பயனர் பேச்சு:Sivakosaran/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.

வாருங்கள், Sivakosaran/தொகுப்பு 1!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- Sundar \பேச்சு 07:40, 13 ஜூன் 2007 (UTC)

காப்புரிமம்

நீங்கள் பதிவேற்றிய சில படங்கள் காப்புரிமம் பெற்ற்வை. விக்கிபீடியாவில் இணையத்தில் கிடைக்கும் காப்புரிமம் பெற்ற படங்களை பதிவேற்ற முடியாது. எனவே அவற்றை நீக்குகிறேன்.--சோடாபாட்டில் 09:15, 22 திசம்பர் 2010 (UTC)

ஆராய்ந்து பார்த்ததில், ஆங்கில விக்கியில் இருந்து தான் எடுத்துள்ளீர்கள் என்று கண்டேன். இது சரியானதே. ஆனால் மூல படத்துக்கான இணைப்பையும் கொடுத்து விடுங்கள்--சோடாபாட்டில் 09:17, 22 திசம்பர் 2010 (UTC)
நன்றி. இனிவரும் பதிவேற்றங்களில் மூலத்தைக் குறிப்பிடுகிறேன். --சிவகோசரன் 17:06, 22 திசம்பர் 2010 (UTC)
ஆங்கில விக்கியில் பதிவேற்றியவரே ESPN வலை தளத்திலிருந்து எடுத்துள்ளார் என்று கண்டுபிடித்து அங்கு இந்த படத்தை நீக்கி விட்டார்கள். எனவே இங்கும் நீக்கி விட்டேன்.--சோடாபாட்டில் 17:10, 24 திசம்பர் 2010 (UTC)

எல்லா மொழி விக்கிப்பீடியா கட்டுரைகள்

நீங்கள் விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் பக்கத்தில் திருத்தங்கள் செய்து வருகிறீர்கள். இந்தப் பக்கத்தை இற்றைப்படுத்த வேண்டாம் என தலைப்பில் குறிப்புள்ளதே ! மாற்றாக பின்வரும் பக்கங்களைத் திருத்தினால்/ இற்றைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்:

--மணியன் 03:13, 8 சனவரி 2011 (UTC)

நன்றி மணியன். குறிப்பு தடித்த எழுத்தில் இருந்தும் ஏனோ முதலில் கவனிக்கத்தவறிவிட்டேன்! பின்னர் புரிந்துகொண்டேன். --சிவகோசரன் 10:32, 8 சனவரி 2011 (UTC)

ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரை

சிவகோசரன், உங்களுடைய பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரையில் sorting மற்றும் கொடியுடன் நாடுகள் பட்டியலை கருவி கொண்டு உருவாக்கியிருக்கிறேன். உங்களுடைய திருத்தங்கள் இதில் விடுபட்டிருக்கலாம். தயவுசெய்து மீண்டும் திருத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- மாஹிர் 11:02, 13 சனவரி 2011 (UTC)

புதிய அமைப்பு நன்றாக உள்ளது. ஆனால் பல நாடுகளின் இணைப்புக்கள் மீள் திருத்த வேண்டியுள்ளது. உங்கள் கருவியை மேலும் சற்று மேம்படுத்தி, இவ்வாறான பட்டியல்களை உருவாக்கலாமா? நீங்கள் உருவாக்கிய தூதரகங்களின் பட்டியல்களிலும் இவ்வழுக்கள் உள்ளன. சிலவற்றை திருத்தியுள்ளேன். உங்கள் பக்கத்திலிருந்த நாடுகள் பட்டியலையும் திருத்தியுள்ளேன். உங்கள் கருவியை மேம்படுத்த ஏதாவது வகையில் உதவலாமா? --சிவகோசரன் 11:16, 13 சனவரி 2011 (UTC)
நன்றி, உங்களுடைய உதவி அவசியம் தேவை. அது தொடர்பாக கோப்பை பதிவேற்றி உங்களுக்கு அறியத் தருகிறேன். -- மாஹிர் 11:58, 13 சனவரி 2011 (UTC)
சிவகோசரன், பயனர்:Sivakosaran/vector.js பக்கத்தில் importScript('User:Mahir78/translation_helper.js'); இந்த வரியை சேர்த்து translation helper என்கிற தொடுப்பை பயன்படுத்தி நாடுகள் தொடர்பான கட்டுரைகளை தமிழாக்கம் செய்யலாம். நாடுகளின் பெயர்கள் சேர்க்க, திருத்தங்கள் இருந்தால் பயனர்:Mahir78/Array_enta.js இந்தப் பக்கத்தில் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி -- மாஹிர் 06:25, 28 சனவரி 2011 (UTC)
Barnstar of Diligence.png சீரமைக்கும் பயனர் பதக்கம்
சிவகோசரன்,

