பயனர் பேச்சு:Srakesh360

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Srakesh360, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Umapathy 01:18, 25 ஜூலை 2006 (UTC)

Srakesh, நீர்ம இயக்கவியல் என்ற கட்டுரையை ஆங்கிலத்தில் தொடங்கியிருக்கிறீர்கள். அதனை மொழிபெயர்ப்பதிலும் ஆர்வமுள்ள நீங்களே ஈடுபட்டால் வரவேற்கத்தக்கதாயிருக்கும். விக்கிப்பீடியாவுக்கு தொடர்ந்தும் பங்களியுங்கள். --கோபி 15:52, 27 ஜூலை 2006 (UTC)

மேலும், உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி --கோபி 15:57, 27 ஜூலை 2006 (UTC)

உங்களைப்போன்ற களத்தில் இருக்கும் தொழில்நுட்பத் திறனாளர்கள் பங்குகொள்வது அறிந்து மகிழ்கிறேன். பொறியியல் பயிலும் நாட்களில் எனக்கும் இத்துறை மிகவும் பிடித்த ஒன்று. நானும் ஆர்வமாய் இத்துறைக் கருத்துக்களை விக்கியில் சேர்க்கத் துணை புரிகின்றேன். ஏற்கனவே பல துறைகளிலும் மூக்கை நுழைத்துள்ளேன், எனினும் உங்களைப்போன்ற ஆர்வலர்களுடன் இணைந்து ஆக்கம் புரிவது தமிழ் விக்கிக்குப் பயன் அளிக்கும். வருகின்ற ஒரு சில நாட்களில் நேரம் கிடைப்பது அரிது, ஆனால் கட்டாயம் இத்துறையின் ஆக்கங்களுக்குத் துணை செய்வேன்.--C.R.Selvakumar 18:41, 27 ஜூலை 2006 (UTC)செல்வா

வாருங்கள் இராக்கேசு, நல்வரவு. உங்களின் கள அறிவு நிச்சியம் விக்கிப்பீடியாவிற்கு பலம்சேர்க்கும். --Natkeeran 17:27, 28 ஜூலை 2006 (UTC)

தமிழ்த் தலைப்புகள்[தொகு]

ராகேஷ், பக்கத் தலைப்புகளை தமிழிலேயே இடுமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி--ரவி 06:47, 28 ஜூலை 2006 (UTC)

தமிழில் நேரடியாக தட்டச்சு செய்ய[தொகு]

தமிழ் தட்டச்சு உதவி

  • இகலப்பை - http://www.tamil.net/newtamil/ekalappai_1.html எனற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
  • அல்லது முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை http://www.murasu.com/downloads/ என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
  • இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html .

http://www.speechballoon.co.uk/tamil/tamilTransliterator.htm

--Natkeeran 18:15, 28 ஜூலை 2006 (UTC)

நன்றி[தொகு]

தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்க உங்கள் வாக்களிப்பை கண்டேன். அதே முறையைப் பின்பற்றி விக்கி மூலம் தளத்திலும் உறுப்பினராகி பின் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி 07:34, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

வணக்கம் திரு.ரவி அவர்களே! விக்கியில் எவ்வாறு வாக்களிப்பது என்று எனக்கு சரியாக புரியவில்லை,தயவு செய்து வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ச.இராக்கேசு.

இராக்கேசு, என்னை ரவி என்று மட்டும் அழைத்தால் போதும் :) விக்கி செய்திகள் தளத்தில் நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருப்பதை காண்கிறேன். விக்கி மூலம் தளத்திற்கு பின்வரும் முறையைப் பின்பற்றவும்.

  1. தமிழ் விக்கி மூலம் தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு சென்று அந்த தளத்தில் பயனர் கணக்கு ஒன்று உருவாக்கவும். இது எல்லா விக்கி தளங்களிலும் பயனர் கணக்கு உருவாக்குவது போன்று தான்.
  1. பயனர் கணக்கு உருவாக்கிய பின் வாக்கெடுப்பு நடக்கும் பக்கத்தில் தமிழ் விக்கி மூலம் தொடங்குவதற்கான வாக்கெடுப்பு நடக்கும் பகுதியை பாருங்கள். அப்பகுதியில் உள்ள தொகு இணைப்பை அழுத்தி பக்கத்தை தொகுப்பு பார்வையில் பார்க்கவும். பின், support என்ற தலைப்புக்கு கீழ் நம் பிற பயனர்கள் கையெழுத்திட்டுள்ளது போல நீங்களும் கையெழுத்திடுங்கள். --~~~~ என்ற குறியை மட்டும் இட்டால் தானாகவே உங்கள் பயனர் பெயர், நேரத்துடன் கையெழுத்து இடப்படும். அவ்வளவு தான் விக்கி தளங்களில் வாக்களிக்கும் முறை.

