பயனர் பேச்சு:Sengai Podhuvan/தொகுப்பு முனைப்புத் தீர்வுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைகளை இணைத்தல் 2[தொகு]

இணைப்புக் குறிகள்[தொகு]

ஆகிய கட்டுரைகளில் இணைப்புக்குறிகள் உள்ளன.

  • அவை இணைக்கப்பட வேண்டியவைகளே.
  • எனது வேண்டுகோள், நல்லவர்க்ள் தீர்ப்பு முதலானவற்றை மேலே காணலாம்.
  • இணைப்பவர்கள் விருப்பம் போலச் செயல்படலாம்.
  • கட்டுரையின் தன்மையைக் கருத்தில் கொண்டால் மகிழ்வேன்.
  • அல்லாமல் கட்டுரை seniority-ல் இணைப்பு தந்து அரிய செய்திகளைத் தொகுத்தவரின் பெயரே இல்லாமல் முன்பு பல கட்டுரைகளில் நிகழ்ந்துள்ளது போல அழிக்கப்படுமானால் அது விக்கிப்பீடியாவுக்குத்தான் இழுக்கு. எனக்கென்ன? நடத்துங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 16:54, 14 மார்ச் 2013 (UTC)

//அல்லாமல் கட்டுரை seniority-ல் இணைப்பு தந்து அரிய செய்திகளைத் தொகுத்தவரின் பெயரே இல்லாமல் முன்பு பல கட்டுரைகளில் நிகழ்ந்துள்ளது போல அழிக்கப்படுமானால் அது விக்கிப்பீடியாவுக்குத்தான் இழுக்கு.//

அப்படி நிகழ வாய்ப்பில்லை. இரண்டு கட்டுரைகளில் பங்களித்தவர்களின் பெயரும் வரலாற்றுப்பக்கத்தில் தான் இருக்கும். விக்கிப்பீடியாவின் கட்டுரை இணைப்புக் கொள்கையின் முக்கிய நோக்கத்தில் ஒன்று அனைத்து பங்களிப்புகளும் பாதுகாக்க பட வேண்டும் என்பது தான். அதனால் அதை எண்ணி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். அந்த கட்டுரையில் அதிக ஆர்வமுள்ளவர் (இரண்டாவது எழுதியவர்) இணைத்தபின் அதை முதற்பக்க கட்டுரை ஆக்க முயலலாம்.

பொதுவாகவே கட்டுரை எழுதும் போது அதே பெயரில் வேறு கட்டுரை இருந்தால் அக்கட்டுரை குறுகியதாயினும் அதிலேயே தான் தொகுக்க வேண்டும். நான் விக்கிப்பீடியாவில் இணைந்த போது எழுதிய முதற்கட்டுரைக்கே இந்த கதி நேர்ந்ததால் முதலிலேயே விக்கியின் நோக்கங்களை நன்றாகவே புரிந்து கொண்டேன். மேலும் நம் இருவரின் ஆர்வத்துறைகளும் ஒன்று என்பதால் இந்த கட்டுரை இணைப்பு விசயத்தில் நான் உங்களையே குடைவது போன்ற தோற்ற மாயை ஏற்படுவது சகஜம் தான்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உங்களின் வங்கிக்கணக்கு, மின்னஞ்சல் முகவரி இவை எல்லாத்தையும் கூட திருடி விடலாம். ஆனால் உங்களது விக்கியின் பங்களிப்புகளை யாராலும் திருட/அழிக்க முடியாது. :)-

அதனால் தயக்கம் இன்றி நீங்கள் தொடங்கிய கட்டுரையில் நீங்கள் மட்டுமே பங்களித்து அங்கு இணைப்பு வார்ப்புரு இடப்படுமாயின் நீங்களே முதலில் எழுதப்பட்ட கட்டுரையில் சேர்த்து விடுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:43, 18 மார்ச் 2013 (UTC)

தீர்ப்பு 2[தொகு]

