பயனர் பேச்சு:Sivakosaran/தொகுப்பு 5

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிக்கோப்பை 2017[தொகு]

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:35, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 12 மார்ச் 2017 (UTC)

நடுவர் பணிகள்[தொகு]

தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக தாங்கள் செய்ய வேண்டியவை பற்றி...

நிச்சயம் செய்யவேண்டியவை
  • இங்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று Judge பொத்தானை அழுத்தி நடுவர்ப்பணியை மேற்கொள்ளல்.
  • அங்கு, குறிந்த பயனர் தானா விரிவாக்கியுள்ளார் என்பதை 'வரலாற்றைக் காட்டவும்' பக்கத்திற்கு சென்று பார்த்தல்.
  • அவரால் குறித்த கட்டுரையில் இடம்பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானித்தல்
  • அவரால் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை இப்பட்டியலில் உள்ளதா எனவும், விதிகளுக்கு உட்படுகின்ரதா எனவும் பரிசீலினை செய்தல்
  • இறுதியாக விரிவாக்கப்பட்ட கட்டுரை போட்டிக்கு ஏற்புடையதாயின் [இப்பட்டியலில் இருந்து அக்குறித்த கட்டுரையை நீக்குதல் அல்லது வெட்டுதல்'
செய்யக்கூடியவை
  • போட்டியாளர்களுக்கு ஆலோசனைகளை அவர்கள் கேட்காமலேயே வழங்குதல்

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 9 ஏப்ரல் 2017 (UTC)

தங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுக்கள் கருதி தற்காலிகமாக நடுவர் பணியிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிக்க விரும்புகின்றேன். ஆட்சேபனை இருப்பின் குறிப்பிடுங்கள். அருள்கூர்ந்து இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்க! நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:32, 4 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! நடுவர் பணியிலிருந்து விலக்குவது என்பது எல்லாம் அவசியமில்லை என நினைக்கிறேன். சிவகோசரன் தனக்கு வேலைப்பளு என்றும், அவருக்கு நடுவர்பணி செய்வது கடினம் என்றும் கூறியிருக்கிறாரா? இல்லாவிட்டால் எதற்கு? நீங்கள் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதாகத் தோன்றுகிறது. ஓக்டோபர்வரை போட்டி தொடரப்போகும் நிலையில், அவருக்கு நேரம் கிடைக்கும்போது பங்களிப்பார்தானே. மேலும் போட்டி விதிகளில் மாற்றம் போன்ற விடயங்களை, ஏனையோருடன் கலந்தாலோசிக்காமல் செய்ய வேண்டாம். நன்றி. --கலை (பேச்சு) 14:54, 4 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, அப்படியே ஆகட்டும்! அத்துடன் விதிகள் மாற்றம் தொடர்பில் நான் போட்டியின் பேச்சுப்பக்கத்தில் இட்ட கருத்துக்கு மறுமொழி அளிக்க வேண்டுகின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:06, 4 மே 2017 (UTC)[பதிலளி]
கருத்துகளுக்கு நன்றி கலை மற்றும் ஸ்ரீஹீரன். ஆம், தற்போதுள்ள வேலைப்பளு காரணமாக என்னால் அதிகளவு உதவ முடியாதுள்ளது. எனினும், ஆகத்து வரை அவ்வப்போதும், அதன் பின்னர் ஓரளவு அதிகமாகவும் உதவ முடியும். நான் விக்கிப்பீடியாவில் அதிகம் கருத்திடாவிட்டாலும் உரையாடல்களைத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். முடிந்தளவு நடுவர் பணிகளைச் செய்வேன். புரிதலுக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 00:00, 7 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார் ஆகியோருக்கு வணக்கம். இன்று முதல் என்னால் விக்கியில் இப்போட்டி நடுவர் பணிகளில் கூடுதலாகப் பங்கேற்க முடியும். போட்டியை மிகச்சிறப்பாக வழிநடத்தும் தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! --சிவகோசரன் (பேச்சு) 14:37, 2 செப்டம்பர் 2017 (UTC)

மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:01, 3 செப்டம்பர் 2017 (UTC)
👍 விருப்பம் மகிழ்ச்சி. --கலை (பேச்சு) 14:23, 3 செப்டம்பர் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]

ஆதரவுக்கு நன்றி, கருத்துக்கணிப்புப் படிவத்தில் இருக்கக்கூடிய கேள்விகள் சிலவற்றைக் குறிப்பிடுவீர்களா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 26 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedia-LK[தொகு]

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman 10:56, 30 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:07, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 21 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இங்குள்ள கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:54, 23 மே 2017 (UTC)[பதிலளி]

இரவி, ஆகத்து மாதம் வரை பணிச்சுமை சற்று மிகுதியாக உள்ளது. முடிந்தவரை உதவுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:46, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
சரி, நன்றி. --இரவி (பேச்சு) 10:50, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:47, 31 மே 2017 (UTC)[பதிலளி]