இன்னும் தெளிவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்கள் பெயரில் நானே பயனர் கணக்கு உருவாக்கி கள்ள வோட்டு குத்தி விடுகிறேன் :) பிறகு நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றிவிடலாம்--ரவி 16:37, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் வாக்களித்திருப்பதை கண்டேன். மகிழ்ச்சியும் நன்றியும்--ரவி 17:32, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரைகளின் பகுப்பு[தொகு]

பக்கங்களில் இரட்டைச் சதுர அடைப்புக் குறிகளுக்குள் "பகுப்பு:உதாரணப் பகுப்பு" என இட்டுப் பகுப்பதே சரியானது. குறித்த பகுப்புப் பக்கங்களில் மாற்றங்கள் அவசியமில்லை. --கோபி 16:40, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

rakesh, நீங்கள் எழுதும் கட்டுரைகளை எப்படி பகுப்பது என்று அறிய Wikipedia:வகைபடுத்துதல் என்ற பக்கத்தை பாருங்கள். எடுத்துக்காட்டாக, நிக்கொலஸ் கோபர்னிகஸ் கட்டுரையை அறிவியல் அறிஞர்கள் என்ற பகுப்பில் சேர்ப்பதற்கு [[பகுப்பு:அறிவியல் அறிஞர்கள்]] என்ற குறியை கட்டுரை முடிவில் சேர்த்தால் போதுமானது. குறித்த பகுப்பு பக்கத்தை தொகுக்க வேண்டியதில்லை. பிறகு, இயன்றவரை கட்டுரைப் பக்கங்களில் ஆங்கில விக்கி உரையை ஒட்டுவதை தவிருங்கள். அவற்றை பேச்சுப் பக்கத்தில் இட்டு வேண்டும்பொழுது மொழிபெயர்த்து கட்டுரைப் பக்கங்களில் இடவும். கட்டுரைப் பக்கங்களில் தமிழ் உரை மட்டும் இருப்பதே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நன்மதிப்பை சேர்க்கும். நன்றி--ரவி 19:45, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆங்கில விக்கியிலிருந்து வெட்டி ஒட்டும் அவசியமிருந்தால் அவற்றை தொகுத்தல் பார்வை உரையாக வெட்டி ஒட்டுங்கள். நேரடியாக கட்டுரைப் பார்வையில் இருந்து உரையை எடுக்க வேண்டாம். தொகுத்தல் பார்வை உரையை ஒட்டுவதால் text formatting கெடாமல் இருக்கும்.--ரவி 19:48, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி[தொகு]

ரவி! உங்களின் வழிநடத்தல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது நன்றி. ச.இராக்கேஷ்.

தமிழ் விக்கிப்பீடியா நடை[தொகு]

தன்னிலையிலும் முன்னிலையிலும் எழுதல் தவிர்த்தல் நன்று. மேலும், புத்தக அல்லது அறிவுறுத்தல் நடை தவிர்த்தல் நன்று. விபரங்களுக்கு: Wikipedia:நடைக் கையேடு.--Natkeeran 22:14, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

இயன்றவரை ஒரு சில வரிகளாவது தருவது நன்று.[தொகு]

தலைப்பை மட்டும் இடுவது கட்டுரைகள் எண்ணிக்கையை மிகைப்படுத்தி விடும். மேலும் பல தர அளவுகளையும் பாதிக்கும். எனவே இயன்றவரை ஒரு சில வரிகள் மற்றும் ஆங்கில விக்கியின் இணைப்பை தர முயலுங்கள். நன்றி. --Natkeeran 22:38, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

பகுப்பும் கட்டுரையும்[தொகு]

பகுப்புப் பக்கத்தில் கட்டுரைகளை இடுவது பொருத்தமல்ல. தேவையெனில் மட்டும் சிறு அறிமுகம் இடலாம். ந்ன்றி. --கோபி 18:50, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srakesh360&oldid=202565" இலிருந்து மீள்விக்கப்பட்டது