பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு04
ஆறு இணைப்புகள்
[தொகு]இந்தியா பக்கத்தில் சற்று முன் உங்கள் மாற்றத்தை மேற்கோள் காட்டுகிறேன். ஒவ்வொரு ஆறின் தனிப்பக்க தலைப்பும் கங்கை ஆறு, காவிரி ஆறு, யமுனை ஆறு என்றிருக்க தேவையில்லை. அப்படியானால் ஆங்கில விக்கிபீடியாவில் ganges river, yamuna river, mississippi river, brisbane river என்றல்லவா page title இருக்க வேண்டும்? தனிப்பக்க பெயர்த் தலைப்பை மாற்றம் செய்வதற்குள், இணைப்பை மாற்றிவிட்டீர்கள்! - செழியன் 11:11, 21 சனவரி 2011 (UTC)
- நீங்கள் சொல்வதோடு உடன்படுகிறேன் (ஆறு என்ற பின்னிணைப்பு தேவையில்லை). நீங்கள் செய்த மாற்றத்தால், சிவப்பிணைப்புகள் உருவானதால் மீளமைத்தேன். :-). சற்று பொறுத்துப் பார்த்திருக்கலாம். ஐபி முகவரி என்பதால் விக்கியில் பழக்கமில்லாத பயனர் தவறுதலாக மாற்றிவிட்டார் என்று நினைத்து மாற்றி விட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 11:36, 21 சனவரி 2011 (UTC)
- செழியனின் கருத்தோடு ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் அனைத்து ஆறுகளுக்கும் இது பொருந்தாது. மிசிசிப்பி, பிறிஸ்பேன் ஆகியவற்றுக்கு ஆறு கட்டாயம் சேர்க்கப்படத்தான் வேண்டும். பொதுவாக தனித்தனியே அவ்வவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 11:41, 21 சனவரி 2011 (UTC)
- kanags சொல்வதை ஆமோதிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு பொருள் படுமாறு உள்ளவைகளுக்கு பின்னிணைப்பு சேர்க்கப்பட வேண்டும். - செழியன் 11:45, 21 சனவரி 2011 (UTC)
--Eldiaar 06:28, 25 சனவரி 2011 (UTC) அய்யா, எனக்கு இந்த வலைத்தளம் குறித்த போதிய தொழில்நுட்ப அறிவு போதாத காரணத்தால் என்னால் சரியாக இதில் பங்களிக்க முடிவதில்லை. இந்தப் பதில் எழுதும் பக்கத்தைப் பற்றிக்கூட இன்று வரை எனக்குத் தெரியாது. இருப்பினும் தங்களுடைய இன்னும் பிறருடைய புதிய செய்திகள் எனக்கு வழங்கப்பட்ட பொது கூட அவற்றிற்கு எப்படிப் பதில் எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே இன்று வரை நான் எந்த ஒரு மறுமொழியையும் தங்களுக்கு அளிக்கவில்லை. இன்று தேனி. எம். சுப்பிரமணியன் அவர்களின் எண் கிடைத்தது; அவருடன் பேசிய பிறகே எனக்கு இங்கு எப்படி எழுத வேண்டும் என அவர் கற்றுக் கொடுத்தார்.
