும் கட்டுரைகளில் அவ்வாறு நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:22, 21 ஏப்ரல் 2018 (UTC) @Booradleyp1 உதவிக்கு நன்றி . இனிமேல் ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து வெளியிணைப்புகள் சேர்க்கும் முன்பாக அந்த இணைப்பைசரிபார்க்கிறேன். நன்றி Dsesringp

கருத்து[தொகு]

இத்தொகுப்புக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யுங்கள். எ.கா: ஆங்கில எழுத்துக்களை சாய்வெழுத்தாக அமைத்தல். நன்றி. --AntanO (பேச்சு) 04:24, 29 ஏப்ரல் 2018 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள் - இதனையும் கருத்திற் கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 04:46, 29 ஏப்ரல் 2018 (UTC)

வேண்டுகோள்[தொகு]

இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தினைக் காணவும். இனிவரும் கட்டுரைகளை இதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:14, 29 ஏப்ரல் 2018 (UTC) நன்றி@Booradleyp1. நிச்சயம் இதனை இனிவரும் கட்டுரைகளில் இதனைத் தவிர்க்கிறேன். நன்றிDsesringp (பேச்சு) 11:46, 29 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


Thank you for keeping Wikipedia thriving in India[தொகு]

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 17:23, 1 மே 2018 (UTC)


வேங்கைத் திட்டம் - ஏப்ரல் மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், ஸ்ரீதர். வேங்கைத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதப் போட்டியில் மட்டும் புதிதாக 81 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து முதற் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தெரியாத போட்டி இல்லை. மே மாதமும் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியா வெற்றி வாகை சூட உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:52, 9 மே 2018 (UTC)[பதிலளி]

நன்றி சகோ. வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 01:15, 10 மே 2018 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம், சிறீதர். வேங்கைத் திட்டத்தின் கீழ் மின்னல் வேகத்தில் 200 கட்டுரைகளை எழுதிக் குவித்தமைக்கு என் அன்பான வாழ்த்துக்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியா வெற்றி வாகை சூட உதவ வேண்டுகிறேன். நன்றி. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 14:36, 12 மே 2018 (UTC) மிக்க நன்றி ஐயா. தங்களுடன் இணைந்து நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம். வாழ்க வளமுடன்.நன்றிDsesringp (பேச்சு) 15:07, 12 மே 2018 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மகாலிங்கம்

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்![தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!![தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை![தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Project Tiger Article Writing Contest[தொகு]

Congratulations! You did very well in the Project Tiger Article Writing Contest. Thanks You so much to make this contest wonderful. - Satpal Dandiwal (பேச்சு) 03:32, 1 சூன் 2018 (UTC) Thankyou so much sirDsesringp (பேச்சு) 09:39, 1 சூன் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் - மே மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், ஸ்ரீதர். வேங்கைத் திட்டத்தின் கீழ் மே மாதப் போட்டியில் மட்டும் புதிதாக 194 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து முதற் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:19, 1 சூன் 2018 (UTC) தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி .மீண்டும் எழுத தொடங்குகிறேன். வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 10:24, 2 சூன் 2018 (UTC)[பதிலளி]

தகவல்சட்டம்[தொகு]

வணக்கம், உங்கள் கட்டுரைகளில் தகவல்சட்ட நிரல்கள் இவ்வாறு ஒன்றுக்குக்கீழ் ஒன்றாக வருவதில்லை?--Kanags (பேச்சு) 07:30, 14 சூன் 2018 (UTC)[பதிலளி]

பதிப்புரிமையுள்ள படிமங்கள்[தொகு]

பொதுவாக, மிகவும் இன்றிமையாமல் தேவைப்பட்டால் ஒழிய பதிப்புரிமையுள்ள படிமங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நியாயமான பயன்பாடு என்று கருத இடம் இருக்கும் வேளையில், இங்கு கோப்பினைப் பதிவேற்ற வேண்டும். அதில் "இது பதிப்புமையுள்ள, கட்டுள்ள படைப்பு, ஆனால் நியாயமான பயன்பாடு என்று நான் நம்புகிறேன்." என்று உள்ள இரண்டாம் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து அங்கு உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். சர்கார் திரைப்படத்தின் முதல் தோற்றத்தைப் பதிவேற்றுகிறீர்கள் எனில் 250 × 400 pixels அளவு உள்ள படத்தைப் பயன்படுத்துங்கள். கூடுதல் வழிகாட்டலைத் தர அன்டனை வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:43, 22 சூன் 2018 (UTC)[பதிலளி]