ஐயா, தென்காசியார் சொல்வதைப் போல "பெயரே இல்லாமல்" அழிய வாய்ப்பில்லை. அதற்காகத்தான் வரலாறுகளை ஒன்றிணைக்கிறோம். வரலாற்றுப் பக்கம் தேதி வாரியாக அடுக்கப்பட்டிருக்கும், கண்டிப்பாக பங்களிப்பாளர் அனைவரது பெயரும் அதில் இருக்கும். இப்போது இரு கட்டுரைகளையும் நான் ஒன்றிணைத்திருக்கிறேன். அவற்றின் வரலாற்றுப் பக்கங்களில் அனைத்து பங்களிப்பாளர் பெயர்களும் - உங்களுடையது உட்பது பதிவாகியுளன. --சோடாபாட்டில்உரையாடுக 17:05, 18 மார்ச் 2013 (UTC)
  • பல்யானைச் செல்கெழு குட்டுவன் கட்டுரைகள் மிகச் சிறப்பாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. சோடாபாட்டில் அவர்களுக்குப் பாராட்டுகள். தொடர்வோம். இதனை வழிகாட்டியாக வைத்துக்கொள்வோம். அன்புள்ள, --Sengai Podhuvan (பேச்சு) 19:52, 18 மார்ச் 2013 (UTC)
  • பேச்சு:சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் கட்டுரையில் நேர்ந்துள்ள இணைப்புக் கொடுமையைச் சீர் செய்வது எப்படி? --Sengai Podhuvan (பேச்சு) 20:29, 18 மார்ச் 2013 (UTC)
  • முன்மை பின்மை, என்னுடையது உன்னுடையது, நீயா நானா என்னும் எண்ணங்களுடன் எத்தனை நாளைக்கு விளையாடப் போகிறோம்? நல்ல செய்தி, சரியான செய்தி என்று பார்க்கும் பரந்த உள்ளம் எப்போது வரப்போகிறது? வந்தால் வாழ்வோம். இன்றேல் ...? அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:43, 18 மார்ச் 2013 (UTC)
என்ன கொடுமை நிகழ்ந்துள்ளது ஐயா?. இது தான் நீங்கள் உருவாக்கிய கட்டுரையின் பதிப்பு அதில் இருந்த செய்திகள் அனைத்தையும் இதில் சேர்த்துள்ள்ளேன். எதுவும் விட்டுப் போக வில்லை. பின் என்ன கொடுமை செய்தேன் என்று விளங்கவில்லை. நீங்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். செல்வா முன்னரே அதே தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என் சிற்றறிவுக்கு இரண்டில் இருந்த தகவல்கள்களுக்குள் முரண் இருப்பதாகத் தெரியவில்லை. இரு பதிப்புகளில் இருந்த அனைத்தையும் ஒரே கட்டுரைத் தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். நான் இருந்த இரு கட்டுரைகளையும் ஒன்றாக சேர்த்துள்ளேன். இப்போது இதிலிருக்கும் தவறானவற்றை நீங்கள் நீக்கி விடலாம். “தவறான” செய்திகள் இருப்பின் தொகுத்து மாற்றி விடுங்கள். துறை அறிஞர் தாங்கள் தான். --சோடாபாட்டில்உரையாடுக 01:05, 19 மார்ச் 2013 (UTC)
  • சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கட்டுரையைப் பார்க்கும்படி வேண்டியிருந்தேன். பாருங்கள். கட்டுரையிலுள்ள குழப்பங்கள் புரியும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 03:57, 19 மார்ச் 2013 (UTC)
  • விக்கி பொதுவுடைமை. நல்லது செய்வோம். வாழும்வரை வாழட்டும். --Sengai Podhuvan (பேச்சு) 04:09, 19 மார்ச் 2013 (UTC)
  • போனவை போகட்டும். அழிந்தவை தொலையட்டும். தேடி வாதம் செய்வதில் காலம்தான் வீணாகும். எந்தக் கட்டுரை எதனோடு இணைக்கப்படுகிறது எனபதைப் பற்றிக் கவலை இல்லை. எல்லாச் செய்திகளும், செய்தியாளர் பெயர்களும் இணைந்துள்ளனவா? என்பதுதான் முக்கியம். இணைந்து வளர்வோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 04:26, 19 மார்ச் 2013 (UTC)

கட்டுரைகளை இணைத்தல் 1[தொகு]

ஐயா, வணக்கம். நீங்கள் பெரிப்ளூஸ் பேச்சுப்பக்கத்தில் என்னிடம் கேட்டதை வைத்து நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

//விக்கி என்னுடையதோ, உங்களுடையதோ அன்று. நம்முடையது. தமிழுக்காக விக்கியை விட்டுவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:30, 21 சனவரி 2013 (UTC)//

இதை நான் அறிந்தே இருக்கிறேன். ஒரு கடற்செலவு நூல் (=பெரிப்ளஸ்) குறித்து நான் தனியாக ஒரு கட்டுரையும் நீங்கள் தனியாக ஒரு கட்டுரையும் எழுதி என்ன பயன்? விக்கியின் நோக்கமே ஒரு விடயம் பற்றி அனைத்து தகவல்களும் ஒரே கட்டுரையில் இருக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் நம்முடைய கட்டுரையாக வளர வேண்டும் என்று இணைப்பு வேண்டுகோள் கொடுத்தது.