புதிய சொற்களை அல்லது பக்கங்களைச் சேர்க்கும்பொழுது குறியீடுகளை (உம். [[, {{, #) எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த உதவிப் பக்கங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பற்றிய செய்தியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இக்கட்டுரை 2006 ஆண்டில் நல்ல மேற்கோள்கள் இல்லாத போதே, ஆங்கில விக்கிபீடியாவில் பெயருக்கருகில் நட்சத்திரம் தெரிய வேண்டி சிறப்புக் கட்டுரையாக ஆக்கப்பட்டது. அப்படியானால் தமிழ் விக்கிபீடியாவில் எல்லா கட்டுரைக்கும் பார்வை வேண்டி நட்சத்திரம் போட வேண்டியிருக்கும். சிறப்புக் கட்டுரை மீளாய்வு செய்ய நியமித்துள்ளேன். உங்கள் உதவி தேவை - செழியன் 00:32, 22 சனவரி 2011 (UTC)
இரட்டை வழிமாற்றுக்கள்
[தொகு]பாலா, பாக் சலசந்தி என்ற வழிமாற்று பாக்கு நீரிணையைச் சுட்டி இருக்க வேண்டும். பாக் ஜலசந்தியை அல்ல. அல்லாதுவிடின், பாக் சலசந்தி எனத் தேடுவோர் முதலில் பாக் ஜலசந்திக்குச் சென்று பின்னர் அதனூடாக பாக்கு நீரிணைக்குச் செல்ல வேண்டி வரும். இதனைப் பாருங்கள்: இரட்டை வழிமாற்றிகள்.--Kanags \உரையாடுக 12:20, 22 சனவரி 2011 (UTC)
- நன்றி கனக்ஸ், இரட்டை வழிமாற்றிகளை சரி செய்ய ஒரு தானியங்கி ஒன்று இயங்குகிறது. இதனை அறிந்ததிலிருந்து நான் கொஞ்சம் அசாக்கிரதையாக இருக்கிறேன் :-).--சோடாபாட்டில்உரையாடுக 12:24, 22 சனவரி 2011 (UTC)
eldiaar
[தொகு]அய்யா, எனக்கு இந்த வலைத்தளம் குறித்த போதிய தொழில்நுட்ப அறிவு போதாத காரணத்தால் என்னால் சரியாக இதில் பங்களிக்க முடிவதில்லை. இந்தப் பதில் எழுதும் பக்கத்தைப் பற்றிக்கூட இன்று வரை எனக்குத் தெரியாது. இருப்பினும் தங்களுடைய இன்னும் பிறருடைய புதிய செய்திகள் எனக்கு வழங்கப்பட்ட போது கூட அவற்றிற்கு எப்படிப் பதில் எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே இன்று வரை நான் எந்த ஒரு மறுமொழியையும் தங்களுக்கு அளிக்கவில்லை. இன்று தேனி. எம். சுப்பிரமணியன் அவர்களின் எண் கிடைத்தது; அவருடன் பேசிய பிறகே எனக்கு இங்கு எப்படி எழுத வேண்டும் என அவர் கற்றுக் கொடுத்தார்.
புதிய சொற்களை அல்லது பக்கங்களைச் சேர்க்கும்பொழுது குறியீடுகளை (உம். [[, {{, #) எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த உதவிப் பக்கங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பற்றிய செய்தியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --Eldiaar 06:29, 25 சனவரி 2011 (UTC)
Exotic
[தொகு]இந்த Exotic என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ்ப் பெயர் இருக்கிறது.
Erotic dancing என்ற பெரிய பிரிவில் விக்கியில் ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என தெரியவில்லை. கொஞ்சம் உதவவும். நன்றி.
--Eldiaar 15:04, 25 சனவரி 2011 (UTC)அய்யா வணக்கம்.
விக்கியில் என்னுடைய வினாக்களுக்கும், ஐய்யபாடுகளுக்கும் தாங்கள் மிகச் சிறப்பாக மறுமொழி அளித்துள்ளீர்கள். நன்றி! விக்கியில் நான் தொடர்ந்து பங்கேற்பதற்கு, தங்களைப் போன்ற பயனர்களின் துணை எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது. எனவே வரும் காலங்களில் நான் தங்களையும், தங்களைப் போல் உள்ள பிற பயனர்களையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள தங்களின் அணுகுமுறை என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது என்பதே உண்மை.