வார்ப்புருக்கள், பகுப்புகள், வழிமாற்றுகள் போன்ற விக்கி சீரமைப்பு வேலைகளில் தங்களது அரும்பணிக்கு நன்றி கூறி இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 25 சனவரி 2011 (UTC)

மிக்க நன்றி, சோடாபாட்டில். --சிவகோசரன் 05:47, 25 சனவரி 2011 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

சிவகோசரன், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளில் உள்ள பகுப்புகளை உருவாக்குவதில் கவனம் தேவை. அவை நேரடியாக ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலானவை தமிழில் தேவையற்றவை. மேலும் சில பகுப்புகள் ஏற்கனவே தமிழில் வேறு பெயர்களில் இருக்கலாம். அவற்றையும் கவனிக்க வேண்டும். உ+ம்: 2000 நாவல்கள் என்ற பகுப்பு குறித்து. நாவல் என்பது தமிழில் புதினம் எனவே அழைக்கப்படுகிறது. அவ்வாறே பகுப்புகளை உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 09:07, 27 பெப்ரவரி 2011 (UTC)
அனேகமான பகுப்புகளை ஆராய்ந்தே உருவக்குகிறேன். நாவல்கள் என சில பகுப்புகள் உள்ளன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிமேல் கட்டுரைகளை புதினங்கள் பகுப்புக்கு நகர்த்துகிறேன் --சிவகோசரன் 09:19, 27 பெப்ரவரி 2011 (UTC)

யெரெவான்

இக்கட்டுரையை உங்கள் பயனர்வெளியுள் பயனர்:Sivakosaran/யெரெவான் நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:27, 6 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். எனது பயனர்வெளி இணைப்பை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பயனர்வெளி என எண்ணியே Sivakosaran/யெரெவான் தலைப்பில் தொகுத்துக்கொண்டிருந்தேன். --சிவகோசரன் 03:29, 6 மார்ச் 2011 (UTC)

சிவகோசரன், உங்கள் பயனர் வெளியில் நீங்கள் தொகுக்கும் கட்டுரை எழுதி முடிக்கப்பட்டவுடன், அதனைத் தனிப்பக்கத்துக்கு நகர்த்துங்கள். புதிதாக உருவாக்கத் தேவையில்லை. அத்துடன் நகர்த்தப்பட்டவுடன் நிருவாகிகள் யாராவது உங்கள் பயனர்வெளி வழிமாற்றை நீக்குவார்கள்.--Kanags \உரையாடுக 07:31, 6 மார்ச் 2011 (UTC)