இரவி குறிப்பிட்டது முறை சரியானது. தற்போது நீங்கள் பதிவேற்றிய படிமம் 900 × 1,200 அளவுள்ளது. இதனைத் தவிர்த்து குறைவான (250 × 400) அளவுள்ள படிமத்தைப் பயன்படுத்துவது ஏற்புடையது. பதிவேற்றும்போது கட்டாயம் பெறப்பட்ட மூலத்தைக் குறிப்பிட வேண்டும். இவற்றை உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இருந்து எடுப்பது ஏற்புடையது. உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இருந்து பிற தளங்கள் நகல் செய்திருந்தால், அது ஏற்புடையதல்ல. மேலும், படிமத்தின் அனுமதி (எ.கா: சுவரொட்டி, திரைப்பட விளம்பரம்) தெரிவு செய்யப்படல் வேண்டும். மேலும், எல்லாப் படிமங்களையும் நியாயமான பயன்பாடு என்பதில் கீழ் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட படிமத்தின் இணைப்பில் இருந்தோ, அது பற்றி அறிய வேண்டும் என்பதால் மூலத்தைக் குறிப்பிடல் கட்டாயமானது. நீங்கள் பதிவேற்றிய படிமத்தின் மூலம் பதிப்புரிமை பற்றி எதுவும் குறிப்பிடாததால், இதனை நீங்க இடமுண்டு. ஆனாலும், {{Non-free movie poster}} என்ற உரிமத்தின் கீழ் பயன்படுத்த இடமுண்டு. ஆனால், இது வேறு இடங்களுக்குப் பொருந்தாது. இதுபற்றிய வேறு ஐயமிருப்பின் எனக்கு ஒரு குறிப்பினை இடுங்கள். --AntanO (பேச்சு) 04:31, 23 சூன் 2018 (UTC)[பதிலளி]

கவனியுங்கள்[தொகு]

இந்த மாற்றத்திற்கேற்பக் கட்டுரைத் தொகுப்பைத் தொடருங்கள். நிரல்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே வரியில் வரக்கூடாது. உங்கள் கட்டுரைகள் அனைத்திலும் நிரல்கள அனைத்தும் ஒரே வரியிலேயே எழுதுகிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் உலாவியில் தவறா? உதவி தேவைப்படின் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags (பேச்சு) 23:24, 8 சூலை 2018 (UTC)[பதிலளி]

சகோதரருக்கு நன்றிகள். நான் ஆங்கிலக் கட்டுரையில் உள்ளதை copy செய்து paste செய்கையில் அது ஒரே வரியில் வந்தது. நான் அதை தமிழில் மாற்றி எழுதினேன். எனில் visual edit இல் எழுதினால் நிரல்கள் நீங்கள் கூறியதுபோல் வருமா அல்லது நான் என்ன செய்ய வேண்டும் என கூறவும். நன்றி. வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 04:32, 9 சூலை 2018 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

இந்த மாற்றத்திற்கேற்பக் கட்டுரைத் தொகுப்பைத் தொடருங்கள். தங்கள் உருவாக்கும் கட்டுரையில், நிரல்கள் ஒரே உள்ளது. நிரல்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்க வேண்டும். இனி உருவாக்கும் கட்டுரையிலிருந்து முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--&#3ப2;கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 15:43, 22 செப்டம்பர் 2018 (UTC) நண்பருக்கு வணக்கம். நான் ஏற்கனவே மேலே கூறியுள்ளவாறு visual edit இல் ஆங்கில கட்டுரையில் உள்ளதை copy செய்து அதனை தமிழில் மாற்றினேன். Visual edit இல் ஒவ்வொரு நிரல்களாகத்தான் இருந்தது. இனிமேல் source edit இல் எழுதுகிறேன். நன்றிி .Dsesringp (பேச்சு) 06:46, 23 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