மேலும் தாங்கள் மிகப் பெருந்தன்மையுடன் தங்களை 'சோடா' என்று அழைத்தாலே போதும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இருப்பினும் நம்முடைய நட்பு இப்பொழுதுதான் புத்தம் புதிய ஒன்றாகப் பிறந்துள்ளது. இது மேலும் மேலும் வளரும் பொழுது நான் கண்டிப்பாக அந்த உரிமையை எடுத்துக் கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது தான் நம் விழுமிய பண்பாட்டுக்கும், பரம்பரியத்திற்கும் உகந்தது ஆகும் என்பதே என் எண்ணம்.
நான் தமிழுக்காகச் சில ஆண்டுகளாகச் சில பணிகளைச் செய்து வருகிறேன். தமிழ் மொழியைத் தூய்மைப்படுத்துவதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரிடமும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளேன். அவர்களும் என்னுடைய கோரிக்கையில் உள்ள உண்மையையும், தேவையும் முழுமையாகப் புரிந்துள்ளமையால் எனக்குச் சில வகைகளில் ஒத்துழைப்பு நல்குகின்றனர். அதே நேரத்தில் தமிழில் அயற்சொல் கலப்பு குறித்தும் என்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே என்னுடைய பணி, தமிழில் உள்ள அயர்சொர்க்களை முழுவதுமாகக் களைந்து எடுத்துவிட்டுப் பின் முழுக்க முழுக்க ஒரு தனித்தமிழை உருவாக்கவேண்டும் என்பதே ஆகும். என்னால் தொடங்கப்படும் இந்தப் பணி பின்னாளில் ஒரு மிகப் பெரிய வெற்றியைக் கூட அடையலாம்! எனவே தான் விக்கியில் இது குறித்து நான் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறேன். எனவே இதில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தெளிவாகத் தெரிவித்தீர்களே ஆனால் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அனைவரும் முழுக்க முழுக்க தனித்தமிழிலேயே எண்ணவேண்டும், அந்தத் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும்.
தாங்கள் தயவு செய்து தங்களுடைய தொடர்பு எண்ணைத் தெரிவித்திர்களானால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நம் நட்புடன் இன்ன பிற விக்கி பயனர்களின் நடபும் ஓங்கி வளரவேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.- ELDIAAR. --
பிரான்சின் “கம்யூன்”களை தமிழில் “நகரம்” என்று சொல்லலாமா? இது இணையான சொல்லா?
[தொகு]பிரான்சில் ஏறக்குறைய 37000 "Communes"/கொம்யூன்கள் உல்லது.
சிலபேர் வசிக்கும் (50 அல்ல 100 மக்கள்தொகை) கிராமத்தையும் "Commune" என்று கூரலாம், பாரீஸ் நகரத்தையும் (20 இலட்ச மக்கள்தொகை) "Commune" என்று கூரலாம்.
இந்த வார்த்தை தமிழில் உள்ள கிராமம், ஊர் அல்லது நகரத்துக்கும் சமம்.
fr.ta
- நோர்வேஜிய மொழியில் Kommune என்பது Municipality யைக் குறிக்கிறது. பிரான்சிலும் அப்படியாக இருக்குமோ?--கலை 22:07, 25 சனவரி 2011 (UTC)
- பிரான்சில் கொம்யூன் என்பது ஓர் உள்ளூராட்சி அமைப்பு. பேரூராட்சி, நகராட்சி, மாநகரசபை, நகரசபை போன்றது. இதுவே அங்குள்ள மிகக்குறைந்த ஆட்சி அமைப்பாகும். en:Communes of France. 36,781 கொம்யூன்கள் பிரான்சில் உள்ளனவாம்.--Kanags \உரையாடுக 22:31, 25 சனவரி 2011 (UTC)
- இந்தியாவில் உள்ள புதுச்சேரி ஆட்சிப்பகுதியிலும் கொம்யூன்கள் உள்ளன. இங்கு இவை சிற்றூராட்சிகள்/பஞ்சாயத்துக்களுக்கு இணையாக உள்ளன. எனவே கொம்யூன் என்பதை ஓர் உள்ளூராட்சி அமைப்பாகக் கொள்ளலாம்.--மணியன் 02:42, 26 சனவரி 2011 (UTC)
- Commune என்பதை ஊராட்சி என்று பொதுவான பொருளில் கூறலாம். தமிழில் ஊர் என்பது மக்கள் கூடி வாழும் பகுதி என்னும் பொருளில் வருவதைக் கருத்தில் கொள்ளலாம். பலவகை ஊர்கள் (சிற்றூர், பேரூர், நகரம், பெருநகரம்...) சார்ந்த ஆட்சியமைப்பையும் அதன் உள் அடக்கலாம். இத்தாலியாவிலும் உரோமை நகர உள்ளாட்சி அமைப்பு Commune என்றே அறியப்படுகிறது. --பவுல்-Paul 03:00, 26 சனவரி 2011 (UTC)
அனைவருக்கும் நன்றி. பவுல் சொல்வது போல “ஊர்” என்று பொதுவாக சொல்லி கூடவே ஒரு உள்ளாட்சி அமைப்பு என்ற விளக்கத்தையும் இனி அளித்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:29, 26 சனவரி 2011 (UTC)
நியாயமான பயன்பாடு & உங்களுக்குத் தெரியுமா ?