மேலும் நீங்கள் அதிக கட்டுரை எழுதுபவர் என்பதால் உங்கலின் பங்கலிப்புகலை நான் அதிகம் பார்ப்பதுண்டு. அதனால் நிங்கள் பங்களித்த கட்டுரைகளில் குறிபார்த்து நான் மூக்கை நுழைப்பது போல் ஒரு தோற்ற மாயை இருப்பது இயல்பு தான். ஆரம்பத்தில் கனக சிறீதரன் மேல் எனக்கும் இது ஏற்பட்டது. காலப்போக்கில் விக்கியின் எண்ணங்கல் தெளிவாக புரிந்ததால் அந்த நினைப்பு தகர்ந்து விட்டது. நீங்கள் நாளொன்றுக்கு நிறைய கட்டுரைகள் எழுதுவதால் உங்களை அதிகம் கவனிக்கிறேன்.

மேலும் நான் தொடங்கிய கட்டுரையில் நான் மட்டும் பங்களித்து யாராவது இணைப்பு வேண்டுகோள் இடுவாராயின் நான் தொடங்கிய கட்டுரையில் அனைத்து தகவல்கலையும் முதற்தலைப்புள்ள கட்டுரையில் சேர்த்து விடுவேன். இப்படிச்செய்வது நிர்வாகிகலின் வேலைப்பளுவை குறைக்கும். உதாரணம் இந்த இணைப்பை பார்க்கவும். இந்த வழுதி (பாண்டியர்) கட்டுரையின் பங்களிப்புகள், நான் தொடங்கிய [வழுதி] கட்டுரையில் இருந்து சேர்த்தது. நீங்கள் முதலில் கட்டுரையை தொடங்கியதால் அப்படிச் செய்தது.

ஒரு கட்டுரையை எழுதுவதற்கு முன் நான் ஆங்கில விக்கிப்பிடியாவில் அதன் தமிழ் இணைப்பு இருக்கிரதா என்று முதலில் பார்ப்பேன். இரண்டாவது அது தொடர்பான பகுப்புக்குல் சென்ரு பார்ப்பேன். மூன்ராவது விக்கியின் தேடல் பலகையில் வழுதி என்ரு மட்டும் தட்டச்சிட்டு தெடிப்பார்ப்பேன். அதனால் பெருமலவு இது போன்ர சிக்கல் தவிர்க்கப்படும். நீங்களும் இதையே பின்பற்றுமாறு வேண்டுகிறேன்.

இரு கட்டுரைகளை இணைக்க வேண்டும் என்றால் முதலில் தொடங்கிய கட்டுரை எது என்று தான் பார்ப்பர். கட்டுரைகளின் பங்கலிப்பு செய்தவர் பற்றி பார்ப்பதில்லை. நிங்கல் தொடங்கிய கட்டுரையில் நீங்கல் மற்றுமே பங்கலிப்பு செய்து அதில் இணைப்பு வேண்டுகோல் விடப்படுமாயின் நிங்களே அத்தகவல்கலை முதன்மை கட்டுரையோடு வெட்டியொட்டி இணையுங்கள். பின்பு இரண்டாவ்து கட்டுரையில் அழித்தல் வேண்டுகோள் விட்டுவிடுங்கள்.

மேலதிக தகவல்கலுக்கு பினவரும் இணைப்புகளை பார்க்கவும். நன்றி.

  1. விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
  2. பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:42, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  • எறும்பும் தன் கையால் எண் சாண். எளியேன் எறும்பு.
  • இன்று இடுகிறேன். நல்லவர்கள் பலர் பிழை திருத்தி, இணைப்புத் தந்து, படம் சேர்த்து, வளர்க்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கடமைப்பட்டுள்ளேன்.
  • நாளை என்ன ஆகுமோ என்ற கவலை வந்துவிட்டது. கவலைப்பட்டு என்ன பயன்?
  • நிர்வாகிகளோ கட்டுரையாளர்களோ யார் எதை எப்படிச் செய்தால் என்ன? எப்படியாவது இணையத்தில் தமிழ் வளராதா என ஏங்குபவன் ஆகிவிட்டேன்.
  • இரண்டு கட்டுரைகள் ஒரே தலைப்பில் இருந்து ஒரே செய்தியைக் கூறுமாயின் அவற்றை இணைப்பது இன்றியமையாதது.
  • ஒரு கட்டுரைக்குள் சுட்டப்பட்ட ஒன்றை விரிவுபடுத்துவது முறை. அப்படித்தான் ஆங்கில விக்கிப்பீடியா வளர்ந்திருக்கிறது.
  • தங்களின் செங்கடல் செலவு கட்டுரையையும் ஆங்கிலக் கட்டுரையிலுள்ள செய்திகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிய கட்டுரை தொடங்கப்பட்டதன் காரணம் புரியும்.
  • பெரிப்ளஸ் கட்டுரையில் தமிழகம் பற்றி அவர் கூறியுள்ள கட்டுரைகள் அனைத்தையும் பத்திப் பத்தியாகச் சொல்லிவிடவேண்டும் என்பது என் ஆவல்.
  • நல்லவர்கள், வல்லவர்கள் இருக்கிறார்கள். வழி காட்டட்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:11, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தீர்ப்பு 1[தொகு]