இது குறித்து எனக்கு சிறு குழப்பம் உள்ளது. எவ்வாறு நகர்த்துவது என்று தெரியவில்லை. தயவுசெய்து மேலதிக விளக்கம் தரவும். அத்துடன் 'உலக புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பில் புதிய பக்கம் உருவாக்கியுள்ளேன். இதனை 'உலகப் புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பிற்கு மாற்ற வேண்டும். இதனை சாதாரண பயனர்களும் செய்யலாமா? உதவி தேவை --சிவகோசரன் 07:48, 6 மார்ச் 2011 (UTC)
தலைப்பை மாற்றுவது யாரும் செயற்படுத்தலாம். ஆனால் ஒரு தலைப்பை நீக்குவது மட்டுமே நிருவாகிகள் செய்ய வேண்டும். நான் ஏற்கனவே உலகப் புத்தகத் தலைநகரம் தலைப்பிற்கு மாற்றிவிட்டேன். அடுத்த தடவை நீங்களே மாற்றுங்கள். மேலேயுள்ள menu வில் நகர்த்தவும் ஐச் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:55, 6 மார்ச் 2011 (UTC)
நன்றி. 'நகர்த்தவும்' என்பது மெனுவில் ஒளிந்திருந்தது. கண்டுபிடித்துவிட்டேன். :) --சிவகோசரன் 08:01, 6 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்

சிவகோசரன்,

முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவகோசரன் பக்கத்தில் தர வேண்டிக் கொள்கிறேன். (பிற பயனர் குறிப்புகளின் மாதிரிகளுக்கு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பாருங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 10 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா? செய்வதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. இதற்குத் தகுதியுடையவனா என ஏனைய பயனர்களுடனும் உரையாடிய பின்னர் அறிமுகம் செய்யுங்கள். எனது குறிப்புகளை மேற்படி பக்கத்தில் இடுகிறேன். ஒரு வார கால அவகாசம் தேவை. --சிவகோசரன் 04:50, 10 மார்ச் 2011 (UTC)
>>விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா
என்னைப் பொறுத்தவரை ஆம் செய்திருக்கிறீர்கள் :-). விக்கிப்பீடியாவுக்கு content creation என்பது மட்டும் அவசியமல்ல, கலைக்களஞ்சிய பராமரிப்பும் மிக அவசியம். அப்பராமரிப்பு பணிகளான பகுப்பு/வார்ப்புரு/வழிமாற்று/ஒன்றிணைப்பு ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் அருஞ்செயலாற்றுபவர் (குறிப்பாக பலர் இப்பக்கம் வருவதற்கு தயங்குவதால்). மெதுவாக உங்கள் வசதிக்கேற்ப அறிமுகம் தயார் செய்யுங்கள். ஒன்றும் அவரசமில்லை. ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 10 மார்ச் 2011 (UTC)
நன்றி. பராமரிப்புப் பணி தொடரும். --சிவகோசரன் 05:01, 10 மார்ச் 2011 (UTC)
முதல் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தை சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி. எனது புகைப்படத்தையும் இணைத்துவிட்டு, உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கட்டுரையை சற்று மேம்படுத்திவிட்டுக் கூறலாம் என்றிருந்தேன். புகைப்படத்தை இனி இணைக்கலாமா? கட்டுரையைத் தொடர்ந்து மேம்படுத்துகிறேன். --சிவகோசரன் 06:02, 16 மார்ச் 2011 (UTC)
புகைப்படத்தை இணைத்தமைக்கு நன்றி. --சிவகோசரன் 06:25, 16 மார்ச் 2011 (UTC)