வணக்கம் சிவகோசரன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலில் இருந்த இரு கட்டுரைகளும் (மைக்கலாஞ்சலோ, ஓமர்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:14, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி கலை. தற்போது பணிச்சுமை சற்று அதிகமாக இருப்பதால் இப்போட்டி குறித்த உரையாடல்களில் அதிகம் பங்கெடுக்க முடியவில்லை. எனினும் உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீங்களும் ஸ்ரீஹீரனும் மிக நன்றாகப் போட்டியை ஒருங்கிணைப்புச் செய்கிறீர்கள். மகிழ்ச்சி. முடிந்தவரை உதவுவேன். --சிவகோசரன் (பேச்சு) 16:51, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]


வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட மைக்கலாஞ்சலோ, ஓமர் கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:21, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்கள் பங்கு[தொகு]

போட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகள் செய்யாமல் போட்டியில் கலந்துக்கொண்ட பயனர்:மணி.கணேசன் போன்றவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது விதிமீறல் அல்லவா ---ஹிபாயத்துல்லாஹிபாயத்துல்லா 04:07, 2 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

போட்டியாளர் முதலாவது கட்டுரையைச் சமர்ப்பித்த போதே இதனை நடுவர்கள் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது சுட்டிக்காட்டத் தவறியதால் அவரைப் போட்டியாளராக ஏற்றுக்கொள்வதென நடுவர்கள் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:06, 3 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

Bhubaneswar Heritage Edit-a-thon starts with great enthusiasm[தொகு]

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has started with great enthusiasm and will continue till 10 November 2017. Please create/expand articles, or create/improve Wikidata items. You can see some suggestions here. Please report you contribution here.

If you are an experienced Wikimedian, and want to lead this initiative, become an ambassador and help to make the event a bigger success.

Thanks and all the best. -- Titodutta using MediaWiki message delivery (பேச்சு) 18:05, 14 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.

ஆசிய மாதம், 2017[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:14, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

Bhubaneswar Heritage Edit-a-thon Update[தொகு]

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a Y mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:30, 4 திசம்பர் 2017 (UTC) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.[பதிலளி]

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள சிவகோசரன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:38, 10 மார்ச் 2018 (UTC)

வணக்கம் சிவகோசரன். ரஞ்சித் சிங் கட்டுரையில் மேற்கோள்கள் பகுதியைக் காணவும். சிவப்பு நிறத்தில் இருக்கும் மேற்கோளை சரிசெய்யவும். fountain இல் மதிப்பெண்கள் சரியாகப் பொருந்தவில்லை கவனிக்கவும். நன்றி. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 15:05, 11 மார்ச் 2018 (UTC)
வணக்கம் கி.மூர்த்தி. மேற்கோள் பிழையைத் திருத்தியுள்ளேன். வேங்கைத் திட்டப் போட்டியில் நான் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படவில்லை. நடுவர்கள் பார்த்து அங்கீகரித்த பின்னர் புள்ளிகள் காட்டப்படும். --சிவகோசரன் (பேச்சு) 15:43, 12 மார்ச் 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:51, 18 மார்ச் 2018 (UTC)

கிளியன் மர்பி[தொகு]

வணக்கம் சிவகோசரன், நான் கிளியன் மர்பி என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கில்லியன் மேர்பி அல்லது கிள்ளியன் மர்பி இரண்டில் எது சரியோ அந்தத் தலைப்புக்கு மற்றொன்றை நகர்த்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:56, 11 மார்ச் 2018 (UTC)

கனக்ஸ் அவர்கள் இணைத்து விட்டார். கட்டுரை தொடங்கியவுடன் அதற்கான ஆங்கில இணைப்பை வழங்குங்கள். மேலும், வேங்கைத்திட்டம் கட்டுரைப் பட்டியலையும் இற்றை செய்யுங்கள். இதன்மூலம் ஒரே கட்டுரையை இருவர் வெவ்வேறு பெயர்களில் எழுதுவதைத் தவிர்க்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:33, 12 மார்ச் 2018 (UTC)
வணக்கம் சிவகோசரன். இரும்பு(III) குளோரைடு கட்டுரையில் மேற்கோள் பிழை உள்ளது. திருத்தி உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 13:24, 17 மார்ச் 2018 (UTC)
கி.மூர்த்தி, நீங்கள் குறிப்பிடுவது சிவப்பு இணைப்புகளையா? அவற்றை விக்கி உள்ளிணைப்பு இல்லாமல் செய்துவிட்டால் சரி. ஆங்கிலத்தில் அவற்றுக்குக் கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழில் இல்லை. --சிவகோசரன் (பேச்சு) 15:43, 17 மார்ச் 2018 (UTC)
Chemical infoboxes with tracked parameters என்று வருகிறதே அதை நீக்குங்கள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 15:55, 17 மார்ச் 2018 (UTC)