[தொகு]படிமம்:Kanagalingam.JPG என் குருநாதர் பாரதியார் (புத்தகம்) எனும் கட்டுரையில் நியாயமான பயன்பாடு தானே ? உங்களுக்குத் தெரியுமா 2011 பிப்ரவரி பகுதியை உருவாக்கித் தரவும்--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 18:24, 26 சனவரி 2011 (UTC)
- நியாயமான பயன்பாட்டுக் காரணம் தெளிவாக உள்ளது. இது போதும். உங்களுக்குத் தெரியுமா பெப்ரவரி உருவாக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்\உரையாடுக 18:34, 26 சனவரி 2011 (UTC)
- நன்றி பாலா ! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) \உரையாடுக18:46, 26 சனவரி 2011 (UTC)
கையெழுத்து
[தொகு]தங்களின் கையெழுத்தில் உள்ள உரையாடுக இணைப்பு வேலை செய்யவில்லை. நானும் தூக்கக் கலக்கத்தில் என்னென்னவோ செய்தேன். சரியாகவில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 19:17, 26 சனவரி 2011 (UTC)
- ஒரு பக்கத்தில் அதே பக்கத்துக்கு உள்ளிணைப்பு கொடுத்தால் - கறுப்பாக வரும் வேலை செய்யாது. என் கையெழுத்தில் உள்ள “உரையாடுக” என் பேச்சுபக்கத்துக்கு சுட்டுவதால், இங்கு மட்டும் வேலை செய்யாது.--சோடாபாட்டில்உரையாடுக 19:18, 26 சனவரி 2011 (UTC)
இப்போது புரிகிறது நான் ஏன் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று! விக்கிப்பீடியா பேச்சுப்பக்கத்தில் மணியன் வார்ப்புருவில் மாற்றம் தேவை என்று இட்டிருந்த சேதியைப் பாருங்கள் --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 19:25, 26 சனவரி 2011 (UTC)
- -) எனக்கு மணியனின் ஐடியாவுடன் உடன்பாடு இல்லை. முதல் பக்கத்தில் ஏற்கனவே எக்கச்சக்க நெரிசல் என்பது என் எண்ணம் (ஆ. விக்கி டிசைன் தான் இங்கும் பயன்படுத்துகிறோம். அங்கும் இட நெரிச்சல் உள்ளது போலவே எனக்கு தோன்றுகிறது.)--சோடாபாட்டில்உரையாடுக 19:37, 26 சனவரி 2011 (UTC)
- தங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு மலையாள விக்கி டிசைன் பிடித்துள்ளது. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 19:45, 26 சனவரி 2011 (UTC)
Tags
[தொகு]Could you help me for Tagging the images. I mean using en:WP:Friendly or any other .js application? If yes please help me to add. Many thanks --Kiran Gopi 11:40, 27 சனவரி 2011 (UTC)
- I'll import some from ml. Some localizations help may needed :) .--Kiran Gopi 11:52, 27 சனவரி 2011 (UTC)
Please help me for translating these.....
