பயனர் பேச்சு:Sinthuja1008

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sinthuja1008, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:27, 19 ஏப்ரல் 2016 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம். அண்மையில் நீங்களும் சில பயனர்களும் விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு தமிழில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா? மற்ற பயனர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, இயல்பாகவே வழமையான பயனர் போல் பங்களிக்கிறீர்கள் என்றால் அதனையும் தெளிவு படுத்துகிறோம். இதன் மூலம், மற்ற பயனர்கள் இக்கருவி பயன்படுத்திப் பங்களிப்போருக்குத் தக்க வழிகாட்டுதல்களைத் தர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 16:33, 22 ஏப்ரல் 2016 (UTC)

வணக்கம்.

தங்களின் செய்திக்கு மிக்க நன்றி. இத்தகைய பங்களிப்பை எனது பாடத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டேன். - முன்னிற்கும் கருத்து அடையாளம் காட்டா பயனர் இட்டது.

பாடத்தின் ஒரு பகுதியாகப் பங்களிக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. கல்வியில் விக்கிப்பீடியா என்பது ஓர் உலகளாவிய திட்டம். இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செயற்படுத்துவது நன்று. இன்னும் சில கூடுதல் விவரங்கள் கிடைத்தால் தங்கள் பங்களிப்புகளை மேம்படுத்த உதவ இயலும்.
  • எந்தக் கல்லூரியில் எந்த ஆண்டு எந்தப் பாடப்பிரிவில் பயில்கிறீர்கள்?
  • உங்களைப் போல் இன்னும் எத்தனை மாணவர்கள் பங்களிக்கிறார்கள்?
  • இப்பங்களிப்புகளின் காலம் என்ன? அதாவது ஒரு பருவத்துக்கு (semester) இத்தனைக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று ஏதாவது இலக்குகள் உள்ளனவா?
  • குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து எழுத வேண்டுமா?
  • இந்த முயற்சிக்கு ஒருங்கிணைப்பாளர் யார்? அவருடைய விக்கிப்பீடியா பயனர் பெயர் அறியலாமா?
  • விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்குத் தங்களுக்கு ஏதாவது உதவி, வழிகாட்டதல் தேவைப்படுகிறதா?

தொடர்ந்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 17:48, 22 ஏப்ரல் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sinthuja1008&oldid=2055050" இலிருந்து மீள்விக்கப்பட்டது