வாழ்த்துகள்

சிவகோசரன், உங்களை முதற்பக்க அறிமுகத்தில் கண்டு மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிக்கும் ஒரே ஒருவர் என்ற வகையில் மேலும் சிறப்புப் பெறுகிறீர்கள். மேலும் சிறப்பாகப் பங்களிக்க எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:33, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி Kanags அவர்களே. பங்களிப்புகளைத் தொடர்வதுடன் புதிய பயனர்களை ஈர்க்கும் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருகிறேன். உங்கள் கருத்துக்கள் எப்போதும் ஊக்கமளிக்கும். --சிவகோசரன் 08:06, 16 மார்ச் 2011 (UTC)
  • முதற்பக்க அறிமுகத்தில் உங்களை கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்கள் பணி மேலும் சிறப்புற வளரவேண்டும். எனது வாழ்த்துகள் சிவகோசரன்--P.M.Puniyameen 09:33, 16 மார்ச் 2011 (UTC)
  • விக்கிப்பீடியா பராமரிப்பு வேலைகளில் நீங்கள் காட்டி வரும் ஆர்வம் வியக்க வைக்கிறது. தங்கள் விக்கிப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்!--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 09:45, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி புன்னியாமீன். நன்றி கார்த்திகேயன். உங்கள் வாழ்த்துக்கள் விக்கியில் மேலும் பங்களிக்க ஊக்கமளிக்கின்றன. இயன்றளவில் பங்களிப்புகள் தொடரும்.--சிவகோசரன் 10:01, 16 மார்ச் 2011 (UTC)
சிவகோசரன் உங்களை முதற் பக்கத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.--Terrance \பேச்சு 09:34, 22 மார்ச் 2011 (UTC)
நன்றி Terrance. எனது பலகலைக்கழக வகுப்புத் தோழனாகிய(batch-mate) நீங்கள் த.வி.யில் ஒரு நிர்வாகியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். --சிவகோசரன் 09:57, 22 மார்ச் 2011 (UTC)

நாட்டுத்தகவல்கள்

சிவகோசரன், நாட்டுத்தகவல்கள் வார்ப்புரு ஒரு நாட்டுக்கு ஒரு வார்ப்புருவை மட்டும் முதன்மைப் படுத்தி ஏனையவற்றை அதற்கு வழிமாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 10:52, 23 மார்ச் 2011 (UTC)

வேண்டிய வார்ப்புருக்கள் பட்டியலிலிருந்து பெரும்பாலும் வழிமாற்றுகளை மட்டுமே அமைத்து வருகின்றேன். சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வார்ப்புருக்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றில் எதை நீக்குவது(வழிமாற்றுவது) என்பது அவ்வப்பக்கத்தில் உரையாடல்கள் மூலம் கலந்துரையாடியே செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். உரையாடல் பக்கங்களில் எனது கருத்தை சேர்க்கிறேன். ஏனையவர்களின் கருத்துக்களின் படி பக்க உள்ளடக்கத்தை நீக்கி வழிமாற்றிகளை இட்டு விடலாம். --சிவகோசரன் 11:01, 23 மார்ச் 2011 (UTC)
சிவகோசரன், வழிமாற்றுகள் உருவாக்கும்போது 'சிறு தொகுப்பு' என்று தேர்ந்தெடுத்தால் அணைமைய மாற்றங்கள் பக்கத்தில் வேறு பல தலைப்புகளும் காண உதவியாயிருக்கும். நன்றி -- மாகிர் 18:11, 23 மார்ச் 2011 (UTC)
நன்றி மாகிர். முயற்சிக்கிறேன். இது எனக்குத் தெரிந்திருந்தும் செய்யாதிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. சிறு தொகுப்புகளின் பின் பக்கத்தை சேமிக்க Alt-S பயன்படுகிறது. இது ஒரு சிறு தொகுப்பு என்று தேர்ந்தெடுக்க குறுக்கு வழி ஏதாவது இருக்கின்றதா? Scroll செய்து Click செய்ய வேண்டியிருப்பதால் அதிகம் பயன்படுத்துவதில்லை. --சிவகோசரன் 04:05, 24 மார்ச் 2011 (UTC)
இது ஒரு சிறு தொகுப்பின் மேல் கொண்டு சென்றால் alt-shift-i காட்டுகிறது. நானும் இப்போது தான் கவனித்தேன். -- மாகிர் 05:55, 24 மார்ச் 2011 (UTC)
ஆமாம். கவனிக்கவில்லை. வேலை செய்கின்றது:) --சிவகோசரன் 07:07, 24 மார்ச் 2011 (UTC)

நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:18, 17 சூன் 2011 (UTC)
Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.