- Speedy -
- Speedy Deletion -
- Select a reason for speedy deletion -
- Inform User -
- If Possible inform the user -
- Files (Media) -
- Duplicate of existing image -
- Invalid file -
- License is not allowed in Wikipedia -
- License details not added -
- Unused Fair image -
- Fair image without Rationale -
- Invalid fair use image -
- Copy of commons image -
- Sure Copy violation -
- No use -
- No proper license -
- Common Reasons -
- No meaningful -
- Experiment -
- Vandalism -
- Already Deleted -
- Blocked User -
- History Merging -
- Page Moved -
- As per Discussion -
- Redirected to an extinct page -
- Talk page of a deleted page -
- Sub page without a main page -
- Redirected to an invalid page -
- Personal Attack -
- Advertisement -
- Copy violation -
- Redirects -
- Redirect from a main-space to other name-space -
- Spelling mistake in page name -
- Unnecessary Redirect -
- Speedy Deleted -
- Thanks --கிரண் கோபி 13:48, 27 சனவரி 2011 (UTC)
Hi Sodabottle, If possible please create this template and its /doc pages. thanks --கிரண் கோபி 05:23, 28 சனவரி 2011 (UTC)
India divisions by
[தொகு]உதவுக வார்ப்புரு:India divisions by நல்ல தலைப்புகள் வேண்டும். -- மாஹிர் 05:07, 29 சனவரி 2011 (UTC)
- செய்கிறேன் மாஹிர்.--சோடாபாட்டில்உரையாடுக 05:49, 29 சனவரி 2011 (UTC)
Template:Non-free use rationale
[தொகு]Hi do we have a template as like this? it is better to use this template for fur images. Kindly do the needful --கிரண் கோபி 07:32, 1 பெப்ரவரி 2011 (UTC)
yes we do. will use it--சோடாபாட்டில்உரையாடுக 07:37, 1 பெப்ரவரி 2011 (UTC)
- Try to include the category also, so we can trace it out all the fur images --கிரண் கோபி 07:38, 1 பெப்ரவரி 2011 (UTC)
மொழிபெயர்ப்பு
[தொகு]நீங்கள் சொல்வது சரிதான். அவசரப்பட்டு பதிந்துவிட்டேன். விக்கித் திட்டம்:மொழிபெயர்ப்பு என்று ஒன்று தொடங்கலாமா? -- மாஹிர் 15:52, 1 பெப்ரவரி 2011 (UTC)
- ஏற்கனவே அதுபோல ஒன்றை இங்கு எங்கோ கண்ட மாதிரி நினைவு. தேடிப் பார்க்கிறேன். இல்லையெனில் தொடங்குவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:00, 1 பெப்ரவரி 2011 (UTC)
- விக்கிப்பீடியா:மொழிபெயர்புக் கையேடு ? -- மாஹிர் 16:43, 1 பெப்ரவரி 2011 (UTC)
ஹோபி
[தொகு]வணக்கம், நான் விக்கியில் ஆர்வத்தோடு செயற்படுகின்றேன். ஆனால் விக்கியின் அமைப்பு முறைக்குப் புதியவன் என்பதால், எனது செயற்பாடுகளில் தவறுகள் ஏற்படுவதுண்டு. ஆகையால் முடிந்தவரை அவற்றைத் திருத்திக் கொள்ள எனக்கு உதவவும்.--ச.ஹோபிநாத் 08:14, 2 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி. நிச்சயமாக முடிந்தவரை என் செயற்பாடுகளைத் தொடர்வேன்.--ச.ஹோபிநாத் 14:26, 2 பெப்ரவரி 2011 (UTC)
தமிழ்நாடு மின்வாரியம் பிரிவுகள்