வணக்கம், தாங்கள் பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் தொடர் தொகுப்புப் போட்டியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடர்தொகுப்பின் விதிமுறைப்படி வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக கட்டுரை 9000 பைட்டுகள் இருக்க வேண்டும். ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளின் உரைப்பகுதியை மட்டும் சற்று மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:03, 21 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:58, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா ஆசிய மாதம், 2018 கட்டுரைகள்[தொகு]

வணக்கம், தாங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் சிலவற்றில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் புதிய தலைப்புகளை மதிப்பீட்டுக் கருவியில் பதியவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:17, 4 திசம்பர் 2018 (UTC) ஆயிற்று .நன்றிDsesringp (பேச்சு) 16:08, 5 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

Etherpad Link[தொகு]

https://etherpad.wikimedia.org/p/Project_Tiger_Training_(8_December_2018). @பயனர்:TI Buhari--நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:40, 8 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை[தொகு]

வணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:38, 21 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

கவனமாக முன்தோற்றம் கண்டு செயற்படுக[தொகு]

இது போல நீக்காமல் ஒப்பம் இடுக. மறுமுறை ஒப்பமிடுக..--உழவன் (உரை) 10:12, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள்[தொகு]

வணக்கம். திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2019 எனும் கட்டுரையை கவனித்தேன். சில பரிந்துரைகளை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  1. ஆகத்து 7 என்பதற்கு விக்கி உள்ளிணைப்பு தந்துள்ளீர்கள். இது அவசியமற்றது எனக் கருதுகிறேன். ஏனெனில் வாசிப்பவர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லை. முக்கியமான பெயர்கள், நிகழ்வுகளுக்கு மட்டும் உள்ளிணைப்பு தருவது போதுமானது. கருத்திற் கொள்ளுங்கள்.
  2. குறிப்பிடத்தகுந்த நம்பகத்தன்மைக் கொண்டுள்ள செய்திநிறுவனங்களின் செய்திப் பக்கங்களை மேற்கோள்களாக குறிப்பிடுவது சிறப்பு.
  3. நாம் தமிழர் கட்சியின் இணையத்தளத்தில் உள்ள அந்தப் பக்கத்தை அவர்கள் தொடர்ந்து பராமரிப்பார்களா என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. செய்திநிறுவனங்களின் செய்திப் பக்கத்தை மேற்கோளாக குறிப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
  4. நக்கீரன் தொடர்பான மேற்கோள் வடிவமைப்பில் நான் செய்துள்ள மாற்றத்தை கருத்திற் கொள்ளுங்கள். கூடுதல் பார்வைக்கு கஜா புயல் எனும் கட்டுரையில் உள்ள மேற்கோள்களை கவனியுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:43, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m:// இங்கு எனது எண்ணங்களையும் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பிடத்தகுந்த நம்பகத்தன்மைக் கொண்டுள்ள செய்திநிறுவனங்களின்// என்பதனை அறிவதில்/அதுபற்றிய ஏற்புரைகள் பங்களிப்பாளர்களிடையே வேறுபாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, நாம் நடுநிலையுடன் மதிப்பிடுவதை விட, இயன்றவரை பல்வேறு வெளியிணைப்புகளைத் தருவதே சிறப்பு. சார்பின்மையே நமது கொள்கை. --உழவன் (உரை) 07:40, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: நண்பருக்கு வணக்கம்.தங்களின் கருத்துக்களை ஏற்கிறேன்.

எனது சில சந்தேகங்கள் (என்னைத் தெளிவுபடுத்துவதற்காகவே)

  1. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் தான் நான் அந்த வலைதளத்தைத் தேர்வு செய்தேன். அது அதிகாரப்பூர்வமாக இருக்கும் என்பதனால். தங்களின் பரிந்துரை புரிகிறது. ஆனால் மற்ற அனைத்து செய்தி நிறுவனங்களும் அதனைப் பராமரிப்பார்களா?
  2. //நக்கீரன் தொடர்பான மேற்கோளில நான்// நான் visual edit பயன்படுத்துகிறேன். அதில் title, url என்பதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வந்ததனால் அதனை மட்டுமே பயன்படுத்தினேன். தற்போது [2] மாற்றம் செய்து விட்டேன். நன்றி.