[தொகு]தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் (வரையறு) என்றும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(வரையறு)என்றும் இரண்டு பிரிவுகளாக 01-11-2010 முதல் பிரிக்கப்பட்டு விட்டது. எனவே இரு தலைப்புகளில் கட்டுரைகள் இருப்பதே சரியானது. இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டாம். இங்கு பிரிவுகள் அவசியமாகிறது. ஆனால் கட்டுரைத் தலைப்பு தமிழ் நாடு எனும் பிரிவுகளாகத் தொடங்குகிறது. தமிழ்நாட்டை கட்டுரைக்குத் தலைப்பிட்டவர் கட்டுரைத் தலைப்பில் தவறுதலாகப் பிரித்து விட்டாலும் கட்டுரையில் சரியாகப் பிரித்திருக்கிறார். எனவே கட்டுரைத் தலைப்புகளை இருவேறு பிரிவுகளாகப் பிரித்தும், தலைப்பிலுள்ள பிழையைத் தவிர்க்க சேர்த்தும் விட்டுவிடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:07, 7 பெப்ரவரி 2011 (UTC)
- இரண்டாவது கட்டுரையில் தற்போது உள்ளடக்கங்கள் ஒன்றும் இல்லை. ”தமிழ்நாடு மின்சார வாரியம்” என்ற ஒரே ஒரு வரி மட்டுமே இருந்தது. எனவே தான் வழிமாற்றினேன். அவர் உள்ளடகங்களை சேர்த்தால் கட்டுரை தானாக வளர்ந்து விடும். அவரிடம் சொல்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:15, 7 பெப்ரவரி 2011 (UTC)
தம்பிரான வணக்கம்
[தொகு]தம்பிரான் வணக்கம் கட்டுரையில் உள்ள படத்தை, நீங்கள் உருவாக்குவதற்கு ஒரு சிலமாதங்களுக்கு முன் நானும் உருவாக்கி உள்ளேன். இரு கோப்புகளில் ஒன்றை, எப்படி நீக்கலாமா? --த* உழவன் 08:58, 8 பெப்ரவரி 2011 (UTC)
- இப்போதைக்கு இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும். இவற்றை விட நல்ல தெளிவான படம் உள்ள புத்தகத்தை கோவை நூலகத்தில் பார்த்தேன். அதனை ஒளிவருடி, இரண்டையும் விட நன்றாக வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதைக்கு இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவோம். --சோடாபாட்டில்உரையாடுக 09:04, 8 பெப்ரவரி 2011 (UTC)
- சரி.நூலக ஆவணங்களை நாம் காணும் போது, நன்றாக செய்ய(நிழற்படக் கருவி மூலம்) கற்று வருகிறேன். பிறகு தெரிவிக்கிறேன். வணக்கம்.--த* உழவன் 01:26, 10 பெப்ரவரி 2011 (UTC)
விக்கிப்பீடியர் அறிமுகம்
[தொகு]சோடாபாட்டில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் கொடுக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:27, 12 பெப்ரவரி 2011 (UTC)
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் சிலர் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த முக்கியப் பயனர்களில் தாங்களும் ஒருவராக இருப்பதால் தங்கள் குறிப்புகளை படத்துடன் சேர்த்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:58, 10 மார்ச் 2011 (UTC)
- நைசாக நழுவி விடலாம் என்றிருந்தேன்:-). ஒரு ரெண்டு மூன்று ரவுண்டு போய் வருவோம் புதிய பயனர்களை காட்டி விட்டு என் பக்கம் வரலாமே. (என் முகத்தை விக்கிப்பீடியாவுக்கு என அண்மைக் காலத்தில் பல முறை வெளியே காட்டிவிட்டதால் உடனே மீண்டும் முகத்தைக் காட்ட தயக்கமாக உள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 04:04, 10 மார்ச் 2011 (UTC)
நைசாக நழுவி விடலாம்.... சோடாபாட்டில் பார்த்தீர்களா? விக்கிப்பீடியர் அறிமுகத்தில் விக்கிப்பீடியா நடுநிலைமைக் கொள்கையிலிருந்து விலகப் பார்க்கிறீங்க. விலக விடமாட்டோம். தங்கள் அறிமுகம் வரும்வரை போராட்டம் தொடரும்--P.M.Puniyameen 06:20, 11 மார்ச் 2011 (UTC)
Please, could you translate en:Podolsk into தமிழ்? Naturally if you have available time!
[தொகு]Good day to you! Could you, please, translate into தமிழ் the article, containing two-three sentences, about this city in Russia? I’d like to thank you in advance :)--Переход Артур 10:56, 15 பெப்ரவரி 2011 (UTC)
கெல்டிக்
[தொகு]சோடாபாட்டில், கெல்டிக் எனும் கட்டுரையை எழுதியப்பின்னர் தான். கெல்டியர் ஏற்கெனவே ஒரு கட்டுரை எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். எவ்வாறு இணைப்பது? அல்லது நீங்களே ஆவனச்செய்துவிடுங்கள். நன்றி! --HK Arun 07:37, 16 பெப்ரவரி 2011 (UTC)
- இரு கட்டுரைகளையும் வரலாறுகளையும் இணைத்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 08:16, 16 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி! --HK Arun 08:21, 16 பெப்ரவரி 2011 (UTC)
பிரிட்டன்
[தொகு]"பிரிட்டன்" எனும் சொல்லானது, (Britons, Not Britain) பிரித்தானியாவின் பூர்வக் கெல்டிக் இனகுழுமத்தினரை உரோமர் அழைத்த ஒரு சொல்லாடலாகும். அதனை எழுதுவதற்கு பிரிட்டன் என இணைப்பு வழங்கி முற்பட்டால், அது ஐக்கிய இராச்சியத்திற்கான வழிமாற்றாக உள்ளது. சற்று பார்க்கவும். --HK Arun 09:02, 16 பெப்ரவரி 2011 (UTC)
- பிரிட்டன் என்பதை இப்போதைக்கு ஒரு பக்கவழிமாற்றாக மாற்றியுள்ளேன். நமது உச்சரிப்பிலுள்ள ஒற்றுமைகளால் Briton/Britain என்பதை எப்படி தமிழில் வெவேறாக எழுத்துப்பெயர்ப்பது என்று தெரியவில்லை. (பிரிட்டன் என்பது Britain ஐக் குறிக்கப் பரவலாக பயனபடுத்தப்படுவதால் குழப்பமாக உள்ளது). தற்காலிகமாக பிரிடோன் என்று உருவாக்குங்கள். ஆலமரத்தடியில் கலந்தாலிசித்து விட்டு எப்படி இரண்டையும் வேறுபடுத்துவது முடிவு எடுப்போம். பிற பயனர்களின் ஐடியாவும் தேவைப்படுகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 09:11, 16 பெப்ரவரி 2011 (UTC)
சோடாபாட்டில் செய்தது போல பக்கவழிமாற்றம் நல்லது. ஆனாலும், செல்ட்டிக் இனத்துப் பூர்வ குடிகளை பிரிட்டனிய மக்கள் அல்லது பிரிட்டனியர்' எனத் தமிழில் கூறலாம். பிரிடோன் என எழுதுவது தவறு.--Kanags \உரையாடுக 09:20, 16 பெப்ரவரி 2011 (UTC)
battle and quarrel
[தொகு]Hi,
Just curious to know, we can say that a "quarrel" as "Sandai" but a battel is not "sandai" .it is a war that is "por" correct me if i am wrong. --R.srinivaas 11:48, 16 பெப்ரவரி 2011 (UTC) we say "india suthanthira por" not "india suthanthira sandai"
http://ta.wiktionary.org/wiki/battle --R.srinivaas 11:51, 16 பெப்ரவரி 2011 (UTC)
- சண்டை is a context sensitive word. It can be used to denote various conflicts of differing scale. Historically "battle" has been translated as "சண்டை” in text books, so we continue to use it in that context. Besides we need to differentiate between war and battle clearly. (a war consists of many battles). And war is always translated as ”போர்”. as we cannot use ”போர்" to denote both battle and war, we are using "சண்டை”
In your example cited; "india suthanthira por" = Indian war of independence and not indian battle of independence. in millitary history there is a clear differentiation between war and battle. Thus
war =போர் battle = சண்டை
--சோடாபாட்டில்உரையாடுக 11:54, 16 பெப்ரவரி 2011 (UTC)
- Clarifying more - battle as a word can be translated as "போர்”. But in military history we need different words to denote "war" and "battle". are two different things. War is the larger component and consists of several battles. So we cannot use the word ”போர்” to describe both "war" and "battle". Since ”போர்” is always translated as ”war" and viceversa, we need a different word for "battle". The current practise is to use ”சமர்”, “முரண்” or "சண்டை”. Tamil nadu text books use ”சண்டை” while srilankan tamils use "சமர்”. either of these are fine but not ”போர்”. becase of the necessity to distinguish between war and battle.