தங்கள் பரிந்துரைகள் எனது மற்ற கட்டுரைகளை மேம்படுத்த உதவும் . நன்றி. வாழ்க வளமுடன்.SRIDHAR G (பேச்சு) 08:17, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2019[தொகு]

வணக்கம். தற்போது இந்தத் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதால் எனது பரிந்துரைகள்:-

  1. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2016-21 எனும் கட்டுரையில் இந்தத் தகவல்களை சேர்த்துவிடுங்கள். இரத்து ஆனது குறித்த தகவல்களையும் இட்டுவிடுங்கள்.
  2. அதன்பிறகு, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2019 எனும் கட்டுரையை நீக்குமாறு கோரிக்கை வையுங்கள்.
  3. அநேகமாக 20 தொகுதிகளுக்கு ஒட்டுமொத்தமாக வாக்குப் பதிவு நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஒருவேளை பின்னொரு நாளில் இங்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டால், மீண்டும் கட்டுரையை எழுதலாம். நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

  1. Y ஆயிற்று --SRIDHAR G (பேச்சு) 07:07, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]


வேண்டுகோள்[தொகு]

வணக்கம். இந்தியத் துடுப்பாட்ட அணி எனும் கட்டுரையில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்து, மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:58, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று நண்பரே.SRIDHAR G (பேச்சு) 06:44, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் போட்டி[தொகு]

மஸ்தானி மற்றும் பீடைநாசினிகள் இவ்விரு கட்டுரைகளையும் திருத்தி எழுதியுள்ளேன். தயவுசெய்து சரி பார்க்கவும். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 12:43, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சரி பார்த்துவிட்டு ஏற்றுக்கொள்கிறோம். நன்றிSRIDHAR G (பேச்சு) 13:57, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பயனர்:Pavithra.A/மாப்பிள்ளை (2011 திரைப்படம்)[தொகு]

இப்பகத்தில் சோதனைக்காக கட்டுரையை எழுதுவருகிறேன். அது முடியும் முன்னேயே பக்கம் நகர்த்துவிட்டீர்கள். எனது பயனர் பக்கதின் பெயர் வெளியின் கீழ் சோதனை பக்கங்களை செய்ய உரிமையில்லையா? நான் பக்கத்தை நகர்த்த அல்லது நீக்க ஏதும் கோரிக்கை வைக்கவில்லையே. விக்கியின் நடைமுறை என்ன? -- Pavithra.A (பேச்சு) 07:28, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@பயனர்:Pavithra.A பவித்ரா இனி இவ்விதம் நடக்காது. உங்களின் பயனர் பெயர்வெளியில் சோதனைகளை நீங்கள் செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@பயனர்:Pavithra.A எனது கவனக்குறைவினால் நடந்தது. மறுபடியும் நடக்காது. நன்றி. SRIDHAR G (பேச்சு) 08:55, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:14, 14 சனவரி 2019 (UTC) தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.SRIDHAR G (பேச்சு) 11:18, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தற்காவல்[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். நன்றி. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:54, 28 பெப்ரவரி 2019 (UTC)


நன்றி@Gowtham Sampath: ஸ்ரீ (talk) 06:05, 1 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி[தொகு]

புதுப்பயனர் போட்டியில் தொடக்கம் முதல் இறுதிவரை அவ்வப்போது பயனர்களுக்குத் தேவையான உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்கிப் பங்காற்றியமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீதர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:29, 1 ஏப்ரல் 2019 (UTC)

பரிசு[தொகு]

விக்கிபீடியாவில் பரிசுகளின் விவரம் எப்பொழுது வெளியிடப்படும். 103.58.65.13 11:55, 5 ஏப்ரல் 2019 (UTC)

முடிவுகள் ஓரிரு நாளில் அரிவிக்கப்படும். பரிசுகள் இலங்கையில் நடக்கும் ஒன்றுகூடலின் போது வழங்கப்படும். நன்றி ஸ்ரீ (talk) 12:59, 5 ஏப்ரல் 2019 (UTC)

செமி ப்ரொடக்டட்[தொகு]

semi-protected வகை கட்டுரைகளில் எவ்வாறு திருத்தங்களை மேற்கொள்வது? உதவுங்கள். ராஜேந்திரசோழன் (பேச்சு) 14:03, 4 மே 2019 (UTC)[பதிலளி]

இங்கு இதுகுறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விளக்கம் தேவையெனில் கேட்கலாம் நன்றி. ஸ்ரீ (talk) 14:21, 4 மே 2019 (UTC)[பதிலளி]