- e.g
- "battle of cuddalore is part of seven years war". if we translate this we need two separate words for war and battle. thus the usage of சண்டை/சமர்.
--சோடாபாட்டில்உரையாடுக 12:05, 16 பெப்ரவரி 2011 (UTC)
i agree, is wiktionary entry wrong ?y it deos specify போர் ?--R.srinivaas 12:53, 16 பெப்ரவரி 2011 (UTC)
- Not wrong; but lacking in context. in a non-millitary context battle can be translated as "போர்”. e.g he battled against the corrupt system = அவர் ஊழல் மலிந்த அமைப்பினை எதிர்த்துப் போராடினார். Have to add the context there. i will do it later.--சோடாபாட்டில்உரையாடுக 13:55, 16 பெப்ரவரி 2011 (UTC)
- Battle = சமர்
- Battlefield = சமர்களம்
என்பது பொருத்தமானது என நினைக்கிறேன். --HK Arun 14:04, 16 பெப்ரவரி 2011 (UTC)
இரண்டாம் உலகப் போர்
[தொகு]- Nanking Massacre
- Contest to kill 100 people using a sword
- Second Sino-Japanese War
- Easter Sunday Raid
இவற்றையும் உங்கள் உபோ 2 தொடரோடு சேர்த்துக் கொள்ளவும். நன்றி. --Natkeeran 00:48, 19 பெப்ரவரி 2011 (UTC)
- 1 4 and 3 பசிபிக் போரின் பகுதியாக எழுத இருக்கிறேன். 2 ஐ போர்க் குற்றங்களின் பகுதியாக எழுதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 20 பெப்ரவரி 2011 (UTC)
Tamil -
[தொகு]can you tell me a suitable title for "Smart grid" in tamil http://en.wikipedia.org/wiki/Smart_grid
- சூட்டிகை மின்வலை அல்லது சூட்டிகை மின்தொகுப்பு. personally, i prefer the former . But we can use both names. Use any one as the article title and the other as a redirect.--சோடாபாட்டில்உரையாடுக 11:59, 23 பெப்ரவரி 2011 (UTC)
- நுண்ணறி மின்வலை
- நுண்ணறி is better. its more apt. Thanks 216.*--சோடாபாட்டில்உரையாடுக 14:29, 23 பெப்ரவரி 2011 (UTC)
- Thanks--R.srinivaas 14:39, 23 பெப்ரவரி 2011 (UTC)
Re:machine translations
[தொகு]Hello!, hey i can't get nothing, I made a request and nobody tell me nothing, I don't know what to do.--X4v13r3 06:54, 7 ஏப்ரல் 2011 (UTC)
- Thank you very much for your cool disposition, I appreciate it, have an excellent day, best wishes, bye! --X4v13r3 19:53, 7 ஏப்ரல் 2011 (UTC)